Friday, January 15, 2016

மேற்குலகு மறந்த முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் '' இப்னு அல் கும்றீ ''


10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இப்னு அல் கும்றீ என்பவர் மருத்துவத் துறையில் பேர் போன ஒருவர் .

இவர் வட மத்திய ஈரானில் ஜிபால் என்னும் பிரதேசத்தில்'' கும் ''என்ற கிராமத்தில் பிறந்தார் . இவருடைய முழுப்பெயர் அபூ மன்சூர் அல் ஹசன் இப்னு நூஹ் அல் கும்றீ என்பதாகும் .

அர்ராஸியின் நூல்களை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய நூல் ''கிதாபுல் இனாவமா '' ( வாழ்வும் மரணமும் பற்றிய நூல் ) மிகவும் பிரபல்யமானது .
இந்த நூல் 3 பகுதிகளைக் கொண்டது . முதற் பகுதி உடல் உறுப்புக்களைத் தாக்கும் நோய்களைப்பற்றியும் ' இரண்டாவது பகுதி வெளியுறுப்புக்களைத் தாக்கும் நோய்களைப்பற்றியும் ' மூன்றாவது பகுதி பல்வகைப்பட்ட காய்ச்சல்களைப்பற்றியும் விபரித்துக் கூறுகின்றது .

இப்படிப்பட்ட நூல்கள் இன்று திட்டமிட்டு மேற்கத்தயவர்களால் மறைக்கப்பட்டு வருகின்றது .
முடியுமான வரை இதை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவைப்போம் .

Hafeesul haq ( fathih )
varipathsnchenai

No comments:

Post a Comment