Saturday, January 2, 2016

ISIS அமைப்பின் தீவிர செயற்பாட்டினால் இஸ்லாமிய உலகு எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினை என்ன ?

இதை உலகிற்குத் தெரியப்படுத்துங்கள்
இறைவன் அருள் புரிவான்

யார் இந்த ISIS ?

இன்று  சிரியாவில் 16 % வீதம்  கொண்ட ஷீஆக்களான   பஷார் அல் அஸாத்தின் குடும்பம் 45 வருடங்கள்  76%  வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்  .

இந்த சர்வதிகார ஷீஆக்களின் ஆட்சியை அழித்து சிரியா  நாட்டில் ஜனநாயக ஆட்சியைக் கொண்டுவருவதற்காக  அங்கு பல இயக்கங்கள் ஆயுதமேந்தி சிரியாவின் அரச படைக்கெதிராகப் போராடி வருகின்றது  .

அப்படிப் போராடுகின்ற இயக்கங்களில் மிகவும் பலம் குண்றிய ஒரு இயக்கம்தான்  ISIS   என்ற அமைப்பு . இன்று ISIS  அமைப்பைவிட சிரியாவில் மிகவும் மனித வளத்திலும் , ஆயுத பலத்திலும் சக்தி கூடிய இயக்கமாக இருப்பது  அஹ்ராருஷ்ஷாம்.   அஹ்ராருஷ்ஷாமை விட ISIS அமைப்பு பலம் அடைந்து கொண்டே செய்கின்றது  இதற்கு பல அரசியல் மற்றும் மேற்குலக தந்திரங்கள் இருக்கின்றது இது  நீங்கள் அறிந்தவையே !
இதன் தலைவர்  அபூபக்கர் அல்  பக்காதி
இன்று   இவர்கள்  சிரியா மற்றும்  ஈராக்கில சில பகுதிகளைக் கைப்பற்றி கிலாபத்தைப் பிரகடனம் செய்து மக்களையும் அன்னாட்டின் பொருளாதாரங்களையும் சீரழித்து வருகின்றது .

ISIS அமைப்பின் தீவிர செயற்பாட்டினால் இஸ்லாமிய உலகு எதிர்கொள்ள  இருக்கும்  பிரச்சினை என்ன ?
=============================

01) இன்று உலகில் அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளில் சிரியா முதல் தரத்தில் உள்ளது .  இதற்குக் காரணம் ISIS என்ற அமைப்பு என்று அனைத்து ஊடகங்களும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது .

இதனால் பல ஊடகங்கள் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி பிழையாக சித்தரிக்க ஆரம்பித்துள்ளது .

02)  இன்று ISIS மற்றும் அரச படைகளின் காடைத்தனமான தாக்குதல்களால் சிரியாவில் 2.50 ஆயிரத்திற்கும் அதிமானவர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள் . 97% வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டு விட்டது . அதேபோல் அண்மையில்  ISIS அமைப்பு சிரியாவில் மிகவும் பழமை வாய்ந்த நூதனசாலையை அடியோடு அழித்து விட்டது இதனால் சிரியாவின் பாரம்பரிய அடையாளம்கள் அடியோடு அழிந்து விட்டது . இது முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரும் இழப்பாகும் .

02) அண்மையில் ISIS அமைப்பு ஈராக்கில் இருக்கும் கிறிஸ்தவ தேவாலையத்தை உடைந்து அதை தரிச்து வந்த கிறிஸ்தவர்களையும் கொடூரமாக தாக்கிய vedio   எமது முஸ்லிம் சோதரர்கள் face book மற்றும் பல இணைத் தளங்களில் share பண்ணி இருந்தார்கள் .

இன்னும் இஸ்லாம் 3.0   என்ற வீதத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது . ஆனால் ISIS  இன் இந்தக் காடைத்தனத்தால் அதுவும் குறைந்து செல்லும் வாய்ப்பு உள்ளது .

03) முஸ்லிம் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறி போகும் அபாயம் எழுந்துள்ளது .

இன்று இலங்கை ,  இந்திய அமெரிக்கா , பிரான்ஸ் , மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் முஸ்லிம்களாகிய நாங்கள் சிறுபான்மையாக வாழ்கின்றோம் !

இந்த ISIS  இன் கொடூரக் கொலைகளை எமது முஸ்லிம் மற்றும் ஏனைய ஊடகங்கள் மக்களுக்கு விரைவாக கொடுப்பதால் முஸ்லிம்களின் மார்க்கம் பயங்கரவாத்தைத் தூண்டு கின்றது என்று சொல்லி அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களைப் பெரும்பான்மையான சமூகம் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது .

இதனால் இலங்கை முஸ்லிம்களுக்கெதிக  தொடர்ந்தும் இனவாதம் தூண்டப்படலாம் !
அவர்கள் இஸ்லாமிய பயங்கரவதிகளுக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்று சொல்லி  சொத்துக்கள் முடக்கப்படலாம் ! அதேபோல் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மற்றும் உயர்கல்லிக்காகப் போவோர்களுக்கு  தடை ஏற்படலாம்  !

எனவே ISIS இன் பயங்கரவாத செயற்பாட்டால் இவ்வாறான விளைவுகள் வரும் அபாயம் உள்ளது .

குறிப்பு  :- மேற்குலகில் இஸ்லாம் வளர்வதைத் தடுப்பதற்காகவே அமெரிக்கா ISIS  என்ற  அமைப்பை உருவாக்கியது . இன்று   அமெரிக்காவி  நோக்கம் நிறைவேறி வருகின்றது .

இதற்கான தீர்வு :-   இலங்கை முஸ்லிம்கள்  பெளத்தர்கள்  மற்றும் இந்துக்கள் மத்தியில் சகவாழ்வோடு வாழ்ந்து  இஸ்லாத்தின் சிறப்பை எத்தி வைப்பதுதான் சிறந்தது .

Hafeesul haq ( fathih )
Varipathanchenai

No comments:

Post a Comment