Monday, January 18, 2016

பலஸ்தீன் ஒர் ஈமானியப் பார்வை .


அதன் சிறப்பு

01)  முஸ்லிம் களின் புனித பூமி .

நபிஸல் அவர்கள் கூறினார்கள் '' மூன்று மஸ்ஜிதுகளுக்கு அன்றி புனித யாத்திரை மேற்கொள்ளக் கூடாது . அவையாவன , அல்- மஸ்ஜிதுல் ஹராம் , அல்-மஸ்ஜிதுல் அக்ஸா , மற்றும் எனது மஸ்ஜிதாகிய மஸ்ஜிதுன் நபவியுமாகும் '' ( புஹாரி , முஸ்லிம் )

# இமாம் யூஸுப் அல் கர்ளாவியின் கருத்து
( பலஸ்தீனை மீட்டெடுப்பதில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியாக செயற்பட வருமாறு நான் என் உடன்பிறப்புக்களை அழைக்கிறேன் . எமது பொது எதிரியை புரிந்து கொண்டு அவன் எதிரே ஐக்கியமாக ஒரு பலமான அணியாக உழைப்பதே எமது வெற்றியாகும் . பேதங்களைப் பார்க்காதீர்கள் . இஸ்லாத்தின் வழியில் ஒன்றுபடுங்கள் . அல்லாஹ்வின் அருள் ஒற்றுமையில் இருக்கின்றது .

02) பைதுல் முகத்தஸ்   எமது  முதலாவது கிப்லா   .

பைதுல் முகத்தஸுக்கு அதிகமான சிறப்புப் பெயர்கள் உள்ளது .  அல் குர்ஆனிலும் , ஸுன்னாவிலும் வந்துள்ள சில பெயர்கள் . பைதுல் முகத்திஸ் , பைதுல் முகத்தஸ் ,  மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் ஈலியா என்பனவாகும் .

நபித்துவம் கிடைத்து பத்தாம் ஆண்டு நபிஸல் அவர்களுக்கு மிஃராஜில் தொழுகை கடமையாக்கப்பட்டது . அன்றிலிருந்து சுமார் நான்கு  வருடங்களும் பத்து நாற்களும் நபிஸல்  அவர்களும் , ஸஹாபாக்களும் தொழுது வந்தார்கள்  .

03)  நபிமார்கள் வாழ்ந்த பூமி.

எமக்குத் வரலாற்றில் அதிகமான நபிமார்கள் உலகிற்கு அனுப்பப் பட்டுள்ளார்கள் அதில் அதிகமான நபிமார்கள் பலஸ்தீனில்தான் வாழ்ந்து இருக்கின்றார்கள் .
அதில் வந்தவர்கள்தான்  நபி ஸுலைமான்  , நபி இப்றாஹீம் ,   போன்றவர்கள் . 

04) நபிஸல் அவர்களின் துஆ .

ஸைத் இப்னு தாபித் அல் அன்ஸாரி( றழி )  பின்வருமாறு குறிப்பிட்டார்கள் . ஷாம் தேசத்திற்கு சோபனம் உண்டாகட்டும் ! ஷாம் தேசத்திற்கு சோபனம் உண்டாகட்டும் !! ஷாம் தேசத்திற்கு சோபனம் உண்டாகட்டும் !!!  என நபிஸல் அவர்கள் மூன்று முறை கூறியதை நான் செவிமடுத்தேன் . அப்பொழுது  அங்கிருந்த ஸஹாபாக்கள்  யா ரஸூலுல்லாஹ் எதற்காக அவ்வாறு கூறுகின்றீர்கள் ? என்றபோது  அதற்கு நபிஸல் அவர்கள் ஷாம்பிரதேசத்தின் மேலாக இறைவனின் வானவர்கள் தங்களது இறக்கைகளை விரித்த வண்ணம் உள்ளார்கள் '' எனறு பதிலளித்தார்கள் .

இப்படிப்பட்ட அருள் நிறைந்த எமது புனித பூமியை மிருகத்தனமுள்ள யூதர்கள் 60  வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து பல்லாயிரக் கணக்கான பெண்களையும் சிறுவர்களையும் , இளைஞர்களையும் குறிவைத்துக் குறிவைத்துக் கொள்கின்றனர் .

இப்படியான இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்களில் தப்பித்து வெளிநாட்டுகளில் வாழ்கின்ற பலஸ்தீனர்களின் எண்ணிக்கை .

ஜோர்தான் - 1.849,666
லெபனான்- 433, 276
சிரியா -472, 475
சவூதி அரேபியா -292, 778
எகிப்து -42, 974
குவைத் - 32, 499
ஈராக் , லிபியா -78, 884

ஏனைய வளைகுடா நாடுகள் - 112, 117
ஏனைய அரபு நாடுகள் - 5, 887

வட, தென் அமெரிக்க நாடுகள் - 183, 767

புலம்பேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3, 503, 323

இப்படி தொடர்ந்தும் கொல்லப்பட்டுக் கொண்டும் புலம்பேர்ந்துகொண்டு இருக்கின்றார்கள் கடந்த 2015 ஆம்  ஆண்டில் இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூர தாக்குதலினாலும் சித்தரவதையினாலும் 2100 பேர் கொல்லப்பட்டதாக   சில தகவல்கள்    வெளிவந்துள்ளது

தற்போது தொடர்ந்தும் பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தால்  கொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள் அவர்களுக்காகப் பிராத்தியுங்கள் !!!!! 

  உசாத்துணை நூல்கள்

01)  இணையதளம்
# ﺍﻻﻧﺘﻔﺎﺿﺔ ﺍﻟﻔﻠﺴﻄﻴﻨﻴﺔ ( 2015 )
# فلسطين اﻵن
# marha news

02) சில நூல்கள் .

# யூதர்களின் சூழ்ச்சி வலை
# பலஸ்தீன் ஒர் ஈமானியப் பார்வை
# காஸா முற்றுகை

Hafeesul haq ( fathih )
varipathanchenai

No comments:

Post a Comment