Wednesday, April 27, 2016

Dear brothers and sisters , Assalamu alikum warhmathullahi wabrakathuhu .

I have been writing about #Palestine issue and Arab_Revolution through this website. Palestine issue is one that has strong connection with our belief. So I request you all to help me to continue my humble effort.

நான் இன்று   பலஸ்தீன் பிரச்சினை மற்றும் அரபுப் புரட்சி சம்பந்தமாக கீழ் வருகின்ற  இணையத் தளங்களில் தொடராக எழுதி வருகின்றேன் . காரணம் பலஸ்தீன் விவகாரம் என்பது எமது அகீதா சார்ந்த விடையாம்  என்பதனால் .  இதை நாங்கள்  கட்டாயம் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும் .   எனவே நான் உங்களிடம் வினையமாக வேண்டிக் கொள்வது இதை எமது முஸ்லிம்  சமூகத்திற்கு எத்தி வையுங்கள் .

கீழ் வருகின்ற  இணையத்தளங்களூடாக எனது ஆக்கங்களை உங்களால் வாசிக்க முடியும் .

*வன்னி எக்ஸ்பிரஸ் நீயூஸ் .
(Vanni express News  )

*மல்வானை நீயூஸ்
( malwana News )

*)அநுராதபுர செய்திகள்
(Anuradhapura News )

*) www.ceylon24.com

*கருங்கொடி மீடியா

*kandy matro news .com 

*கல்குடாநேஷன்
( Kalkudahnation.com )

* அக்கறைப்பத்து நீயூஸ்
( Akkaraipattu news .com )

*எங்கள் தேசம் .
Engal Thesam news .com

*slmcvelichcham .com

*Shoora News

*Thalam News 

*Srilnka muslims.com

*Varipathanchenai blogspot.com

*  வரிப்பத்தான்சேனை news 

*பலஸ்தீனை நோக்கி

எனது இணையத்தளமான .
*hafeesu blogspot.com
*எனது முகநூல் ( Hafeesul haq ) மற்றும் எனது page. 

மற்றும் பத்திரிகையாக .

எங்கள் தேசம் பத்திரிகை .
(இதநூடாக தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளேன் . )

* தினமணி பத்திரிகை 

* நிஜம் சஞ்சிகை 

#எனது வட்சப் குறூப் ( What'sup grub )
*பலஸ்தீனை நேக்கி
* அறிவுலகம்
*வரிப்பத்தான்சேனை

இவ்வாறான இணையத்தளங்களூடாக  தொடராக எழுதி வருகின்றேன் . எனவே நான் உங்களுளுடை ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் .

எனது திறமையை எனக்கு இனங்காட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக !
(ஆமீன் ) jzakllah.

அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) 
( வரிப்பத்தான்சேனை )

Sunday, April 24, 2016

வறுமைப் பிரச்சினையின் காரணமாக வெளிநாட்டு தொழில் வாய்ப்பை நோக்கி நகரும் இலங்கை இந்திய முஸ்லிம் பெண்கள்


இன்று முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை இதுவே . கடந்த காலங்களில் குறைவாக இருந்த இப்பிரச்சினை இன்று சமூக்கின் சில பாரம்பரிய  மரபுகளால் துரிதமாக வளர ஆரம்பித்துள்ளது.

இன்று முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் சில முறனற்ற மரபுகளால் ( சீதனம் ) இன்று முஸ்லிம் பெண்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் . இந்தப் சிரச்சினைக்கு  இலங்கை இந்திய முஸ்லிம் பெண்களே அதிகம் தள்ளப் படுகின்றனர் .

அண்மையில் நான் ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டேன் . ஒரு கிராமத்தில் பாரிய வறுக்கோட்டின் கீழ் வாழ்ந்த ஒரு குடும்பம் .  அதில் தந்தை கூலி தொழில் செய்பவர்.  தாய் கடைகளுக்கு #அப்பம் சுட்டு விப்பவர் . இவர்களுக்கு வயது வந்த 3  பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர் .  மூத்த பெண் பிள்ளைக்கோ வயது 25 . திருமணம் முடித்துவைக்கும் காலமும் நெருங்கி விட்டது . அந்தக் கிராமத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்றால் வீடு , காணிகள் கொடுக்க வேண்டும் . இதனால் அந்தப் பெற்றோர் களுக்கு பாரிய கவலை எனது பிள்ளையை திருமணம் முடித்துக் கொடுக்க காணி , பூமி இல்லையே என்று

சிறிது காலத்தின் போது அந்தத் தந்தைக்கு வருத்தம் வந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் படுகின்றார் . வைத்தியர்கள் கூறுகின்றார்கள் அவருக்கு #புற்றுநோய் என்று . இதனால் இன்னும் அந்தக் குடும்பத்திற்கு பொறுப்பு அதிகரிக்கின்றது  இதன் அவருடைய பெண் பிள்ளை  தனது தந்தையின் நோயைக் குணப்படுத்துவதற்கும்  மற்றும் தனக்காக #வீடு  கட்டவும் வெளிநாடு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டாள் . அதனால் பணிப் பெண்ணாக அறபு நாடு பயனமானாள் .

பின்னர் அந்தப் பெண்ணுக்கு அன்னி ஆண்களுடன் பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது . பிள்ளை தனது குடும்பத்தை விட்டும் தூரப்படுத்தப்படுகின்றாள்  .

இதுமாத்திரமல்ல இன்னும் அதிகம் உள்ளது திருமணம் முடித்த பெண்களும் இன்று வெளிநாடுகளுக் உழைப்பதற்காகச் சென்று அங்கு  விபச்சாரத்திற்கு உட்படுத்தப் படுகின்றார்கள் .

இப்படி இப் பெண்கள் #வறுமையின் காரணமாக  மத்திய கிழக்காசியா நாடுகளுக்கு  பணிப் பெண்ணாக பணி புரிய நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள் .

எனவே இது குறித்து எமது முஸ்லிம் சமூகம் அக்கறை  கொள்ள வேண்டும் . அவ்வாறு அக்கறை கொள்ளாவிட்டால்  முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் விளைவு .

01) இஸ்லாமிய குடும்பக் கட்டமைப் சீர் குழையும்

02) வறுமையின் காரணமாக #களவு , விபச்சாரம் முஸ்லிம் சமூகத்தில் அதிகரிக்கும் .

#இதற்கான தீர்வு .

* முஸ்லிம் கிராமங்களில் வறுமை ஒழிப் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் .

* முஸ்லிம் தனவந்தர்கள் முன்வர வேண்டும் . ( வறுமைக் கோட்டில் வாழ்வோரைப் பொறுப்பெடுக்க வேண்டும் )

Hafeesul Haq ( fathih )

Thursday, April 7, 2016

விபச்சாரத் தொழிலுக்காக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்

மனதை உருக்கும் காட்சிகள் 

அன்மையில் இணையத்தில்  #மனித ஏற்றுமதி ( Human cargo )  என்ற  ஒரு கட்டுரை வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது  . இவற்றை வைத்து காலத்தின் தேவைக்கேற்ப இந்தக் கட்டுரையை  நான் எழுதியுள்ளேன் .

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக
மனிதன் என்ற பெறுமதி சீர் குழைந்து விடும் . மனித சமூகத்தில் விபச்சாரம் மலிந்துவிடும் . அது அச்சமூகத்தின் கண்களை குறுடாக்கிவிடும் .  என்று நான் பல நபி மொழிகளை நாங்கள் பார்த்தும் வாசித்தும் இருக்கின்றோம் .

ஜாஹிலியா காலத்தில் மனிர்களை அடிமையாக சந்தைகளில் விற்பனை செய்யப் பட்டார்கள் . அதே நிலை இன்று வர்த்தக நோக்கத்திற்காக ( விபச்சாரம் )  மனித ஏற்றுமதிச் சந்தை ( Human Cargo ) என்று மறுபடியும உலகில்  பல ஐரோப்பிய  நாடுகளிலும்  மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளிலும்   அரச அங்கிகாரத்துடன்  தோற்றம் பெற்று சிறப்பாக இயங்கியும் வருகின்றது  . இதற்கு அந்த நாடு அரசாங்கம் மெளனமான அங்கிகாரத்தை வழங்கி அதை மறைமுகமாகவும் ஊக்கங்களையும் கொடுத்து  வருகின்றது . ( விபச்சாரம் )  தகாத  பாலியல் உறவுகள் சமூக சீர்குலைவுக்கும் குடும்ப உறவில் பாரியதோர்  நடத்தைப் பிறழ்வை உருவாக்கும் என்று தெரிந்தும் அங்கிகாரம் வழங்குவது மனதிற்கு வேதனையாகத்தான் உள்ளது .

இப்படி ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் இருந்த வணிகம் இன்று ஆசியா நாடுகளிலும் பரவி மிகவும் துள்ளிதமாக செயற்பட்டுக் கொண்டும் வருகின்றது . அதற்கு சில நாடுகளில் தமது தேசிய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அரசாங்கம் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக ஆக்கி வருகின்றது . சீனாவின் பீஜிங் , தாய்லாந்தின் பெங்கொக் , இந்தியாவின் மும்பாய் , மியன்மாரின் ரங்கூன் , இலங்கையின் பென்தோட்டை என விபச்சாரத்திற்குப் பெயர் போன நகரங்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது . அதேபோல் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானில்   பல்கலைக்கழக மாணவிகள் மேலதிக வருமானத்தைப் பெறுவதற்காக பகுதி நேர பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக சில யுனிசெப் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது .

இன்று பாலியல் தொழில் நடைபெறும் இடங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றது . #இரவு நேர விடுதிகள் , #பெரும் நச்சத்திர ஹோடல்கள் , #மதுபான தவறணைகள் , #உல்லாச விடுதிகள் ,
#மசாஜ் சென்டர்கள் , சில பல்கலைக் கழகங்கள் , #நடமாடும் வாகனங்கள் என்று பல இடங்களில் சமூக சீரழிவு நடைபெறுகின்றது .

சமீபத்தில் யுனிசப் நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகில் அதிக விபச்சாரிகளைக் கொண்டுள்ள நாடு #இந்திய என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது .  இப்படியான  விபச்சாரத் தொழிலுக்காக #சீனா
மற்றும் இந்தியாவில் சில கராமப் புறங்களில் பெண்பிள்ளைகளை சிறு வயதிலேயே பாலியல் வடுதிகளுக்கு விற்பனை செய்யும் மரபும் இருந்து வருகின்றது . இதற்கு சமூக அழுத்தம் ( வறுமை , சாதிப் பாகுபாடு  ) மட்டுமல்லாது சமைய ரீதியான நம்பிக்கைகளும்  இவ்வாறான மரபுக்கு துணை புரிகின்றது .

இப்போது வியட்நாம் ,சீனா , லாவோஸ் ,கம்போடியா நாடுகளிலும் மும்பாய் சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் கணிசமான சிறுவர்கள் பாலியல் துறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள் இவர்கள் ஆகக் குறைந்த ஊதியமாக 20 அமெரிக்க டொலருக்கு பயன்படுத்தப் படுகின்றார்கள் .

தெற்கு மற்றும் தென்கிழக்காசியா நாடுகளில் பாலியல் தொழிலாளிகளைக் கொள்வனவு செய்பவர்கள் ஜப்பானியர்களும் ,#மேற்கு நாட்டவர்களுமே . தூர கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான விபச்சாரிகளை இறக்குமதி செய்கின்றவர்களில் ஒப்பீட்டு ரீதியில்  அதிகமானோர் ஜப்பானியர்களே உள்ளனர் .  இதன்படி தற்போது 3 லட்சத்திக்கும் அதிகமான வெளிநாட்டு விபச்சாரத் தொழிலாளர்கள் ஜப்பானில் தங்கியுள்ளனர் . அதில் 50% மானோர் பிலிபைனியர்கள் எனவும் 40% மானோர் தாய்லாந்தியர் எனவும் அறிக்கை கூறுகின்றது .

அதேபோல் தூரகிழக்கில் பாலியல் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்குகின்றது . இலங்கை ,இந்தியா , மாலைதீவு போன்ற வறிய நாடுகளில் சீனா விபச்சாரிகள் மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றுகின்றனர் . இதில் இருப்பவர்கள் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் , பல்கலைக்கழக மாணவிகள் , பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் என்று பல்வேறு பெயர்களில் விபச்சாரிகள் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளிலும் நடமாடுகின்றார்கள் .

அதேபோல் இன்று இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உளைக்கச் செல்லும் சில பணிப் பெண்களும் இப்படியான வெளிநாட்டு விபச்சாரத் தரகர்களிடம் சிக்கி அவர்கள் வெளிநாட்டு சந்தையில் விற்கப்படுவதாகவும் . மற்றும் பருவ வயது அடையாத பெண் பிள்ளைகளை சில கெமிகல்ஸ் மருந்துகளைக் கொடுத்து பருவ வயதை அடைய வைத்து அவர்களை பாலியல் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பல தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது .

எனவே இலங்கை சமூகம் என்ற வகையில்  இது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

குறிப்பு :- வெளிநாட்டிட்கு வேலை செய்வதற்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் .

ஆக்கம்
A .M. Hafeesul Haq ( fathih institute of srilanka  )

Monday, April 4, 2016

சமூக வலைத்தளத்தின் நிலை

மற்றவர்களின் குறைகளை அலசும் களமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றது !

====================================
சமூக வலைத்தளங்கள்  ஆரம்பத்தில் பொழுது போக்கிற்காகவும் மற்றவர்களுக்கு மத்தியில் உணர்வுகளைக்  பகிரும் ஒரு சாதனமாகக்  காணப்பட்டது .  ஆனால் இன்று  அது பல செய்திகளையும்  ( News ) பல  கருத்துக்களையும் ( Opinions ) பகிரும் களமாக மாறிவருகின்றது .

இதில் இஸ்லாமிய கருத்துக்கள் ஒரு சில  பகிரப்பட்டாலும் துறதிஷ்ட வசமாக  இன்று சமூக வலைத் தளத்தைப் பயண்படுத்துவோர் சிலர் மற்ற சகோதரர்களையும் , மற்ற இயக்கங்களையும் ( அமைப்பு :- தப்லீக் , தெளஹீத் , ஜமாதே இஸ்லாம் , )  விமர்சனம் செய்து அதில் இயங்கும் உறுப்பினர்களின் தனிப்பட்ட  குறைகளை கழுவியும்  மற்றவர்களுக்கு அவரை  ஒரு பாவியாக காட்டுகின்ற செயற்பாடு இடம்பெற்று வருகின்றது . ### இதை  முஸ்லிம் என்ற வகையில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ##

வேடிக்கை என்னவென்றால் இன்று சமூக வலைத்தளத்தில் வருகின்ற ஒரு சிலருடைய முற்போக்குச் சிந்தனைகளைவைத்து  இஸ்லாம் தெரியாதவர்கள் கூட அவர் பாவி , அது ஹாரம் , இது ஹலால் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் பத்துவாக்களும்,  விமானம்களும்  பரவிவருகின்றது .

அதேபோல் இஸ்லாமிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள்கூட பெரும்பெரும் இஸ்லாமிய அறிஞ்ஞர்களை விமர்சித்து "காபிர் "  என்று பத்வா கொடுக்கும் அளவுக்கு சமூக வலைத்தள முப்திகள் அதிகரித்துள்ளார்கள்  .

கோள் சொல்வோர்   மற்றும்   அவதூறு சொல்லுவோரின் நிலை
===================================

* முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது “எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார் களோ அவரே! என நபி (ஸல்) அவர் கள் பதிலளித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

* எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்ல தையே பேசட்டும்’ அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

* நிச்சயமாக கற்புள்ள அப்பாவி களான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகை யோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமை யான வேதனையும் உண்டு. (24 : 23)

* “ஒருவரைப் பற்றி இன்னொரு வரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை” சிலர் தொழிலா கவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப் பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. குறை சொல்லி புறம் பேசித் திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104 : 1)

* கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

* நபி (ஸல்) அவர்கள் இரு கப்ரு களைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும், அது பெரும் பாவம்தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே இது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . ஒருத்தரைப் பற்றி விமர்சனம் செய்யும் போது அதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் .

கருத்துக்களை வாசிப்பவர்களுக்கான அறிவுரை :- ஒரு செய்தி அல்லது அவர்களின் கருத்துக்களை  வாசிக்கும் போது அலசி ஆராய்ந்து வாசிக்க வேண்டும் .

Hafeesul haq ( fathih )
varipathanchenai