இன்று முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை இதுவே . கடந்த காலங்களில் குறைவாக இருந்த இப்பிரச்சினை இன்று சமூக்கின் சில பாரம்பரிய மரபுகளால் துரிதமாக வளர ஆரம்பித்துள்ளது.
இன்று முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் சில முறனற்ற மரபுகளால் ( சீதனம் ) இன்று முஸ்லிம் பெண்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் . இந்தப் சிரச்சினைக்கு இலங்கை இந்திய முஸ்லிம் பெண்களே அதிகம் தள்ளப் படுகின்றனர் .
அண்மையில் நான் ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டேன் . ஒரு கிராமத்தில் பாரிய வறுக்கோட்டின் கீழ் வாழ்ந்த ஒரு குடும்பம் . அதில் தந்தை கூலி தொழில் செய்பவர். தாய் கடைகளுக்கு #அப்பம் சுட்டு விப்பவர் . இவர்களுக்கு வயது வந்த 3 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர் . மூத்த பெண் பிள்ளைக்கோ வயது 25 . திருமணம் முடித்துவைக்கும் காலமும் நெருங்கி விட்டது . அந்தக் கிராமத்தில் திருமணம் முடித்து வைக்க வேண்டுமென்றால் வீடு , காணிகள் கொடுக்க வேண்டும் . இதனால் அந்தப் பெற்றோர் களுக்கு பாரிய கவலை எனது பிள்ளையை திருமணம் முடித்துக் கொடுக்க காணி , பூமி இல்லையே என்று
சிறிது காலத்தின் போது அந்தத் தந்தைக்கு வருத்தம் வந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் படுகின்றார் . வைத்தியர்கள் கூறுகின்றார்கள் அவருக்கு #புற்றுநோய் என்று . இதனால் இன்னும் அந்தக் குடும்பத்திற்கு பொறுப்பு அதிகரிக்கின்றது இதன் அவருடைய பெண் பிள்ளை தனது தந்தையின் நோயைக் குணப்படுத்துவதற்கும் மற்றும் தனக்காக #வீடு கட்டவும் வெளிநாடு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டாள் . அதனால் பணிப் பெண்ணாக அறபு நாடு பயனமானாள் .
பின்னர் அந்தப் பெண்ணுக்கு அன்னி ஆண்களுடன் பழகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது . பிள்ளை தனது குடும்பத்தை விட்டும் தூரப்படுத்தப்படுகின்றாள் .
இதுமாத்திரமல்ல இன்னும் அதிகம் உள்ளது திருமணம் முடித்த பெண்களும் இன்று வெளிநாடுகளுக் உழைப்பதற்காகச் சென்று அங்கு விபச்சாரத்திற்கு உட்படுத்தப் படுகின்றார்கள் .
இப்படி இப் பெண்கள் #வறுமையின் காரணமாக மத்திய கிழக்காசியா நாடுகளுக்கு பணிப் பெண்ணாக பணி புரிய நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள் .
எனவே இது குறித்து எமது முஸ்லிம் சமூகம் அக்கறை கொள்ள வேண்டும் . அவ்வாறு அக்கறை கொள்ளாவிட்டால் முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் விளைவு .
01) இஸ்லாமிய குடும்பக் கட்டமைப் சீர் குழையும்
02) வறுமையின் காரணமாக #களவு , விபச்சாரம் முஸ்லிம் சமூகத்தில் அதிகரிக்கும் .
#இதற்கான தீர்வு .
* முஸ்லிம் கிராமங்களில் வறுமை ஒழிப் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் .
* முஸ்லிம் தனவந்தர்கள் முன்வர வேண்டும் . ( வறுமைக் கோட்டில் வாழ்வோரைப் பொறுப்பெடுக்க வேண்டும் )
Hafeesul Haq ( fathih )
No comments:
Post a Comment