Monday, April 4, 2016

சமூக வலைத்தளத்தின் நிலை

மற்றவர்களின் குறைகளை அலசும் களமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றது !

====================================
சமூக வலைத்தளங்கள்  ஆரம்பத்தில் பொழுது போக்கிற்காகவும் மற்றவர்களுக்கு மத்தியில் உணர்வுகளைக்  பகிரும் ஒரு சாதனமாகக்  காணப்பட்டது .  ஆனால் இன்று  அது பல செய்திகளையும்  ( News ) பல  கருத்துக்களையும் ( Opinions ) பகிரும் களமாக மாறிவருகின்றது .

இதில் இஸ்லாமிய கருத்துக்கள் ஒரு சில  பகிரப்பட்டாலும் துறதிஷ்ட வசமாக  இன்று சமூக வலைத் தளத்தைப் பயண்படுத்துவோர் சிலர் மற்ற சகோதரர்களையும் , மற்ற இயக்கங்களையும் ( அமைப்பு :- தப்லீக் , தெளஹீத் , ஜமாதே இஸ்லாம் , )  விமர்சனம் செய்து அதில் இயங்கும் உறுப்பினர்களின் தனிப்பட்ட  குறைகளை கழுவியும்  மற்றவர்களுக்கு அவரை  ஒரு பாவியாக காட்டுகின்ற செயற்பாடு இடம்பெற்று வருகின்றது . ### இதை  முஸ்லிம் என்ற வகையில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ##

வேடிக்கை என்னவென்றால் இன்று சமூக வலைத்தளத்தில் வருகின்ற ஒரு சிலருடைய முற்போக்குச் சிந்தனைகளைவைத்து  இஸ்லாம் தெரியாதவர்கள் கூட அவர் பாவி , அது ஹாரம் , இது ஹலால் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் பத்துவாக்களும்,  விமானம்களும்  பரவிவருகின்றது .

அதேபோல் இஸ்லாமிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள்கூட பெரும்பெரும் இஸ்லாமிய அறிஞ்ஞர்களை விமர்சித்து "காபிர் "  என்று பத்வா கொடுக்கும் அளவுக்கு சமூக வலைத்தள முப்திகள் அதிகரித்துள்ளார்கள்  .

கோள் சொல்வோர்   மற்றும்   அவதூறு சொல்லுவோரின் நிலை
===================================

* முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது “எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார் களோ அவரே! என நபி (ஸல்) அவர் கள் பதிலளித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

* எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்ல தையே பேசட்டும்’ அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

* நிச்சயமாக கற்புள்ள அப்பாவி களான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகை யோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமை யான வேதனையும் உண்டு. (24 : 23)

* “ஒருவரைப் பற்றி இன்னொரு வரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை” சிலர் தொழிலா கவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப் பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. குறை சொல்லி புறம் பேசித் திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104 : 1)

* கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

* நபி (ஸல்) அவர்கள் இரு கப்ரு களைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும், அது பெரும் பாவம்தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே இது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . ஒருத்தரைப் பற்றி விமர்சனம் செய்யும் போது அதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் .

கருத்துக்களை வாசிப்பவர்களுக்கான அறிவுரை :- ஒரு செய்தி அல்லது அவர்களின் கருத்துக்களை  வாசிக்கும் போது அலசி ஆராய்ந்து வாசிக்க வேண்டும் .

Hafeesul haq ( fathih )
varipathanchenai

No comments:

Post a Comment