Sunday, May 29, 2016

எகிப்தின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி முஹம்மத்_முர்சியின் ஆட்சி கவிழ்ப்பும் மேற்குலக சதியும்.

பாருங்கள்_பகிருங்கள்_இறைவன்_அருள்புரிவான் .

இவர் யார் என்று தெரியாமலே இவர் #பாவி ,#பித்அத்வாதி என்று என்னிடம் ஒரு சிலர் விமர்சனம் செய்தார்கள் . அதனால்தான் நான் இவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன் .

01) முஹம்மத் முர்சி யார் இவர்  ?

இவர் எகிப்தின் தற்போதைய உத்யோக பூர்வமான ஜனாதிபதி .

02) இவருடைய சிறப்பு என்ன ?

இவர் குர்ஆனை மனனம் செய்த ஒரு  #ஹாபிழ் . இஸ்லாமிய ஷரிஆ துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு ##தாயி  . அதேபோல் பொறியியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற சிறந்த பொறியியலாளர் .

03) எதற்காக சர்வதேச உலகம் இவரை  எதிர்த்தது ?

கரணம் இவர் எகிப்தின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற போது இவர் #இரண்டு வேலைத்திட்டங்களை மேற் கொண்டார் .

01) சுயஸ் கால்வாய் திட்டம் . இந்தத் திட்டமானது  எகிப்தின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒரு திட்டம் . இந்தத்திட்டம் வெற்றிபெற்றால் உலகத்தில் பல நாடுகளுடைய பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து விடும் .

.02) எகிப்திற்கும் , பலஸ்தீனுக்கும் எல்லையில் உள்ள #ரபா எல்லையை  பலஆண்டுகளாக  ஜமால் அப்துன் நாசர் என்ற எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனின் உதவியுடன் இஸ்ரேல் மூடவைத்தது . காரணம் இதனூடாகத்தான் #ஹமாஸுக்கு ஆயுதங்கள் போகின்றது என்று . இதை  முஹம்மத் முர்சி  திறந்து வைத்தார் .

03) இவர் பதவி கவிழ்க்கப்படுவதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ?

காரணம் #ரபா எல்லையைத் திறந்தால் ஹமாஸ் பலம்பெற்றுவிடும் .அதேபோல் அவர்கள் குதுஸை மீட்பதற்கு இலகுவாகிவிடும் . எனவே ஹமாஸ் பலம்பெ றக்கூடாது .  அப்படி பலம்பெற்றால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகி விடும் . இதனால் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு இஸ்ரேலைப்  பாதுகாப்பது கடினமானதாக மாறிவிடும். என்ற காரணத்திற்காக அரபு நாட்டின் சில குள்ள நரிகளுக்கு பணம் கொடுத்து அந்த எல்லையை மேற்குலகு மூடவைத்தது  . இது வெளிப்படையான உண்மை .

அதேபோல் அவரின் சுயஸ்கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டல்   உலகத்தில் பல முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துவிடும் என்று  இதை விளங்கிய சில முஸ்லிம்  நாடுகள் முர்சியுடைய ஆட்சியை வீழ்த்துவதற்கு எகிப்து இராணுவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது .

இன்னுமொரு மிகப்பெரிய காரணம் . முஹம்மத் முர்ஸி #இஃவானுல்_முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர் . என்ற காரணத்தினால் அவருடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சில நாடுகளும்  ,சில முஸ்லிம் இயக்கங்களும்  இராணுவத்திற்கு உதவியது .

04 ) ஏன் இஃவான்களை எதிர்க்க வேண்டும் ?

காரணம் அவர்களுடைய சிந்தனை மன்னராட்ச்சி இடம்பெறும் நாடுகளில் பரவினால் மன்னர்களின் ஆட்சிக்கு பாதகமாக  அமையலாம் . என்ற காரணத்திற்காக அவர்கள் முஹம்மத் முர்ஸிக்கு எதிராக எகிப்திய இராணுவத்திற்கு தனது பூரண  ஆதரவுகளை வழங்கினார்கள் .

******************************************
மேற் குறிப்பிட்ட காரணங்களால் இன்று
#போலியான_குற்றச்சாட்டின் மூலம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் .
******************************************

#குற்றச்சாட்டு ☞

01) முஹம்மத் முரஸியின்  ஆட்சிக்காலதில்   (2012 ஆம் ஆண்டில் )  இவருக்கு எதிராக புரட்சி செய்த புரட்டியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரின் 20 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்படுள்ளது.
( #அதிகாரத்_துஷ்பிரையோகம் )

அதேபோல்  இதற்க்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு சிறைக்கைதிகளைத் தப்பவிட்ட வழக்கிற்க்காக கெய்ரோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது

இன்று இதுபற்றி உண்மை நிலையை அறியாத சிலர் #இயக்க வெறி காரணமாக பலவகையான கட்டுகதைகளைக் கட்டி காரசாரமாக இவரைப் பற்றி முகநூல்களில்  விமர்சனம் செய்து வருகின்றார்கள் .

கவலை என்னவென்றால் இவர் யார் என்று தெரியாமலே இவர் #பாவி ,#பித்அத்வாதி என்று என்னிடம் ஒரு சிலர் விமர்சனம் செய்தார்கள் . அதனால்தான் நான் இவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன் .

#குறிப்பு :- இன்று முகநூலினூடாக  இஃவான்களைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை  மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள் . இது குறித்து  நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்  .  . . அதேபோல்  இதை  எழுதும் காலமெல்லாம்  அவர்கள் எதிர்த்துக் கொணடே இருப்பார்கள் .

Hafeesul haq  (Fathihi )

Saturday, May 28, 2016

இஸ்லாம் என்ற பெயரில் அதிகரித்துவரும் இயக்க வெறி ( ஹரகியா)

இஸ்லாமிய மார்க்கம் ஒரு போது உறவுகளை நெறிப்படுத்துவதில் தடையாக இருந்ததில்லை . அது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவுகளை வலுப்படுத்துவதில்தான் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது . நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு  முஸ்லிமின் சகோதரன் ( ஹதீஸ் )
ஆனால் இன்று அது வெறும் வார்த்தையாகத்தான் எமது வாழ்வில் இருக்கின்றது .

இன்று நாங்கள்தான் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துகின்றோம் , நாங்கள்தான் குர்ஆன் , ஸுன்னாவை நடைமுறைப் படுத்துகின்றோம் என்று சொல்லி மற்றவர்களின் குறைகளையும் அவர்களைப் பற்றிய பிழையான கருத்துக்களை மற்றவர்கள் மத்தியில் கூச்சம் இல்லாமல் பரப்பி வருகின்றோம் . இது முற்று முழுதாக நபிஸல் அவர்களின் ஸுன்னாவுக்கு முறணானது .
முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது “எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார் களோ அவரே! என நபி (ஸல்) அவர் கள் பதிலளித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்) ஆனால் நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் ?

நபிஸல் அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில்
எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்ல தையே பேசட்டும்’ அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)  ஆனால் நாங்கள் இதைச் சொல்வதுதான் ஸுன்னா என்று ஸுன்னாவுக்கே முறனாக செயற்படுகின்றோம் அல்லவா !

இன்று எம்மில் சிலர்  “ஒருவரைப் பற்றி இன்னொரு வரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை” சிலர் தொழிலா கவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப் பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. குறை சொல்லி புறம் பேசித் திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(104 : 1)

இன்று இயக்க விமர்சனம் என்ற பெயரில் சமூக வலைத்தளத்திலும் பத்திரிகைகளிலும் மற்ற இயக்கங்களைக் குறை கூறுவது போதாமல் ஜும்மா தினத்திலும் மிம்பர் மேடை ஏறி கழுவ ஆரம்பித்துள்ளார்கள் ஸுப்ஹானல்லாஹ் !   இதுதான் வழிகேடு ..

நான் அண்மையில் ஒரு பள்ளிவாசலுக்கு ஜும்மா தொழுகைக்காக சென்றேன் அந்த ஜும்மாப் பிரசங்கம் பூராக மற்ற இயக்கங்களை விமர்சனம் செய்ததாகவே அமைந்திருந்தது  .  அதில் மற்ற இயக்கத் தலைவரின் குறைகள் மற்றும் அவர்களின் இயக்கம் சார்ந்த இமாம்களை முற்றிலும் இழிவு படுத்தியதாகவே அமைந்திருந்தது  .

இந்த ஜும்மா பிரசங்கம் செய்தது இஸ்லாம் படித்த ஒரு மெளலவி  ! ஒரு மெளலவிலே  மற்றவர்களையும் மற்றவர்களின்  இமாம்ளையும்  கீழ்த்தரமாக  பேசும்போது  ஆரோக்கியமான பேச்சல்ல ! 

இன்னொரு புறம் பார்க்கின்ற போது இவருடைய பேச்சை  செவிமடுக்கும் பொதுமக்களுக்கு விமர்சனம் செய்யப்படுவோர்களையும்  அவர்கள் சார்ந்த இமாம்களையும் பிழையானவர் அல்லது காபிர் என்ற வட்டத்தினுல்  பார்வையிடும் சந்தர்ப்பம் ஏற்படும் . இதனால் பாரிய  விளைவு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது
( சகோதரத்துவத்தில் ஏற்பட்ட  வீழ்ச்சி  )

இயக்க விமர்சனம் என்ற போர்வையில் மற்றவர்களின் குறைகளைக் கழுகுவது நாளை நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாக மாறிவிடும் எனவே இதை முற்றுமுழுதாக தவிர்ந்து நடக்க எம்மிறைவன் எமக்கு அருள் புரிவானாக !

Hafeesul haq ( fathih )
Varipathanchenai

Saturday, May 21, 2016

உணர்விழந்து போகும் ஜும்ஆ பிரசங்கங்கள்.

A.M. ஹபீஸூல் ஹக் ( பாதிஹி )

சமூக மாற்றத்திற்கு மிகப் பெரும் பங்களிப்பு ஜும்ஆ பிரசங்கங்களினூடாகவே நாடை பெறுகின்றது என்பது  நாம் அறிந்த உண்மை .

ஜும்ஆ_தினத்தின்_சில_சிறப்பு

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺇِﺫَﺍ ﻧُﻮﺩِﻱَ ﻟِﻠﺼَّﻠَﺎﺓِ ﻣِﻦ ﻳَﻮْﻡِ ﺍﻟْﺠُﻤُﻌَﺔِ ﻓَﺎﺳْﻌَﻮْﺍ ﺇِﻟَﻰٰ ﺫِﻛْﺮِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺫَﺭُﻭﺍ ﺍﻟْﺒَﻴْﻊَ
ۚ ﺫَٰﻟِﻜُﻢْ ﺧَﻴْﺮٌ ﻟَّﻜُﻢْ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

( அல்குர்ஆன் 62:9.)

* ☞சூரியன்  உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்:( திர்மிதி )

*☞☞ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்'

ஆதாரம்:(  முஸ்லிம் )

*☞☞இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
( நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)

இப்படி பலவகையான சிறப்புகள் இந்த ஜும்ஆ தினத்திற்கு உள்ளது .  நபிஸல் அவர்கள் ஜும்ஆ பிசங்கம் செய்கின்ற போது சில நபித்தோழர்கள் பள்ளிவாசலைவிட்டு வீடு செல்வதற்குத் தயங்குவார்கள் . காரணம் ஜும்ஆவின் தாக்கம் .  இன்னும் சில நபித்தோழர்கள் ஜும்ஆவுடைய தாக்கத்தினால் அழுது விடுவார்கள் . நபிஸல் அவர்கள் அப்படித்தான் தனது ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொண்டார்கள் .

ஆனால் இன்று எமது ஜும்ஆ பிரசங்கங்கள் இப்படியான #ஈமானிய உணர்வைத் தருவதென்பது மிகவும் அரிதாகத்தான் உள்ளது . காரணம் ...  கொள்கை வெறி ( தரீக்கா ,தப்லீக் தெளஹீத் ,ஜமாதே இஸ்லாம் ) என்ற கொள்கை வெறி இன்று #ஜும்ஆ பிரசங்கங்களிலும் பிரதி பலிக்க ஆரம்பித்துவிட்டது . புனிதமான ஜும்ஆ தினத்தில் இறைவன் அல்லது மறுமையை ஞாபகப் படுத்துவதை விட்டுவிட்டு மற்ற மற்ற இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி குறை கழுவுகின்ற வீதம் அதிகரித்து கொண்டே செல்கின்றது .

இஸ்லாத்தில் #மற்றவரைப் பற்றி குறை கூறுவது பெரும்பாவங்களில் ஒன்று . நபிஸல் அவர்கள் வன்மையாக் கண்டித்துள்ளார்கள் . இதை அறிந்துவிட்டே பள்ளிவாசல் #மிம்பரில் ஏறி குறை கூறுவது ???  இதை இஸ்லாம் அங்கிகரித்துள்ளதா ?? இல்லை . இப்படியான கவனதிற் கொள்ள வேண்டும் .

அதேபோல் ஜும்ஆ பிரசங்கம் ஒன்று செய்கின்ற போது #தலைப்பை வரையறுத்துக் கொள்ள வேண்டும் . இன்று சில குத்பா பிசங்கங்கள் நடத்தப்படுகின்றது என்ன தலைப்பு என்று  வரையறுப்பது கடிணமாக உள்ளது . இதனால் வருகின்றவர்கள் கூட சாபமிட்டுச் செல்கின்ற காட்சிகளு நடை பெற்றுள்ளது . எனவே காலத்திற்கு ஏற்ற தலைப்புகளில் ஜும்ஆ பிரசங்கங்கள் அமைய வேண்டும் .

இறுதியாக நேரத்தைக் கவனத்திற்க் கொள்ள வேண்டும் . நபிஸல் அவர்கள் கூட ஜும்ஆ பிரசங்கங்களின் நேரத்தை குறைத்து தொழுகையின் நேரத்தை அதிகரிப்பார்கள் . ஆனால் எமது ஜும்ஆ தினம் நேர்முறனாக உள்ளது . எனவே நேரத்தை வரையற செய்ய வேண்டும் . காரணம் ஜும்ஆவை செவிமடுப்பவர்  அலுப்பாகப் பார்பார் . அவர் அதை உள்வாங்க மாட்டார் .

எனவே இது குறித்து எமது உலாமாக்களும்_எமது பள்ளி நிர்வாகங்களும் கரிசினை கொள்ள வேண்டும் . ( ஒவ்வொரு மனிதனும் பொறுப்புதாரி அவர்களின் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் ( ஹதீஸ்)

கட்டுரையின் சாரம்சம்
=======:=========================
*ஜும்ஆ பிரசங்கங்களில் விமர்சனம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் .

*ஜும்ஆ பிரசங்கங்களின் தலைப்பு வரையறை செய்ய வேண்டும் .

*ஜும்ஆ பிரசங்களின் நேரங்கள் வரையறை செய்ய வேண்டும் .

குறிப்பு :- இதை அமைக்கா விட்டால் பொதுமக்களாகிய நாங்கள் பிரச்சினையை பள்ளி நிர்வாகிகளிடம் சுட்டிக் காட்ட வேண்டும் . ( இதுதான் சிறந்த தீர்வு  )

(((((((( இது எனது கருத்து உங்களுடைய கருத்தையும் நீங்கள் கூற முடியும் )))))

Friday, May 6, 2016

அலி_இப்னு_அப்பாஸ் ( ?_ 994 )

மேற்குலகு மறந்த முஸ்லிம்  மருத்துவ மேதை

இவரைப் பற்றி  ( Dr.Lecleric  )  லெக் லெரிக் என்பவர் கூறுகையில்" அலி_இப்னு_அப்பாஸ்
தலை சிறந்த சிந்தனையாளர் " என்று

இவர் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றுமொரு மருத்துவ மேதை . இவர் மேற்குப் பாரசீகத்திலுள்ள #அஹ்வால் என்னும் ஊரில் ( நெருப்பு வணங்கி ) ஒரு வருக்குப் பிறந்தார் . இவருடைய முழுப் பெயர் #ஹாலி_அப்பாஸ் என்பதே ஐரோப்பியர்கள் இவருக்கு வைத்த இலத்தீன் பெயர் .

இவர் 994 இல் மறனமானார் . இவர் புவையித் சுல்தான்களுல் ஒருவரான #ஆதுத்_தெளலா என்பவரின் அரச சபையில் ( 974_982 ) வரையும் பணி புரிந்தார் . இவரே முதன் முதலில் #மயிர்த்துளைக்_குளாய்களின்_அமைப்பு , #தொழிற்பாடு , #குழந்தை_பிரசவமாகும்_விதம் போன்ற வற்றைக் கண்டுபிடித்தார் .

இவர் எழுதிய நூல்களாக " காமிலு ஸனுஆ
( #பூரணத்துவம்_வாய்ந்த_மருத்துவ_நூல் ) இதை கிதாபுல் மலிக்கீ என்றும் சொல்வார்கள் . இந்த நூல் சுல்தான் ஆதுத் தெளலாவுக்காக எழுதப்பட்டது .

இதில் முதல் 10 சொற் பொழிவுகள் மருத்துவக் கோட்பாடு பற்றியும் மற்ற 10 சொற் பொழிபுகள் மருத்துவ செயல் முறை பற்றியும் கூறுகின்றது . இந்த தூல் 11_ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் #கொன்ஸ்தாந்தைன் என்பவரால் இலத்தீன் மொழியிற்கும் பின்னர் #ஸ்டீபன் என்பவரால் 1127 இல் அதே மொழியிலும் மொழிமொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது .  பல ஆண்டுகளாக பாடப் புத்தகமாக இருந்த நூல் அலி இப்னு ஸீனாவின் #காணூன்பீதிப் என்ற புத்தகம் வந்த போது செல்வாக்கை இழந்தது .

அக்காலத்தில் மருத்துவர்கள் குழந்தை தானாக உண்டாகும் #இச்சை_வழி முயற்சி ( Voluntary effort ) இனால் பிரசவம் நடக்கின்றது என்று பல நூற்றாண்டுகளாக நம்பி வந்தார்கள் . ஆனால் #அலி_இப்னு_அப்பாஸ் இக்கருத்தை பிழை என்று கூறி #கருப்பையில்_ஏற்படும்_எதிர் தாக்கம் காரணமாகத்தான் குழந்தை பிறக்கின்றது என்று நிரூபித்துக் காட்டினார் .
( கருபை  பிரசவ நேரத்தில் ஏனைய உறுப்புக்களால் செலுத்தப்படும்  தாக்கத்தால் கருபைத் தசைகள் சக்தியை இளந்து சுருங்கி விருந்து கொண்டே இருக்கும் இந்த சமையத்தில் தாய் முக்குவதால் சுவாசப்பைகள் கருபையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதனால் குழந்தை வெளியே தள்ளப் படுகின்றது ) என்று நிரூபித்தார் .

குறிப்பு :- இப்படிப்பட்ட முஸ்லிம் கண்டுபிடிப்பாளர்கள் மேற்கத்தையவர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றார்கள் . 
அதேபோல் இப்படியான முஸ்லிம் கண்டுபிடிப்பாளர்களை எமது பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரிய ஆசிரியைகள் எமது பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுப்பதில்லை .
எனவே நீங்களாவது இதை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவையுங்கள் . இறைவன் அருள் புரிவான்

ஆக்கம்
Hafeesul haq ( fathihi )