இஸ்லாமிய மார்க்கம் ஒரு போது உறவுகளை நெறிப்படுத்துவதில் தடையாக இருந்ததில்லை . அது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் உறவுகளை வலுப்படுத்துவதில்தான் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது . நபிஸல் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ( ஹதீஸ் )
ஆனால் இன்று அது வெறும் வார்த்தையாகத்தான் எமது வாழ்வில் இருக்கின்றது .
இன்று நாங்கள்தான் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துகின்றோம் , நாங்கள்தான் குர்ஆன் , ஸுன்னாவை நடைமுறைப் படுத்துகின்றோம் என்று சொல்லி மற்றவர்களின் குறைகளையும் அவர்களைப் பற்றிய பிழையான கருத்துக்களை மற்றவர்கள் மத்தியில் கூச்சம் இல்லாமல் பரப்பி வருகின்றோம் . இது முற்று முழுதாக நபிஸல் அவர்களின் ஸுன்னாவுக்கு முறணானது .
முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது “எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார் களோ அவரே! என நபி (ஸல்) அவர் கள் பதிலளித்தார்கள்.
(புகாரி, முஸ்லிம்) ஆனால் நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் ?
நபிஸல் அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில்
எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்ல தையே பேசட்டும்’ அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்) ஆனால் நாங்கள் இதைச் சொல்வதுதான் ஸுன்னா என்று ஸுன்னாவுக்கே முறனாக செயற்படுகின்றோம் அல்லவா !
இன்று எம்மில் சிலர் “ஒருவரைப் பற்றி இன்னொரு வரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை” சிலர் தொழிலா கவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப் பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. குறை சொல்லி புறம் பேசித் திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(104 : 1)
இன்று இயக்க விமர்சனம் என்ற பெயரில் சமூக வலைத்தளத்திலும் பத்திரிகைகளிலும் மற்ற இயக்கங்களைக் குறை கூறுவது போதாமல் ஜும்மா தினத்திலும் மிம்பர் மேடை ஏறி கழுவ ஆரம்பித்துள்ளார்கள் ஸுப்ஹானல்லாஹ் ! இதுதான் வழிகேடு ..
நான் அண்மையில் ஒரு பள்ளிவாசலுக்கு ஜும்மா தொழுகைக்காக சென்றேன் அந்த ஜும்மாப் பிரசங்கம் பூராக மற்ற இயக்கங்களை விமர்சனம் செய்ததாகவே அமைந்திருந்தது . அதில் மற்ற இயக்கத் தலைவரின் குறைகள் மற்றும் அவர்களின் இயக்கம் சார்ந்த இமாம்களை முற்றிலும் இழிவு படுத்தியதாகவே அமைந்திருந்தது .
இந்த ஜும்மா பிரசங்கம் செய்தது இஸ்லாம் படித்த ஒரு மெளலவி ! ஒரு மெளலவிலே மற்றவர்களையும் மற்றவர்களின் இமாம்ளையும் கீழ்த்தரமாக பேசும்போது ஆரோக்கியமான பேச்சல்ல !
இன்னொரு புறம் பார்க்கின்ற போது இவருடைய பேச்சை செவிமடுக்கும் பொதுமக்களுக்கு விமர்சனம் செய்யப்படுவோர்களையும் அவர்கள் சார்ந்த இமாம்களையும் பிழையானவர் அல்லது காபிர் என்ற வட்டத்தினுல் பார்வையிடும் சந்தர்ப்பம் ஏற்படும் . இதனால் பாரிய விளைவு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது
( சகோதரத்துவத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி )
இயக்க விமர்சனம் என்ற போர்வையில் மற்றவர்களின் குறைகளைக் கழுகுவது நாளை நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாக மாறிவிடும் எனவே இதை முற்றுமுழுதாக தவிர்ந்து நடக்க எம்மிறைவன் எமக்கு அருள் புரிவானாக !
Hafeesul haq ( fathih )
Varipathanchenai
No comments:
Post a Comment