Sunday, May 29, 2016

எகிப்தின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி முஹம்மத்_முர்சியின் ஆட்சி கவிழ்ப்பும் மேற்குலக சதியும்.

பாருங்கள்_பகிருங்கள்_இறைவன்_அருள்புரிவான் .

இவர் யார் என்று தெரியாமலே இவர் #பாவி ,#பித்அத்வாதி என்று என்னிடம் ஒரு சிலர் விமர்சனம் செய்தார்கள் . அதனால்தான் நான் இவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன் .

01) முஹம்மத் முர்சி யார் இவர்  ?

இவர் எகிப்தின் தற்போதைய உத்யோக பூர்வமான ஜனாதிபதி .

02) இவருடைய சிறப்பு என்ன ?

இவர் குர்ஆனை மனனம் செய்த ஒரு  #ஹாபிழ் . இஸ்லாமிய ஷரிஆ துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு ##தாயி  . அதேபோல் பொறியியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற சிறந்த பொறியியலாளர் .

03) எதற்காக சர்வதேச உலகம் இவரை  எதிர்த்தது ?

கரணம் இவர் எகிப்தின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற போது இவர் #இரண்டு வேலைத்திட்டங்களை மேற் கொண்டார் .

01) சுயஸ் கால்வாய் திட்டம் . இந்தத் திட்டமானது  எகிப்தின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒரு திட்டம் . இந்தத்திட்டம் வெற்றிபெற்றால் உலகத்தில் பல நாடுகளுடைய பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து விடும் .

.02) எகிப்திற்கும் , பலஸ்தீனுக்கும் எல்லையில் உள்ள #ரபா எல்லையை  பலஆண்டுகளாக  ஜமால் அப்துன் நாசர் என்ற எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனின் உதவியுடன் இஸ்ரேல் மூடவைத்தது . காரணம் இதனூடாகத்தான் #ஹமாஸுக்கு ஆயுதங்கள் போகின்றது என்று . இதை  முஹம்மத் முர்சி  திறந்து வைத்தார் .

03) இவர் பதவி கவிழ்க்கப்படுவதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ?

காரணம் #ரபா எல்லையைத் திறந்தால் ஹமாஸ் பலம்பெற்றுவிடும் .அதேபோல் அவர்கள் குதுஸை மீட்பதற்கு இலகுவாகிவிடும் . எனவே ஹமாஸ் பலம்பெ றக்கூடாது .  அப்படி பலம்பெற்றால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகி விடும் . இதனால் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு இஸ்ரேலைப்  பாதுகாப்பது கடினமானதாக மாறிவிடும். என்ற காரணத்திற்காக அரபு நாட்டின் சில குள்ள நரிகளுக்கு பணம் கொடுத்து அந்த எல்லையை மேற்குலகு மூடவைத்தது  . இது வெளிப்படையான உண்மை .

அதேபோல் அவரின் சுயஸ்கால்வாய்த் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டல்   உலகத்தில் பல முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துவிடும் என்று  இதை விளங்கிய சில முஸ்லிம்  நாடுகள் முர்சியுடைய ஆட்சியை வீழ்த்துவதற்கு எகிப்து இராணுவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது .

இன்னுமொரு மிகப்பெரிய காரணம் . முஹம்மத் முர்ஸி #இஃவானுல்_முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர் . என்ற காரணத்தினால் அவருடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சில நாடுகளும்  ,சில முஸ்லிம் இயக்கங்களும்  இராணுவத்திற்கு உதவியது .

04 ) ஏன் இஃவான்களை எதிர்க்க வேண்டும் ?

காரணம் அவர்களுடைய சிந்தனை மன்னராட்ச்சி இடம்பெறும் நாடுகளில் பரவினால் மன்னர்களின் ஆட்சிக்கு பாதகமாக  அமையலாம் . என்ற காரணத்திற்காக அவர்கள் முஹம்மத் முர்ஸிக்கு எதிராக எகிப்திய இராணுவத்திற்கு தனது பூரண  ஆதரவுகளை வழங்கினார்கள் .

******************************************
மேற் குறிப்பிட்ட காரணங்களால் இன்று
#போலியான_குற்றச்சாட்டின் மூலம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார் .
******************************************

#குற்றச்சாட்டு ☞

01) முஹம்மத் முரஸியின்  ஆட்சிக்காலதில்   (2012 ஆம் ஆண்டில் )  இவருக்கு எதிராக புரட்சி செய்த புரட்டியாளர்கள் நூற்றுக்கணக்கானோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரின் 20 ஆண்டுகள் சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்படுள்ளது.
( #அதிகாரத்_துஷ்பிரையோகம் )

அதேபோல்  இதற்க்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு சிறைக்கைதிகளைத் தப்பவிட்ட வழக்கிற்க்காக கெய்ரோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது

இன்று இதுபற்றி உண்மை நிலையை அறியாத சிலர் #இயக்க வெறி காரணமாக பலவகையான கட்டுகதைகளைக் கட்டி காரசாரமாக இவரைப் பற்றி முகநூல்களில்  விமர்சனம் செய்து வருகின்றார்கள் .

கவலை என்னவென்றால் இவர் யார் என்று தெரியாமலே இவர் #பாவி ,#பித்அத்வாதி என்று என்னிடம் ஒரு சிலர் விமர்சனம் செய்தார்கள் . அதனால்தான் நான் இவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்தை எழுதியுள்ளேன் .

#குறிப்பு :- இன்று முகநூலினூடாக  இஃவான்களைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை  மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள் . இது குறித்து  நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்  .  . . அதேபோல்  இதை  எழுதும் காலமெல்லாம்  அவர்கள் எதிர்த்துக் கொணடே இருப்பார்கள் .

Hafeesul haq  (Fathihi )

No comments:

Post a Comment