A.M. ஹபீஸூல் ஹக் ( பாதிஹி )
சமூக மாற்றத்திற்கு மிகப் பெரும் பங்களிப்பு ஜும்ஆ பிரசங்கங்களினூடாகவே நாடை பெறுகின்றது என்பது நாம் அறிந்த உண்மை .
ஜும்ஆ_தினத்தின்_சில_சிறப்பு
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺇِﺫَﺍ ﻧُﻮﺩِﻱَ ﻟِﻠﺼَّﻠَﺎﺓِ ﻣِﻦ ﻳَﻮْﻡِ ﺍﻟْﺠُﻤُﻌَﺔِ ﻓَﺎﺳْﻌَﻮْﺍ ﺇِﻟَﻰٰ ﺫِﻛْﺮِ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺫَﺭُﻭﺍ ﺍﻟْﺒَﻴْﻊَ
ۚ ﺫَٰﻟِﻜُﻢْ ﺧَﻴْﺮٌ ﻟَّﻜُﻢْ ﺇِﻥ ﻛُﻨﺘُﻢْ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
( அல்குர்ஆன் 62:9.)
* ☞சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்:( திர்மிதி )
*☞☞ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறினார்கள்: 'வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்'
ஆதாரம்:( முஸ்லிம் )
*☞☞இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகழவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு,
( நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)
இப்படி பலவகையான சிறப்புகள் இந்த ஜும்ஆ தினத்திற்கு உள்ளது . நபிஸல் அவர்கள் ஜும்ஆ பிசங்கம் செய்கின்ற போது சில நபித்தோழர்கள் பள்ளிவாசலைவிட்டு வீடு செல்வதற்குத் தயங்குவார்கள் . காரணம் ஜும்ஆவின் தாக்கம் . இன்னும் சில நபித்தோழர்கள் ஜும்ஆவுடைய தாக்கத்தினால் அழுது விடுவார்கள் . நபிஸல் அவர்கள் அப்படித்தான் தனது ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொண்டார்கள் .
ஆனால் இன்று எமது ஜும்ஆ பிரசங்கங்கள் இப்படியான #ஈமானிய உணர்வைத் தருவதென்பது மிகவும் அரிதாகத்தான் உள்ளது . காரணம் ... கொள்கை வெறி ( தரீக்கா ,தப்லீக் தெளஹீத் ,ஜமாதே இஸ்லாம் ) என்ற கொள்கை வெறி இன்று #ஜும்ஆ பிரசங்கங்களிலும் பிரதி பலிக்க ஆரம்பித்துவிட்டது . புனிதமான ஜும்ஆ தினத்தில் இறைவன் அல்லது மறுமையை ஞாபகப் படுத்துவதை விட்டுவிட்டு மற்ற மற்ற இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி குறை கழுவுகின்ற வீதம் அதிகரித்து கொண்டே செல்கின்றது .
இஸ்லாத்தில் #மற்றவரைப் பற்றி குறை கூறுவது பெரும்பாவங்களில் ஒன்று . நபிஸல் அவர்கள் வன்மையாக் கண்டித்துள்ளார்கள் . இதை அறிந்துவிட்டே பள்ளிவாசல் #மிம்பரில் ஏறி குறை கூறுவது ??? இதை இஸ்லாம் அங்கிகரித்துள்ளதா ?? இல்லை . இப்படியான கவனதிற் கொள்ள வேண்டும் .
அதேபோல் ஜும்ஆ பிரசங்கம் ஒன்று செய்கின்ற போது #தலைப்பை வரையறுத்துக் கொள்ள வேண்டும் . இன்று சில குத்பா பிசங்கங்கள் நடத்தப்படுகின்றது என்ன தலைப்பு என்று வரையறுப்பது கடிணமாக உள்ளது . இதனால் வருகின்றவர்கள் கூட சாபமிட்டுச் செல்கின்ற காட்சிகளு நடை பெற்றுள்ளது . எனவே காலத்திற்கு ஏற்ற தலைப்புகளில் ஜும்ஆ பிரசங்கங்கள் அமைய வேண்டும் .
இறுதியாக நேரத்தைக் கவனத்திற்க் கொள்ள வேண்டும் . நபிஸல் அவர்கள் கூட ஜும்ஆ பிரசங்கங்களின் நேரத்தை குறைத்து தொழுகையின் நேரத்தை அதிகரிப்பார்கள் . ஆனால் எமது ஜும்ஆ தினம் நேர்முறனாக உள்ளது . எனவே நேரத்தை வரையற செய்ய வேண்டும் . காரணம் ஜும்ஆவை செவிமடுப்பவர் அலுப்பாகப் பார்பார் . அவர் அதை உள்வாங்க மாட்டார் .
எனவே இது குறித்து எமது உலாமாக்களும்_எமது பள்ளி நிர்வாகங்களும் கரிசினை கொள்ள வேண்டும் . ( ஒவ்வொரு மனிதனும் பொறுப்புதாரி அவர்களின் பொறுப்பைப் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் ( ஹதீஸ்)
கட்டுரையின் சாரம்சம்
=======:=========================
*ஜும்ஆ பிரசங்கங்களில் விமர்சனம் செய்வது நிறுத்தப்பட வேண்டும் .
*ஜும்ஆ பிரசங்கங்களின் தலைப்பு வரையறை செய்ய வேண்டும் .
*ஜும்ஆ பிரசங்களின் நேரங்கள் வரையறை செய்ய வேண்டும் .
குறிப்பு :- இதை அமைக்கா விட்டால் பொதுமக்களாகிய நாங்கள் பிரச்சினையை பள்ளி நிர்வாகிகளிடம் சுட்டிக் காட்ட வேண்டும் . ( இதுதான் சிறந்த தீர்வு )
(((((((( இது எனது கருத்து உங்களுடைய கருத்தையும் நீங்கள் கூற முடியும் )))))
No comments:
Post a Comment