மேற்குலகு மறந்த முஸ்லிம் மருத்துவ மேதை
இவரைப் பற்றி ( Dr.Lecleric ) லெக் லெரிக் என்பவர் கூறுகையில்" அலி_இப்னு_அப்பாஸ்
தலை சிறந்த சிந்தனையாளர் " என்று
இவர் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றுமொரு மருத்துவ மேதை . இவர் மேற்குப் பாரசீகத்திலுள்ள #அஹ்வால் என்னும் ஊரில் ( நெருப்பு வணங்கி ) ஒரு வருக்குப் பிறந்தார் . இவருடைய முழுப் பெயர் #ஹாலி_அப்பாஸ் என்பதே ஐரோப்பியர்கள் இவருக்கு வைத்த இலத்தீன் பெயர் .
இவர் 994 இல் மறனமானார் . இவர் புவையித் சுல்தான்களுல் ஒருவரான #ஆதுத்_தெளலா என்பவரின் அரச சபையில் ( 974_982 ) வரையும் பணி புரிந்தார் . இவரே முதன் முதலில் #மயிர்த்துளைக்_குளாய்களின்_அமைப்பு , #தொழிற்பாடு , #குழந்தை_பிரசவமாகும்_விதம் போன்ற வற்றைக் கண்டுபிடித்தார் .
இவர் எழுதிய நூல்களாக " காமிலு ஸனுஆ
( #பூரணத்துவம்_வாய்ந்த_மருத்துவ_நூல் ) இதை கிதாபுல் மலிக்கீ என்றும் சொல்வார்கள் . இந்த நூல் சுல்தான் ஆதுத் தெளலாவுக்காக எழுதப்பட்டது .
இதில் முதல் 10 சொற் பொழிவுகள் மருத்துவக் கோட்பாடு பற்றியும் மற்ற 10 சொற் பொழிபுகள் மருத்துவ செயல் முறை பற்றியும் கூறுகின்றது . இந்த தூல் 11_ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் #கொன்ஸ்தாந்தைன் என்பவரால் இலத்தீன் மொழியிற்கும் பின்னர் #ஸ்டீபன் என்பவரால் 1127 இல் அதே மொழியிலும் மொழிமொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது . பல ஆண்டுகளாக பாடப் புத்தகமாக இருந்த நூல் அலி இப்னு ஸீனாவின் #காணூன்பீதிப் என்ற புத்தகம் வந்த போது செல்வாக்கை இழந்தது .
அக்காலத்தில் மருத்துவர்கள் குழந்தை தானாக உண்டாகும் #இச்சை_வழி முயற்சி ( Voluntary effort ) இனால் பிரசவம் நடக்கின்றது என்று பல நூற்றாண்டுகளாக நம்பி வந்தார்கள் . ஆனால் #அலி_இப்னு_அப்பாஸ் இக்கருத்தை பிழை என்று கூறி #கருப்பையில்_ஏற்படும்_எதிர் தாக்கம் காரணமாகத்தான் குழந்தை பிறக்கின்றது என்று நிரூபித்துக் காட்டினார் .
( கருபை பிரசவ நேரத்தில் ஏனைய உறுப்புக்களால் செலுத்தப்படும் தாக்கத்தால் கருபைத் தசைகள் சக்தியை இளந்து சுருங்கி விருந்து கொண்டே இருக்கும் இந்த சமையத்தில் தாய் முக்குவதால் சுவாசப்பைகள் கருபையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதனால் குழந்தை வெளியே தள்ளப் படுகின்றது ) என்று நிரூபித்தார் .
குறிப்பு :- இப்படிப்பட்ட முஸ்லிம் கண்டுபிடிப்பாளர்கள் மேற்கத்தையவர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றார்கள் .
அதேபோல் இப்படியான முஸ்லிம் கண்டுபிடிப்பாளர்களை எமது பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரிய ஆசிரியைகள் எமது பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுப்பதில்லை .
எனவே நீங்களாவது இதை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவையுங்கள் . இறைவன் அருள் புரிவான்
ஆக்கம்
Hafeesul haq ( fathihi )
No comments:
Post a Comment