Sunday, January 29, 2017

செயற்கை முறைக் கருக்கட்டல் சம்பந்தமாக இஸ்லாமிய ஷரிஆவின் நிலைப்பாடு . ( Test tube baby / أطفال الأنابيب )

இது சம்பந்தமாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சவூதியை மைய்யமா வைத்து இயங்குகின்ற (மஜ்மஉல் பிக்ஹுல் இஸ்லாமி) சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியத்தின் கருத்திற்கு இனங்க இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன் .

இந்த செயற்கை  முறைக் கருக்கட்டல் 7 முறைகளில்  மேற் கொள்வார்கள்  இதில் இரண்டு முறையைத் தவிர மற்ற 5 முறைகளும் இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறனானது என்று சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியம் பத்வா வெளியிட்டது .

உண்மையில் ஒரு குழந்தை ஆணுடைய  விந்தணுவும் ஒரு பெண்ணுடை முட்டையும் சேர்வதன் காரணமாகவே உருவாக்கம் இடம்பெறுகின்றது . இந்த செயற்பாடு தாயின் கருப்பையில் இடம்பெறுகின்றது .

ஆனால் செயற்கை முறைக் கருக்கட்டல் ( Test tube baby )  மூலம் ஒரு குழந்தை உருவாக்கின்ற போது அது ஆணுடை விந்தணுவையும் ,பெண்ணுடைய முட்டையையும் தாயின் கருப்பை அல்லாமல் வேறு இடத்தில் வைத்து ஒரு குழந்தையை உருவாக்குகின்ற முறையே இதுவாகும் . இது  7 முறையில் மேற் கொள்ளப் படுகின்றது .

01) கணவனின் விந்தணுவையும் , வேறு ஒரு பெண்ணின் முட்டையையும் எடுத்து  மனைவியின் கருவறையிலே  வளர விடுதல் . ( இந்த முறை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது )  காரணம் பரம்பரையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது .

02) மனைவியின் முட்டையை  கணவன் அல்லாத வேறொரு ஆணின் விந்தணுவை எடுத்து  மனைவியின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில்  தடுக்கப்பட்டுள்ளது )

03) கணவனுடைய விந்தணுவையும் மனைவியின் முட்டையையும் எடுத்து வேறொரு பெண்ணின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது )

இந்த முறையை 1990 களில்  மேற்குலகில் அதிகமான பெண்கள் தொழிலாக செயது வந்தார்கள் .

04) வேறொரு ஆணின் விந்தணுவையும் , வேறொரு பெண்ணின் முட்டையையும் எடுத்து தன்னுடைய  மனைவியின் கருவறையில் வளர விடுதல் .
( இதுவும் இஸ்லாம் தடுத்துள்ளது )

05) கணவனுடைய  விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து கணவனின் வேறு மனைவியின் கருவறையில் வளர விடுதல் .
( இதையும் இஸ்லாம் தடுத்துள்ளது )

06) கணவனுடைய விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து வெளியில் வளர வைத்து மீண்டும் மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதை இஸ்லாம் அங்கிகரிக்கின்றது )

07) கணவனுடை விந்தணுவை எடுத்து வெளியில் கருகட்ட வைத்து ( வளரவைத்து )
மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதையும் இஸ்லாம் அங்கிகரிக்கின்றது )

இப்படியான செயற்கை முறைக் கருக்கட்டல்
இன்று அரிதாகத்தான் இருக்கின்றது . இதை மேற்கொள்வதற்கு அதிக பணம் தேவை . இதை அதிகமாக செல்வந்தர்கள்தான் மேற்கொள்வார்கள் .

இதில் நான் செயற்கை முறைக் கருக்கட்டல் இடம்பெறுவதற்கான காரணத்தை எழுதவில்லை மாறாக செயற்கை முறைக் கருக்கட்டலுக்கு  ( Test tube baby ) நவீன கால அறிஞர்கள் கூறும் சட்டத்தைரத்தை மாத்திரம்தான் எழுதியுள்ளேன்.

அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி) . பிரதம ஆசிரியர்  தலைவாசல் சஞ்சிகை. 

Varipathanchenai

Friday, January 27, 2017

பின்னடைவை நோக்கும் இலங்கை முஸ்லிம்களின் மூன்றாம் நிலைக் கல்வி

இலங்கை முஸ்லிம்களின் இரண்டாம் நிலைக் கல்வி சற்று முன்னேற்றம் கண்டாலும் மூன்றாம் நிலைக் கல்வியில் பாரிய வீழ்சியை நோக்கிச் செல்கின்றது .

இலங்கையைப் பொறுத்தவரை ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதாரப் பரீட்சையில்   45 % வீதத்திற்கும் அதிகமானோர் சித்தியடைவதில்லை ( அதாவது 125.000 திற்கும் அதிகமானவர்கள் . இந்த நிலை க. பொ த.  சா. தரப் பரீட்சையில் மாத்திரமல்ல க. பொ. த. உ. தரப் பரீட்சையிலும் கூட

இலங்கையில் சுமாராக 9685 க்கும் அதிகமான  பாடசாலைகள் உள்ளது . அதில் 3.94007 க்கும் அதிகமான  மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் .
கடந்த 2015 இல் மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், மிகுதி 146,884 மாணவர்களின் நிலை என்ன ? இவர்களில் எத்தனை போர் மூன்றாம் நிலைக் கல்வியை மேற் கொள்வார்கள் ? எத்தனை பேர் வெளிநாட்டில் வேலை புரிவதற்காகச் செல்கின்றார்கள் ? 

மேலும்  ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தி பெற்ற மாணவர்களில்  பலகலைக் கழக அனுமதி பெற்றவர்கள்  27 ஆயிரத்து 603 மாணவர்கள். இவர்கள் தவிர்த்து மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 947 மாணவர்களது , உயர்கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது . பல்கலைக்கழக அனுமதி பெறாதவர்களில் சொற்பமானவர்களே   உயர்கல்வியையும்  மூன்றாம் நிலைக் கல்வியையும் தொடர்கின்றனர் .இவர்களில் மீதம் உள்ளவர்களின் நிலை என்ன ? 

கடந்த  2011 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள புள்ளி விபரங்களை பார்க்கின்ற பொழுது சுமார் 262,960 தொழிலாளர்கள்  கடல்கடந்து பிழைப்புக்காக சென்றுள்ளார்கள்  அதில் 135,870 (51.7%) ஆண்கள் 127,090 (48.3%) பெண்கள். இந்த நிலை கடந்த வருடங்களில் அதிகரித்துள்ளது . இவர்களளில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிகின்றார்கள் .மத்திய கிழக்கு நாடுகளில் பணியுரிகின்றவர்கள்ளில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர். 

இலங்கையில் சுமார் 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன . இதுபோன்ற கல்வி நிறுவனங்களில்   எமது முஸ்லிம்கள் மூன்றாம் நிலைக்  கல்வியை தொடர்வது மிகவும் அரிதாகத்தான் உள்ளது .

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பெரும் பாலானவர்கள் க.பொ.த.சா. பரிட்சை சித்தி அடையவில்லை என்றால் அவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடராமல் உடனே உழைக்க வேண்டும் என்று  வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்கின்றார்கள் . அப்படி அரபு நாடுகளில் 10 வருடமோ அல்லது 15 வருடமோ அங்கு வேலை செய்துவிட்டு நாடுதிரும்பி நாட்டில் வேலை தேடுகின்றார்கள் இப்படி ஒரு சாரார் இருக்கின்றனர்

இன்னொரு சாரார் இருக்கின்றனர் க. பொ. த சாதாரண பரிட்சை சித்தி பெறவில்லை என்றால் தனது படிப்பை நிறுத்தி விட்டு கடைகளில் வேலை செய்வதற்காகவும் அல்லது கூலி தொழில் செயவதற்காகவும் செல்கின்றனர். இப்படியான செயற்பாடுகள் எமது முஸ்லிம் இளைஞர்களிடம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது . இப்படியே எமது முஸ்லிம் இளைஞர்கள் பயணிப்பார்களேயானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் ? எவ்வாறான கல்விப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தை சமுகத்தில்  உருவாக்கப் போகின்றார்கள் ?

அண்மையில் ஒரு ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் . அவர் கவலையாகச் சொல்கின்றார் அவருடைய ஊர் கல்வி வளம் நிறைந்த ஊர் 1 நவோதையப் பாட சாலையுடன் சேர்த்து  5 பாடசாலைகள் உள்ள . மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடர்வதற்கான கல்லூரிகள் அருகாமையில் உள்ள கிராமத்தில் உள்ளது . இப்படி எல்லா வசதிகளையும் கொண்ட எனது ஊரில் க. பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைகின்ற வீதம் குறைவாக உள்ளது . மேலும் எனது கிராமத்தில் உள்ள அதிகமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள் . காரணம் அவர்களிடம் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகைத்துவிட்டது அதனால் உயர் கல்வியையோ அல்லது மூன்றாம் நிலைக் கல்வியையோ தொடர்வதில் ஆர்வம் குறைந்து விட்டது . எதிர்வரும் காலங்களில் எனது ஊரின் கல்வி கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளது என்று சோகமாகச் சொன்னார் .

இந்த நிலை கிழக்கு மாகாணத்தில் உள்ள அந்தக் கிராமத்தில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கும் பல முஸ்லிம் கிராமங்களில் உள்ளது . இதற்கான காரணம் அவர்களின் குடும்பப் பின்னணி ஒரு காரணமாக அமையலாம் . அல்லது வரதட்சணை காரணமாகவும் இருக்கலாம் . இந்தக் காரணத்தினால் எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை எதிர் நோக்கும் அபாயம் உள்ளது . 

எனவே இதற்கான தீர்வாக எமது ஊர் பாடசாலைகளில் தரும் 11, 10  ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும்  மூன்றாம் நிலைக் கல்வி சம்பந்தமான இலவசக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் . இதை பாடசாலை நிறுவாகம் . பழைய மாணவர் சங்கம் , அல்லது ஊர் இருக்கும் கல்வி மாண்கள் அல்லது பள்ளிவாசல் நிறுவாகம் முன்னின்று நடத்த வேண்டும் . அப்போதுதான் எமது ஊரும் எமது சமூகமும் சிறந்த கல்வி சமூகமாக மாறும் .

கட்டுரை
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

Monday, January 16, 2017

இறக்காமப் பிரதேச வாசிகளின் கவனத்திற்கு

ஒரு கிராமம் அல்லது ஒரு சமூகத்தின்  வளர்ச்சி அந்தக் கிராமத்திலுள்ள மூன்று நிறுவனங்களில் தங்கியுள்ளது .

01. பள்ளிவாசல்
02. பாடசாலைகள்
03.  மத்ரசாக்கள் 

இவை மூன்றும் சமூக எழிச்சியில் பங்கு கொள்ளும் மிக முக்கியான நிறுவனங்கள் . இதிலும் மிகப்பிரதானமான நிறுவனம்தான் மத்ரசாக்கள் .

சமூக வளர்ச்சியில்  மத்ரசாக்களின் பங்களிப்பு அளப் பெரியது .  இன்று ஒவ்வொரு கிராமத்திலும்  ஒன்றிற்கும் மேற்பட்ட மத்ரசாக்கள் இயங்கி வருகின்றது அவை ஒவ்வொன்றும் அந்தக் கிராமத்தின் இஸ்லாமிய விழிமியங்களைப் பாதுகாத்து  முன்னேற்றி  வருகின்றது .

அந்தவகையில் எமது கிரமத்திலும் இஸ்லாமிய கலாசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் . அப்போதுதான் எமக்கும் எமது சந்ததிகளுக்கும்  சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல்கள் கிடைக்கும் .
கடந்த காலங்களில் எமது பிள்ளைகளை மார்கக் கல்வி படிப்பதற்காக பல அரபுக் கலாசாலைகளுக்கு அனுப்பி எமது பிள்ளைகளை படிப்பித்து வருகின்றோம்  .  இதற்காக எமது பெற்றோர்கள் படுகின்ற  கஷ்டங்கள்  ஒன்றல்ல இரண்டல்ல !!  இதை என்னால் வர்ணிக்க முடியாது !

Al hamthu lillah  !   இன்று  எமது பிள்ளைகளுக்கு  எமது  பிரதேசத்தில்  மார்க்கக் கல்வி படிப்பதற்கென   வரிப்பத்தான்சேனைல்  ஸலபியா என்ற    ஒரு அரபுக் கலாசாலை சிறப்பாக இயங்கி  வருகின்றது . இதில் சுமார்  60 க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றார்கள் .  இதன் அதிபராக ஹாமீத் லெப்பை ( மதனி  )  அவர்கள்  கடமையாற்றி வருகின்றார்கள் .

இதை வளத்தெடுப்பது இறக்காமப்பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட   அனைவர்மீதும் கடமையாகும் .   நாங்கள் சிறப்பாக நடாத்தினால் எதிர்வருகின்ற காலங்களில் எமது இறக்காமப்பிரதேசம் சிறந்த மாற்றங்கள் இடம்பெறும் .

குறிப்பு :-  உங்களின்  பங்களிப்பில்தான் எமது கிராமத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது . இலங்கையில் பிரபல்யமான  பெரும் பெரும் அறிஞர்களை உருவாக்கியா மண்ணு இதை நாம் மறந்து விட வேண்டாம் .

Hafeesul haq
varipathanchenai

Wednesday, January 11, 2017

இங்கையின் காழி நீதிமன்றம்களில் தரம்வாய்ந்த ஆலிம்கள் நியமிக்கப்பட் வேண்டும் .

Saturday, January 7, 2017

இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் இன்றைய நிலை

கடந்த காலங்களில் இலங்கையில்  பெளத்தர்கள் , தமிழர்கள் , மலையகர்கள் என்று மூன்று சாரார்களுமே கல்வியைக் கற்பதில் கூடிய கவனம் செலுத்தி வந்தனர். ஆனால்  இன்று இலங்கை முஸ்லிம் சமுகம்  கல்வி வரலாற்றில் மலையக சமூகத்தையும் தாண்டி தமிழில் சமூகத்தையும் தாண்டும் அளவுக்கு  பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது .  அல்ஹம்துலில்லாஹ்

இலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது மார்கத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு அதிகம் உள்ளது.  காரணம் நாங்கள் இலங்கை என்ற பெளத்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.  இன்று பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் , சமூக வலைத்தளங்களிலும்  இலங்கைப்  பல்கலைக்கழக  முஸ்லிம் மாணவ மாணவிகள் பரிதாவ நிலைபற்றி கேட்கின்ற போது  மிகவும் மனவேதனையைத் தெரிகின்றது .

இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் உயர் கல்வியில் ஆர்வம் காட்டுகின்றன். இதனை கடந்த காலங்களில்  இலங்கையின்  பல்கலைக்கழகங்களில்  தெரிவான மாணவ மாணவிகளின்  பட்டியல்களில் எமக்கும் பார்க் முடியும். இதே நிலை இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் அதிகரித்துள்ளது. முஸ்லிம் மாணவர்களைவிட முஸ்லிம் மாணிகளே அதிகம் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகின்றன். கடந்த 5 ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம் ஆண்கள் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பிற்குத் தெரிவாகுவதைவிட முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் தெரிவாகியுள்ளனர். இது ஒருபுறம் எமது பெண்கள் படிக்கின்றார்கள் என்ற சந்தோசத்தையும் இன்னொரு புறம் எமது முஸ்லிம் ஆண்களின்  கல்வி நிலையில் வீழ்ச்சி  ஏற்பட்டுள்ளது என்ற   கவலையையும் தருகின்றது.

இன்று இலங்கையின் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பில் முஸ்லிம் ஆண்களை விடவும் முஸ்லிம் பெண்களே அதிகம் உள்ளனர் . அது மருத்துவப்பீடமாக இருக்கலாம், வர்தகப் பீடமாக இருக்கலாம் , கலைப்பீடமாக இருக்கலாம் இப்படி முஸ்லிம் பெண்கள் பல துறை சார்ந்து கற்று வருகின்றனர் . இவ்வாறு கற்றுவரும் முஸ்லிம் மாணவிகளின் அன்மைக்காலப் போக்கில் பாரிய கலாச்சார வீழ்சியை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது . முஸ்லிம் மாணவிகளின் அந்நிய ஆண் தொடர்புகள்  , அவர்களின் இஸ்லாமிய வரையறையைத் தாண்டியா ஆடை ஒழுங்குகள்  இவைகள் பிற சமூகங்களுக்கிடையில் இஸ்லாத்தைப் பற்றியும் இலங்கை முஸ்லிம்களின் பண்பாடுகள்பற்றியும்  பல கசப்புணர்வுகளை எற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஒரு சில  பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற இடம்பெற்ற  சில  நிகழ்வுகளை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன் . 

1) குறிப்பிட்ட அந்த பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவிவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவி  அதே கலைப் பிரிவைச் சேர்ந் ஒரு அந்நிய ( கிறுஸ்தவ ) மாணவனுடன்  நெருக்கமான உறுவுவைத்து கூட்டிக் ஒடிய நிகழ்வு அந்தப் பல்கலைக்கழகத்தில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியது . அதேபோல் அங்கு முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் பிழையான பதிவை ஏற்படுத்தியது.

1) அதே பல்கலைக்கழகத்தில் குழு கற்றல் என்ற பெயரில்   ( Group study )  ஒரு முஸ்லிம் மாணவியும் ஒரு மாற்றுமத மாணவனும் சேர்ந்து கணவன் மனைவி போன்று வாழ்ந்து பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் தார்வாத்தமை .

3)  மற்றொரு பல்கலைக்கழகத்தில்  பொறியியல் பீடமாணவி இஸ்லாமிய வரையறையைமீறிய ஆடையை அணிந்து பலபல்கலைக்கழகத்திற்கு வருகின்றமை  ( பர்தா இல்லை , டீஷேட் , ஜீன்ஸ் ) கவலை என்னவென்றால் இவர் முஸ்லிம் என்றே அங்கு இருக்கும் முஸ்லிம் மஜிலிஸுக்குத் தெரியாது.

4) மற்றொரு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில்  முஸ்லிம் ஆண் பெண் தகாத உறவு மூலம் கருகட்டியமை , கருகட்டலின் பின் கருவைக் கலைப்பதற்கு  பல்கலைக்கழக வைத்தியசாலையை  அணுகியமை.

5) மற்றொரு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இரவுநேர கிளப்களில் கலந்து கொண்டு அந்நிய ஆண்களுடன் கும்மியடித்து முஸ்லிம்கள் பற்றி பிழையான பதிவுகளை ஏற்படுத்தியமை.

இவை வெறும் கதைகள் அல்ல . இவை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தற்போது இடம்பெறும்  உண்மைச் சம்பவங்கள் .

மேலும் எமது முஸ்லிம்  மாணவிகளின் பல்கலைக்கழகத்தில் அணியும் ஆடைகள்  மிகவும் மோசமாக உள்ளது . குறிப்பிட்ட ஒரு சில முஸ்லிம் பெண்களைத் தவிர. மற்றமுஸ்லிம் பெண்களின் ஆடைகள் ஆண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது . பெண்கள் தங்களது முகம் மற்றும் கை தவிர்ந்த அனைத்து உறுப்புக்களையும்  மறைப்பதன்  நோக்கம் தங்களின் அழகு மற்ற ஆண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக . அவ்வாறு தெரிந்தால் பல குழப்பங்கள் ஏற்படும் என்பதற்காக . ஆனால் இன்று தனது உடம்பை ஆண்களுக்குக் வெளிக்காட்டும் வகையிலேயே  அவர்களின் ஆடை அலங்காரங்கள் அமைந்துள்ளது . 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "நான்  நரகில் அதிகமாக பெண்களையே கண்டேன் "  இந்த ஹதீஸ் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் நிலையாக இருக்க வேண்டும் . இதை மனதில் வைத்து உங்களின் ஆடை அலங்காரங்களை வரையறுக்க வேண்டும்.

1)  பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் கவனத்திற்கு
=================================

* பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸி அமைப்பு அனைத்து மாணவ மாணவிகளையும் அங்கத்தும் வகிப்பதற்கு வலியுறுத்த  வேண்டும் . அவ்வாறு முஸ்லிம் மஜ்லிஸுடன் சேராவிட்டால் அவர்களுக்கு முஸ்லிம் மஜிலிசூடாக  வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் .

* முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினால் வாராந்தம் காலத்திற்குப் பொருத்தமான இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .

2)  பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் கவனத்திற்கு
=================================
*  இஸ்லாமிய வரையறைகளுடன் உங்கள் ஆடை  அலங்காரங்களை வைத்து கொள்ள வேண்டும்.

* மேலும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இரவு நேர கிளப்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் . 

* இஸ்லாமிய வரையறை மீறிய குழு கற்கைகளைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் .

* இஸ்லாமிய வரையறைகளுடன் ஆண்களுடனான தொடர்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும் .

3) பெற்றோர்களின் கவனத்திற்கு
=================================
* உங்கள் பெண் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்ற போது திருமணம் பேசி ( நிகாஹ் ) செய்து அனுப்புவது மிகவும் பொருத்தமானது. 

* அப்படி திருமணம் பேசுவது கடினம் என்றால் உங்கள் பெண் பிள்ளைகளுடன்  அடிக்கடி தொடர்பு கொண்டு  கண்கானிக்க வேண்டும்  .

Eg:- அவர்களின் துலைபேசி பாவனையை கண்கானிப்பது , அவர்களின் ஆடை அலங்காரத்தில் கூடிய கவனம் செலுத்தல் ( எப்படியான ஆடையை எனது பிள்ளை அணிகிறாள் என்று பார்க்க வேண்டும் )

4) இஸ்லாமிய நிறுவனங்களின் கவனத்திற்கு  
=====================================

* இலங்கையில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும் .

* பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் முஸ்லிம் மஜ்லிஸுடன் இணைந்து காலத்திற்குப் பொருத்தமான  இஸ்லாமிய விரிவுரைகள் நடத்த வேண்டும் .
இதில் " இஸ்லாத்தில் ஆண் பெண் உறவுகள் "  இஸ்லாத்தின் ஆடை ஒழுங்குகள் , போன்ற தலைப்பில் நடத்துவது வரவேற்கக் கூடியது .

* பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குக் கஷ்டப்படும் முஸ்லிம் மாணவ மாணவிகளுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு முன்வர வேண்டும் .

இதை  எமது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின்மீதுள்ள  அக்கரையினால் நான்  எழுதியது  . இவற்றை எமது இலங்கை முஸ்லிம் சமூகம் பொருட்படுத்துகின்றபோது . எமது முஸ்லிம் சமூகத்தில் பாரிய இஸ்லாமிய மறுமலர்ச்சி  ஏற்படும்.  மேலும் இலங்கை இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சரியான  தெளிவு கிடைக்கும் .

கட்டுரை
ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை .

Tuesday, January 3, 2017

அறேபிய -இலங்கைத் தொடர்புகள்

அறேபியத் தீபகற்பங்கள்  மூன்று பக்கங்களும்  நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டுள்ளன. அவை மேற்கு சுயஸ் கால்வாயிலிருந்து  கிழக்கு பாரசீக வகைகுடாவரைக்கும் நீண்டிருந்தது. இந்த நீண்ட கரையோரங்களில் யெமன் , ஹழரல் மெளத் , உம்மான் போன்ற செழிப்புள்ள பிரதேசங்கள் காணப்பட்டன.  பாலைவனத்தாலும் மலைக் குன்றுகளாலும் இப்பிரதேசங்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இவற்றுக்கிடையிலான போக்குவரத்தைப் பொறுத்தவரை தரைமார்க்கத்தைவிடவும் கடல்மார்க்கப் பயணமே இலகுவாக இருந்தது . செங்கடலுக்கு மேற்கே நாகரீக வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும் பாரசீக குடாவின் கிழக்குக் கரையில் இருந்த ஈரானிய அரசுடனும் கரையோர நகரங்களுடனும் இருந்த வர்த்தகத் தொடர்பு அறபிகளை இந்தியாவுக்குச் செல்வதற்கு வழிவகுத்தது.  அவர்கள் விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டு அவர்களின் வர்த்தகப் பயணங்களை அமைத்துக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்கே இந்தோனேசியாவரையும் அறேபிகள் வர்த்தகம் செய்து வந்தனர். இதனால் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசியா நாடுகளுக்குமிடையிலான பெரும் வர்த்தகப் பாதையை இணைப்போராக அறேபிகள் இருந்தனர் . இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்ததன் காரணமாக அறபு வர்த்தகர்களுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 

கிரேக்கர்கள் இந்தியாவை அறிவதற்கு முன்னரே அறேபிகள் இலங்கையை அறிந்து கொண்டனர். எகிப்து "மாலுமியான உறிப்பவஸ் " பருவப்பேர்ச்சி காற்றைப் பயன்படுத்தும் முறையை  அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அக்காற்றைப் பயன்படுத்தும் அறிவையும் துணிவையும் அறேபியர்கள் பெற்றிருந்தனர் . இதனால் அனைவருக்கும்முன் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம் மேற்கொள்ளும் வாய்ப்பு அறேபிகளுக்குக் கிடைத்தது.   கி.பி. 4 ம் நூற்றாண்டின் பின்னர் உரோமப் பேரரசு வீழ்ச்சி அடையவே தென்னறபியாவும் பாரசீகமும் பெரும் பங்குவகித்தனர் .  அதனால் அறேபியர்கள் கி.பி. 4/5 நூற்றாண்டுகளில் தென்னிந்திய சூரத் ,மக்களூர் , கள்ளிக் கோட்டை , கொல்லம், மலபாரில் உள்ள துறைமுகங்களிலும் வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர்.  பின்னர் கி.பி. 9 ம் நூற்றாண்டின் அறபிகளின் வர்த்தகம் உச்ச நிலையை அடைந்தது. மலபார் மற்றும் மஉயர் பிரதேசங்களில் இருந்து அறேபியர்கள் இலங்கைக்கு வந்து போகலானார்கள். சீனா யாதிரரான "பாக்கியன் " கி.மு. 414 ல் தென் அறேபியவர்த்தகங்களை சந்தித்தமை அறேபியர் இலங்கையுடன் வைத்துள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது.

கி.பி. 610 ல் இஸ்லாம் அறேபியாவில் தோற்றம் பெற்றது. இதனால் இஸ்லாத்தைப் போதித்த முஹம்மத் ( ஸல் ) அவர்களின் தலைமையில் அறேபியர்கள் ஒன்று திரட்டப்பட்டனர் . இதனால் இஸ்லாத்தின் பலம் அதிகரித்தது .  அயல் நாடுகளான எகிப்து , ஈராக் , ஈரான் , சிரியா , போன்ற நாடுகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர் .  இவ்வெற்றியை அடுத்து ஈரான் , எகிப்து , சிரியா போன்ற நாடுகளில் கடல் மார்க்கமாக தரைமாக்கப்பாதை முஸ்லிம்கள்வசம் வந்தன. அதேபோல் கைப்பற்றப்பட்ட சில நாடுகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு அறபு மொழி கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் நாட்டைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் அறபிகளாக இருந்த காரணத்தினால் அவர்கள் அறபு மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்தினர். அதேபோல் அவர்களின் வணிகத்துடன் அறபு மொழியை  பிரத்தோக மொழியாக பயன்படுத்தினர் . இதனால் சுதேசிகள் அறபு மொழியைக் கற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

இவ்வாறு கற்றவர்கள் தமது வர்த்தகங்களை மேற்கொள்வதற்காக கீழைத்தேய நாடுகளுக்கு வந்தார்கள். இதன் விளைவாக இலங்கையில் அறபு மொழி அறிமுகமானது. இலங்கையில் அறபு மொழி கி.மு. முன்பே அறிமுகமானது என்று சொல்ல முடியும் .  பண்டுகாபய மன்னனின் காலத்தில் "யோனஸ் " ( Yonas ) என்றோர்களுக்கு நிலம் வழங்கியதாக மகாவம்சம் கூறுகிறது . இதனை மொழிபெயர்ப்பு  செய்த வரலாற்று ஆசிரியர்  " வில்லியம் ஹைகர் " என்பவர் கூறுகையில் இங்கு " யோனஸ் "  என்போர் "அறபிகளே " என்று கூறுகின்றார். மற்றொரு வரலாற்று ஆசிரியரான Dr. Vadivalu  உச்ச நிலையில் தென்னிந்தியா முஸ்லிம் என்ற புத்தகத்தில் கூறுகின்றார் 1505 இல் போத்துகேயர் இலங்கைக்கு வராவிட்டால் இலங்கையில் முஹம்மதும் அவரது தோழர்களினதும் ஆட்சியுமே இடம்பெற்றிருக்கும் என்று கூறுகின்றார் எனவே  வலுவான ஆதார பூர்வமான கருத்துக்களைப் பார்க்கின்ற போது அறேபிய இலங்கைத் தொடர்பு மிகவும் தொன்மைவாய்ந்ததென்று புரிகின்றது .

Hafeesul haq ( Fathihi )