ஒரு கிராமம் அல்லது ஒரு சமூகத்தின் வளர்ச்சி அந்தக் கிராமத்திலுள்ள மூன்று நிறுவனங்களில் தங்கியுள்ளது .
01. பள்ளிவாசல்
02. பாடசாலைகள்
03. மத்ரசாக்கள்
இவை மூன்றும் சமூக எழிச்சியில் பங்கு கொள்ளும் மிக முக்கியான நிறுவனங்கள் . இதிலும் மிகப்பிரதானமான நிறுவனம்தான் மத்ரசாக்கள் .
சமூக வளர்ச்சியில் மத்ரசாக்களின் பங்களிப்பு அளப் பெரியது . இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்றிற்கும் மேற்பட்ட மத்ரசாக்கள் இயங்கி வருகின்றது அவை ஒவ்வொன்றும் அந்தக் கிராமத்தின் இஸ்லாமிய விழிமியங்களைப் பாதுகாத்து முன்னேற்றி வருகின்றது .
அந்தவகையில் எமது கிரமத்திலும் இஸ்லாமிய கலாசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் . அப்போதுதான் எமக்கும் எமது சந்ததிகளுக்கும் சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல்கள் கிடைக்கும் .
கடந்த காலங்களில் எமது பிள்ளைகளை மார்கக் கல்வி படிப்பதற்காக பல அரபுக் கலாசாலைகளுக்கு அனுப்பி எமது பிள்ளைகளை படிப்பித்து வருகின்றோம் . இதற்காக எமது பெற்றோர்கள் படுகின்ற கஷ்டங்கள் ஒன்றல்ல இரண்டல்ல !! இதை என்னால் வர்ணிக்க முடியாது !
Al hamthu lillah ! இன்று எமது பிள்ளைகளுக்கு எமது பிரதேசத்தில் மார்க்கக் கல்வி படிப்பதற்கென வரிப்பத்தான்சேனைல் ஸலபியா என்ற ஒரு அரபுக் கலாசாலை சிறப்பாக இயங்கி வருகின்றது . இதில் சுமார் 60 க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றார்கள் . இதன் அதிபராக ஹாமீத் லெப்பை ( மதனி ) அவர்கள் கடமையாற்றி வருகின்றார்கள் .
இதை வளத்தெடுப்பது இறக்காமப்பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட அனைவர்மீதும் கடமையாகும் . நாங்கள் சிறப்பாக நடாத்தினால் எதிர்வருகின்ற காலங்களில் எமது இறக்காமப்பிரதேசம் சிறந்த மாற்றங்கள் இடம்பெறும் .
குறிப்பு :- உங்களின் பங்களிப்பில்தான் எமது கிராமத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது . இலங்கையில் பிரபல்யமான பெரும் பெரும் அறிஞர்களை உருவாக்கியா மண்ணு இதை நாம் மறந்து விட வேண்டாம் .
Hafeesul haq
varipathanchenai
No comments:
Post a Comment