இலங்கை முஸ்லிம்களின் இரண்டாம் நிலைக் கல்வி சற்று முன்னேற்றம் கண்டாலும் மூன்றாம் நிலைக் கல்வியில் பாரிய வீழ்சியை நோக்கிச் செல்கின்றது .
இலங்கையைப் பொறுத்தவரை ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதாரப் பரீட்சையில் 45 % வீதத்திற்கும் அதிகமானோர் சித்தியடைவதில்லை ( அதாவது 125.000 திற்கும் அதிகமானவர்கள் . இந்த நிலை க. பொ த. சா. தரப் பரீட்சையில் மாத்திரமல்ல க. பொ. த. உ. தரப் பரீட்சையிலும் கூட
இலங்கையில் சுமாராக 9685 க்கும் அதிகமான பாடசாலைகள் உள்ளது . அதில் 3.94007 க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் .
கடந்த 2015 இல் மூன்று இலட்சத்து 2434 பேர் க பொ த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றினர், அவர்களில் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தியடைந்திருந்தனர், மிகுதி 146,884 மாணவர்களின் நிலை என்ன ? இவர்களில் எத்தனை போர் மூன்றாம் நிலைக் கல்வியை மேற் கொள்வார்கள் ? எத்தனை பேர் வெளிநாட்டில் வேலை புரிவதற்காகச் செல்கின்றார்கள் ?
மேலும் ஒரு இலட்சத்து 55,550 பேர் சித்தி பெற்ற மாணவர்களில் பலகலைக் கழக அனுமதி பெற்றவர்கள் 27 ஆயிரத்து 603 மாணவர்கள். இவர்கள் தவிர்த்து மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 947 மாணவர்களது , உயர்கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது . பல்கலைக்கழக அனுமதி பெறாதவர்களில் சொற்பமானவர்களே உயர்கல்வியையும் மூன்றாம் நிலைக் கல்வியையும் தொடர்கின்றனர் .இவர்களில் மீதம் உள்ளவர்களின் நிலை என்ன ?
கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள புள்ளி விபரங்களை பார்க்கின்ற பொழுது சுமார் 262,960 தொழிலாளர்கள் கடல்கடந்து பிழைப்புக்காக சென்றுள்ளார்கள் அதில் 135,870 (51.7%) ஆண்கள் 127,090 (48.3%) பெண்கள். இந்த நிலை கடந்த வருடங்களில் அதிகரித்துள்ளது . இவர்களளில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிகின்றார்கள் .மத்திய கிழக்கு நாடுகளில் பணியுரிகின்றவர்கள்ளில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர்.
இலங்கையில் சுமார் 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல் கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116 தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன . இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் எமது முஸ்லிம்கள் மூன்றாம் நிலைக் கல்வியை தொடர்வது மிகவும் அரிதாகத்தான் உள்ளது .
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை பெரும் பாலானவர்கள் க.பொ.த.சா. பரிட்சை சித்தி அடையவில்லை என்றால் அவர்கள் மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடராமல் உடனே உழைக்க வேண்டும் என்று வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்கின்றார்கள் . அப்படி அரபு நாடுகளில் 10 வருடமோ அல்லது 15 வருடமோ அங்கு வேலை செய்துவிட்டு நாடுதிரும்பி நாட்டில் வேலை தேடுகின்றார்கள் இப்படி ஒரு சாரார் இருக்கின்றனர்
இன்னொரு சாரார் இருக்கின்றனர் க. பொ. த சாதாரண பரிட்சை சித்தி பெறவில்லை என்றால் தனது படிப்பை நிறுத்தி விட்டு கடைகளில் வேலை செய்வதற்காகவும் அல்லது கூலி தொழில் செயவதற்காகவும் செல்கின்றனர். இப்படியான செயற்பாடுகள் எமது முஸ்லிம் இளைஞர்களிடம் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது . இப்படியே எமது முஸ்லிம் இளைஞர்கள் பயணிப்பார்களேயானால் இவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் ? எவ்வாறான கல்விப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தை சமுகத்தில் உருவாக்கப் போகின்றார்கள் ?
அண்மையில் ஒரு ஒரு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் . அவர் கவலையாகச் சொல்கின்றார் அவருடைய ஊர் கல்வி வளம் நிறைந்த ஊர் 1 நவோதையப் பாட சாலையுடன் சேர்த்து 5 பாடசாலைகள் உள்ள . மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடர்வதற்கான கல்லூரிகள் அருகாமையில் உள்ள கிராமத்தில் உள்ளது . இப்படி எல்லா வசதிகளையும் கொண்ட எனது ஊரில் க. பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைகின்ற வீதம் குறைவாக உள்ளது . மேலும் எனது கிராமத்தில் உள்ள அதிகமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள் . காரணம் அவர்களிடம் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகைத்துவிட்டது அதனால் உயர் கல்வியையோ அல்லது மூன்றாம் நிலைக் கல்வியையோ தொடர்வதில் ஆர்வம் குறைந்து விட்டது . எதிர்வரும் காலங்களில் எனது ஊரின் கல்வி கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளது என்று சோகமாகச் சொன்னார் .
இந்த நிலை கிழக்கு மாகாணத்தில் உள்ள அந்தக் கிராமத்தில் மாத்திரமல்ல இலங்கையில் இருக்கும் பல முஸ்லிம் கிராமங்களில் உள்ளது . இதற்கான காரணம் அவர்களின் குடும்பப் பின்னணி ஒரு காரணமாக அமையலாம் . அல்லது வரதட்சணை காரணமாகவும் இருக்கலாம் . இந்தக் காரணத்தினால் எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை எதிர் நோக்கும் அபாயம் உள்ளது .
எனவே இதற்கான தீர்வாக எமது ஊர் பாடசாலைகளில் தரும் 11, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி சம்பந்தமான இலவசக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் . இதை பாடசாலை நிறுவாகம் . பழைய மாணவர் சங்கம் , அல்லது ஊர் இருக்கும் கல்வி மாண்கள் அல்லது பள்ளிவாசல் நிறுவாகம் முன்னின்று நடத்த வேண்டும் . அப்போதுதான் எமது ஊரும் எமது சமூகமும் சிறந்த கல்வி சமூகமாக மாறும் .
கட்டுரை
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment