Tuesday, January 3, 2017

அறேபிய -இலங்கைத் தொடர்புகள்

அறேபியத் தீபகற்பங்கள்  மூன்று பக்கங்களும்  நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டுள்ளன. அவை மேற்கு சுயஸ் கால்வாயிலிருந்து  கிழக்கு பாரசீக வகைகுடாவரைக்கும் நீண்டிருந்தது. இந்த நீண்ட கரையோரங்களில் யெமன் , ஹழரல் மெளத் , உம்மான் போன்ற செழிப்புள்ள பிரதேசங்கள் காணப்பட்டன.  பாலைவனத்தாலும் மலைக் குன்றுகளாலும் இப்பிரதேசங்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன. இவற்றுக்கிடையிலான போக்குவரத்தைப் பொறுத்தவரை தரைமார்க்கத்தைவிடவும் கடல்மார்க்கப் பயணமே இலகுவாக இருந்தது . செங்கடலுக்கு மேற்கே நாகரீக வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும் பாரசீக குடாவின் கிழக்குக் கரையில் இருந்த ஈரானிய அரசுடனும் கரையோர நகரங்களுடனும் இருந்த வர்த்தகத் தொடர்பு அறபிகளை இந்தியாவுக்குச் செல்வதற்கு வழிவகுத்தது.  அவர்கள் விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டு அவர்களின் வர்த்தகப் பயணங்களை அமைத்துக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்கே இந்தோனேசியாவரையும் அறேபிகள் வர்த்தகம் செய்து வந்தனர். இதனால் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் கிழக்காசியா நாடுகளுக்குமிடையிலான பெரும் வர்த்தகப் பாதையை இணைப்போராக அறேபிகள் இருந்தனர் . இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்ததன் காரணமாக அறபு வர்த்தகர்களுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 

கிரேக்கர்கள் இந்தியாவை அறிவதற்கு முன்னரே அறேபிகள் இலங்கையை அறிந்து கொண்டனர். எகிப்து "மாலுமியான உறிப்பவஸ் " பருவப்பேர்ச்சி காற்றைப் பயன்படுத்தும் முறையை  அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அக்காற்றைப் பயன்படுத்தும் அறிவையும் துணிவையும் அறேபியர்கள் பெற்றிருந்தனர் . இதனால் அனைவருக்கும்முன் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம் மேற்கொள்ளும் வாய்ப்பு அறேபிகளுக்குக் கிடைத்தது.   கி.பி. 4 ம் நூற்றாண்டின் பின்னர் உரோமப் பேரரசு வீழ்ச்சி அடையவே தென்னறபியாவும் பாரசீகமும் பெரும் பங்குவகித்தனர் .  அதனால் அறேபியர்கள் கி.பி. 4/5 நூற்றாண்டுகளில் தென்னிந்திய சூரத் ,மக்களூர் , கள்ளிக் கோட்டை , கொல்லம், மலபாரில் உள்ள துறைமுகங்களிலும் வர்த்தகத்தை நிலைப்படுத்திக் கொண்டனர்.  பின்னர் கி.பி. 9 ம் நூற்றாண்டின் அறபிகளின் வர்த்தகம் உச்ச நிலையை அடைந்தது. மலபார் மற்றும் மஉயர் பிரதேசங்களில் இருந்து அறேபியர்கள் இலங்கைக்கு வந்து போகலானார்கள். சீனா யாதிரரான "பாக்கியன் " கி.மு. 414 ல் தென் அறேபியவர்த்தகங்களை சந்தித்தமை அறேபியர் இலங்கையுடன் வைத்துள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது.

கி.பி. 610 ல் இஸ்லாம் அறேபியாவில் தோற்றம் பெற்றது. இதனால் இஸ்லாத்தைப் போதித்த முஹம்மத் ( ஸல் ) அவர்களின் தலைமையில் அறேபியர்கள் ஒன்று திரட்டப்பட்டனர் . இதனால் இஸ்லாத்தின் பலம் அதிகரித்தது .  அயல் நாடுகளான எகிப்து , ஈராக் , ஈரான் , சிரியா , போன்ற நாடுகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர் .  இவ்வெற்றியை அடுத்து ஈரான் , எகிப்து , சிரியா போன்ற நாடுகளில் கடல் மார்க்கமாக தரைமாக்கப்பாதை முஸ்லிம்கள்வசம் வந்தன. அதேபோல் கைப்பற்றப்பட்ட சில நாடுகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு அறபு மொழி கற்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஏனெனில் நாட்டைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் அறபிகளாக இருந்த காரணத்தினால் அவர்கள் அறபு மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்தினர். அதேபோல் அவர்களின் வணிகத்துடன் அறபு மொழியை  பிரத்தோக மொழியாக பயன்படுத்தினர் . இதனால் சுதேசிகள் அறபு மொழியைக் கற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

இவ்வாறு கற்றவர்கள் தமது வர்த்தகங்களை மேற்கொள்வதற்காக கீழைத்தேய நாடுகளுக்கு வந்தார்கள். இதன் விளைவாக இலங்கையில் அறபு மொழி அறிமுகமானது. இலங்கையில் அறபு மொழி கி.மு. முன்பே அறிமுகமானது என்று சொல்ல முடியும் .  பண்டுகாபய மன்னனின் காலத்தில் "யோனஸ் " ( Yonas ) என்றோர்களுக்கு நிலம் வழங்கியதாக மகாவம்சம் கூறுகிறது . இதனை மொழிபெயர்ப்பு  செய்த வரலாற்று ஆசிரியர்  " வில்லியம் ஹைகர் " என்பவர் கூறுகையில் இங்கு " யோனஸ் "  என்போர் "அறபிகளே " என்று கூறுகின்றார். மற்றொரு வரலாற்று ஆசிரியரான Dr. Vadivalu  உச்ச நிலையில் தென்னிந்தியா முஸ்லிம் என்ற புத்தகத்தில் கூறுகின்றார் 1505 இல் போத்துகேயர் இலங்கைக்கு வராவிட்டால் இலங்கையில் முஹம்மதும் அவரது தோழர்களினதும் ஆட்சியுமே இடம்பெற்றிருக்கும் என்று கூறுகின்றார் எனவே  வலுவான ஆதார பூர்வமான கருத்துக்களைப் பார்க்கின்ற போது அறேபிய இலங்கைத் தொடர்பு மிகவும் தொன்மைவாய்ந்ததென்று புரிகின்றது .

Hafeesul haq ( Fathihi ) 

No comments:

Post a Comment