இது சம்பந்தமாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சவூதியை மைய்யமா வைத்து இயங்குகின்ற (மஜ்மஉல் பிக்ஹுல் இஸ்லாமி) சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியத்தின் கருத்திற்கு இனங்க இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன் .
இந்த செயற்கை முறைக் கருக்கட்டல் 7 முறைகளில் மேற் கொள்வார்கள் இதில் இரண்டு முறையைத் தவிர மற்ற 5 முறைகளும் இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறனானது என்று சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியம் பத்வா வெளியிட்டது .
உண்மையில் ஒரு குழந்தை ஆணுடைய விந்தணுவும் ஒரு பெண்ணுடை முட்டையும் சேர்வதன் காரணமாகவே உருவாக்கம் இடம்பெறுகின்றது . இந்த செயற்பாடு தாயின் கருப்பையில் இடம்பெறுகின்றது .
ஆனால் செயற்கை முறைக் கருக்கட்டல் ( Test tube baby ) மூலம் ஒரு குழந்தை உருவாக்கின்ற போது அது ஆணுடை விந்தணுவையும் ,பெண்ணுடைய முட்டையையும் தாயின் கருப்பை அல்லாமல் வேறு இடத்தில் வைத்து ஒரு குழந்தையை உருவாக்குகின்ற முறையே இதுவாகும் . இது 7 முறையில் மேற் கொள்ளப் படுகின்றது .
01) கணவனின் விந்தணுவையும் , வேறு ஒரு பெண்ணின் முட்டையையும் எடுத்து மனைவியின் கருவறையிலே வளர விடுதல் . ( இந்த முறை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது ) காரணம் பரம்பரையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது .
02) மனைவியின் முட்டையை கணவன் அல்லாத வேறொரு ஆணின் விந்தணுவை எடுத்து மனைவியின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது )
03) கணவனுடைய விந்தணுவையும் மனைவியின் முட்டையையும் எடுத்து வேறொரு பெண்ணின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது )
இந்த முறையை 1990 களில் மேற்குலகில் அதிகமான பெண்கள் தொழிலாக செயது வந்தார்கள் .
04) வேறொரு ஆணின் விந்தணுவையும் , வேறொரு பெண்ணின் முட்டையையும் எடுத்து தன்னுடைய மனைவியின் கருவறையில் வளர விடுதல் .
( இதுவும் இஸ்லாம் தடுத்துள்ளது )
05) கணவனுடைய விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து கணவனின் வேறு மனைவியின் கருவறையில் வளர விடுதல் .
( இதையும் இஸ்லாம் தடுத்துள்ளது )
06) கணவனுடைய விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து வெளியில் வளர வைத்து மீண்டும் மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதை இஸ்லாம் அங்கிகரிக்கின்றது )
07) கணவனுடை விந்தணுவை எடுத்து வெளியில் கருகட்ட வைத்து ( வளரவைத்து )
மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதையும் இஸ்லாம் அங்கிகரிக்கின்றது )
இப்படியான செயற்கை முறைக் கருக்கட்டல்
இன்று அரிதாகத்தான் இருக்கின்றது . இதை மேற்கொள்வதற்கு அதிக பணம் தேவை . இதை அதிகமாக செல்வந்தர்கள்தான் மேற்கொள்வார்கள் .
இதில் நான் செயற்கை முறைக் கருக்கட்டல் இடம்பெறுவதற்கான காரணத்தை எழுதவில்லை மாறாக செயற்கை முறைக் கருக்கட்டலுக்கு ( Test tube baby ) நவீன கால அறிஞர்கள் கூறும் சட்டத்தைரத்தை மாத்திரம்தான் எழுதியுள்ளேன்.
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி) . பிரதம ஆசிரியர் தலைவாசல் சஞ்சிகை.
Varipathanchenai
சிறந்த ஆக்கம் சகோ ...
ReplyDeleteமஜ்மஉல் பிக்ஹுல் இஸ்லாமி சவூதி அறிஞர்களுக்கு மாத்திரம் உள்ள ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியமல்ல .....
🌱காலத்தின் தேவைய கருத்திற் கொண்ட 'பிக்ஹுன் நவாஸில்' சார் மஸ்அலாவை தமிழ் மொழிபெயர்த்தமை வரவேற்புக்குரியது. ..
ReplyDelete🌱மஜ்மஉல் பிக்ஹுல் இஸ்லாமி ஸஊதி உலமாக்கள் மட்டும் அங்கம் வகிக்கும் பிக்ஹ் ஒன்றியம் அல்ல. ....
'றாபிததுல் ஆலமில் இஸ்லாமி' அமைப்பில் அங்கம் வகிக்கும் பிக்ஹ் துறை சார் உலமாக்களின் ஒன்றியம்.... இதில் உலகின் பல்வேறு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைசிறந்த பிக்ஹ் கலை விற்பன்னர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
جزاكم الله خيرا