இவர் 1926 / september / 09 மேற்கு எகிப்தின் சப்துராப் என்ற கிராமத்தில் பிறந்தார் . இவர் தனது 2 வயதில் தந்தையையும் , 14 வயதில் தனது தாயையும் இழந்தார் . இவர் ஒரு விவசாயப் பின்னணியைக் கொண்டவர் .
இவர் தனது 10 வயது எட்டும்முன்னர் அல்குர்ஆனை மனனம் செய்தார் . இவருடைய ஆரம்பக்கல்வியை அல் அஸ்ஹரின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றார் . இவர் உயர்தரப்பரிட்சையில் தேசியரீதியில் இரண்டாமிடம் பெற்றார் . பின்னர் அல் அஸஹர் உஸூலுத்தீன் பீடத்தில் சேர்ந்து 1953 இல் 180 பட்டதாரி மாணவர்களில் முதல்தரத்தைத் தட்டினார் .
1958 அரபு மொழித்துறையில் Diploma பட்டம் பெற்றார் . பின்னர் 1960 இல் ஷரீஆ துறையில் MA பட்டமும் , 1973 இல் இஸ்லாமிய சட்டத்துறையில் கலாநிதிப்பட்டமும் பெற்றார் .
இவரின் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொறுத்தவரை . தனது 16 வயதில் தன்னுடைய சொந்தக்கிரமத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்கு ஆரம்பித்தார் . இவர் தனது 19 ஆவது வயதில் இஃவானுல் முஸ்லிமூன் அமைப்புடன் சேர்ந்து இஸ்லாமியப்பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் . கவலை என்னவென்றால் இவர் இஃவானுல் முஸ்லிமூன் அமைப்புடன் சேர்ந்து இஸ்லாமியப்பிரச்சாரம் செய்ததற்காக இரண்டு சிறைகளில் பலமுறை தள்ளப்பட்டார் . என்றாலும் இவர் 100 இற்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார் . இன்னும் எழுதிக்கொண்டுள்ளார் .
தற்போது இவர் முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக கடமையாற்றுகின்றார் .யாரென்று தெரியுமா ? . அவர்தான் கலாநிதி யூஸுப் அல் கர்லாவி . இவர் அன்று செய்த முயற்சி இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பலனளிக்கின்றது . இதுதான் இரண்டு வயதில் தந்தையை இழந்து , 14 வயதில் தாயையும் இழந்த ஒரு சிறுவனின் சாதனை .
நாங்களும் இவருடைய வாழ்க்கையில் படிப்பினை பெறுவேண்டும் . நான் தயார் . நீங்கள் தயாரா ? ........
அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக் (பாதிஹி) வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment