Sunday, August 23, 2015

பெண்களைப்பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு .

இன்று உலகம் மிக வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டே செல்கின்றது . என்றாலும் மனிதன் மனிதனை சுதந்திரமற்ற ஒரு மிருகம்  என்று  மேற்குலகம்  கருதுகின்றது  . அதிலும் குறிப்பாக பெண்கள்  சிற்றின்பம்தரும் போதைப்பொருள் என்று சொல்லி மேற்குலகில் ஒரு சில பிரச்சாரர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள் . அதேபோல்  பெண்களுக்கு ஒரு சில உரிமைகளை வளங்குவதற்குப் புறக்கணிக்கின்றார்கள் .
ஆனால் இஸ்லாம் ஆண்களுக்குக் கொடுக்கின்ற  சம உரிமைகளை பெண்களுக்கும் கொடுக்கின்றது .

இன்று இலங்கையில் ஒரு சில கிரமங்களில்  பெண்கள் கல்வி கற்பது கூடாது என்று சொல்லி எமது முஸ்லிம் பெண்களின் அறிவை குறுக்குகின்றார்கள் . காரணம் அவர்கள் விளங்கிய இஸ்லாம் . அதேபோல் அவர்கள் பின்பற்றும் சில  இஸ்லாமிய  இயக்கங்கள் . இந்தச் செயற்பாடு வெளிச்சமூகத்திற்கு இஸ்லாத்தைப்பற்றி பிழையான எண்ணத்தை உருவாக்குகின்றது . இது முற்று முழுதாகப் பிழையானது .

இறைவன் அவனது திருமறையில் ஆண்களையும் ,பெண்களையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றான் . இதை எங்களுக்கு ஐந்து வகையாகப் பிரத்துப்பார்க்க முடியும் .

01) أصل اﻻنسانية
மனிதனென்ற அடிப்படையில் இஸ்லாம் இறைவன் ஆண் , பெண் இரண்டு சாராரும் சமமானவர்கள் . இறைவன்
திருக்குர்ஆனில் அதிகமான  இடங்களில் '' ஈமான் கொண்ட விசுவாசிகளே உங்களது இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் ,, என்று சொல்கின்றான் இதில் இறைவன் ஈமான் கொண்ட ஆண்கள் அல்லது ஈமான் கொண்ட பெண்கள் என்று சொல்லவில்லை மாறாக ஈமான் கொண்டவர்களே என்றுதான் சொல்கின்றான் . இது எமது பிரதான மூலாதாரமான குர்ஆனின் நிலைப்பாடு .

நபிஸல் அவர்கள் கூறினார்கள்
ماأكرمهن اﻹ كريم وما أهانهن اﻹلهين (حديث)
ஆண்களில் கண்ணியமானவர்கள் பெண்களைக் கண்ணியப்படுத்துபவர்கள் . மாறாக அவர்களை இழிவுபடுத்துபவர்களே இழிவானவர்கள் . ( ஹதீஸ் )

இன்னொரு ஹதீஸில் சொன்னார்கள் .
انما النساء شقائق الرجال (حديث)
பெண் ஆணுடைய பாதி ,, எனறு நபிஸல் அவர்கள் கூறினார்கள் .

02) أصل التكليف.

பொறுப்பு என்ற வகையில் ஆண்களும் , பெண்களும் சமமானவர்கள் .
''من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن ...
'' யார் ஸாலிஹான அமல் செய்கின்றாரோ அது ஆணாக இருந்தாலும் சரி பெண்காக இருந்தாலும் சரி அவர் முஃமின்தான் என்று இறைவன் கூறுகின்றான் ,,  பொறுப்பில்  சமமானவர்கள் .

03 ) أصول الملكية.
சொத்துரிமையிலும் சமமானவர்கள் . ஒரு பெண்னுக்கு சொத்துக்கள் பகிர்ந்தளிக்கின்ற போது அவளுக்கு 3/1 கிடைக்கும் . அதேபோல் அவளுடைய கணவனுக்கும் 3/2 பங்கு கிடைக்கும் . ஆனால் அவளுக்குச் செலவு செய்வது கணவனின் பொறுப்பு . எனவே அவளுடைய சொத்துக்கள் பாதுகாக்கப்படும் .
இதநூடாகவும் இஸ்லாம் பெண்களைக் கண்ணியப்படுத்துகின்றது .

04 ) أصل الحقوق الشخصية.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கான உரிமை எப்படி ஆணுக்குக் கொடுத்துள்ளதோ அதே உரிமையை பெண்ணுக்கும் கொடுத்துள்ளது .

ஒரு முறை நபிஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்து கேட்டாள் என்னிடம் அதிகம் பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் . எப்படி அவர்களை வளர்க் வேண்டும் ? என்றார் அதற்கு நபிஸல் அவர்கள் கூறினார்கள் ,, உங்கள் பிள்ளைகளை நிர்ப்பந்திக்கவேண்டாம் ,, என்றார்கள் .

இன்னொரு முறை ஒரு நபித்தோழர் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார் . அப்போது தனது மனைவியிடம் தனது நண்பர்களுக்கு தனது வீட்டில்  ஒரு விருது செய்வதற்கு அனுமதி கேட்டார் . அவளும் அனுமதித்தார் . அப்போது அவருடைய தோழர்கள் விருந்திற்கு அவருடைய வீட்டிற்கு வந்தார்கள் . ? அப்போது யார் யார் வீட்டிற்கு விருந்தினராக வந்திருக்கின்றார்கள் என்று கதவின் துவாரத்தினூடாகப் பார்த்தாள் அப்போது தன் கணவரைத்தவிர மற்ற அனைவரும் அழகாக இருந்தார்கள் . இந்தப் பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும்படி நபிஸல் அவர்களிடம் வேண்டிக் கொண்டார் . நபிஸல் அவர்களும் விவாகரத்து செய்துவைத்தார்கள் . எனவே திருமணம் முடிப்பதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது .

05 ) أصل الكرامة
கணவனுக்கு எப்படி இஸ்லாம் கண்ணியம் கொடுக்கின்றதோ அதேபோல் மனைவிக்கும் கொடுக்கின்றது .

இறைவன்
தந்தை என்ற பாத்திரத்தை ஆணுக்கும் ,
தாய் என்ற பாத்திரத்தை பெண்ணுக்கும் கொடுத்துள்ளான் .அவர்களுடை பாத்திரத்தில் அவர்கள்தான் சிறந்தவர்கள் . தந்தையின் பாத்திரத்தை ஒரு பெண்ணால்  ஈடுசெய்ய முடியாது . அதேபோல் தாய் என்ற பாத்திரத்தை ஒரு ஆணால் ஈடுசெய்ய முடியாது .

எனவே இஸ்லாம் ஆணுக்கும் , பெண்ணுக்கும் சமமான உரிமைகளைத்தான் வழங்குகின்றது .

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை .

No comments:

Post a Comment