Saturday, August 15, 2015

இறக்காமம்


இறக்காமப் பிரதேசம்பற்றிய ஒர்  சுருக்க அறிமுகம் .

================================

இறக்காமப்பிரதேசம் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது . இது அம்பாரை மாவட்டத்தின் மொத்த சதுர கிலோ மீற்றரில் ( 4431.38 ) 78.2 சதுர கிலோ மீற்றர் நில வளத்தையும் . 6.1 சதுர கிலோ மீற்றர் நீர் வளத்தையும் கொண்டுள்ளது .

இறக்காமப் பிரதேசத்தின் ஜீவனோபாயமாக விவசாயம் , கால்நடை வளர்ப்பு , மீன்பிடி காணப்படுகின்றது . இதில் 78. 2 சதுர கிலோ மீற்றர் நிலத்தில் 5742 ஏக்கர் நெற் சொய்கையாகவும் , 2428  ஏக்கர் கரும்புச் செய்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது .

இறக்காமப் பிரதேசத்தின் நீர் வளத்தைப் பொறுத்தவரை . மொத்த நிலப்பரப்பில் ( 78 .2 ) 6.1  சதுர கிலோ மீற்றர் நீர் வளத்தையும் கொண்டுள்ளது . இதில் ( இறக்காமம் வில்லுக் குளம் , குடுவில் குளம் , 10A கிராமத்  தொடரிக் குளம் , 11A கிராம நாவலடிக் குளம் , மஜீட் வாவி ( வண்டு வாய்க்கால் குளம் ) போன்ற நீர் வளத்தைக் கொண்டுள்ளது . இதில் பெரிய குளமாக இறக்காமம் வில்லுக் குளம் காணப்படுகின்றது . இது சுமாராக 15.666 ஏக்கர் அடி நீரைக் கொண்டுள்ளது .
குறிப்பு :- இக்குளமானது இலங்கையில் இரண்டாவது தூய குளமாகவும் அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளது .

இதன் சனத்தொகையைப் பொருத்தமட்டில்  (2013  ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ) 15 .476   முஸ்லிம்களும் , 997 பெளத்தர்களும் , 346  தமிழர்களும் இங்கு வசிக்கின்றார்கள் .

இறக்காமப் பிரதேசத்திலுள்ள இறக்காமம் , வரிப்பத்தான்சேனை , மஜீத் புறம்  வட்டுச்சேனை , குடுவில் , அமிரலிபுரம் , நல்லதண்ணி மலை , சேகு ஒலிபுரம் ( வாங்காமம் ), 10A கிராமம் , அறபா நகர் , சபா நகர் , 11A கிராமம் , முகைத்தீன் கிரமம் , ஜபல் நகர் , மதீனா புரம் , ஹுசைனியா புரம் ஆகிய 16 கிராமங்களில் முஸ்லிம்கள் செறிவாகவும் , நியுகுண , மலையடி , இலுக்குச்சேனை , கல்மடு ஆகிய நான்கு  கிராமங்களில் பெளத்தர்கள் செறிவாகவும் , மாணிக்கமடு கிராமத்தில் தமிழர்கள் செறிவாகவும் வாழ்கிறார்கள் .
இதுதான் எனது கிராத்தின் சுருக்கமான சிறப்பு

Hafeeul haq  ( பாதிஹி ) 

வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment