Saturday, August 1, 2015

இஸ்லாமிய வரலாற்றில் நான்கு மத்ஹப்கள் மாத்திரம் தானா தோன்றியது ?

உண்மையில் இந்த மத்ஹப் பற்றிய சிந்தனை பிக்ஹு கலையின் மறுமலர்ச்சியின்  விளைவாகத்தான் தோன்றியது .

இனறு விளக்கமற்ற ஒரு சிலர்  கூறுகினார்கள் இஸ்லாமிய  வரலாற்றில்  நான்கு  மத்ஹப்கள்தான் தோற்றம் பெற்றது . அந்த  நான்கும் மத்ஹப்களும்தான்     பிரபல்யமானது என்று விவாதித்துக்  கொள்ளின்றார்கள் . அதேபோல் ( ஹனபி மத்ஹப , மாலிகி மத்ஹப் , ஷாபி மத்ஹப் , ஹன்பலி மத்ஹப் ) இந்த மத்ஹப்களை இமாம்கள்தான் தேற்றுவித்தார்கள் . என்று சொல்லி மத்ஹப் வெறிகளை சிலர் அறியாத பாமர மக்களுக்கு ஊட்டுகின்றார்கள் .  இது மிகவும் தவறு .

உண்மை அப்படியல்ல  மத்ஹப் என்றால் '' மனிதனுக்கு மத்தியில் சிந்தனைப் பாராம்பரியங்களைத் தோற்றுவித்து குர்ஆன் , சுன்னாவில் இருந்தது பெறப்பட்ட சட்ட முடிவுகளை மனிதர்களுக்கு மத்தியில் பரப்புதல்  இதுதான் மத்ஹப் என்பதற்கு வரைவிலக்கணம் . இதுதான் மத்ஹப்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் . சண்டை பிடிப்பதற்காக அல்ல .

இஸ்லாமிய வரலாற்றில் நூற்றுக்கணக்கான மத்ஹப்கள் தோன்றியுள்ளது . உதாரணமாக ஹனபி மத்ஹப்  , மாலிகி மத்ஹப் , ஷாபி மத்ஹப் , ஹன்பலி மத்ஹப் , லாஹிரி மத்ஹப் ,
லாஹிரி மத்ஹப் , மத்ஹபு தஹபி , போன்ற மத்ஹப்கள் இன்னும் பல மத்ஹப்கள் இருக்கின்றன ஆனால் ஹனபி மத்ஹப , மாலிகி மத்ஹப் , ஷாபி மத்ஹப் , ஹன்பலி மத்ஹப்களைப் போன்று பிரபல்யமடைய விலை .இந்த நான்கு மத்ஹப்களையும் தவிர மற்ற மத்ஹப்கள் அனைத்தும் காலப்போக்கில் அழிந்துவிட்டது.
இத்த மத்ஹப்கள் அழிவதற்குக் காரணம் தரமான மாணவர் பரம்பரை இன்மையே ம . மேல் குறிப்பிட்ட பிரபலமான  நான்கு இமாம்களின் காலத்திலும் இவர்களைவிடச் சிறந்த அறிஞர்கள் வாழ்ந்துள்ளார்கள் . ( இமாம்  சுப்யானு தவ்ரி , இமாம் தபரி , இமாம் அவ்சாயி , இமாம் லைஸ் இப்னு ஸஃத் , போன்ற மிகப்பெரும் அறிஞர்கள் வாழ்ந்துள்ளார்கள் ஆனால் இவர்களின் மத்ஹப்கள்
பிரபல்யம்மடைய விலை காரணம் தரமான மாணவர் பரம்பரை இல்லை .

இதுதான் இந்த  நான்கு மத்ஹப்களும்  பிரபல்யமாகி மற்ற மத்ஹப்கள் அழிந்தமைக்கான பிரதானமான காரணம் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.

2 comments:

  1. ஹனபி மத்ஹப் என்று சொல்லிக் கொண்டு இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் வழியில் செல்வதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹனபி மத்ஹபு என்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப் போதிப்பதும் இமாம் அபூஹனீபா எழுதிய நூற்களையா?
    அல்லது அவர்களின் மாணவர்களான இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மத் ஆகியோர் எழுதிய நூற்களையா?
    இல்லையே! இந்தியாவின் எந்த மதரஸாவிலும் அந்த இமாம்கள் எழுதிய நூற்கள் போதிக்கப்படுவதில்லையே! இதன் மர்மம் என்ன?

    ஹிஜ்ரி 1118ல் எழுதப்பட்ட ஆலம்கீரி, ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆனது எப்படி? ஹிஜ்ரி 1071ல் எழுதப்பட்ட துர்ருல் முக்தார் எவ்வாறு ஹனபி மத்ஹபின் சட்ட நூலாக ஆக்கப்பட்டது? ஏன் ஆக்கப்பட்டது? யாரால் ஆக்கப்பட்டது? ஹிஜ்ரி 745ல் எழுதப்பட்ட ஷரஹ் விசாயா, எப்படி ஹனபி மத்ஹபின் சட்ட நூல் ஆனது? ஹிஜ்ரி 710ல் எழுதப்பட்ட கன்சுத் தகாயிக் என்ற நூல் எவ்வாறு அபூஹனீபா இமாமின் சட்ட நூல் என்று நம்ப வைக்கப்பட்டது? ஹிஜ்ரி 593ல் எழுதப்பட்ட ஹிதாயா என்ற நூல் ஹனபி இமாம் எழுதியதா? ஹிஜ்ரி 428ல் எழுதப்பட்ட குதூரி என்ற நூல் இமாம் அவர்களால் எழுதப்பட்டதா?
    இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூற்களாக ஆக்காததன் மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர, இன்று பாடத் திட்டத்தில் இருக்கும் நூற்கள் தான் இடம் தருகின்றன என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? தெளிவுபடுத்துங்கள்.

    ReplyDelete
  2. ஹனபி மத்ஹப் என்று சொல்லிக் கொண்டு இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் வழியில் செல்வதாக நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஹனபி மத்ஹபு என்று இவர்களுக்குப் போதிக்கப்பட்டதும், இவர்கள் பிறருக்குப் போதிப்பதும் இமாம் அபூஹனீபா எழுதிய நூற்களையா?