Wednesday, August 31, 2016

சயீதகுதுப் ( ரஹ் ) அவர்கள்

2016/ 08/29. இன்று தியாகி இஸ்லாமிய சிந்தனையாளர் #சயீத_குதுப் ( ரஹ் ) அவர்களுக்கு எகிப்தைய அரசினால்   மரணதண்டனை நிறைவேற்றப் பட்ட ஆண்டு. எகிப்தைய அரசு மரணதண்டனை கொடுப்பதற்குக் காரணம் இவர் எழுதிய #பாதையின்_மைல்_கற்கள்   ( ﻣﻌﺎﻟﻢ ﻓﻲ ﺍﻟﻄﺮﻳﻖ ) என்ற  புத்தகம் இது சிந்தனை ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது இதனை எகிப்தைய அரசு வாப்பஸ் வாங்கும்படி வேண்டியது ஆனால் இதை இவர் வாப்பஸ் வாங்காத காரணத்தினால்  எகிக்தைய அரசு 29 August 1966 ( வயது 59)   மரணதண்டனை நிறைவேற்றியது  .

#)  சயீத் குதுப் ( ரஹ் )அவர்களினால் எழுதப்பட்ட இஸ்லாமிய சிந்தனை சார்ந்த சில புத்தகங்கள்
#) ﻣﻌﺎﻟﻢ ﻓﻲ ﺍﻟﻄﺮﻳﻖ .
#) ﻫﺬﺍ ﺍﻟﺪﻳﻦ .
#) ﺍﻟﻤﺴﺘﻘﺒﻞ ﻟﻬﺬﺍ ﺍﻟﺪﻳﻦ .
#) ﻓﻲ ﻇﻼﻝ ﺍﻟﻘﺮﺁﻥ ‏( ﺛﻤﺎﻧﻴﺔ ﻣﺠﻠﺪﺍﺕ ﺗﻔﺴﻴﺮ ﻟﻠﻘﺮﺁﻥ ﺍﻟﻜﺮﻳﻢ ‏) .
#) ﺍﻟﻌﺪﺍﻟﺔ ﺍﻻﺟﺘﻤﺎﻋﻴﺔ .
#) ﺍﻹﺳﻼﻡ ﻭﺍﻟﺴﻼﻡ ﺍﻟﻌﺎﻟﻤﻲ .
#) ﻓﻲ ﺍﻟﺘﺎﺭﻳﺦ ﻓﻜﺮﺓ ﻭﻣﻨﻬﺎﺝ .
#) ﻟﻤﺎﺫﺍ ﺃﻋﺪﻣﻮﻧﻲ؟ ‏( ﻣﺠﻤﻮﻋﺔ ﻣﻘﺎﻻﺕ ﻛﺘﺒﺘﻬﺎ ﺟﺮﻳﺪﺓ ﺍﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺍﻟﺘﻲ ﺗﺼﺪﺭ ﻓﻲ ﻟﻨﺪﻥ ﺑﺎﻋﺘﺒﺎﺭﻫﺎ ﺍﻟﺸﻬﺎﺩﺓ ﺍﻟﺘﻲ ﻛﺘﺒﻬﺎ ﺍﻹﻣﺎﻡ ﺑﺨﻂ ﻳﺪﻩ ﻗﺒﻞ ﺇﻋﺪﺍﻣﻪ .

Tuesday, August 23, 2016

பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவரும் பல ஊடகங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் முடக்கல்

தற்போது பலஸ்தீனில் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கிவரும் பல ஊடகங்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் முடக்கப்பட்டு வருருகின்றது மேலும்  இஸ்ரேலிய இராணுவம்  பலஸ்தீனில் நடத்துகின்ற கொடூரத் தாக்குதல்களையும் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் அவை நடத்தும் வன்முறைகளை அந்த இலத்திரனியல் ஊடகங்கள் உலகிட்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கூறி   அந்த ஊடகங்கை (ஹெக்) செய்து அதை நடத்திய உரிமையாளர்களையும் சிறைப்பிடித்து வருவதாக அங்கு வரும் செய்திகள் கூறுகின்றன .

தகவல் :=  அப்துர் றஹ்மான் (( தூனிசியா)
By:- hafeesul haq ( fathihi )

குறிப்பு :-  எனது முகநூல் மற்றும் எனது எனது இனையத்தில் முடியுமானவரை #பலஸ்தீன் மற்றும் #தற்கால நடப்புகள் சம்பந்தமா எழுதி வருகின்றேன் உங்களுடைய பூரன ஒத்துழைப்பை இதில்  நான் எதிர்பார்க்கின்றேன்

Sunday, August 21, 2016

சொத்துரிமை ஏற்பட்ட வரலாறு

ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி, ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய பின்வரும் (4 :11,12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றே கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ண
ாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.
இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால், இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால், அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்கள், குழந்தைகளில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்தப் பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்.
தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
அல்குர் ஆன் 4 :11,12
அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.
ஆதாரம்: அபூதாவூத் 2891, திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720, அஹ்மத் 3307
மற்றொரு வரலாறு:
பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்து, பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க, அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி 4577, 6723, 5651, 5676 மற்றும் முஸ்லிம்)
இன்னொரு வரலாறு:
ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரரான அப்துர்ரஹ்மான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மரணமானபோது ஆண் வாரிசுகள் அனைவரும் வந்து, சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டனர். அவரது மனைவி உம்மு கஹ்ஹா மற்றும் அவரது சகோதரிகள் ஐவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது உம்மு கஹ்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது மேற்கண்ட வசனம் இறங்கியதாகவும் வரலாறு காணப்படுகிறது. (தஃப்ஸீர் இப்னு ஜரீர்)
ஆக எது எப்படியாயினும், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதுதான் சொத்துரிமை பற்றிய தெளிவான சான்றுகள் தோன்ற ஆரம்பித்தன என்பது உண்மையாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

Tuesday, August 16, 2016

பள்ளிவாசல்  நிருவாகத் தேர்வில் தெரிவு செய்யப்படுபவோரிட்கு குர்ஆன் கூறும் தகமைகள்

 

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

உண்மையில் பள்ளிவாசல் நிருவாகித்தல்  என்பது மிகவும் அபாய கரமான  அமானிதமான ஒரு பொறுப்பு
அதை முடியுமானவரை சரிவர நீதமான முறையில்  நிருவகிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் ஒரு தலைமைத்துவத்திற்குப் பொறுப்பாக அமர்த்தப்பட்டு அதை அவர் நீதாமான முறையில் நிருவகிக்க விலை என்றால் " நாளை மறுமையில் இறைவனிடம் நிச்சயமாக விசாரணை செய்யப்படுவார் " அவருக்கு கொடுக்கப்படும் தண்டனையும் விசித்திரமாக இருக்கும் . எனவே இதை நாங்கள் மிகவும் கவனமாக  அறிந்து கொள்ள வேண்டும்

இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்

{إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ} [التوبة : 18]

" அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை பரிபாலனம் செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்மீதும் மறுமை நாள்மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைபிடிப்பிடித்து ஸகாத்தை முறையாகக் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்கள் _இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் என்று கூறுகின்றான். [التوبة : 18]

நிர்வாகத்தில் உள்வாங்கப் படுபவர்களுக்கு குர்ஆன் கூறும்  தகுதி

01)  தொழுகையைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்

  இது பற்றி இமாம் அல் மஸஊதி அன் இப்னு அப்பாஸ் கூறுகையில் " பள்ளிவாசல் என்பது  பூமியில் இருக்கும் அல்லாஹ்வின் மாளிகை அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட வேண்டும்"

அதேபோல் அப்துர் றஸ்ஸாக் அன் இம்றான் இப்னு மைமூன் அல் அவ்தி அவர்கள் கூறுகின்றார் " யார் அல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு போகாதவர்கள் தொழுகையைக் கடைப்பிடிக்காதவர். இவர்கள் தலைமைத்துவத்திற்கு தகுதி அற்றவர்கள் .

ஆனால் இன்று இப்படியான வர்களை எமது மக்கள் தெரிவு செய்து வருகின்றார்கள். இப்படி தெரிவு செய்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்கின்ற பாவத்தை தெரிவு செய்தவர் நாளை மறுமையில் சுமப்பார். இறைவா எங்களைப் இப்படியான சோதனைகளில் இருந்து பாது காத்து விடுவாயாக !

02)  ஸகாத்தை முறையாகக்  கொடுக்க  வேண்டும்

இப்படிப்பட்டவர் மக்களுக்கு தனது சொத்துக்களை வாரி இறைப்பவர்களாகத்தான் இருப்பார்கள் அவர்கள் ஒரு போதும் மக்களின் சொத்துக்களையோ அல்லது பள்ளிவாசல்களின் சொத்துக்களை யோ சுறண்ட மாட்டார்கள்.  எனவே இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு தெரிவு செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் எமது ஊரில் பள்ளிவாசல் நிருவாக சபையைத் தெரிவு செய்தவர்களில் அதிகமானோர் #குடிகாறர்கள் அதேபோல் நிருவாக சபைத் தெரிவுக்கென  பள்ளிவாசலுக்கு தொழ வந்தவர்கள். எனவே இது குறித்து ஊர்மக்களாகிய நாங்கள் இறைவனிடம் நிச்சயமாக விசாரணை செய்யப்படுவோம் .

அதேபோல் பதவி மோகம் பிடித்து அலைபவர்களை  நபிஸல் அவர்கள் சபித்துள்ளார்கள். நபிஸல் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் வந்து உங்களுடைய அரச சபையில் ஒரு தொழில் தாருங்கேன் என்று கேட்ட போது நபிஸல் அவர்கள் அவரை கண்டித்தார்கள் ஆனால் இன்று பதவி மோகம் பிடித்து சிலரை ஏவி என்னை பள்ளிவாசல் நிருவாகியாக தெரிவு செய் என்கிறார்கள்.

இவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் இவர்களைத் தெரிவு செய்பவர்களும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் #தண்டனை மிகவும் கொடூரமாக இருக்கும்.

பள்ளிவாசல் நிருவகத்திற்கு எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் ?

01) #படித்தவர்கள் விரும்பத் தக்கது

02) ஆகக் குறைந்தது இரண்டு மெளலவிமார்களாவது பள்ளி நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும்

காரணம் பல கிராமங்களில் பள்ளிவாசல் நிருவாகிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் இஸ்லாமியப் பின்னணி இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய #திருமணம் மற்றும் #தண்டனைகளை போன்ற வற்றைக் கடைப்பிடிப்பது கடினமாக உள்ளது. எனவேதான்  மெளலவிமார்கள்  பள்ளி நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும்

எனவே இத்தகைய விடையங்களை கவனத்திற் கொண்டு எமது பள்ளிவாசலில் தகுதி வாய்ந்தவர்களைத் தெரிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் அப்படி #தகுதியற்றவர்களை நாம் தெரிவு செய்தால் அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமாக இருக்கும் ....

#தெரிவிப்பது_நாங்கள்_தீர்மானிப்பது_நீங்கள்

Hafeesul haq  ( fathihi )

Thursday, August 11, 2016

சமூக மாற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு

Hafeesul haq ( fathihi )

இன்று எமது சமூகத்தில் ஒரு கருத்து இருக்கின்றது பள்ளிவாசல் என்பது அவை தொழுவதற்கு மாத்திரம் உரித்தான இடம் அதில் தொழுகை தவிர்ந்த ஏனைய சமூகவிவகாரங்களைப் பேசுவது இஸ்லாத்திற்கு முறணானது என்று சொல்லி நல்ல பல சேவைகளை  பள்ளிவாசல்கள் தவிர்ந்து வருகின்றது.

வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற போது நபிஸல் அவர்களின் காலத்தில்  சமூகத்தை வழிநடத்துகின்ற பிரதான நிறுவனமாக மஸ்ஜிதுன் நவவி இருந்துள்ளது. அது  மார்க்கக் கல்விகளைப் போதிக்கும் நிறுவனமாக , மக்களிடம் ஸகாதை வசூலிக்கும் நிறுவனமாக , சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் நிறுவனமாக ,  மக்களுக்கு நீதி வழங்கும் நிறுவனமாக மதீனாவை  ஆளும் இடமாக , இராணுவப் பயிற்சி முகாமாக இப்படி பாரிய தோர் மாற்றத்தை உருவாக்கும் மைய்யமாக மஸ்ஜிதுன் நவவி இருந்துள்ளது.

அதேபோல் பிரபல  கல்வி நிறுவனங்கள் பள்ளிவாசல்களை மைய்யப்படுத்திய அதிகம் தோற்றம் பெற்றுள்ளது. எகிப்தில் இருக்கும் ஜாமிஅது அஸ்ஹர்  பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் , தூனிசியாவில் அமைந்துள்ள ஸைதூனா பல்கலைக்கழகம் மதீனாவில் இருக்கும் மதீனா பல்கலைக்கழகம் இப்படி  ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பள்ளிவாசல்களை மைய்யப்படுத்தியே உருவாகியுள்ளது.

ஆனால் இன்று எமது சமூகத்தில் பள்ளிவாசல்களைப் பயன்படுத்துவதிலும் பள்ளிவாசல்கள் மக்களை இஸ்லாமிய ஷரிஆ சார்ந்த தெளிவு கொடுப்பதிலும் பாரியதோர் பின்னடைவில் உள்ளது.

இதற்கான பிரதான காரணம்

01) பள்ளி வாசல் நிருவாகியாகத் தெரிவு செய்யப் படுபவர்களிடம் பள்ளிவாசல் பயன்பாடு சம்பந்தமான பூரணமான தெளிவிம்மை

2) பள்ளிவாசல் நிருவாயிகளை தெரிவு செய்பவர்கள் படித்தவர்கள் அல்லது நல்ல சிந்தனைத் தெளிவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் இன்று குடும்பத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் தகுதி அற்றவர்களை தெரிவு செய்வதனால் எமது முஸ்லிம் சமூகம் பாரியதோர் பின்னடைவை எதிர் நோக்கிக் கொண்டு வருகின்றது.

பள்ளிவாசல்களை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் ?

கருத்து வேறுபட்ட விடயங்களில் கவனம் செலுத்தாமல் சுவனத்தை நோக்கிய பாதையைச் செப்பனிடுவதற்கான ஒரு களமாக  பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் இலக்காகக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில்  பள்ளிவாசலை மைய்யமாகக்  கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகள்

1. பள்ளிவாசலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன்,
சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடத்த ஒழுங்கு செய்தல்.

2. நூல் நிலையம் அமைத்தல்.

3. பெண்களுக்காக பள்ளியில் பிரத்தியேக இடம் ஒதுக்குதல்.

4. சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.

5. நிவாரண உதவிகள், சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.

6. வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.

7. சமூக நலத் திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.

8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.

9. இமாம்கள், கதீப்மார்களைப் பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.

10. குத்பாக்களை செயற்றிறன்மிக்கதாக அமைத்துக் கொள்ள ஆவன செய்தல்.

11. முஸ்லிமல்லாதோர் பள்ளிவாயலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களைப் பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.

12. ஊரில் வசிக்கும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக் கொள்ளல்.

13. ஊரில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். (சீதனம்,
வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயலவேண்டும்)

14. சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ மையங்களை உருவாக்க வேண்டும்.

15. மாணவ மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை ஒரு மஸ்ஜிதில் மேற்கொள்வதற்கு மஸ்ஜிதின் கட்டட அமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்த வகையில் மஸ்ஜிதுகளில் பெண்களுக்கான தொழுகையறை,
நூலகம், மாநாட்டு மண்டபம்,
வகுப்பறைகள், வரவேற்பறை முதலான பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்ற மஸ்ஜிதுகளில் இப்பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதை காண முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு பள்ளிவாசலும் இஸ்லாமிய மத்திய நிலையமாக இயங்க வழிவகை செய்யப்படுவதன் மூலமே சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த வகிபங்கு புத்துயிர் பெற்று மீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.

எனவே இது குறித்து  நாங்கள் தெளிவு பெற வேண்டும் பின்னர் பள்ளிகளில் நிருவாகிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும்

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

Wednesday, August 10, 2016

இலங்கை பொருளாதாரப் பின்னடைவில் பாரிய வீழ்ச்சியை எதிர் கொண்டமைக்கான மிகப் பிரதானமான காரணம்

சீனா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டமைக்கான காரணம் அந்த நாட்டின் நாடாளுமண்றத்தில் இருக்கும் அதிகமானோர் பொறியியல் துறை படித்தவர்கள்  அவர்கள் எப்படி சீனாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும்  என்றுதான் பார்க்கின்றார்கள்.  ஆனால்  எமது இலங்கை பொருளாதாரப் பின்னடைவில் பாரிய வீழ்ச்சியை எதிர் கொண்டமைக்கான மிகப் பிரதானமான  காரணம் இலங்கையின் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரும் #சட்டத்துறை படித்தவர்கள் இவர்கள் சட்டத்தை மாத்திரம் பேசி பேசி இருந்ததேஒளிய நாட்டை அபிவிருத்தி செய்ய நேரம் இல்லை.

எனவே இனியாவது நாம்  நாட்டை சிறப்பாக வளப்படுத்துவர்களைத் தெரிவு செய்வோம்.

Friday, August 5, 2016

கிழக்கின் தானியக்களஞ்சியம் வரிப்பத்தான்சேனை

வரிப்பத்தான்சேனையின் வேளாமை_அறுவடை_ஆரம்பம் .

ஒரு விவசாயியைப் பொறுத்தவரை  அவனுடைய வாழ்நாளில்  இரண்டுவிதமான  சந்தோசம் ஏற்படும் ஒன்று அவன்  வேளாமை விதைஇடுகின்ற போது அந்த விதைகள் அனைத்தும்  முளைக்கின்ற சந்தர்ப்பத்தில்
இரண்டாவதாக அவனுடைய வேளாமையை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தில்.  இவை இரண்டுக்கும் மத்தியில்  அந்த  விவசாயி சந்தோசமாக இருந்தாலும் அவன்  படுகின்ற கஷ்டங்கள்  #அப்பப்பா ஒன்றா இரண்டா இதை வர்ணிக்க முடியாது .

Photos :- Hafeesul haq
Varipathanchenai