ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
உண்மையில் பள்ளிவாசல் நிருவாகித்தல் என்பது மிகவும் அபாய கரமான அமானிதமான ஒரு பொறுப்பு
அதை முடியுமானவரை சரிவர நீதமான முறையில் நிருவகிக்க வேண்டும். ஏனெனில் ஒருவர் ஒரு தலைமைத்துவத்திற்குப் பொறுப்பாக அமர்த்தப்பட்டு அதை அவர் நீதாமான முறையில் நிருவகிக்க விலை என்றால் " நாளை மறுமையில் இறைவனிடம் நிச்சயமாக விசாரணை செய்யப்படுவார் " அவருக்கு கொடுக்கப்படும் தண்டனையும் விசித்திரமாக இருக்கும் . எனவே இதை நாங்கள் மிகவும் கவனமாக அறிந்து கொள்ள வேண்டும்
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்
{إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ} [التوبة : 18]
" அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை பரிபாலனம் செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்மீதும் மறுமை நாள்மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைபிடிப்பிடித்து ஸகாத்தை முறையாகக் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்கள் _இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் என்று கூறுகின்றான். [التوبة : 18]
நிர்வாகத்தில் உள்வாங்கப் படுபவர்களுக்கு குர்ஆன் கூறும் தகுதி
01) தொழுகையைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்
இது பற்றி இமாம் அல் மஸஊதி அன் இப்னு அப்பாஸ் கூறுகையில் " பள்ளிவாசல் என்பது பூமியில் இருக்கும் அல்லாஹ்வின் மாளிகை அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட வேண்டும்"
அதேபோல் அப்துர் றஸ்ஸாக் அன் இம்றான் இப்னு மைமூன் அல் அவ்தி அவர்கள் கூறுகின்றார் " யார் அல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு போகாதவர்கள் தொழுகையைக் கடைப்பிடிக்காதவர். இவர்கள் தலைமைத்துவத்திற்கு தகுதி அற்றவர்கள் .
ஆனால் இன்று இப்படியான வர்களை எமது மக்கள் தெரிவு செய்து வருகின்றார்கள். இப்படி தெரிவு செய்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்கின்ற பாவத்தை தெரிவு செய்தவர் நாளை மறுமையில் சுமப்பார். இறைவா எங்களைப் இப்படியான சோதனைகளில் இருந்து பாது காத்து விடுவாயாக !
02) ஸகாத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்
இப்படிப்பட்டவர் மக்களுக்கு தனது சொத்துக்களை வாரி இறைப்பவர்களாகத்தான் இருப்பார்கள் அவர்கள் ஒரு போதும் மக்களின் சொத்துக்களையோ அல்லது பள்ளிவாசல்களின் சொத்துக்களை யோ சுறண்ட மாட்டார்கள். எனவே இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு தெரிவு செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் எமது ஊரில் பள்ளிவாசல் நிருவாக சபையைத் தெரிவு செய்தவர்களில் அதிகமானோர் #குடிகாறர்கள் அதேபோல் நிருவாக சபைத் தெரிவுக்கென பள்ளிவாசலுக்கு தொழ வந்தவர்கள். எனவே இது குறித்து ஊர்மக்களாகிய நாங்கள் இறைவனிடம் நிச்சயமாக விசாரணை செய்யப்படுவோம் .
அதேபோல் பதவி மோகம் பிடித்து அலைபவர்களை நபிஸல் அவர்கள் சபித்துள்ளார்கள். நபிஸல் அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் வந்து உங்களுடைய அரச சபையில் ஒரு தொழில் தாருங்கேன் என்று கேட்ட போது நபிஸல் அவர்கள் அவரை கண்டித்தார்கள் ஆனால் இன்று பதவி மோகம் பிடித்து சிலரை ஏவி என்னை பள்ளிவாசல் நிருவாகியாக தெரிவு செய் என்கிறார்கள்.
இவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் இவர்களைத் தெரிவு செய்பவர்களும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் #தண்டனை மிகவும் கொடூரமாக இருக்கும்.
பள்ளிவாசல் நிருவகத்திற்கு எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் ?
01) #படித்தவர்கள் விரும்பத் தக்கது
02) ஆகக் குறைந்தது இரண்டு மெளலவிமார்களாவது பள்ளி நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும்
காரணம் பல கிராமங்களில் பள்ளிவாசல் நிருவாகிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் இஸ்லாமியப் பின்னணி இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய #திருமணம் மற்றும் #தண்டனைகளை போன்ற வற்றைக் கடைப்பிடிப்பது கடினமாக உள்ளது. எனவேதான் மெளலவிமார்கள் பள்ளி நிருவாகத்தில் தெரிவு செய்யப்பட வேண்டும்
எனவே இத்தகைய விடையங்களை கவனத்திற் கொண்டு எமது பள்ளிவாசலில் தகுதி வாய்ந்தவர்களைத் தெரிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் அப்படி #தகுதியற்றவர்களை நாம் தெரிவு செய்தால் அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமாக இருக்கும் ....
#தெரிவிப்பது_நாங்கள்_தீர்மானிப்பது_நீங்கள்
Hafeesul haq ( fathihi )
No comments:
Post a Comment