Thursday, August 11, 2016

சமூக மாற்றத்தில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு

Hafeesul haq ( fathihi )

இன்று எமது சமூகத்தில் ஒரு கருத்து இருக்கின்றது பள்ளிவாசல் என்பது அவை தொழுவதற்கு மாத்திரம் உரித்தான இடம் அதில் தொழுகை தவிர்ந்த ஏனைய சமூகவிவகாரங்களைப் பேசுவது இஸ்லாத்திற்கு முறணானது என்று சொல்லி நல்ல பல சேவைகளை  பள்ளிவாசல்கள் தவிர்ந்து வருகின்றது.

வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற போது நபிஸல் அவர்களின் காலத்தில்  சமூகத்தை வழிநடத்துகின்ற பிரதான நிறுவனமாக மஸ்ஜிதுன் நவவி இருந்துள்ளது. அது  மார்க்கக் கல்விகளைப் போதிக்கும் நிறுவனமாக , மக்களிடம் ஸகாதை வசூலிக்கும் நிறுவனமாக , சமூகப் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் நிறுவனமாக ,  மக்களுக்கு நீதி வழங்கும் நிறுவனமாக மதீனாவை  ஆளும் இடமாக , இராணுவப் பயிற்சி முகாமாக இப்படி பாரிய தோர் மாற்றத்தை உருவாக்கும் மைய்யமாக மஸ்ஜிதுன் நவவி இருந்துள்ளது.

அதேபோல் பிரபல  கல்வி நிறுவனங்கள் பள்ளிவாசல்களை மைய்யப்படுத்திய அதிகம் தோற்றம் பெற்றுள்ளது. எகிப்தில் இருக்கும் ஜாமிஅது அஸ்ஹர்  பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் , தூனிசியாவில் அமைந்துள்ள ஸைதூனா பல்கலைக்கழகம் மதீனாவில் இருக்கும் மதீனா பல்கலைக்கழகம் இப்படி  ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பள்ளிவாசல்களை மைய்யப்படுத்தியே உருவாகியுள்ளது.

ஆனால் இன்று எமது சமூகத்தில் பள்ளிவாசல்களைப் பயன்படுத்துவதிலும் பள்ளிவாசல்கள் மக்களை இஸ்லாமிய ஷரிஆ சார்ந்த தெளிவு கொடுப்பதிலும் பாரியதோர் பின்னடைவில் உள்ளது.

இதற்கான பிரதான காரணம்

01) பள்ளி வாசல் நிருவாகியாகத் தெரிவு செய்யப் படுபவர்களிடம் பள்ளிவாசல் பயன்பாடு சம்பந்தமான பூரணமான தெளிவிம்மை

2) பள்ளிவாசல் நிருவாயிகளை தெரிவு செய்பவர்கள் படித்தவர்கள் அல்லது நல்ல சிந்தனைத் தெளிவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் இன்று குடும்பத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் தகுதி அற்றவர்களை தெரிவு செய்வதனால் எமது முஸ்லிம் சமூகம் பாரியதோர் பின்னடைவை எதிர் நோக்கிக் கொண்டு வருகின்றது.

பள்ளிவாசல்களை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் ?

கருத்து வேறுபட்ட விடயங்களில் கவனம் செலுத்தாமல் சுவனத்தை நோக்கிய பாதையைச் செப்பனிடுவதற்கான ஒரு களமாக  பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் இலக்காகக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில்  பள்ளிவாசலை மைய்யமாகக்  கொண்டு மேற்கொள்ளக் கூடிய சில முக்கிய பணிகள்

1. பள்ளிவாசலை சார்ந்து நடைபெறும் மத்ரஸாவில் அல்குர்ஆன்,
சன்மார்க்க போதனைகளுடன் நடைமுறைக் கல்வியுடன் தொடர்பான வகுப்புகளையும் நடத்த ஒழுங்கு செய்தல்.

2. நூல் நிலையம் அமைத்தல்.

3. பெண்களுக்காக பள்ளியில் பிரத்தியேக இடம் ஒதுக்குதல்.

4. சமூகத்தில் உருவாகும் பிணக்குகளையும் சர்ச்சைகளையும் பள்ளியில் தீர்த்து வைக்க வழிசெய்தல்.

5. நிவாரண உதவிகள், சமூக சேவைகளுக்கான மையமாக இயங்குதல்.

6. வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்துதல்.

7. சமூக நலத் திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.

8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.

8. ஸகாத், ஸதகதுல் பித்ர் முதலானவற்றை கூட்டாக சேர்த்து விநியோகிக்க வழிசெய்தல்.

9. இமாம்கள், கதீப்மார்களைப் பயிற்றுவிக்க ஒழுங்கு செய்தல்.

10. குத்பாக்களை செயற்றிறன்மிக்கதாக அமைத்துக் கொள்ள ஆவன செய்தல்.

11. முஸ்லிமல்லாதோர் பள்ளிவாயலை வந்து பார்வையிடவும் தேவையான விளக்கங்களைப் பெறவும் உரிய ஏற்பாடுகளை செய்தல்.

12. ஊரில் வசிக்கும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக் கொள்ளல்.

13. ஊரில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். (சீதனம்,
வட்டி, மணமுறிவு, இளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயலவேண்டும்)

14. சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ மையங்களை உருவாக்க வேண்டும்.

15. மாணவ மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை ஒரு மஸ்ஜிதில் மேற்கொள்வதற்கு மஸ்ஜிதின் கட்டட அமைப்பிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இந்த வகையில் மஸ்ஜிதுகளில் பெண்களுக்கான தொழுகையறை,
நூலகம், மாநாட்டு மண்டபம்,
வகுப்பறைகள், வரவேற்பறை முதலான பகுதிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும். இன்று உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்ற மஸ்ஜிதுகளில் இப்பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பதை காண முடியும். சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு பள்ளிவாசலும் இஸ்லாமிய மத்திய நிலையமாக இயங்க வழிவகை செய்யப்படுவதன் மூலமே சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த வகிபங்கு புத்துயிர் பெற்று மீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.

எனவே இது குறித்து  நாங்கள் தெளிவு பெற வேண்டும் பின்னர் பள்ளிகளில் நிருவாகிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும்

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

No comments:

Post a Comment