Monday, June 5, 2017

இஸ்ரேலின் இரண்டாவது கணவும் நனவாகியது .

AM. ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

கத்தாருடன்  இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக  வழைகுடா முஸ்லிம் நாடுகளான, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து மற்றும் யெமன் போன்ற நாடுகள் இன்று ஊடகங்களில் பகிரங்கமாக செய்தி வெளியீட்டுள்ளது. அதேபோல் தரை வழிப்பாதை மற்றும் ஆகாய வழிப்பாதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சவூதியில் இருந்து கட்டாருடைய விமானம் திருப்பி அனுப்பட்டுள்ளது.

இன்னொருபுறம்  சந்தோஷம் தாங்க முடியாமல் இஸ்ரேலில் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இஸ்ரேலின் முதல் கணவு யூதர்களுக்கென்று தனியான கேந்திர முக்கியத்துவமான நிலையமாகவும்  ஆயுத உற்பத்தியை மேற் கொள்ளும் இடமாகவும்   இஸ்ரேலை  தயார் படுத்தல் அடுத்ததாக வழைகுடா முஸ்லிம் நாடுகளுக்கிடையில் பிண்க்குகளை ஏற்படுத்தி வழைகுடா நாடுகளில் தான் ஆயுத உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னணியில் திகழ்தல் என்ற நோக்கத்துடன் அமெரிக்காவுடன் சேர்ந்து பக்காவாக சூழ்சி செய்து வருகிறது .

இஸ்ரேன் கணவுக்கு  பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது இஃவானுல் முஸ்லிம்கள் . இவர்கள் எகிப்தை கைப்பற்றினால் எமது கனவு சுக்கு நூறாகி விடும் என்பதுவே  இஸ்ரேல் கவலை அதேபோல் மஸ்ஜிதுல் அக்ஸா முற்றாக ஹமாஸின் பட்டுப்பாட்டின் கீழ் போகிவிடும் என்பது இஸ்ரேலின் மற்றொரு கவலை எனவே  இஃவான்களை  எகிப்தின் ஆட்சியில் ஏறக் கூடாது என்பதற்காக அப்துல் பத்தாஹ் சீசியை ஒரு எச்சுக்கல் நாயாக வளர்த்து வருகின்றது. இதுவே இஸ்ரேலின்  நிலைப்பாடு

சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக  எகிப்தில் இஃவானியர்கள் ஆட்சியில் ஏறினானல் தனது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும் எகிப்தின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி  முஹம்மது முர்ஸி அறிமுகமாக்கிய சுயஸ் கால்வாய் திட்டம் நிறைவேறினால் தனது பொருளாதாரம் சீர் கெட்டுவிடும் என்பதில் சவூதி அரசு தனது சுய நலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை யூத நரிகளுக்கு காட்டிக் கொடுத்து வக்காளத்து வாங்குகின்றது . 

லபனான் ஒரு ஷீயா நாடு . இவர்களின் நிலைப்பாடாக எப்படியோ இஃவான்கள் அரபு வசந்தத்திற்கு வித்திட்டவர்கள் . அதேபோல் சிரியா மக்கள் எழுச்சியில் காரண கருத்தாவாக இருந்தவர்கள் எனவே எமது ஷீஆ அடக்குமுறை அரசை சிரியாவில்  அழிப்பதில் முக்கிய கருத்தாவாக இருக்கின்றார்கள் . எனவே இது ஒரு தருணம்.

அமெரிக்காவிற்கு இஃவான்கள் வந்தால் தமது செல்லப் பிள்ளை இஸ்ரேலின் இருப்பு போய்விடும் . என்ற பயத்தாலையே தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் இஃவான்களுக் அடைக்கலம் கொடுத்த கத்தார் மீது பொருளாதார தடை விதிக்க முஸ்லிம் நாடுகளை ஏவியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாடுகளும் தனது சுய நலத்திற்காக எமது முஸ்லிம் உம்மத்தை அழித்து வருகின்றது.

இதுவா இஸ்லாமிய நாடு ?????
சிந்திப்போம் செயற்படுவோம்

No comments:

Post a Comment