Tuesday, June 20, 2017

முஸ்லிம் பெண்களும் புத்தாடைகளும்

நரகத்தில் அதிகமான பெண்களை நான்  கண்டேன் ... என நபிஸல் அவர்கள் கூறினார்கள் .

உலகிற்கு  நாகரிகம் கற்றுக் கொடுத்த   முஸ்லிம்களிற்கு இன்று  வேற்று மதத்தவர்கள் நாகரிகம் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் மாறியுள்ளது.  மதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்த குறைஷிகளுக்கு வாழக் கற்றுக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள் . குளிப்பது பாவம் என்று கருதிய  ஐரோப்பியர்களுக்கு குளிக்கக் கற்றுக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள்  . அறை குறையாக ஆடை அணிவதுதான் நாகரிகம் என்று இருந்த சமூகங்களுக்கு இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள் .  ஜாதிப் பாகுபாட்டில் உச்சியில் இருந்த இந்துக்களுக்கு எப்படி மனிதனை நேசிக்க வேண்டும் என்ற சமத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் முஸ்லிம்கள் .

இப்படி ஒவ்வொன்றாகக் கற்றுக் கொடுத்த முஸ்லிம்களுக்கு மற்றொரு சமூகம் ஆடை அலங்காரத்தை கற்றுக் கொடுக்கும் அளவுக்கு எமது முஸ்லிம் சமூகத்தின்  நிலை மாறியுள்ளது. இஸ்லாத்தில்  பெண்கள்  தங்களது அலங்காரத்தை வெளிக்காட்டுவதை தடுத்துள்ளது.  காரணம் அதில் பல விபரீதங்கள் ஏற்படும் என்று ... ஆனால் இதை மறந்துவிட்டது எமது சமூகம் .

அண்மையில் ஒரு வீட்டில் இடம்பெற்ற ஒரு சம்பவம் . கணவர் ஒரு வர்த்தகர்  மனைவி இல்லத்தரசி . அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் . எதிர்வர இருக்கும் நோன்புப் பெருநாளைக்கு புத்தாடை வாங்குவதற்காக கணவன் தனது மனைவியை கடைக்கு அழைத்து சென்றபோது  ... இந்தா நீங்க எந்த ஆடையை எடுக்கப்போறீங்க ? என்று கேட்ட போது மனைவி கூறியுள்ளார் ... இஞ்சருங்கோ.. நம்மட பக்கத்து வீட்டு மர்யம் ராத்தா இந்த நோன்புப் பெருநாளைக்கு பாகுபலி கிட்டு எடுத்திருக்கா அதுபோல நாங்களும் எடுப்போமே   ...... என்று கூறியுள்ளார்.

இப்படி எமது முஸ்லிம் பெண்களை தென்னிந்தி திரைப்படங்கள் பலிகடா ஆக்கிவிட்டது. ஆடை அணிவது தனது உடல் அங்கங்கள் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் . ஆனால் இன்று தனது அங்கங்களைக்  காட்டி ஆடை அணிவது நாகரிகமாகிவிட்டது.  இதுதான் இப்போது பெஷன் ... ஸுப்ஹானல்லாஹ் ! குர்ஆன் பெண்கள் தங்களது அழககை  கணவன் அல்லாத ஆண்களுக்கு காட்டவேண்டாம் அது பாவம் என்கிறது .ஆனால் அதைக் காட்டுவதுதான் நாகரீகம் என்கிறது எமது சமுதாயம். 


இஸ்லாமிய பெயர்தாங்கிய இஸ்லாமியா ஆடைகளின் சமூக சீர்கேடு  இன்று அன்னிய கலாச்சிரத்தைவிடவும் படுமோசமாக உள்ளது. 

பெற்றோர்கள்  தனது பெண் பிள்ளையை அவளது அலங்காரத்தை  அன்னிய ஆண்களுக்கு காட்ட ஒரு  போதும் விரும்ப மாட்டார்கள். ஒரு கணவன் தனது மனைவியின் அலங்காரத்தை  அன்னிய ஆண்களுக்குக் காட்ட ஒரு போதும்  விரும்ப மாட்டான் . ஒரு சகோதரர் தனது சகோதரியின் அலங்காரத்தை அவளது கணவன் அல்லாத மற்றைய ஆண்களுக்கு காட்ட  ஒரு போதும் விரும்ப மாட்டான் . ஆனால்  இன்று இந்த நிலை விதிவிலக்காக உள்ளது . 

எனவே இவ்வாறான விழிப்புணர்வுகளை எமது பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு இஸ்லாம் காட்டும் ஆடை ஒழுங்கு பற்றி தெளிவு படுத்த வேண்டும். இல்லா விட்டால் அவர்கள் செய்யும் பாவத்திற்கு நாங்களும் துணையாக இருக்கின்றோம் என்றுதான் பொருள்படும். 

அல்லாஹ்வின் தண்டனை மிகவும் கொடூரமானது.பயர்ந்து கொள்வோம் . சுவர்க்கத்தில் முதல் கூட்டத்தில் நுழைவதற்கு முயற்சிப்போம். 


அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக்           ( பாதிஹி ) பணிப்பாளர் USA கல்லூரி வரிப்பத்தான்சேனை 

No comments:

Post a Comment