Tuesday, June 20, 2017

வெள்அனர்த்தத்தில் மீண்டும் துளிர்விடும்  இனவாத விதை


=================================
அஷ்ஷெக் ஹபீஸு ஹக் ( பாதிஹி )

எமது நாட்டில்  நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரைக்கும் 258 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 இலட்சம் பேர்க்கும் அதிகமானோர்  இடம்பேர்ந்துள்ளதாகவும் மேலும் 203 மேற்பட்ட  வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டோர்களை மீட்பதிலும் அவர்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதிலும் அரச படைகள்  பல்வேறுபட்ட சமூக அமைப்புகள் மற்றும் மதகுழுக்கள் ஈடுபாடு காட்டி வருகின்றது. இன்னொரு புறம் முஸ்லிம்களின் நோன்பு மாதம் என்ற படியினால் அவர்களுக்கான சகர் மற்றும் இப்தார் ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

நிலமை இவ்வாறு இருக்க  இந்த சூழலில் புதியதோர் பிரச்சினை வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட பெளத்த சமூகத்தில் உருவாகியுள்து.  சில பிரதேசங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவின சமூகங்கள் இருந்தும்  எமது முஸ்லிம்  சமூகம் தங்களது சமூகத்திற்குத்தான்
கூடிய நிவாரன உதவிகளை வழங்கிவருகின்றது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக பலரும் கூறுகின்றார்கள் இது போன்ற சில நிகழ்வுகள் வெள்ளத்தினான் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப் பட்டவர்களுக்கு மத்தியில்   இடம்பெற்றதாகவும் அதுதான் இப்படி குற்றச்சாட்டுக்கள் வருவதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர்  . அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில் எமது முஸ்லிம் தனவந்தர்களில்  ஒரு சிலர் எமது  முஸ்லிம் சகோதரர்களுக்கு மாத்திரம் உணவுப் பொதிகளை கொடுக்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கு சந்தோசமா இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு  மத்தியில் இது துவேசத்தைக் கிழறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள் .

எனவே இவை தவிர்த்து நடக்க வேண்டும் இலங்கை முஸ்லிம் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவு படுத்துவதற்கும்  அன்னியர்களில் உள்ளங்களில் குடியிருக்கும் இனவாத விதைகளை கழைந்து எறிவதற்கும் இது ஒர் சிறந்த சந்தர்ப்பம் .
இதைத் தவற விடாமல் பயன்படுத்துவோம். எமது உதவிகளை பிரிவினை பார்க்காமல் செய்திடுவோம் .

No comments:

Post a Comment