Tuesday, December 19, 2017

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அபகரிக்கப்பட்ட  முஸ்லிம்களின் காணியை மீட்டெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் மெளனம் காக்கின்றார்கள் ???

ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அபகரிக்கப்பட்ட  முஸ்லிம்களின் காணியை மீட்டெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் மெளனம் காக்கின்றார்கள் ???
=================================

இன்று இலங்கை ஒரு ஜனநாயக நாடு விரும்பியவர் விரும்பியவாறு வாழலாம் . தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான  சுதந்திரம்  , தான் விரும்பியவாறு இலங்கையில் பரந்து வாழ்வதற்கான சுதந்திரம் ,  எழுத்து சுதந்திரம் என்று அரசு ஏகப்பட்ட சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்படி இருந்தும் ஒரு சில மக்களுக்கு தங்களின் சொந்த நிலத்தைப்  பயன்படுத்துவதற்கான முழுச் சுதந்திரம்  இன்னும் கிடைக்கவில்லை .

அன்மையில் ஏறாவூர் கரடியனாறு விவசாயத் தினைக்களத்தில் அமைந்துள்ள ஒரு சில  விவசாய குழுக்களை சந்திக்க நேர்ந்தது.  அதில் அவர்கள் சொன்ன சில முறைப்பாடு பின்வருமாறு .... 

எங்களுடை விவசாயக் குழுவில் 250 உறுப்பினர்கள் உள்ளனர் . எங்களுடைய விவசாய காணிகள் ஏறாவூர் பற்று பிரதேச சையில் இருக்கும் தமிழ் கிராமத்தில் உள்ளது . யுத்தத்திற்கு முன்பு நாங்கள் அப்பிரதேசத்தில்தான் வாழ்ந்தோம் . எங்களுடைய மூதாதையர்களும் அங்குதான் வாழ்ந்து விவசயம் செய்தவர்கள் . 1984 இடம்பெற்ற இனக் கலவரத்தினாலும் 1990 இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினாலும் நாங்கள் எங்களது சொந்தக் காணிகளை, வீடுகளை, கால் நடைகளைத் தோட்டங்களை விட்டு வெளியேறினோம் இன்னும் பலர் பலவந்தமாகவும் வெளியேற்றப்பட்டார்கள். 

நாங்கள் கதுறுவெல , பொலநறுவ போன்ற பிரதேசங்களில் காணி வாங்கி அங்கு கொட்டிகளில் வாழ்ந்து வந்தோம் .  பின்னர்  யுத்தம் முடிந்து இலங்கை அரசு எங்களை எங்களின் சொந்தக் காணிக்கு குடியமரச் சொன்னது.  நாங்களும் எங்களது காணிக்குச் சென்று காணி எல்லைகளை இட்டு அங்கு விவசாயம் செய்வதற்கான முழு ஆயுத்தமும் செய்துவிட்டு நெல்லை வீசுவதற்காக சென்றபோது அங்கு இருக்கும் தமிழ் மக்கள்  உங்களுக்கு இங்கு காணி இல்லை இது எங்களின் கால்நடைக்கான மேய்ச்சல் நிலம் என்று எங்களை அடித்து விரட்டி விட்டார்கள் .

இவ்வளவு காலமாக எங்களுடை பரம்பரை பராமரித்துவந்த  காணியை  இன்று எங்களுக்குப் பராமரிக்க முடியாமல் உள்ளது . இதற்கான ஆதாரபூர்வமான உறுதிகளும்  எங்களிடம் உள்ளது . மாகாணக் கல்வி ஆணையாளரின் கடிதமும் எங்களிடம் உள்ளது .இப்படி இருந்தும் எங்களுடை காணிகளை அடைய முடியாதுள்ளது. 

இது சம்பந்தமாக எங்களுடைய முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் சென்றோம் ( ஏறாவூர் நகரசபை , கிழக்கு மாகாண சபை )  அவர்கள் எங்களிடம் போலி வேசம் போடுகின்றார்கள். அவர்கள் எதற்கும் பயனில்லை .  அதேபோல் பிரதேச செயலகம் , பிரதேசசபை என்று போகாத இடம் இல்லை , அவர்கள் தமிழர்கள் பக்கம் சார்பாக நடந்து கொள்கின்றார்கள்.

இதில் ஒருத்தர் கூறினார்
எங்களுக்கு 40 ஏக்கர் காணி உள்ளது . எனது தந்தைக்கு 5 பிள்ளைகள் அவர்களில் இரண்டு பேருக்கு மாத்திரம்தான் அந்தக் காணிக்குப்  போகலாம் என்றார் .   இப்படி இருக்கின்றது  ஏறாவூர் விவசாயிகளின் சோக நிலை .

ஏறாவூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு சில அரசியல் தலைவர் இருந்தும் இந்த மக்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் இவர்களை எப்படி மக்கள் நம்பிக்கை வைப்பது ????  முஸ்லிம்கள்  பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதியை அனுப்புவதன் நோக்கம் முஸ்லிம்களின் குறைகளை அனுப்பப்படும் பிரதிநி தீர்ப்பார் என்றுதான் 

இந்த 250 விவசாயிகளின் காணிகளுக்கு கிழக்கு மாகாணசபை,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் , ஏறாவூர் பற்று பிரதேசசபை , ஏறாவூர் பிரதேச செயலகம் என்பன  உடனே தீர்வு வழங்க வேண்டும் . 

கட்டுரை
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி)
வரிப்பத்தான் சேனை

Sunday, December 10, 2017

ஆய்வு 3

கண்ணன் கூடா  கிராம விவசாய கழு

நித்தியானந்தா : - கமநல அமைப்பு தலைவர்

முருகப்பிள்ளை :- கமநல அமைப்புக்குழு தலைவர்

எவ்வளவு காலமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ?
1957 இல்

யுத்த காலத்திலும் செய்தீர்களா ?
ஆம் செய்தோம்.

2007 காலப்பகுதியில் இராணுவம் மக்களை அறுவடை செய்ய இருக்கும் வேளாமைகளை விட்டு வெளியோறச் சொன்னார்கள் நாங்கள் சூடு மிதித்த குறையில் வெளியேறினார்கள்.
அதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தரவில்லை. 

உங்கட காணிகளை அவர்கள் கைப்பற்றினார்களா ? 
இல்லை

யுத்த காலத்தில் முஸ்லிம்கள்  காணிகளை குறைந்த விலைக்கு  வித்துவிட்டு சென்றார்கள் என்றார்கள் அப்படி ஏதும் இந்தப்பிரதேசத்தில் இருக்கா?
 
ஆம் , ஒரு சிலர் வித்துவிட்டு சென்றார்கள் .சின்னக் காடு பிரதேசத்தில் 100 ஏக்கர் உள்ளது , இலுப்படிச் சேனை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகள் உள்ளது .

இங்கு கமநல அமைப்புகள் 26 உள்ளது .
பாவக்கொடி சேனையில் பிரச்சினை போகுது. முஸ்லிம் ஒருத்தர் குறைந்த விலைக்கு 50 ரூபாய்க்கு  காணியை  வித்துவிட்டு  இப்போது காணியை தரும்படி பிரச்சினைப்படுத்துவதாகச் சொன்னார்கள் .

இங்கு முஸ்லிம் தமிழ் விவசாயிகள் என்று பிரச்சினை வருகுதா ?
அப்படி ஒன்றும் இல்லை .

முஸ்லிம் தமிழ் உறவு எப்படி உள்ளது ?
இங்கு முஸ்லிம்கள் இல்லை . தமிழ் ஆக்கள் முஸ்லிம்களுக்கு குத்தவைக்கு காணி கொடுத்துள்ளார்கள் . எங்கடையில்  40 ஏக்கர் மட்டு முஸ்லிம்கள் விவசாயம் செய்கிறார்கள் . 

இங்கு முஸ்லிம்கள்  தமிழர்களை  கல்யாணம் செய்துள்ளார்களா ?

ஒருத்தர் இருந்தார் இப்போது இல்லை .  விட்டுட்டு   சென்றார்.

நீங்கள் பள்ளிவாசலுக்கு போய்யுள்ளீர்களா ? இல்லை .

முஸ்லிம் உங்களின் கோயிலுக்கு வந்துள்ளார்களா ?
ஆம் . ஒரு முஸ்லிம் குடும்பம் தமிழர் ஒருவரின் திருமணத்திற்கு வந்த போது கோவிலுக்கு வந்துள்ளார்.

பெளத்த மக்களின் தொடர்பு உள்ளதா ?
இல்லை .

சிங்களம் உங்களுக்கு முடியுமா ?
இல்லை .

நீங்கள் பெளத்தர்களின் விகாரைக்கு போய்யுள்ளீர்களா ?
ஆம் போய்யுள்ளோம்.

கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா? இல்லை . 99% இங்கு இருப்பவர்கள் தமிழர்கள் .
 
இங்கு மதம்மாறிப் போகின்றார்களா ?
ஒரு சில உள்ளது .

விடுதலைப் புலிகளின் இருந்தபோ எப்படி மக்கள் உணர்கின்றார்கள்?

புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் கூட்டிக் கொண்டு செல்ற பிரச்சினை , பாலியல் துஷ்பிரையோகங்கள் குறைவு . ஆனால் இப்போது அதிகமாக உள்ளது .

கிரான் பிரச்சினை வந்த போது மக்கள் அதை எப்படி பார்க்கின்றார்கள் ?
கிரான் பிரச்சினை வந்த போது வவ்னதீவு பிரதேசத்தில் police பாதுகாப்புடன் வியாபாரம் செய்தார்கள் .

சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் போது என்ன நினைக்கீர்கள இங்கும் பிரச்சினை வரும் என்று நினைக்கின்றீர்களா  ?

என்ட கருத்து பிரச்சினை வரக்கூடாது .
அப்படி நடக்கக் கூடிய சாத்தியக் கூறு இல்லை . சில சமையம் வரலாம் .

முஸ்லிம்கள் சம்பந்தமான கதைகள் ஏதும் உள்ளதா ?
ஒரு ஹோட்டலில் ஒரு தமிழர் கோழி கொத்து கேட்டுள்ளார் அவர்கள் மாட்டு  இறைச்சி கொத்து கொடுத்துள்ளார். அப்போது அவர் கொத்து வேனாது என்று சொல்லி பெய்துவிட்டார்கள் . இந்த மாட்டு இறைச்சி கொத்தை முஸ்லிம் ஒருவர் கோட்ப போது . அவருக்கு அந்த கொத்தை கொடுக்க வில்லை . காரணத்தை விசாரணை செய்த போது மருந்துக்கள் கலந்துள்ளதாக சில கதைகள் வந்தது.

இப்படியான கதைகளை மக்கள் நம்புகின்றார்களா ? 
அப்படி நினைப்பதற்கு அவ்வளவு இல்லை .

என்னுடைய மகன் காத்தான்குடியில் Ao ஆக வேலை செய்கின்றார். அவர் சொன்னார் பெரிய குளம் பகுதியில்  முஸ்லிம் ஒருத்தர் தமிழ் ஒருவரின் காணியை வாங்கியுள்தாகச் சொன்னார் .

அது நல்லமா அல்லது பிரச்சினைக்குரியதா ?
காணி வாங்குறவர்கள் தமிழர்களைத் தவிர முஸ்லிம்கள் தான்கூட .

மட்டக்களப்பு மாவட்டத்தில் 25% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அவர்கள் 2% மாணவர்கள்தான் நிலத்தை பயன்படுத்துகின்றார்கள் . இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? 

வயல் காணி பிரச்சினை இல்லை வீடு கட்டுவதுதான் பிரச்சினை .
பலமுனை பகுதியில் அவர்கள்தான் கூடுதலாக இருக்கின்றார்கள் .

முஸ்லிம்களுடன் வாழ்வதற்கு பயம் தமிழர்கள் மாதிரி இல்லை ஒரு பிரச்சினை வந்தால் எல்லோரும் சேர்ந்து அடிக்க வருவார்கள் . காத்தாங்குடி மக்கள் அப்படி இருக்கார்கள் .

அப்படி நடந்துள்ளதா ?
ஆம் .

முஸ்லிம்கள் தொடர்பு எப்படி ?
அவர்கள் மீன வியாபாரம் பொடவை  வியாபாரம் செய்வதற்காக எங்களது கிராம ங்களுக்கு வருவார்கள் . அவர்கள் அதிகாலை 3.30 Am அளவில் வருவார்கள் .

அரசியல் யாப்பு சம்பந்தமாக என்ன நினைக்கீர்கள் ?
===========

தெரியாது .
வடக்கு கிழக்கு சேர்வது சம்பந்தமாக பிரச்சினை போகுது .

வடக்கு கிழக்கு சேர்வது நல்லமா கூடாதா ? நல்லம்தானே .

நிலை மாறும் கால நீதி Tj
=====
நீதி முறை தேவை .

காணாமல் போனோர் இங்கு இருக்கார்களா ?
ஆம் உள்ளார்கள்

யத்தம் முடிந்து மக்களுக்கு நீதியை எதிர்பார்கோம் . புலிகள் இருந்த காலம் மக்கள் பயந்து வாழ்ந்தார்கள் . ஆனால் சீர் கேடுக்க நடக்க வில்லை . இப்போது களவு பெண்கள் சீர் கேட்டில் போகின்றார்கள் .

=========================
எங்கட பிரச்சினை என்ன என்ற கேட்கலை நீங்க ? 

குறிஞ்சா கணி என்ற குழம் ஒன்று உள்ளது அது சுமாராக 7/8 Km இருக்கும் அதில் இருந்து எங்களுக்கு பய்ச்சல் வாய்கால் ஒன்று தோண்டி தாங்க என்று போகாத அரசியல் வாதிகளே இல்லை .

அதை அரசாங்கம் செய்து தந்தால் நாங்கள் இரண்டு போகமும் விவசாயம் செய்யலாம் .

Saturday, December 9, 2017

ஆய்வு 2

நேர்காணல் 2

வளர்மதி மீனவர் சங்கம்
=================================

நீங்கள் எதிர் நோக்கம் பிரச்சினை ?

தொழில் சம்பந்தமான பிரச்சினை
வீடு சம்பந்தமான பிரச்சினை . எங்கட தோனி வருவதற்கு ஆறு தடங்கலாக உள்ளது . நாங்கள் எங்களது தோனிகளை ஏறாவூர் துறைமுகத்தில்தான் எங்களது தோனிகளை வைத்திட்டு வருகின்றோம் . நாங்கள் பிடிக்குற மீன ஏறாவூரில் தான் விற்பனை செய்றோம்.  மீன் பிடித்து எங்கட கிராமத்திற்கு வருவதற்கான சாரியன பாதை இல்லை .

மீன் பிடிக்கும் போது அதிகம் மீன் படுதா ?
இல்லை . இப்போது குறையந்த மீன்தான் படுகிறது. சொறி முட்டை படுவதால் மீன் படுகின்ற வீதம் குறைவு .

மாசடைகிறமாறி குளம் இருக்கிறதா ?
சில இடங்களில் குப்பைகள் கொட்டுவதால் சற்று சொறி முட்டைகள் தோன்றுகிறது .

முஸ்லிம் தமிழ் உறவு எப்படி இருக்கின்றது?

உறவு நல்லாதான் இருக்குது. நாங்கள் பாகுபாடு இல்லாமல்தான் தொழில் செய்கிறோம்.

எங்கட A/L  படித்த பிள்ளைகள் தொழில் இல்லாமல் இருக்காரர்கள்.

உங்களுக்கு கடன் உதவிகள் இருக்கிறதா ? எங்களுக்கு என்ஞியோ  நிறுவனம் தருகிறுது .

உங்கள் இளைஞர்கள் எப்படியான வேலைகளைச் செல்கிறார்கள் ?
எங்களுடை இளைஞர்கள் ஏறாவூர் , பொலநறுவ போன்ற பிரதேசங்களுக்கு மேசன் காப்பெண்கட வேறு சில வேலைகளுக்குச் செல்வார்கள் .

எங்கட வீடுகள் அறை குறையாக இருக்கு யாரும் உதவுவதாக இல்லை .

உங்களுக்கு காணி இருக்கா ?
ஆம் இருக்கு . வீடு கட்டத்தான் வசதிகள் இல்லை .

உங்களிடம் சிங்கள மக்களின் தொடர்பு எப்படி உள்ளது ?
எங்கட பிரதேசத்தில் சிங்களவர்கள் இல்லை .

உங்களுக்கு சிங்களம் பேசத் தெரியுமா ?
இல்லை .

உங்களுடைய பாடசாலையில் சிங்களம் படித்து கொடுக்கார்கா ?
இல்லை , ஆசிரியர்கள் இல்லை .

பெளத்த விகாரைக்கு போய்யுள்ளீர்களா ?
இல்லை .

முஸ்லிம் பள்ளிக்கு போய்யுள்ளீர்களா ? இல்லை . நாங்கள் ஒரு சிலர் போய்யுள்ளோம் என்றார்கள்.

கிறிஸ்தவ ஆலையத்துக்கு போய் இருக்கீங்களா ?
இல்லை .

பெளத்த சமூகத்தைப் பற்றி என்ன நினைக்கீர்கள் ?
அவர்களின் சமைய வழிபாடு வித்தியாசம்

முஸ்லிம்களை எப்படி பார்க்குறீர்கள் ?
அவர்கள் பழகுவதற்கு பிரச்சினை இல்லை .

உங்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கார்களா ?
இருக்கார்கள்.

முஸ்லிம்கள் பெளத்தர்கள்  உங்களுடைய கோயிலுக்கு வந்திருக்கார்களா ?
பெளத்தர்கள் வருவார்கள் . முஸ்லிம்களில் ஒரு சிலர் வியாபாரத்திற்காக வருவார்கள் .

இந்தியா இருந்து வருவார்களா ? 
இந்தியா இருந்தும் தமிழ் மக்கள் சிலர் வியாபாரத்திற்கு வருவார்கள் .

கிரான் பிரச்சினை சம்பந்தமா என்ன நினைக்குறீர்கள் ?

இது ஒரு சிலர் செய்கின்ற வேலை எல்லோரும் இல்லை . இப்படி தமிழர்களும் இருக்கின்றார்கள முஸ்லிம்களிலும் இருக்கின்றார்கள்.

பிரச்சினையை எப்படி பார்க்குறீர்கள் ?  அப்படி பிரச்சினை  வரக்க கூடாது . முஸ்லிம்கள் தமிழர்களின் பிரதேசத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் தமிழர்கள் முஸ்லிம்களின் பகுதியில் வியாபாரம் செய்ய வேண்டும் .

விடுதலைப் புலியில் இருந்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா ?
இருந்தவர்கள் எல்லோரும் இறந்தது விட்டார்கள் . இப்போது ஒருத்தர் இருக்கின்றார் .

அவரை எப்படி பார்குறீர்கள் ? எங்களைப்ப போன்றுதான் அவர்களை நாங்கள் பார்க்கிறோம்.

முஸ்லிம் சம்பந்மான வதந்திகள் ஏதும் கேள்விப் பட்டீர்களா ?
ஒரு சிலர் சொன்னார் முஸ்லிம் ஹோட்டலில் கருத் தடை மாத்திரைகள தமிழர்களுக்கு கொடுப்பதாகச் சொன்னார் .
எத்தனை பேருக்கு Face book இருக்கு ?
எல்லோருக்கும் . ஒரு சிலரைத் தவிர.

குடும்பக் கட்டுப்பாடு செய்யும் முறை சொல்லித்தாறார்களா ?
இது சம்பந்தமாக ..கிளினிக்ல சொல்லி தாரார்கள்.

இது சம்பந்தமாக ஆண்களுக்குத்
தெரியுமா ?
தெரியாது

யுத்தம் முடிந்து மக்களின்  சிந்தனை மாறியுள்ளதா ?
50 % மாணவர்கள் மாறியுள்ளது.

உங்களின் பிள்ளைகள் சிங்களம் படிக்கின்றார்களா ?
படிப்பதற்கு சிங்களப்பாட ஆசிரியர் இல்லை .

அரசாங்க காரியலையங்களில்  muslim சிங்களவர்கள் இருப்பது எப்படி பார்க்குறீர்கள் ?
இப்படி இருப்பது நல்லது

Plicela தமிழ் மக்களா அதிகம் இருக்கின்றார்கள் அல்லது சிங்களவர்களா ?
இரண்டு பேரும் சமனாக உள்ளார்கள்.

உங்கள் காணி தமிழர்கள் முஸ்லிம்கள் பெளத்தர்கள் என்று பிரிக்க வேணுமா அல்லது ?
தமிழர் என்று பிரிவு இல்லாமல் ஒன்றாக இருந்தால் நல்லது . நாள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம்

sir என்னுடைய காணி ஏறாவூரில் உள்ளது 1990 ஆண்டு குழப்பத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டோம் .

மீண்டும் குடியேறவில்லையா  ?
இல்லை
குடியேறுவதற்குப் பயமாக உள்ளது .
அந்த காணியில் ஒரு பகுதியை பாடசாலைக்கு எடுத்துள்ளார்கள் .

வருகின்ற உள்ளூர் ஆட்சி தேர்தலில் Tamil or Muslim வந்தால் வாக்களிப்பீர்களா ?

யார் வந்தாலும் வாக்கு சிடையாது . ( Muslim thamil அரசியல் வாதிகள் எல்லோரும் ஒன்றுதான் ) 
ஆனால் நாங்கள் வாக்கு போடுவோம் அது எங்கட உரிமை .

Sir 1990 புலம்பேர்ந்து வந்த எங்களுக்கு எந்த வீட்டுத்திட்டமும் இல்லை . ஏறாவூரில் வந்தவர்கள் நாங்கள் 5 பேர் இருக்கின்றோம்.

Schoo எடுத்த காணியை மீட்டு எடுக்க கோட்டுக்கு போகவில்லையா ?
காசி இல்லை

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒன்று இருக்கு ? தெரியுமா ?
கொஞ்சம் தெரியும் . 

எங்கட மீனவர் சங்கத்திற்கு ஒரு தோனிதான் தந்துள்ளார்கள் . ஏறாவுர் பகுதியில்  மீனவர்களுக்கென்று அதிகாம நிதியுதவிகளைக் கொடுக்கிறார்கள் Sir 

அரசியல் யாபாரு சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்குறீர்கள் ?
======
கேள்விப் பட்டிருக்குோம் ஆனால் விளக்கம் தெரியாது .

என்ன TV பார்கீங்க ?
சக்தி TV
என்ன paper பார்கீங்க ?
நாங்க காலையில் paper செய்தி பாக்குற .

Tj நிலை மாறும் கால நீதி
===

என்ட தம்பி 2009 இல் போனவன் இதுவரைக்கும் அவன் எங்க என்று தெரியாது .

என்ட கணவரின் பெயர் கனேசன் .
1990 இல் காணாமல் போனாரு

உண்மையைக் கண்டறியும் ஆணைக்கு என்று கேள்விப்பட்டுள்ளீர்களா ?
இல்லை .
முன்னரும் காணாமல் போனோர்களை பதிய சொன்னார்கள் அதற்கு இப்போதும் முடிவு இல்லை .

இதனால் நீதி கிடைக்கும் என்று நம்புறீர்களா ?
காலம் பெய்த்து பழையதைச் சொல்லி வேலை இல்லை . அரசாங்கம் இதற்கு நல்ல முடிவு தரவேண்டும் .

Friday, December 8, 2017

ஆய்வு

2017/12/07.
Time :- 9.27.

கரடியனாறு விவசாய திணைக்களம்.
இது 1974 உருவாக்கப்பட்டது . இதில் 250 members உள்ளார்கள்.

பிரச்சினை
------------------------------------------------------------------

எங்களின் விவசாய நிலங்கள் தமிழ் பிரதேசத்தில் உள்ளது .  1984 ஏற்பட்ட இனக் கலவரத்தால் அதை விட்டுவிட்டு வந்துவிட்டோம் . 1990 ஆண்டும் போக ஏலாது காரணம் குழப்பம் அதனால் நாங்கள் பொலநறுவை ,  கதுறுவெல ஏறாவூர் என்று கொட்டில இருந்தோம் . நாங்கள் செய்த தோட்டம் , கால்நடைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டோம்.
பின்னர் 2008  சமாதான சூழல் வந்தது அரசு போகச் சொன்னது நாங்கள் போனோம் . இப்போது இருக்கும் அரசாங்கமும்  போகச் கொன்றார்கள் நாங்க போன போது அங்கு வாழும் தமிழ் மக்கள் எங்களுடை இந்த நிலம் மேச்சல் தரைக்குரியது என்று சொல்லி எங்களை விரட்டி விட்டார்கள் . நாங்கள் விவாயம் செய்வதற்கு உளவி வரம்பு கட்டி எல்லாம் முடிந்த போது எங்களை தமிழ் மக்கள் பலவந்தமாக விரட்டி விட்டார்கள் .

அதில் ஒருவர் எனது வாப்பாவுக்கு 5  பிள்ளைகள் . அந்தப்ப பகுதியில் எனது வாப்பாவுக்கு 40 ஏக்கர் காணி இதில் இரண்டு பேர் மாத்திரம்தான் அந்தக்காணிய பார்க்க போகலாம்.

உங்களின் காணி எந்தப் பிரதேச சபையில்  உள்ளது?
* ஏறாவூர்பற்று பிரதேசத்தில் உள்ளது 

Ds office க்கு போனீங்களா ?

ஆம் sir நாங்க போனோம் . Ds ஒரு தமிழர் .அவர்கள் எங்கட காணிய பார்க்க வந்தார்கள்.  அவருக்கு முன்னால் கொஞ்சம் தமிழர்கள் வந்தார்கள் அவர்கள் ... இந்த காக்கா மாருக்கு இங்க காணி இல்லை என்று சொன்னார்கள் .. பின்னர் 250 பேர்ட இருப்பாங்க இடுப்புகளில் ஆயுதங்களும் சொறுகி வைத்திருந்தார்கள் .

மாகாண காணி ஆணையாளரிடம் இது பற்றி முறைப்பாடு செய்தீங்களா ?

ஆம் sir அவரும் கதைத்தாரு வந்தாரு .
நாங்க வேற இனம் என்றதால இப்படி செய்றாங்க sir .
மாகாணக் கல்வி ஆணையாளரின் கடிதம் இருக்கு sir ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காங்கல்ல . இவர்கள் காசி கொடுத்து ஆக்கள மாத்துறாங்க sir

நீங்க மனித உரிமை மீறலுக்குப் போனீங்களா ?
இல்லை . இப்பதான் போக முடிவு எடுத்துள்ளோம் .

இது சம்பந்தமாக தமிழ் அரசியல் வாதிகளிடம் பேசினீர்களா ?
இது சம்பந்தமாக  மாகாண காணி ஆணையர் கூட்டம் வைத்த போது ..  ஒரு tamil அமைச்சர் எங்களைப் பார்த்து நையாண்டியாக  ஒரு பாட்டு படித்துக் காட்டினார் . அத்தோட நாங்க விட்டுட்டோம் .

தொல் பொருள் சம்பந்தமாக என்ன நினைக்கீங்க ? பிரச்சினை இருக்கா?

ஒம் sir ஏறாவூர் பற்று பிரதேசத்தில் ஒரு பள்ளிவாசல் காணியைபிடித்துவிட்டு இப்ப சொல்றாங்க அது முஸ்லிம்களின் காணி இல்லன்டு சொல்றாங்க .

முஸ்லிம்களின் அடையாளங்களை டோஸர் போட்டு கெண்டுறாங்க . கோட்டிலையும் முடிவு கொடுத்தாங்க அது தமிழ் ஆக்கள காணி என்று ...

நீதிமன்றம் பக்க சார்பாக முடிவு கொடுக்காங்க என்று நம்புறீங்களா ?

தெரியாது.  ஆனால் இது ஒரு இனம் ,

இலங்கையில் இன்னும் ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லை . நாங்கள் முஸ்லிம் எங்களுக்கு சார்பானவர் வேண்டும் .

உங்களுடைய இந்தப் பேமிட் எப்போது தரப்பட்டத ?

1999 தரப்பட்டது. நாங்க வயல உளவி வரம்பு கட்டி நெல் வீசகிட்டவா  அவர்கள் எங்களை விரட்டி விட்டார்கள் . இரண்டு போகம் செயகின்ற காணி .

முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் பேசுனீர்களா ?
அவர்கள் வேலை இல்ல

யுத்தத்தின் பின் தமிழ் முஸ்லிம் உறவு எப்படி உள்ளது ?
Sir யுத்தத்திற்கு முன் நாங்கள் ஒன்றாகத்தான் இருந்த . அந்த நேரம் தமிழரிடம் கறி இருக்கும் எங்களிடம் சோறு இருக்கும் இப்படித்தான் நாங்க வாழ்ந்த ஆனால் நிலமை கொஞ்சம் மாறியுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள சில அரச காரியாலையங்களில் முஸ்லிம்கள் ( லேபராக ) போனால் அங்கு அவர்கள் இனரீதியாக நசுக்கப்ப படுகிறார்கள்.

ஏறாவுரில் உள்ளத சிங்கள கோயியிலுக்கு போய் உள்ளீர்களா ?
ஆம் நான் போய் உள்ளேன் .

வேறு பெளத்த கோயிலுக்கு போய்வுள்ளீர்களா ?
ஆம் போய் உள்ளேன் .

சிங்கள மக்களின் பற்றி என்ன தெரியும் ? எப்படியான தொடர்பு உள்ளது ?
நல்லா போசுவார்கள் . நாங்கள் எங்களது சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்ட போது நாங்கள் கதுறுவெல , பன்னகல என்ற சிங்கள மக்களிடம் தொண் வேலை செய்வதற்குச் செல்வோம்.

சிங்களம் உங்களுக்கு தெரியுமா ?
எனக்கு தெரியும் . எனக்குத்தெரியாது நான் சிங்களம் தெரிந்த ஒருத்தரை கூட்டிச் செய்னுதான் வேலை செய்தேன்.

உங்கட பள்ளிவாசலுக்கு அவர்கள் வாறார்களா ?
ஆம் அதிகமானவர்கள் வாறார்கள்.

பொது பலசேனா பற்றி உங்களுடை கருத்து என்ன ?

ஒரு பெளத்த மதகுரு தம்புளை பள்ளிவாசல் நாசமாக்கிய காட்சி . இது எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக உள்ளது .

பெளத்த இனவாதிகளைப்போன்று இந்தப் பிரதேசத்திலும் Isis அமைப்புகள் உள்ளதா ?
அப்படி ஒன்றும் இல்லை .

ஜின்தோட்ட கலவரத்தை எப்படி பார்க்குறார்கள் முஸ்லிம்கள் ?
பார்துட்டு மக்கள் கவலைப் படுகின்றார்கள்.

சின்ன சம்பவங்கள் திரும்பியும் பெரிய பிரச்சினைகள் உருவாக்கும் என்று நினைக்குறீர்களா ?

1990 க்கு முன்பு இருந்தவர்கள் பிரச்சினை இல்லை இப்போது வருகின்ற இளைஞர்கள்தான் இனவாத சிந்தனையில் மூழ்கியுள்ளார்கள் .

இப்படி இந்த சமூகம் போகின்ற போது மீண்டும் ஒரு ஒரு இனக்கலவரம் வரும்
என்று எதிர்பார்கிறீர்களா ?

இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாங்கள் 100 வீதம். ஆதரவு வளங்குவோம். நாங்க அவர்களின் பிரதேசத்தில் போய் வியாபாரம் செய்யனும் அவர்கள் எங்கட பிரதேசத்திற்கு வந்து வியாபாரம் செய்யனும்.

யுத்தத்திற்கு முன் 550 சிங்களவர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் இது சம்பந்தமாக உங்கள் கருத்து ?

இதுல 10 சிங்கள மக்களின் காணி உள்ளது . ( அணுர குமார,  சிறி சேன , சுது பண்டார )

அரசியல் யாப்பு  தெரியுமா ?
==========================

தெரியும் .  எங்களுக்கு வடக்கு பிரியிறது பிரச்சினை இல்லைச.  நாங்கள் சுதந்திரமாக வாழனும் .

வடக்கு கிழக்கு பிரிவது நல்லமா ?
வடக்கு கிழக்கு பிரியாமலே இப்படி இனவாதம் என்றால் வடக்கு கிழக்கு சேர்ந்தால்  எப்படி இருக்கும் ?

நிலைமாறு கால நீதி
=========================
காணாமல் போனோர் எமது முஸ்லிம்களிலும் இருக்கின்றார்கள் .
என்னுடைய  தாவுத் ஆசிரியர்ர  கழுத்தறுத்து போட்டிருந்தார்கள். அவருடைய மனைவி கணவர் வருவாரு என்டு கணவு கண்டு வாறார் ...

இப்போது எனக்கு 58 வயது அப்போது எனக்கு 25 வயது இருக்கும் . LTT எனது கண்ணுக்கு முன்னால் ஒரு முஸ்லிம் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை எரித்தார்கள் இதற்கு எல்லாம் நஷ்டஈடு இருந்தால் நன்றாக இருக்கும் .

Saturday, December 2, 2017

எமது முஸ்லிம் கடைகள் செய்யும்  கொள்ளையின் வடிவம்

ஒரு முறை காலை  உணவு சாப்பிடுவதற்காக நாங்கள் ஒரு  முஸ்லிம் ஹோட்டல்  ஒன்றினுல்  நுழைந்தோம் . அங்கு சாப்பிடுவிட்டு கடைசியில் பணம் செலுத்திய  போது மிகுதி பத்து ரூபாய் பணத்திற்கு இரண்டு டொபி மீகுதியாக எங்களுக்கு அந்தக் கடையின் உரிமையாளர் தந்தார் .

பின்னர் எங்களின் தேவைகளை முடித்து விட்டு மீண்டும் அதே ஹோட்டலில்  பகல் உணவு சாப்பிட நுழைந்து சாப்பிடபின். பணத்தைக் கொடுத்த போது மீண்டும் அதே போன்று பத்துரூபா மிகுதிக்கு இரண்டு ரூபா பெறுமானமுடை ஐந்து  டொபிகள்  மிகுதியாக தந்தார் . இப்படியான செயல்களை எனது கண்ணூடாகவும் பலர் சொல்லியும் கேட்டுள்ளேன்.  இப்படியான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டிய விடையம். அதேபோல் இது  மற்றவர்களிடம் பணம் கொளையிடுகின்ற வழிமுறைகளில் ஒன்று .

மீதிப் பணம் இல்லை என்றால் அவர்களிடம்  மீதப் பணம் இல்லை என்று சொல்லுங்கள் . இதை விட்டுவிட்டு வருகின்ற மீதப் பணத்திற்கு வேறு வேறு பொருட்களை கொடுக்க வேண்டாம் . இது பதுக்கலுக்குச் சமனாகும் .

கொள்வனவாளர்களுக்கான வேண்டுகோள் இப்படியான மோசடிகள் எமது  முஸ்லிம் கடைகளில்சதான் அதிகம் நடை பெறுகின்றது. அவ்வாறு உங்களுக்கும் நடந்தால் இது சிறியதோர் விடையம் என்று பாராமல் கண்டியுங்கள். அவர்கள் இப்படி ஏமாற்றுவதைக் குறைப்பார்கள் .

கட்டுரை
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை