Saturday, December 2, 2017

எமது முஸ்லிம் கடைகள் செய்யும்  கொள்ளையின் வடிவம்

ஒரு முறை காலை  உணவு சாப்பிடுவதற்காக நாங்கள் ஒரு  முஸ்லிம் ஹோட்டல்  ஒன்றினுல்  நுழைந்தோம் . அங்கு சாப்பிடுவிட்டு கடைசியில் பணம் செலுத்திய  போது மிகுதி பத்து ரூபாய் பணத்திற்கு இரண்டு டொபி மீகுதியாக எங்களுக்கு அந்தக் கடையின் உரிமையாளர் தந்தார் .

பின்னர் எங்களின் தேவைகளை முடித்து விட்டு மீண்டும் அதே ஹோட்டலில்  பகல் உணவு சாப்பிட நுழைந்து சாப்பிடபின். பணத்தைக் கொடுத்த போது மீண்டும் அதே போன்று பத்துரூபா மிகுதிக்கு இரண்டு ரூபா பெறுமானமுடை ஐந்து  டொபிகள்  மிகுதியாக தந்தார் . இப்படியான செயல்களை எனது கண்ணூடாகவும் பலர் சொல்லியும் கேட்டுள்ளேன்.  இப்படியான செயல்கள் கண்டிக்கப்பட வேண்டிய விடையம். அதேபோல் இது  மற்றவர்களிடம் பணம் கொளையிடுகின்ற வழிமுறைகளில் ஒன்று .

மீதிப் பணம் இல்லை என்றால் அவர்களிடம்  மீதப் பணம் இல்லை என்று சொல்லுங்கள் . இதை விட்டுவிட்டு வருகின்ற மீதப் பணத்திற்கு வேறு வேறு பொருட்களை கொடுக்க வேண்டாம் . இது பதுக்கலுக்குச் சமனாகும் .

கொள்வனவாளர்களுக்கான வேண்டுகோள் இப்படியான மோசடிகள் எமது  முஸ்லிம் கடைகளில்சதான் அதிகம் நடை பெறுகின்றது. அவ்வாறு உங்களுக்கும் நடந்தால் இது சிறியதோர் விடையம் என்று பாராமல் கண்டியுங்கள். அவர்கள் இப்படி ஏமாற்றுவதைக் குறைப்பார்கள் .

கட்டுரை
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment