கண்ணன் கூடா கிராம விவசாய கழு
நித்தியானந்தா : - கமநல அமைப்பு தலைவர்
முருகப்பிள்ளை :- கமநல அமைப்புக்குழு தலைவர்
எவ்வளவு காலமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ?
1957 இல்
யுத்த காலத்திலும் செய்தீர்களா ?
ஆம் செய்தோம்.
2007 காலப்பகுதியில் இராணுவம் மக்களை அறுவடை செய்ய இருக்கும் வேளாமைகளை விட்டு வெளியோறச் சொன்னார்கள் நாங்கள் சூடு மிதித்த குறையில் வெளியேறினார்கள்.
அதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தரவில்லை.
உங்கட காணிகளை அவர்கள் கைப்பற்றினார்களா ?
இல்லை
யுத்த காலத்தில் முஸ்லிம்கள் காணிகளை குறைந்த விலைக்கு வித்துவிட்டு சென்றார்கள் என்றார்கள் அப்படி ஏதும் இந்தப்பிரதேசத்தில் இருக்கா?
ஆம் , ஒரு சிலர் வித்துவிட்டு சென்றார்கள் .சின்னக் காடு பிரதேசத்தில் 100 ஏக்கர் உள்ளது , இலுப்படிச் சேனை என்ற பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகள் உள்ளது .
இங்கு கமநல அமைப்புகள் 26 உள்ளது .
பாவக்கொடி சேனையில் பிரச்சினை போகுது. முஸ்லிம் ஒருத்தர் குறைந்த விலைக்கு 50 ரூபாய்க்கு காணியை வித்துவிட்டு இப்போது காணியை தரும்படி பிரச்சினைப்படுத்துவதாகச் சொன்னார்கள் .
இங்கு முஸ்லிம் தமிழ் விவசாயிகள் என்று பிரச்சினை வருகுதா ?
அப்படி ஒன்றும் இல்லை .
முஸ்லிம் தமிழ் உறவு எப்படி உள்ளது ?
இங்கு முஸ்லிம்கள் இல்லை . தமிழ் ஆக்கள் முஸ்லிம்களுக்கு குத்தவைக்கு காணி கொடுத்துள்ளார்கள் . எங்கடையில் 40 ஏக்கர் மட்டு முஸ்லிம்கள் விவசாயம் செய்கிறார்கள் .
இங்கு முஸ்லிம்கள் தமிழர்களை கல்யாணம் செய்துள்ளார்களா ?
ஒருத்தர் இருந்தார் இப்போது இல்லை . விட்டுட்டு சென்றார்.
நீங்கள் பள்ளிவாசலுக்கு போய்யுள்ளீர்களா ? இல்லை .
முஸ்லிம் உங்களின் கோயிலுக்கு வந்துள்ளார்களா ?
ஆம் . ஒரு முஸ்லிம் குடும்பம் தமிழர் ஒருவரின் திருமணத்திற்கு வந்த போது கோவிலுக்கு வந்துள்ளார்.
பெளத்த மக்களின் தொடர்பு உள்ளதா ?
இல்லை .
சிங்களம் உங்களுக்கு முடியுமா ?
இல்லை .
நீங்கள் பெளத்தர்களின் விகாரைக்கு போய்யுள்ளீர்களா ?
ஆம் போய்யுள்ளோம்.
கிறிஸ்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா? இல்லை . 99% இங்கு இருப்பவர்கள் தமிழர்கள் .
இங்கு மதம்மாறிப் போகின்றார்களா ?
ஒரு சில உள்ளது .
விடுதலைப் புலிகளின் இருந்தபோ எப்படி மக்கள் உணர்கின்றார்கள்?
புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் கூட்டிக் கொண்டு செல்ற பிரச்சினை , பாலியல் துஷ்பிரையோகங்கள் குறைவு . ஆனால் இப்போது அதிகமாக உள்ளது .
கிரான் பிரச்சினை வந்த போது மக்கள் அதை எப்படி பார்க்கின்றார்கள் ?
கிரான் பிரச்சினை வந்த போது வவ்னதீவு பிரதேசத்தில் police பாதுகாப்புடன் வியாபாரம் செய்தார்கள் .
சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் போது என்ன நினைக்கீர்கள இங்கும் பிரச்சினை வரும் என்று நினைக்கின்றீர்களா ?
என்ட கருத்து பிரச்சினை வரக்கூடாது .
அப்படி நடக்கக் கூடிய சாத்தியக் கூறு இல்லை . சில சமையம் வரலாம் .
முஸ்லிம்கள் சம்பந்தமான கதைகள் ஏதும் உள்ளதா ?
ஒரு ஹோட்டலில் ஒரு தமிழர் கோழி கொத்து கேட்டுள்ளார் அவர்கள் மாட்டு இறைச்சி கொத்து கொடுத்துள்ளார். அப்போது அவர் கொத்து வேனாது என்று சொல்லி பெய்துவிட்டார்கள் . இந்த மாட்டு இறைச்சி கொத்தை முஸ்லிம் ஒருவர் கோட்ப போது . அவருக்கு அந்த கொத்தை கொடுக்க வில்லை . காரணத்தை விசாரணை செய்த போது மருந்துக்கள் கலந்துள்ளதாக சில கதைகள் வந்தது.
இப்படியான கதைகளை மக்கள் நம்புகின்றார்களா ?
அப்படி நினைப்பதற்கு அவ்வளவு இல்லை .
என்னுடைய மகன் காத்தான்குடியில் Ao ஆக வேலை செய்கின்றார். அவர் சொன்னார் பெரிய குளம் பகுதியில் முஸ்லிம் ஒருத்தர் தமிழ் ஒருவரின் காணியை வாங்கியுள்தாகச் சொன்னார் .
அது நல்லமா அல்லது பிரச்சினைக்குரியதா ?
காணி வாங்குறவர்கள் தமிழர்களைத் தவிர முஸ்லிம்கள் தான்கூட .
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25% முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அவர்கள் 2% மாணவர்கள்தான் நிலத்தை பயன்படுத்துகின்றார்கள் . இதை எப்படி பார்க்கின்றீர்கள் ?
வயல் காணி பிரச்சினை இல்லை வீடு கட்டுவதுதான் பிரச்சினை .
பலமுனை பகுதியில் அவர்கள்தான் கூடுதலாக இருக்கின்றார்கள் .
முஸ்லிம்களுடன் வாழ்வதற்கு பயம் தமிழர்கள் மாதிரி இல்லை ஒரு பிரச்சினை வந்தால் எல்லோரும் சேர்ந்து அடிக்க வருவார்கள் . காத்தாங்குடி மக்கள் அப்படி இருக்கார்கள் .
அப்படி நடந்துள்ளதா ?
ஆம் .
முஸ்லிம்கள் தொடர்பு எப்படி ?
அவர்கள் மீன வியாபாரம் பொடவை வியாபாரம் செய்வதற்காக எங்களது கிராம ங்களுக்கு வருவார்கள் . அவர்கள் அதிகாலை 3.30 Am அளவில் வருவார்கள் .
அரசியல் யாப்பு சம்பந்தமாக என்ன நினைக்கீர்கள் ?
===========
தெரியாது .
வடக்கு கிழக்கு சேர்வது சம்பந்தமாக பிரச்சினை போகுது .
வடக்கு கிழக்கு சேர்வது நல்லமா கூடாதா ? நல்லம்தானே .
நிலை மாறும் கால நீதி Tj
=====
நீதி முறை தேவை .
காணாமல் போனோர் இங்கு இருக்கார்களா ?
ஆம் உள்ளார்கள்
யத்தம் முடிந்து மக்களுக்கு நீதியை எதிர்பார்கோம் . புலிகள் இருந்த காலம் மக்கள் பயந்து வாழ்ந்தார்கள் . ஆனால் சீர் கேடுக்க நடக்க வில்லை . இப்போது களவு பெண்கள் சீர் கேட்டில் போகின்றார்கள் .
=========================
எங்கட பிரச்சினை என்ன என்ற கேட்கலை நீங்க ?
குறிஞ்சா கணி என்ற குழம் ஒன்று உள்ளது அது சுமாராக 7/8 Km இருக்கும் அதில் இருந்து எங்களுக்கு பய்ச்சல் வாய்கால் ஒன்று தோண்டி தாங்க என்று போகாத அரசியல் வாதிகளே இல்லை .
அதை அரசாங்கம் செய்து தந்தால் நாங்கள் இரண்டு போகமும் விவசாயம் செய்யலாம் .
No comments:
Post a Comment