நேர்காணல் 2
வளர்மதி மீனவர் சங்கம்
=================================
நீங்கள் எதிர் நோக்கம் பிரச்சினை ?
தொழில் சம்பந்தமான பிரச்சினை
வீடு சம்பந்தமான பிரச்சினை . எங்கட தோனி வருவதற்கு ஆறு தடங்கலாக உள்ளது . நாங்கள் எங்களது தோனிகளை ஏறாவூர் துறைமுகத்தில்தான் எங்களது தோனிகளை வைத்திட்டு வருகின்றோம் . நாங்கள் பிடிக்குற மீன ஏறாவூரில் தான் விற்பனை செய்றோம். மீன் பிடித்து எங்கட கிராமத்திற்கு வருவதற்கான சாரியன பாதை இல்லை .
மீன் பிடிக்கும் போது அதிகம் மீன் படுதா ?
இல்லை . இப்போது குறையந்த மீன்தான் படுகிறது. சொறி முட்டை படுவதால் மீன் படுகின்ற வீதம் குறைவு .
மாசடைகிறமாறி குளம் இருக்கிறதா ?
சில இடங்களில் குப்பைகள் கொட்டுவதால் சற்று சொறி முட்டைகள் தோன்றுகிறது .
முஸ்லிம் தமிழ் உறவு எப்படி இருக்கின்றது?
உறவு நல்லாதான் இருக்குது. நாங்கள் பாகுபாடு இல்லாமல்தான் தொழில் செய்கிறோம்.
எங்கட A/L படித்த பிள்ளைகள் தொழில் இல்லாமல் இருக்காரர்கள்.
உங்களுக்கு கடன் உதவிகள் இருக்கிறதா ? எங்களுக்கு என்ஞியோ நிறுவனம் தருகிறுது .
உங்கள் இளைஞர்கள் எப்படியான வேலைகளைச் செல்கிறார்கள் ?
எங்களுடை இளைஞர்கள் ஏறாவூர் , பொலநறுவ போன்ற பிரதேசங்களுக்கு மேசன் காப்பெண்கட வேறு சில வேலைகளுக்குச் செல்வார்கள் .
எங்கட வீடுகள் அறை குறையாக இருக்கு யாரும் உதவுவதாக இல்லை .
உங்களுக்கு காணி இருக்கா ?
ஆம் இருக்கு . வீடு கட்டத்தான் வசதிகள் இல்லை .
உங்களிடம் சிங்கள மக்களின் தொடர்பு எப்படி உள்ளது ?
எங்கட பிரதேசத்தில் சிங்களவர்கள் இல்லை .
உங்களுக்கு சிங்களம் பேசத் தெரியுமா ?
இல்லை .
உங்களுடைய பாடசாலையில் சிங்களம் படித்து கொடுக்கார்கா ?
இல்லை , ஆசிரியர்கள் இல்லை .
பெளத்த விகாரைக்கு போய்யுள்ளீர்களா ?
இல்லை .
முஸ்லிம் பள்ளிக்கு போய்யுள்ளீர்களா ? இல்லை . நாங்கள் ஒரு சிலர் போய்யுள்ளோம் என்றார்கள்.
கிறிஸ்தவ ஆலையத்துக்கு போய் இருக்கீங்களா ?
இல்லை .
பெளத்த சமூகத்தைப் பற்றி என்ன நினைக்கீர்கள் ?
அவர்களின் சமைய வழிபாடு வித்தியாசம்
முஸ்லிம்களை எப்படி பார்க்குறீர்கள் ?
அவர்கள் பழகுவதற்கு பிரச்சினை இல்லை .
உங்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கார்களா ?
இருக்கார்கள்.
முஸ்லிம்கள் பெளத்தர்கள் உங்களுடைய கோயிலுக்கு வந்திருக்கார்களா ?
பெளத்தர்கள் வருவார்கள் . முஸ்லிம்களில் ஒரு சிலர் வியாபாரத்திற்காக வருவார்கள் .
இந்தியா இருந்து வருவார்களா ?
இந்தியா இருந்தும் தமிழ் மக்கள் சிலர் வியாபாரத்திற்கு வருவார்கள் .
கிரான் பிரச்சினை சம்பந்தமா என்ன நினைக்குறீர்கள் ?
இது ஒரு சிலர் செய்கின்ற வேலை எல்லோரும் இல்லை . இப்படி தமிழர்களும் இருக்கின்றார்கள முஸ்லிம்களிலும் இருக்கின்றார்கள்.
பிரச்சினையை எப்படி பார்க்குறீர்கள் ? அப்படி பிரச்சினை வரக்க கூடாது . முஸ்லிம்கள் தமிழர்களின் பிரதேசத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் தமிழர்கள் முஸ்லிம்களின் பகுதியில் வியாபாரம் செய்ய வேண்டும் .
விடுதலைப் புலியில் இருந்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா ?
இருந்தவர்கள் எல்லோரும் இறந்தது விட்டார்கள் . இப்போது ஒருத்தர் இருக்கின்றார் .
அவரை எப்படி பார்குறீர்கள் ? எங்களைப்ப போன்றுதான் அவர்களை நாங்கள் பார்க்கிறோம்.
முஸ்லிம் சம்பந்மான வதந்திகள் ஏதும் கேள்விப் பட்டீர்களா ?
ஒரு சிலர் சொன்னார் முஸ்லிம் ஹோட்டலில் கருத் தடை மாத்திரைகள தமிழர்களுக்கு கொடுப்பதாகச் சொன்னார் .
எத்தனை பேருக்கு Face book இருக்கு ?
எல்லோருக்கும் . ஒரு சிலரைத் தவிர.
குடும்பக் கட்டுப்பாடு செய்யும் முறை சொல்லித்தாறார்களா ?
இது சம்பந்தமாக ..கிளினிக்ல சொல்லி தாரார்கள்.
இது சம்பந்தமாக ஆண்களுக்குத்
தெரியுமா ?
தெரியாது
யுத்தம் முடிந்து மக்களின் சிந்தனை மாறியுள்ளதா ?
50 % மாணவர்கள் மாறியுள்ளது.
உங்களின் பிள்ளைகள் சிங்களம் படிக்கின்றார்களா ?
படிப்பதற்கு சிங்களப்பாட ஆசிரியர் இல்லை .
அரசாங்க காரியலையங்களில் muslim சிங்களவர்கள் இருப்பது எப்படி பார்க்குறீர்கள் ?
இப்படி இருப்பது நல்லது
Plicela தமிழ் மக்களா அதிகம் இருக்கின்றார்கள் அல்லது சிங்களவர்களா ?
இரண்டு பேரும் சமனாக உள்ளார்கள்.
உங்கள் காணி தமிழர்கள் முஸ்லிம்கள் பெளத்தர்கள் என்று பிரிக்க வேணுமா அல்லது ?
தமிழர் என்று பிரிவு இல்லாமல் ஒன்றாக இருந்தால் நல்லது . நாள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றோம்
sir என்னுடைய காணி ஏறாவூரில் உள்ளது 1990 ஆண்டு குழப்பத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டோம் .
மீண்டும் குடியேறவில்லையா ?
இல்லை
குடியேறுவதற்குப் பயமாக உள்ளது .
அந்த காணியில் ஒரு பகுதியை பாடசாலைக்கு எடுத்துள்ளார்கள் .
வருகின்ற உள்ளூர் ஆட்சி தேர்தலில் Tamil or Muslim வந்தால் வாக்களிப்பீர்களா ?
யார் வந்தாலும் வாக்கு சிடையாது . ( Muslim thamil அரசியல் வாதிகள் எல்லோரும் ஒன்றுதான் )
ஆனால் நாங்கள் வாக்கு போடுவோம் அது எங்கட உரிமை .
Sir 1990 புலம்பேர்ந்து வந்த எங்களுக்கு எந்த வீட்டுத்திட்டமும் இல்லை . ஏறாவூரில் வந்தவர்கள் நாங்கள் 5 பேர் இருக்கின்றோம்.
Schoo எடுத்த காணியை மீட்டு எடுக்க கோட்டுக்கு போகவில்லையா ?
காசி இல்லை
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒன்று இருக்கு ? தெரியுமா ?
கொஞ்சம் தெரியும் .
எங்கட மீனவர் சங்கத்திற்கு ஒரு தோனிதான் தந்துள்ளார்கள் . ஏறாவுர் பகுதியில் மீனவர்களுக்கென்று அதிகாம நிதியுதவிகளைக் கொடுக்கிறார்கள் Sir
அரசியல் யாபாரு சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்குறீர்கள் ?
======
கேள்விப் பட்டிருக்குோம் ஆனால் விளக்கம் தெரியாது .
என்ன TV பார்கீங்க ?
சக்தி TV
என்ன paper பார்கீங்க ?
நாங்க காலையில் paper செய்தி பாக்குற .
Tj நிலை மாறும் கால நீதி
===
என்ட தம்பி 2009 இல் போனவன் இதுவரைக்கும் அவன் எங்க என்று தெரியாது .
என்ட கணவரின் பெயர் கனேசன் .
1990 இல் காணாமல் போனாரு
உண்மையைக் கண்டறியும் ஆணைக்கு என்று கேள்விப்பட்டுள்ளீர்களா ?
இல்லை .
முன்னரும் காணாமல் போனோர்களை பதிய சொன்னார்கள் அதற்கு இப்போதும் முடிவு இல்லை .
இதனால் நீதி கிடைக்கும் என்று நம்புறீர்களா ?
காலம் பெய்த்து பழையதைச் சொல்லி வேலை இல்லை . அரசாங்கம் இதற்கு நல்ல முடிவு தரவேண்டும் .
No comments:
Post a Comment