ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணியை மீட்டெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் மெளனம் காக்கின்றார்கள் ???
=================================
இன்று இலங்கை ஒரு ஜனநாயக நாடு விரும்பியவர் விரும்பியவாறு வாழலாம் . தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் , தான் விரும்பியவாறு இலங்கையில் பரந்து வாழ்வதற்கான சுதந்திரம் , எழுத்து சுதந்திரம் என்று அரசு ஏகப்பட்ட சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்படி இருந்தும் ஒரு சில மக்களுக்கு தங்களின் சொந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கான முழுச் சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை .
அன்மையில் ஏறாவூர் கரடியனாறு விவசாயத் தினைக்களத்தில் அமைந்துள்ள ஒரு சில விவசாய குழுக்களை சந்திக்க நேர்ந்தது. அதில் அவர்கள் சொன்ன சில முறைப்பாடு பின்வருமாறு ....
எங்களுடை விவசாயக் குழுவில் 250 உறுப்பினர்கள் உள்ளனர் . எங்களுடைய விவசாய காணிகள் ஏறாவூர் பற்று பிரதேச சையில் இருக்கும் தமிழ் கிராமத்தில் உள்ளது . யுத்தத்திற்கு முன்பு நாங்கள் அப்பிரதேசத்தில்தான் வாழ்ந்தோம் . எங்களுடைய மூதாதையர்களும் அங்குதான் வாழ்ந்து விவசயம் செய்தவர்கள் . 1984 இடம்பெற்ற இனக் கலவரத்தினாலும் 1990 இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினாலும் நாங்கள் எங்களது சொந்தக் காணிகளை, வீடுகளை, கால் நடைகளைத் தோட்டங்களை விட்டு வெளியேறினோம் இன்னும் பலர் பலவந்தமாகவும் வெளியேற்றப்பட்டார்கள்.
நாங்கள் கதுறுவெல , பொலநறுவ போன்ற பிரதேசங்களில் காணி வாங்கி அங்கு கொட்டிகளில் வாழ்ந்து வந்தோம் . பின்னர் யுத்தம் முடிந்து இலங்கை அரசு எங்களை எங்களின் சொந்தக் காணிக்கு குடியமரச் சொன்னது. நாங்களும் எங்களது காணிக்குச் சென்று காணி எல்லைகளை இட்டு அங்கு விவசாயம் செய்வதற்கான முழு ஆயுத்தமும் செய்துவிட்டு நெல்லை வீசுவதற்காக சென்றபோது அங்கு இருக்கும் தமிழ் மக்கள் உங்களுக்கு இங்கு காணி இல்லை இது எங்களின் கால்நடைக்கான மேய்ச்சல் நிலம் என்று எங்களை அடித்து விரட்டி விட்டார்கள் .
இவ்வளவு காலமாக எங்களுடை பரம்பரை பராமரித்துவந்த காணியை இன்று எங்களுக்குப் பராமரிக்க முடியாமல் உள்ளது . இதற்கான ஆதாரபூர்வமான உறுதிகளும் எங்களிடம் உள்ளது . மாகாணக் கல்வி ஆணையாளரின் கடிதமும் எங்களிடம் உள்ளது .இப்படி இருந்தும் எங்களுடை காணிகளை அடைய முடியாதுள்ளது.
இது சம்பந்தமாக எங்களுடைய முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் சென்றோம் ( ஏறாவூர் நகரசபை , கிழக்கு மாகாண சபை ) அவர்கள் எங்களிடம் போலி வேசம் போடுகின்றார்கள். அவர்கள் எதற்கும் பயனில்லை . அதேபோல் பிரதேச செயலகம் , பிரதேசசபை என்று போகாத இடம் இல்லை , அவர்கள் தமிழர்கள் பக்கம் சார்பாக நடந்து கொள்கின்றார்கள்.
இதில் ஒருத்தர் கூறினார்
எங்களுக்கு 40 ஏக்கர் காணி உள்ளது . எனது தந்தைக்கு 5 பிள்ளைகள் அவர்களில் இரண்டு பேருக்கு மாத்திரம்தான் அந்தக் காணிக்குப் போகலாம் என்றார் . இப்படி இருக்கின்றது ஏறாவூர் விவசாயிகளின் சோக நிலை .
ஏறாவூரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேறு சில அரசியல் தலைவர் இருந்தும் இந்த மக்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் இவர்களை எப்படி மக்கள் நம்பிக்கை வைப்பது ???? முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதியை அனுப்புவதன் நோக்கம் முஸ்லிம்களின் குறைகளை அனுப்பப்படும் பிரதிநி தீர்ப்பார் என்றுதான்
இந்த 250 விவசாயிகளின் காணிகளுக்கு கிழக்கு மாகாணசபை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் , ஏறாவூர் பற்று பிரதேசசபை , ஏறாவூர் பிரதேச செயலகம் என்பன உடனே தீர்வு வழங்க வேண்டும் .
கட்டுரை
அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி)
வரிப்பத்தான் சேனை
No comments:
Post a Comment