Friday, December 8, 2017

ஆய்வு

2017/12/07.
Time :- 9.27.

கரடியனாறு விவசாய திணைக்களம்.
இது 1974 உருவாக்கப்பட்டது . இதில் 250 members உள்ளார்கள்.

பிரச்சினை
------------------------------------------------------------------

எங்களின் விவசாய நிலங்கள் தமிழ் பிரதேசத்தில் உள்ளது .  1984 ஏற்பட்ட இனக் கலவரத்தால் அதை விட்டுவிட்டு வந்துவிட்டோம் . 1990 ஆண்டும் போக ஏலாது காரணம் குழப்பம் அதனால் நாங்கள் பொலநறுவை ,  கதுறுவெல ஏறாவூர் என்று கொட்டில இருந்தோம் . நாங்கள் செய்த தோட்டம் , கால்நடைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டோம்.
பின்னர் 2008  சமாதான சூழல் வந்தது அரசு போகச் சொன்னது நாங்கள் போனோம் . இப்போது இருக்கும் அரசாங்கமும்  போகச் கொன்றார்கள் நாங்க போன போது அங்கு வாழும் தமிழ் மக்கள் எங்களுடை இந்த நிலம் மேச்சல் தரைக்குரியது என்று சொல்லி எங்களை விரட்டி விட்டார்கள் . நாங்கள் விவாயம் செய்வதற்கு உளவி வரம்பு கட்டி எல்லாம் முடிந்த போது எங்களை தமிழ் மக்கள் பலவந்தமாக விரட்டி விட்டார்கள் .

அதில் ஒருவர் எனது வாப்பாவுக்கு 5  பிள்ளைகள் . அந்தப்ப பகுதியில் எனது வாப்பாவுக்கு 40 ஏக்கர் காணி இதில் இரண்டு பேர் மாத்திரம்தான் அந்தக்காணிய பார்க்க போகலாம்.

உங்களின் காணி எந்தப் பிரதேச சபையில்  உள்ளது?
* ஏறாவூர்பற்று பிரதேசத்தில் உள்ளது 

Ds office க்கு போனீங்களா ?

ஆம் sir நாங்க போனோம் . Ds ஒரு தமிழர் .அவர்கள் எங்கட காணிய பார்க்க வந்தார்கள்.  அவருக்கு முன்னால் கொஞ்சம் தமிழர்கள் வந்தார்கள் அவர்கள் ... இந்த காக்கா மாருக்கு இங்க காணி இல்லை என்று சொன்னார்கள் .. பின்னர் 250 பேர்ட இருப்பாங்க இடுப்புகளில் ஆயுதங்களும் சொறுகி வைத்திருந்தார்கள் .

மாகாண காணி ஆணையாளரிடம் இது பற்றி முறைப்பாடு செய்தீங்களா ?

ஆம் sir அவரும் கதைத்தாரு வந்தாரு .
நாங்க வேற இனம் என்றதால இப்படி செய்றாங்க sir .
மாகாணக் கல்வி ஆணையாளரின் கடிதம் இருக்கு sir ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காங்கல்ல . இவர்கள் காசி கொடுத்து ஆக்கள மாத்துறாங்க sir

நீங்க மனித உரிமை மீறலுக்குப் போனீங்களா ?
இல்லை . இப்பதான் போக முடிவு எடுத்துள்ளோம் .

இது சம்பந்தமாக தமிழ் அரசியல் வாதிகளிடம் பேசினீர்களா ?
இது சம்பந்தமாக  மாகாண காணி ஆணையர் கூட்டம் வைத்த போது ..  ஒரு tamil அமைச்சர் எங்களைப் பார்த்து நையாண்டியாக  ஒரு பாட்டு படித்துக் காட்டினார் . அத்தோட நாங்க விட்டுட்டோம் .

தொல் பொருள் சம்பந்தமாக என்ன நினைக்கீங்க ? பிரச்சினை இருக்கா?

ஒம் sir ஏறாவூர் பற்று பிரதேசத்தில் ஒரு பள்ளிவாசல் காணியைபிடித்துவிட்டு இப்ப சொல்றாங்க அது முஸ்லிம்களின் காணி இல்லன்டு சொல்றாங்க .

முஸ்லிம்களின் அடையாளங்களை டோஸர் போட்டு கெண்டுறாங்க . கோட்டிலையும் முடிவு கொடுத்தாங்க அது தமிழ் ஆக்கள காணி என்று ...

நீதிமன்றம் பக்க சார்பாக முடிவு கொடுக்காங்க என்று நம்புறீங்களா ?

தெரியாது.  ஆனால் இது ஒரு இனம் ,

இலங்கையில் இன்னும் ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபர் இல்லை . நாங்கள் முஸ்லிம் எங்களுக்கு சார்பானவர் வேண்டும் .

உங்களுடைய இந்தப் பேமிட் எப்போது தரப்பட்டத ?

1999 தரப்பட்டது. நாங்க வயல உளவி வரம்பு கட்டி நெல் வீசகிட்டவா  அவர்கள் எங்களை விரட்டி விட்டார்கள் . இரண்டு போகம் செயகின்ற காணி .

முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் பேசுனீர்களா ?
அவர்கள் வேலை இல்ல

யுத்தத்தின் பின் தமிழ் முஸ்லிம் உறவு எப்படி உள்ளது ?
Sir யுத்தத்திற்கு முன் நாங்கள் ஒன்றாகத்தான் இருந்த . அந்த நேரம் தமிழரிடம் கறி இருக்கும் எங்களிடம் சோறு இருக்கும் இப்படித்தான் நாங்க வாழ்ந்த ஆனால் நிலமை கொஞ்சம் மாறியுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள சில அரச காரியாலையங்களில் முஸ்லிம்கள் ( லேபராக ) போனால் அங்கு அவர்கள் இனரீதியாக நசுக்கப்ப படுகிறார்கள்.

ஏறாவுரில் உள்ளத சிங்கள கோயியிலுக்கு போய் உள்ளீர்களா ?
ஆம் நான் போய் உள்ளேன் .

வேறு பெளத்த கோயிலுக்கு போய்வுள்ளீர்களா ?
ஆம் போய் உள்ளேன் .

சிங்கள மக்களின் பற்றி என்ன தெரியும் ? எப்படியான தொடர்பு உள்ளது ?
நல்லா போசுவார்கள் . நாங்கள் எங்களது சொந்த இடங்களைவிட்டு விரட்டப்பட்ட போது நாங்கள் கதுறுவெல , பன்னகல என்ற சிங்கள மக்களிடம் தொண் வேலை செய்வதற்குச் செல்வோம்.

சிங்களம் உங்களுக்கு தெரியுமா ?
எனக்கு தெரியும் . எனக்குத்தெரியாது நான் சிங்களம் தெரிந்த ஒருத்தரை கூட்டிச் செய்னுதான் வேலை செய்தேன்.

உங்கட பள்ளிவாசலுக்கு அவர்கள் வாறார்களா ?
ஆம் அதிகமானவர்கள் வாறார்கள்.

பொது பலசேனா பற்றி உங்களுடை கருத்து என்ன ?

ஒரு பெளத்த மதகுரு தம்புளை பள்ளிவாசல் நாசமாக்கிய காட்சி . இது எங்களுக்கு மிகவும் மனவருத்தமாக உள்ளது .

பெளத்த இனவாதிகளைப்போன்று இந்தப் பிரதேசத்திலும் Isis அமைப்புகள் உள்ளதா ?
அப்படி ஒன்றும் இல்லை .

ஜின்தோட்ட கலவரத்தை எப்படி பார்க்குறார்கள் முஸ்லிம்கள் ?
பார்துட்டு மக்கள் கவலைப் படுகின்றார்கள்.

சின்ன சம்பவங்கள் திரும்பியும் பெரிய பிரச்சினைகள் உருவாக்கும் என்று நினைக்குறீர்களா ?

1990 க்கு முன்பு இருந்தவர்கள் பிரச்சினை இல்லை இப்போது வருகின்ற இளைஞர்கள்தான் இனவாத சிந்தனையில் மூழ்கியுள்ளார்கள் .

இப்படி இந்த சமூகம் போகின்ற போது மீண்டும் ஒரு ஒரு இனக்கலவரம் வரும்
என்று எதிர்பார்கிறீர்களா ?

இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாங்கள் 100 வீதம். ஆதரவு வளங்குவோம். நாங்க அவர்களின் பிரதேசத்தில் போய் வியாபாரம் செய்யனும் அவர்கள் எங்கட பிரதேசத்திற்கு வந்து வியாபாரம் செய்யனும்.

யுத்தத்திற்கு முன் 550 சிங்களவர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள் இது சம்பந்தமாக உங்கள் கருத்து ?

இதுல 10 சிங்கள மக்களின் காணி உள்ளது . ( அணுர குமார,  சிறி சேன , சுது பண்டார )

அரசியல் யாப்பு  தெரியுமா ?
==========================

தெரியும் .  எங்களுக்கு வடக்கு பிரியிறது பிரச்சினை இல்லைச.  நாங்கள் சுதந்திரமாக வாழனும் .

வடக்கு கிழக்கு பிரிவது நல்லமா ?
வடக்கு கிழக்கு பிரியாமலே இப்படி இனவாதம் என்றால் வடக்கு கிழக்கு சேர்ந்தால்  எப்படி இருக்கும் ?

நிலைமாறு கால நீதி
=========================
காணாமல் போனோர் எமது முஸ்லிம்களிலும் இருக்கின்றார்கள் .
என்னுடைய  தாவுத் ஆசிரியர்ர  கழுத்தறுத்து போட்டிருந்தார்கள். அவருடைய மனைவி கணவர் வருவாரு என்டு கணவு கண்டு வாறார் ...

இப்போது எனக்கு 58 வயது அப்போது எனக்கு 25 வயது இருக்கும் . LTT எனது கண்ணுக்கு முன்னால் ஒரு முஸ்லிம் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை எரித்தார்கள் இதற்கு எல்லாம் நஷ்டஈடு இருந்தால் நன்றாக இருக்கும் .

No comments:

Post a Comment