Friday, October 30, 2015

துருக்கியின் அர்துகான் என்னும் அரசியல் ஆளுமையும் மேற்குக சதியும்

A.M. HAFEESUL HAQ (FATHIH )

தயவுசெய்து இதை அனைவருக்கும் எத்தி வையுங்கள் இறைவன் அருள் புரிவான்

இன்று சமகால இஸ்லாமிய உலகில் மக்கள் மனதை வென்ற அரசியல்வாதிகளில் துர்கிய ஜனாதிபதி  அர்துகானும் ஒருவர் . இவர் துருக்கியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தன் உயிரை அற்பனித்த சிறந்த தலைவர் .

இவர் 1954 இல் துருக்கியின் என்ற கிராமத்தில் பிறந்தார் . பின்னர் தனது 5 ந்து பிள்ளைகளையும் சிறப்பாக கல்வி அறிவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அர்துகானின் தந்தை இஸ்தான்புல் நகருக்கு  குடிபூர்ந்தார் . 13 வயதில் தனது ஆரம்பக் கல்வியை இஸ்தான்புலின் இஸ்லாமியப் பாடசாலையொன்றிலும் பின்னர் தனது உயிர் கல்வியை இஸ்தான்புல் (( மர்மரா பல்கலைக்கழகத்தில் இணைந்து முகாமைத்துவத் துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார் .

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது தந்தையின் வறுமை காரணமாக பணம் பெற்றுக் கொள்வதில் மிகவும் கஷ்டப்பட்டார் அப்போது அவர் பாதை யோரங்களில் பாண் விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டார் .

துருக்கியின் அரசியல் முன்னோடி பேராசிரியர் நஜ்முத்தீன் உடனான தொடர்பு .
======================

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானை சந்தித்தார் . பின்னர் 1972 இல் நிறுவிய தேசிய ஸலாமா கட்சியில் இணைந்தார் . இருந்தும் நஜ்முத்தீன் அர்பகான் நிறுவிய அனைதுக் கட்சிகளும் துருக்கி மதச்சார்பற்ற அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது . பின்னர் அர்பகான் நிறுவிய  ( ரபாஹ் ,பழீலா ) ஆகிய கட்சிகளில் இணைந்து  செயற்பட்டார் .

1985 இல் ரபாஹ் கட்சியின் இஸ்தான்புல் நகர கிளையின் தலைவராக தெரிவு சய்யப்பட்டு 1994 இல் இஸ்தான்புல் நகர மேயராகவும் தெரிவு செய்யப்பட்டார் . பின்னர் 1998 இல் ஒரு கூட்டத்தின் போது இஸ்லாமியக் கவிதையொன்றை வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் .

தனது ஆசான் அர்பகானின் நேரடி இஸ்லாமிய அரசியலில்  ஈடுபாடும் முறை தற்போதைய துருக்கிக்குப் பொருந்தாது என்று கருதி 2001  பழீலா கட்சியில் இருந்து  நீங்கி  '' நீதிக்கும் அபிவிருத்திற்குமான கட்சியை நிறுவினார் .

பின்னர் ஐரோப்பாவின் நோய் நாடாக இருந்த துருக்கியை துரித பொருளாதார வளர்ச்சி அடையவைத்தார் . அன்று துருக்கியை ஐரோப்பிய யூனியனில் விலக்குவதற்கு இருந்த நாடுகள் இன்று அதை ஐரோப்பிய யூனியனில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்கள் .

இன்று மேற்குலகு அர்துகானின் ஆட்சியை வீழ்த்துவதற்கு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் . காரணம் அர்துகானின் ஆட்சி துருக்கில் மேலோங்கினால் மீண்டும் உலகை இஸ்லாமிய ஆட்சி நிலை பெற்றுவிடும் , எங்கள் பொருளாதாரம் முடக்கப்பட்டுவிடும் , இஸ்ரேல் என்ற எங்களுடைய நாடு அழிந்துவிடும் என்பதற்காக துருக்கியின் எதிர்வருகின்ற தேர்தலில் அர்துகானை வீழ்த்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

நிகாஹ்

எந்தத் தரப்பு  திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கின்றதோ அந்தத் தரப்பு வாங்கிய பரிசுகளை கொடுக்க வேண்டுமா ?

இதை ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார் .

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண ஒப்பந்தம் மேற் கொள்ளப்படுகின்றது அந்த ஆணின் குடும்பம்  பெண்குடும்பத்தவர்களுக்கு  சில பெறுமதியான  பரிசில்களும் ( الهديا ) பரிமாறப்படுகின்றது  சிறிது காலத்தின் பின்பு பெண் வீட்டார்கள்  திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கின்றார்கள் இதற்கு  இஸ்லாம் கொடுக்கும் தீர்வு  என்ன ?

இன்று திருமண ஒப்பஒப்பந்தத்தை தான்  விரும்பிய விரகாரம் மேற்கொள்கின்றார்கள்  தான் விரும்பிய பிரகாரம் சேர்ந்து கொள்கின்றார்கள் .

உண்மையில் ஒரு மனிதர் திருமண ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும் அதை முறித்துக் கொள்வதற்குமான முழு சுதந்திரத்தை இஸ்லாம் கொடுத்துள்ளது . அதேபோல்  சில நிபந்தனைகையும் முன்வைத்துள்ளது .

10) பெண்வீட்டார்களுக்கு ஆண்வீட்டார்கள் பெறுமதியான பரிசில்கள் கொடுத்தால் திருமண ஒப்பந்ததை  பெண்வீட்டார்கள் முறித்துக் கொண்டார்களேயானால் பெண் வீட்டார்கள் கட்டாயம் தாங்கள் பெற்றுக்கொண்ட الهداي வை கொடுக்க வேண்டும் .(( இது மாலிக் மத்ஹபின் கருத்து )) இதை அதிகமான நாடுகள் பின்பற்றுகின்றது . இதைத்தான் ஏகோபித்த கருத்தாக எடுத்துக் கொள்வார்கள் .

குறிப்பு :- திருமணத்தை எந்தத் தரப்பு முறித்துக் கொள்கிறார்களோ அவர்கள் வாங்கிய பரிசுகளையும் கொடுக்க வேண்டும் .இதுதான் இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடும்கூட .

ஹபீஸுல் ஹக்
வரிப்பத்தான்சேனை

Thursday, October 29, 2015

இமாம்  முஹம்மத் அத் தாஹிர் இப்னு ஆஷூர்

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக இருந்த இவர் தூனிசியாவில் சமூக அந்தஸ்துள்ள  ஒரு வசதியான குடும்பத்தில்  1879 ல்  பிறந்தார் இவர்    மிக புகழ்பெற்ற Zaytuna  உலமாவாக மக்களால் மதிக்கப்பட்டார் .

இவர்   1932 ஆம் ஆண்டு   இஸ்லாமிய கல்வி மற்றும் நீதி பரிபாலனம் சீர்திருத்த பகுதியில் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராகவும்   திகழ்ந்தார் .

இவரின் சிறப்பு என்னவென்றால் மகாஸித் கலை பற்றி இரண்டு இமாம்கள் இரண்டு விதமான கருத்துக்களைச் சொன்னார்கள் ( இமாம் கஸ்ஸாலி , இமாம் ஷாதிபி ) இவர்களின் இரண்டு கருத்துக்களையும் உடைத்து  மகாஸிதுஷ் ஷரிஆ என்பது ஒரு தனியான கலை என்று  ஒரு தெளிவைக்  கொடுத்தார் . அந்தவகையில் இவர் மகாஸித் என்பது ( சட்டம் , நம்பிக்கைக்  கோட்பாடு , பண்பாடு ) என்று குறித்துக் காட்டினார் . பின்னர்  தனது 94 வயதில் 1973 ல் அந்தலூசில்   இறந்தார் .

இவர் எங்களை விட்டுச் சென்றாலும் இவருடைய சிந்தனைகள் எங்களைவிட்டு மரணிக்கக் கூடாது .

ஹபீஸ் ஹக் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனைத .

Friday, October 23, 2015

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக்

இன்று இலங்கையில் பெளத்தர்கள் 70% மும் இந்துக்கள் 20% மும் முஸ்லிம்கள் 10% மும் உள்ளனர் .

எமது இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது . இது நாங்கள் அறிந்த உண்மை . ''லோனா தேவராஜ்'' என்ற பிரபலமான வரலாறு ஆசிரியர் கூறுகின்றர்  இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்கள் தொன்மைவாய்ந்தது என்று கூறுகிறார் .

ஆனால்  இன்று சில பெளத்த இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு வரலாறு இல்லை அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப் புறக்கணிக்கின்றார்கள் .

உண்மை அவ்வாறல்ல இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1000 வருடங்கள் தொன்மை வாய்ந்தது . கி.பி. 7 ம் நூற்றாண்டில் இலங்கையில் இஸ்லாம் இருந்ததுள்ளது . இதற்கான சான்றுகளும் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளது .

இலங்கையில் அரேபியர்களின் தொடர்புகள்
======================

பெளத்தர்களின் வரலற்றைக்கூறுகின்ற மகாவம்சத்தில்  அநுராத புறத்தில் ஒரு மன்னர்   யோனஸ் என்ற ஒரு வர்க்கத்தினருக்கு தங்குவதற்கு இடமழித்ததாகக் கூறுகின்றது .இதற்கு Wilheim Geigge  , Srima kiribamuna . Lona Drwarag என்ற வரலாற்று ஆசிரியர்ஆசிரியர்கள்  ,, அது  அரேபியர்கள்  என்று கூறுகின்றார்கள்  .

கிரேக்கர்களின்  பட்டுப்பாதையாக மத்திய தரைக்கடல் , சங்கடல் , இலங்கை காணப்பட்டது . பின்னர் றோமர்களும் அதன் பின்னர் அரேபியர்கள் வசமானது . இத்ன் பிரகாரம் கி.பி. 2 நூற்றாண்டில் அரபு வர்த்தக கப்பல்கள் இலங்கை கரையோரங்களை அன்மித்தது . இதற்கு ஆதாரமாக பிளினி , 3 ஒன் குறூட் மற்றும் 6 கொஸ்மஸ் கிரேக்க றோம வரலாற்றில் இலங்கையின் கரையோரங்களில் அரேபியர்கள் காணப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது .

இலங்கைக்கு வந்த வந்த அரேபியர்களில் அதிகமானவர்கள் எகிப்து மற்றும் யெமன் வர்த்தகர்கள் .

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு சம்பந்தமாக எழுதப்பட்ட சில நூல்கள் .
======================

01) 1888 ல் Sir பொண்ணம்பலம் ராமநாதனால்  எழுதப்பட்ட  நூல்
( இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள் சமயத்தால் முஸ்லிம்கள் )

இந்தப் புத்தகத்தை விமர்சித்து 1907 இல் I.L.MA. Aessz எழுதிய புத்தகம் .
( இலங்கை சோனகர் வரலாறு ஒரு திறனாய்வு )

02) 1926 ல் வான் சண்டேன் எழுதிய ( sonahar )

03) 1941 ல் Hilar எழுதிய ( History of muslim in srilanka )

04) 1951 ல் பரானி எழுதிய ( Arabs seefairint medival )

05) அரசரத்னம் ( தமிழ் ஆய்வாளர் ) 17 ம் நூற்றாண்டில் பெரிய தம்பி மரைக்கார் )

06) 1976 ல் K.W. குணவர்த்ன ( போத்துகேயர் காலத்தில் முஸ்லிம்கள் )

07) D.R  Sukri  எழுதிய ( Muslims of Srilanka )

08) M. Sameem எழுதிய (சிறுபான்மை சமூகத்தின் தொகுப்புகள் )

09) Kamil Asath எழுதிய ( british  காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் )

10) வாம தேவன் எழுதிய ( The history of srilankan muslim )

11) Jameel sir  எழுதிய ( இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் )

12) Mhsin எழுதிய (இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் )

13) பிரதீப் மதுரங்க அளுத்வத் என்பவர் எழுதிய ( இலங்கை முஸ்லிம்களின் கட்டிடக்கலை )

இவை அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஆங்காங்கே எழுதப்பட்ட நூல்கள் .

இது  அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புதிய நூலை  நாங்கள் தொகுக்க வேண்டும் . அப்போதுதான் பெளத்தர்கள் மற்றும் தமிழர்கள் போன்று எங்களுக்கும் எமது பூரவீகத்தைக் காட்டும் ஒரு நூல் உள்ளது என்று நிமிர்த்தமாகச் சொல்லலாம் .

அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )
Varipathanchenai

இஸ்லாத்தின் திருமண ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் ?

A.M. ஹபீஸுல் ஹக்

இன்று திருமண ஒப்பந்தம் என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது . இன்று திருமண ஒப்பந்தம் செய்துவிட்டு ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமாக பேசிப் பழகுகின்றார்கள் . இஸ்லாமிய திருமண ஒப்பந்தம் என்பது அப்படியல் . அதற்கும் வரையறைகள் உள்ளது இதை நாங்கள் கண்டிப்பாக விளங்க வேண்டும் .

திருமண ஒப்பந்தம் என்பது ஒரு ஆணின் குடும்பம்  ஒரு பெணின் குடும்பத்தினர்ருடன்  தன்னுடைய பிள்ளையை திருமணம் செய்வதற்கான வாக்குறுதி  . ( இது ஆண் தரப்பிலும் இடம்பெற்ற முடியும் அல்லது பெண் தரப்பிலும் இடம்பெற்ற முடியும் )

உண்மையில் திருமண ஒப்பந்தத்தின் நோக்கங்களில் ஒன்று '' பரஸ்பரம் ,, ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தைப் புரிந்து கொள்ளுதல்  . அதேபோல் அந்தக் குடும்பத்தினர் திருமணம் முடிக்க இருக்கின்ற ஆணையும் பெண்ணையும் புரிந்து கொள்ளுதல் இதுதான் திருமண ஒப்பந்தத்தின் நோக்கம் .

ஆனால் இன்று பரஸ்பரம் என்ற நோக்கம் அழிந்து  இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறணாக மாறி வருகின்றது

. உ+ம் = திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் பேச முடியும் . ஆனால் அவர்கள் பேசுவது ஒரு விபரிதம் அல்லது உணர்வை தூண்டக்கூடியதாக அமைந்தால் அது இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறனானதாக மாறிவிடும் .

திருமண ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் .
=============================

.01) திருமணம் முடிக்கின்ற பெண் திருமணம் முடிக்க தடுக்கப்பட்டவளாக இருக்கக் கூடாது .

02) திருமணம் முடிக்க இருக்கின்ற பெண்ணுடன் பேறு எவரும் திருமணம் ஒப்பந்தம் செய்திருக்கக் கூடாது .

இந்த இரண்டு நிபந்தனைகளும் மீறும் சந்தர்பத்தில் திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகாது . இதுதான் இஸ்லாத்தின் நினைப்பாடு . எனவே திருமண ஒப்பந்தம் என்பது  குடும்பத்திற்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் . அது  இஸ்லாத்திற்கு முறணாக அமைக்கூடாது . இதுதான் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தம் .

ஹபீஸூல் ஹக் அப்துல் முத்தலிப்
varipathanchenai

Thursday, October 22, 2015

மேற்குலகு மறந்த மருத்துவ மேதை அஹ்மத் அத் அத்தபரி

இவரை சொல்வதற்கு மேற்குலகு மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூடாது .

A.M. ஹபீஸுல் ஹக்

10 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு மருத்துவ மேதை அஹமத் அத் தபரி . இவர் தபரிஸ்தானைச் சேர்ந்தவர் .

இவரின் முழுப் பெயர் அபுல் ஹஸன் அஹமத் இப்னு முஹம்மத் அத் தபரி . புவையித் இளவரசர்களுள் ஒருவரான ருக்னுத் தெளலா என்பவரின் பிரத்தியோக மருத்துவராக (கி . பி. 970 ) கடமையாற்றினார் .

இன்னும் இவர் கிதாபுல் முஆல ஜல் ராதியா ( ஹீப்போகிரேத்திய சிகிச்சைகள் பற்றிய நூல் ) எனும் பெரும் நூலை எழுதினார் . 10 நூல்களைக் கொண்ட இந்நூல் தொகுதியில் பல்வேறுபட்ட நோய்களுக்கான சிகிச்சை முறைகள்  பற்றி விளக்கப்பட்டுள்ளது .

ஹபீஸுல் ஹக் அப்துல் முத்தலிப்
varipathanchanai

முஸ்லிம் மகப்பேற்றுப் பெண் வைத்திய நிபுணர்கள் எமது சமுகத்தில் உருவாக்கப்பட வேண்டும் .


இன்று எமது முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மகப்பேற்று பெண் வைத்திய
நிபுனர்கள் எமது சமூகத்தில் காணப்படாமை  . இவர்களை உருவாக்குவதில் நாங்கள் அதிகம் கரிசினை கொள்ள வேண்டும் .

பெண்கள் தனது முகத்தை  மற்றவர்களுக்குக் காட்டுவது பாவம் என்று நாங்கள் பரவலாகப் பேசுகின்றோம் ஆனால் ஒரு பெண் தன்பிரசவத்தின்போது தனது மறுமஸ்தளத்தை  ஆண் வைத்தியர்களுக்குக் காட்டுவது ? ?

எனவேதான் இந்த விடையங்களைத் தவிர்ப்பதற்கு நாங்கள் மகப்பேற்று பெண் வைத்திய
நிபுனர்களை உருவாக்க வேண்டும் .  சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட பெண் வைத்திய நிபுனர்களை உருவாக்குவது முஸ்லிம் சமுகத்தின் கடமை ( வாஜிப் ) அவ்வாறு
சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட பெண் வைத்திய நிபுனர்களை உருவாக்க வில்லை என்றால் அது ஒரு குற்றமாக மாறிவிடும் .


அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக்
வரிப்பத்தான்சேனை

Friday, October 16, 2015

முஸ்லிம் கண்டுபிடிப்பாளர்

மேற்குலகு மறந்த முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் . 

================================


இதை மேற்குலகு மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூட . இதை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள் இறைவன் அருள் புரிவான் .

சென்ற வாரம் மத்திய காலத்தில்  தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி  பற்றி  பார்த்தோம் . இந்த வாரத் தொடரில்  9 ஆம் நூற்றாண்டில் அப்பாஸியக் கலீபாக்கள் அல் மாமூன் ( 813-833 ) அல் முதவக்கில் (817-861) ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பிரசித்து பெற்று விளங்கிய மற்றொரு மேதை ஹுனைன் இப்னு இஸ்ஹாக் .
பற்றிப் பார்ப்போம்.

கி.பி. 809 இல் பிறந்த இவர் கலீபா மாமூனின் அரசாங்கத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் , பைத்துல் ஹிக்மா எனும் அறிவு கூடத்தின் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்தார் .கலீஃபா மாமூனின் ஆட்சிகாலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அதிகமான நூல்கள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும் .

இவர் மருத்துவ மேதையாக மட்டுமல்லாமல் சிறந்த தத்துவஞானியாகவும் விளங்கினார். கிரேக்க மொழி அறிவைப் பெறுவதற்கும் கிரேக்க மருத்துவ நூல்களைச் சேகரிப்பதற்காகவும் அலெக்சாந்தரியா வரை பிரையாணம் செய்தார் . இவர் கிரேக்க மருத்துவ நூல்களை மட்டுமின்றி அரிஸ்டோட்டில் எழுதிய , விதங்கள் Catagoried ) பெளதீகம் , ( physics ) பிளேடோ எழுதிய 'குடியரசு ' (Republic) சட்டம் ( Law ) போன்ற நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார் .

அதுமாத்திரமல்ல இவர் கிரேக்க மருத்துவ மேதையான கல்லனால் எழுதப்பட்ட தத்துவ மற்றும் மருத்துவ நூல்கள் அனைத்தையும் இவர் மொழிபெயர்த்தார் . அதில் சிரிய மொழியில் 100 ம் , அறபு மொழியில் 39 ம் வெளியானது . இதை மொழிபெயர்ப்புச் செய்ததன் மூலம் கிழக்கு , மேற்கு நாடுகளில் உன்னதமான ஒரு இடத்தைப் பிடித்தார் .

அதேபோல் மொழிபெயர்ப்புடன் நின்றுவிடாமல் மருத்துவம் பற்றி ஆராய்ந்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயனபடக்கூடிய  பல நூல்களையும் எழுதியுள்ளார் .
குறப்பு :- கண்ணோய்கள் சம்பந்தமாக இவர் எழுதிய நூல் ஐரோப்பியரால் பெரிதும் போட்டப்பட்டது . கண் மருத்துவம் பற்றி அக்காலத்தில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவே ஆகும் .

இவரின் வைத்தியத் திறமையைப் பற்றித் தெரிந்திருந்த கலீபா அல் முதவக்கில் இவரை தமது பிரத்தியோக வைத்தியராக நியமித்து கெளரவித்தார் பின்னர் கி.பி. 877 இல் மரணமானார் .

மேற்குலகு இவரை மறந்தாலும் முஸ்லிம்கள் மறந்துவிடக்கூடாது .

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை

Sunday, October 4, 2015

அர்ராஸி


மத்தியகால உலகில் தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி ( கி.பி . 865 -925 ) ) அறுவை சிகிச்சைக்காக பயண்படுத்தப்படும்( Seton) என்ற நூற்கண்டுக் கருவியின் உரிமையாளர் .

================================


சென்ற வாரம் மத்திய காலத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மருத்துவ மேதை இப்னுஸஹ்ல் பற்றிப் பார்த்தோம் . இந்த வாரத் தொடரில் மத்தியகால உலகில் தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி பற்றிப் பார்ப்போம் .

இவரின் கண்டுபிடிப்புக்கள் பல இருந்தாலும் எங்களுக்கு ஞாபகம் வருகின்ற ஒன்று உள்ளது அதுதான் ( Seton ) இது அறுவை சிகிச்சைக்காக பயண்படுத்தப்படும் ஒருவித நூற்கண்டுக் கருவி 

முதன் முதலில்  அறுவை சிகிச்சையின் போது தையல் போடுவதற்காக மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்திய வரும் இவர்தான் .

முஸ்லிம்களின் மருத்துவ வரலாற்றில் முதன்மை இடத்தை வகித்தவர் இவராவார் . இவர் வாழந்த காலப்பகுதி மருத்துவத்துறையில் ஒளி வாய்ந்த காலம் . என்று மருத்துவத்தின் வரலாற்றில் வர்ணிக்கப்படும் .

இவரைப் பற்றி புகழ்ந்துரைக்காத வரலாற்றாசிரியர்களே இல்லை என்று சொல்லலாம் . இவரைப் பற்றி மாக்ஸ் மேராப் ( Max Meyrhoff ) என்பவர் இவரைப் பற்றி  கூறுகையில் '' இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் மருத்துவர் அர்ராஸி என்பதில் சந்தேகமில்லை ,, என்று கூறுகின்றார் .

Rhazes என்ற இலத்தீன் பெயரில் ஐரோப்பியருக்கு அறிமுகமான இவர்(  கி.பி. 685 )இல் பாரசீகத்தில் தெஹ்ரான் பிரதேசத்தில் ராய் என்னும் கிராமத்தில் பிறந்தார் . அந்தக் கிராமத்தில் பிறந்ததனால் இவரை   அர்ராஸி என்று அழைத்தார்கள் . இவருடைய முழுப் பெயர் அபூபக்கர் முஹம்மது இப்னு ஸகரிய்யா அர்ராஸி ஆகும் .

இளமையிலேயே புத்தி கூர்மையாக இருந்த இவர் பக்தாத்தில் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் (809-877) என்னும் அரபு மருத்துவ மேதை இடம் ஆரம்பக் கல்வி பயின்றார் . பின்னர் அலி இப்னு ஸஹ்ல் இப்னு ரப்பான் என்பவரிடம் கற்றார் . இளமையிலேயே ரச வாதத்தில் ( Alchemy ) ஈடுபட்டிருந்த அர்ராஸி பிற்காலத்தில் மேற்காசியாவின் முழுக் கவனத்தையும் திருப்பினார் .
இவர் அப்பாஸியக் கலீபாக்களில் ஒருவரான முக்தபீ பில்லாஹ் (902-907) என்பவரின் ஆட்சிக் காலத்தில் இராச்சியம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த வைத்திய சாலைகளின் அதிபராக கடமையாற்றினார் .

ஒரு முறை பக்தாத் நகரில் வைத்தியசாலை ஒன்றை நிறுவுவதற்காக பொருத்தமான இட்மொன்றைத் தெரிவு செய்யுமாறு கலீபா முக்தபீ பில்லாஹ் அர்ராஸியை வேண்டிக் கொண்ட சமயம் , ஒவ்வொரு இடத்திலும் இறைச்சித் துண்டுகளைத் தொங்க விடுமாறும் எந்த இடத்திலுள்ள இறைச்சி பழுதடையாமல் நீண்டநேரம் இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்தியசாலையை நிறுவுமாறு அவர் ஆலோசனை கூறினார் . இது அர்ராஸி பெற்றிருந்த அறிவைக் காட்டுகின்றது .

இந்த அளவு மருத்துவக் கலையில் அறிவும் அனுபவங்களும் பெற்றிருந்த அர்ராஸி கணிதம் , வானியல், இரசாயனம், தத்துவம் , இயற்கை விஞ்ஞானம் , உளவியல் துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் . 

இவர் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் . அவற்றில் 140 நூல்கள் மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது . அவை ( அல் ஹாவி , அல் ஜுதரி வல் ஹஸ்பா , கிதாபுத் திப்பி அல் மன்சூரி , கிதாபுல் அஸ்ரார் ) போன்றவையாகும் . இன்னும் சில நூல்கள் உள்ளது அவை ' உடல் கூறு பற்றியவை , மற்றும் சிறுநீர்ப்பையிலும் சிறுநீரகங்களிலும் ஏற்படும் கற்களைப் பற்றிய நூல்  என்பனவும் உள்ளடக்கியுள்ளது .

எனவே இவரை ஐரோப்பிய உலகம் ஞாபகப்படுத்த மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூடாது .

இதை அனைத்து முஸ்லிம்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் .

ஹபீஸுல் ஹக் அப்துல் முத்தலிப் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

Friday, October 2, 2015

இஸ்லாம் ஒர் சம்பூர்ண வாழ்க்கைத்திட்ம் என் பதற்கான காரணம்

.

(1) العبادات
தொழுகை .நோன்பு .ஹஜ் .ஸகாத்.போன்ற கடமைகளுடன் தொடர்பான சட்டங்கள் .
(2)الاحوال الشخصية
குடும்பத்தின் ஆரம்ப வளர்ச்சி முதல் இறுதி வரை தொடர்புபட்ட சட்டங்கள்

(3)المعاملات
மனிதர்கள் தமக்கிடையே மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டங்கள்  (உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பான சட்டம் )

(4)الاحكام السلطانة
ஆட்சியாளனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை ஒழுங்கு படுத்துகின்ற அரசியல் அதிகாரச் சட்டங்கள் .

(5)احكام السلم والحرب
இஸ்லாமிய நாடு ஏனைய நாடுகள் சமுகங்களுடன் மேற்கொள்ளும் உறவுகள் தொடர்பான சட்டங்கள்  .

இவை குறிப்பிட்ட சில சட்டங்கள்.
இவை தொடர்பான வேறு சில சட்டங்களும் உள்ளன .

எனவே மேல்லுள்ள சட்டங்கேள போதும் இஸ்லாம் ஒர் சம்பூர்ண வாழ்க்கைத்திட்டம் என்பதற்கு .

கலாநிதி முனீர் அல் கழ்பான் (منير الغضبان)

இவர் சிரியாவைச்  சேர்ந்தவர்.   இவர் 1942 இல் சிரியாவின் தலைநகரான திமஷ்கஷில் தில் என்ற இடத்தில் பிறந்தார் .இவர் ஆரம்ப கல்வியை தனது கிராமத்தில் படித்து  பின்னர் ஜாமியதுல் திமஷ்கஷ் பல்கலைக்கழகத்தில் ஷரீஆத் துறையில் diploma முடித்தார் .பின்னர் தனது கலைமானிப் பட்டப் படிப்பை அறபு மொழியில்  1972 ல் எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார் .மேலும் இவர் தனது கலாநிதிப் பட்டப் படிப்பை 1977 ல் சூடான் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார் . அதே போன்று இவர் 1972 ல் திமஷ்கஷில் உள்ள ஆரம்ப
இடைநிலை பாடசாலை இன்  ஆசிரியர்ராகவும் மதீனாவில் உள்ள பெண்கள் கல்லூரியின் ஆசிரியராகவும்  மக்காவில் உள்ள உம்முல்குரா  பல்கலைக்கழகத்தின் ஆய்வு பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 2014/June /01 திகதி  மக்காவிலே இறையில்லம் சேர்ந்தார் .

இவர் எழுதிய (  நபி  ஸல் அவர்களின் இயங்கியல் வழிமுறை) என்ற புத்தகம் மிகவும் பிரபல்யமானது .
(منهج الحركى للسيرة النبوية)

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை

தனிமனித சொத்துரிைம சம்மந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு

.

சொத்து என்றால் என்ன?
பொதுவாக சொத்து என்றால் ஒரு மனிதன் தேடி உழைத்து  சொந்தமாக வைத்திருக்கின்ற அனைத்தும் சொத்தாகும். 
இதற்கு இமாம் அபூ  ஹனீபா (றஹ்) அவர்களின் வரைவிலக்கணம்
''செல்வம் உடமையாகி கொள்ளகூடியதாகவும் பிரையோசனம்தரக்கூடியதாக இருக்கின்ற அனைத்தையும் செல்வமாக கணிக்கமுடியும்''.

02) இஸ்லாத்தில் ஒரு தனிமனிதன் சொத்துக்களை அனுபவிக்கமுடியுமா?
இஸ்லாத்தின் பார்வையில் ஒரு தனிமனிதன் சொத்துக்களை சேகரிக்கவும் அனுபவிக்கவும் முடியும் . இதற்கு யூஸுப் அல் கர்ளாவியின் கருத்து என்னவென்றால் ஒரு மனிதன் சொத்துக்களை வைத்திருக்கின்றபோதுதான் அவனுக்கு ஸகாத் கடைமயாகின்றது. எனவே ஒரு தனிமனிதன் ஸகாத்தை கொடுத்து சொத்துக்களை அனுபவிக்கமுடியும்.

குறிப்பு : பொது உடமையாகக்காணப்படுகின்ற சொத்துக்களை ஒரு தனிமனிதன்  அனுபவிக்க முடியாது. ஏன் என்றால் அந்த சொத்து மக்களுடையது. அவ்வாறு ஒரு தனிமனிதன் பொதுச்சொத்தை அனுபவிக்கின்ற போது சமூக கத்தில் பணரீதியான ஏற்றதாழ்வு ஏற்படலாம்.சில வேளை நாடுகளுக்கிடையில்  யுத்தங்கள் வரலாம் என்ற நோக்கத்துக்காக இஸ்லாம் பொது உடமையான சொத்துக்களை ஒரு தனி மனிதன் பயன்படுத்துவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

Hafees (Fathih)