Sunday, October 4, 2015

அர்ராஸி


மத்தியகால உலகில் தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி ( கி.பி . 865 -925 ) ) அறுவை சிகிச்சைக்காக பயண்படுத்தப்படும்( Seton) என்ற நூற்கண்டுக் கருவியின் உரிமையாளர் .

================================


சென்ற வாரம் மத்திய காலத்தில் மருத்துவத்துறையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த மருத்துவ மேதை இப்னுஸஹ்ல் பற்றிப் பார்த்தோம் . இந்த வாரத் தொடரில் மத்தியகால உலகில் தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி பற்றிப் பார்ப்போம் .

இவரின் கண்டுபிடிப்புக்கள் பல இருந்தாலும் எங்களுக்கு ஞாபகம் வருகின்ற ஒன்று உள்ளது அதுதான் ( Seton ) இது அறுவை சிகிச்சைக்காக பயண்படுத்தப்படும் ஒருவித நூற்கண்டுக் கருவி 

முதன் முதலில்  அறுவை சிகிச்சையின் போது தையல் போடுவதற்காக மிருகங்களின் குடல் இழைகளைப் பயன்படுத்திய வரும் இவர்தான் .

முஸ்லிம்களின் மருத்துவ வரலாற்றில் முதன்மை இடத்தை வகித்தவர் இவராவார் . இவர் வாழந்த காலப்பகுதி மருத்துவத்துறையில் ஒளி வாய்ந்த காலம் . என்று மருத்துவத்தின் வரலாற்றில் வர்ணிக்கப்படும் .

இவரைப் பற்றி புகழ்ந்துரைக்காத வரலாற்றாசிரியர்களே இல்லை என்று சொல்லலாம் . இவரைப் பற்றி மாக்ஸ் மேராப் ( Max Meyrhoff ) என்பவர் இவரைப் பற்றி  கூறுகையில் '' இஸ்லாமிய உலகின் மிகப்பெரும் மருத்துவர் அர்ராஸி என்பதில் சந்தேகமில்லை ,, என்று கூறுகின்றார் .

Rhazes என்ற இலத்தீன் பெயரில் ஐரோப்பியருக்கு அறிமுகமான இவர்(  கி.பி. 685 )இல் பாரசீகத்தில் தெஹ்ரான் பிரதேசத்தில் ராய் என்னும் கிராமத்தில் பிறந்தார் . அந்தக் கிராமத்தில் பிறந்ததனால் இவரை   அர்ராஸி என்று அழைத்தார்கள் . இவருடைய முழுப் பெயர் அபூபக்கர் முஹம்மது இப்னு ஸகரிய்யா அர்ராஸி ஆகும் .

இளமையிலேயே புத்தி கூர்மையாக இருந்த இவர் பக்தாத்தில் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் (809-877) என்னும் அரபு மருத்துவ மேதை இடம் ஆரம்பக் கல்வி பயின்றார் . பின்னர் அலி இப்னு ஸஹ்ல் இப்னு ரப்பான் என்பவரிடம் கற்றார் . இளமையிலேயே ரச வாதத்தில் ( Alchemy ) ஈடுபட்டிருந்த அர்ராஸி பிற்காலத்தில் மேற்காசியாவின் முழுக் கவனத்தையும் திருப்பினார் .
இவர் அப்பாஸியக் கலீபாக்களில் ஒருவரான முக்தபீ பில்லாஹ் (902-907) என்பவரின் ஆட்சிக் காலத்தில் இராச்சியம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த வைத்திய சாலைகளின் அதிபராக கடமையாற்றினார் .

ஒரு முறை பக்தாத் நகரில் வைத்தியசாலை ஒன்றை நிறுவுவதற்காக பொருத்தமான இட்மொன்றைத் தெரிவு செய்யுமாறு கலீபா முக்தபீ பில்லாஹ் அர்ராஸியை வேண்டிக் கொண்ட சமயம் , ஒவ்வொரு இடத்திலும் இறைச்சித் துண்டுகளைத் தொங்க விடுமாறும் எந்த இடத்திலுள்ள இறைச்சி பழுதடையாமல் நீண்டநேரம் இருக்கிறதோ அந்த இடத்தில் வைத்தியசாலையை நிறுவுமாறு அவர் ஆலோசனை கூறினார் . இது அர்ராஸி பெற்றிருந்த அறிவைக் காட்டுகின்றது .

இந்த அளவு மருத்துவக் கலையில் அறிவும் அனுபவங்களும் பெற்றிருந்த அர்ராஸி கணிதம் , வானியல், இரசாயனம், தத்துவம் , இயற்கை விஞ்ஞானம் , உளவியல் துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் . 

இவர் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் . அவற்றில் 140 நூல்கள் மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது . அவை ( அல் ஹாவி , அல் ஜுதரி வல் ஹஸ்பா , கிதாபுத் திப்பி அல் மன்சூரி , கிதாபுல் அஸ்ரார் ) போன்றவையாகும் . இன்னும் சில நூல்கள் உள்ளது அவை ' உடல் கூறு பற்றியவை , மற்றும் சிறுநீர்ப்பையிலும் சிறுநீரகங்களிலும் ஏற்படும் கற்களைப் பற்றிய நூல்  என்பனவும் உள்ளடக்கியுள்ளது .

எனவே இவரை ஐரோப்பிய உலகம் ஞாபகப்படுத்த மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூடாது .

இதை அனைத்து முஸ்லிம்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் .

ஹபீஸுல் ஹக் அப்துல் முத்தலிப் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை

No comments:

Post a Comment