A.M. ஹபீஸுல் ஹக்
இன்று திருமண ஒப்பந்தம் என்பது ஒரு பொழுது போக்காக உள்ளது . இன்று திருமண ஒப்பந்தம் செய்துவிட்டு ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமாக பேசிப் பழகுகின்றார்கள் . இஸ்லாமிய திருமண ஒப்பந்தம் என்பது அப்படியல் . அதற்கும் வரையறைகள் உள்ளது இதை நாங்கள் கண்டிப்பாக விளங்க வேண்டும் .
திருமண ஒப்பந்தம் என்பது ஒரு ஆணின் குடும்பம் ஒரு பெணின் குடும்பத்தினர்ருடன் தன்னுடைய பிள்ளையை திருமணம் செய்வதற்கான வாக்குறுதி . ( இது ஆண் தரப்பிலும் இடம்பெற்ற முடியும் அல்லது பெண் தரப்பிலும் இடம்பெற்ற முடியும் )
உண்மையில் திருமண ஒப்பந்தத்தின் நோக்கங்களில் ஒன்று '' பரஸ்பரம் ,, ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தைப் புரிந்து கொள்ளுதல் . அதேபோல் அந்தக் குடும்பத்தினர் திருமணம் முடிக்க இருக்கின்ற ஆணையும் பெண்ணையும் புரிந்து கொள்ளுதல் இதுதான் திருமண ஒப்பந்தத்தின் நோக்கம் .
ஆனால் இன்று பரஸ்பரம் என்ற நோக்கம் அழிந்து இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறணாக மாறி வருகின்றது
. உ+ம் = திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆணும் பெண்ணும் பேச முடியும் . ஆனால் அவர்கள் பேசுவது ஒரு விபரிதம் அல்லது உணர்வை தூண்டக்கூடியதாக அமைந்தால் அது இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறனானதாக மாறிவிடும் .
திருமண ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் .
=============================
.01) திருமணம் முடிக்கின்ற பெண் திருமணம் முடிக்க தடுக்கப்பட்டவளாக இருக்கக் கூடாது .
02) திருமணம் முடிக்க இருக்கின்ற பெண்ணுடன் பேறு எவரும் திருமணம் ஒப்பந்தம் செய்திருக்கக் கூடாது .
இந்த இரண்டு நிபந்தனைகளும் மீறும் சந்தர்பத்தில் திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகாது . இதுதான் இஸ்லாத்தின் நினைப்பாடு . எனவே திருமண ஒப்பந்தம் என்பது குடும்பத்திற்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் . அது இஸ்லாத்திற்கு முறணாக அமைக்கூடாது . இதுதான் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தம் .
ஹபீஸூல் ஹக் அப்துல் முத்தலிப்
varipathanchenai
No comments:
Post a Comment