மேற்குலகு மறந்த முஸ்லிம் கண்டுபிடிப்பாளர் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் .
================================
இதை மேற்குலகு மறந்தாலும் முஸ்லிம்களாகிய நாங்கள் மறக்கக் கூட . இதை மற்றவர்களுக்கும் எத்திவையுங்கள் இறைவன் அருள் புரிவான் .
சென்ற வாரம் மத்திய காலத்தில் தோன்றிய மருத்துவ மேதைகளுள் மிகச்சிறந்தவர் அர்ராஸி பற்றி பார்த்தோம் . இந்த வாரத் தொடரில் 9 ஆம் நூற்றாண்டில் அப்பாஸியக் கலீபாக்கள் அல் மாமூன் ( 813-833 ) அல் முதவக்கில் (817-861) ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பிரசித்து பெற்று விளங்கிய மற்றொரு மேதை ஹுனைன் இப்னு இஸ்ஹாக் .
பற்றிப் பார்ப்போம்.
கி.பி. 809 இல் பிறந்த இவர் கலீபா மாமூனின் அரசாங்கத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் , பைத்துல் ஹிக்மா எனும் அறிவு கூடத்தின் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்தார் .கலீஃபா மாமூனின் ஆட்சிகாலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அதிகமான நூல்கள் இவரால் மொழிபெயர்க்கப்பட்டவையாகும் .
இவர் மருத்துவ மேதையாக மட்டுமல்லாமல் சிறந்த தத்துவஞானியாகவும் விளங்கினார். கிரேக்க மொழி அறிவைப் பெறுவதற்கும் கிரேக்க மருத்துவ நூல்களைச் சேகரிப்பதற்காகவும் அலெக்சாந்தரியா வரை பிரையாணம் செய்தார் . இவர் கிரேக்க மருத்துவ நூல்களை மட்டுமின்றி அரிஸ்டோட்டில் எழுதிய , விதங்கள் Catagoried ) பெளதீகம் , ( physics ) பிளேடோ எழுதிய 'குடியரசு ' (Republic) சட்டம் ( Law ) போன்ற நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார் .
அதுமாத்திரமல்ல இவர் கிரேக்க மருத்துவ மேதையான கல்லனால் எழுதப்பட்ட தத்துவ மற்றும் மருத்துவ நூல்கள் அனைத்தையும் இவர் மொழிபெயர்த்தார் . அதில் சிரிய மொழியில் 100 ம் , அறபு மொழியில் 39 ம் வெளியானது . இதை மொழிபெயர்ப்புச் செய்ததன் மூலம் கிழக்கு , மேற்கு நாடுகளில் உன்னதமான ஒரு இடத்தைப் பிடித்தார் .
அதேபோல் மொழிபெயர்ப்புடன் நின்றுவிடாமல் மருத்துவம் பற்றி ஆராய்ந்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயனபடக்கூடிய பல நூல்களையும் எழுதியுள்ளார் .
குறப்பு :- கண்ணோய்கள் சம்பந்தமாக இவர் எழுதிய நூல் ஐரோப்பியரால் பெரிதும் போட்டப்பட்டது . கண் மருத்துவம் பற்றி அக்காலத்தில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவே ஆகும் .
இவரின் வைத்தியத் திறமையைப் பற்றித் தெரிந்திருந்த கலீபா அல் முதவக்கில் இவரை தமது பிரத்தியோக வைத்தியராக நியமித்து கெளரவித்தார் பின்னர் கி.பி. 877 இல் மரணமானார் .
மேற்குலகு இவரை மறந்தாலும் முஸ்லிம்கள் மறந்துவிடக்கூடாது .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment