Monday, June 27, 2016

பலஸ்தீன் பூமி எம்உம்மத்தின் அடையாளம்

இன்று   அட்டாளைச்சேனை பிரதேச சபை  கேட்போர் கூடத்தில் #பலஸ்தீன்_பூமி_எம்_உம்மத்தின்_அடையாளம் எனும் கருப் பொருப்பொருளில்  Institute of  creatvity and  thinking எனும்  நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் எனக்கும்  பலஸ்தீன்மீதான யூத ஆக்கிரமிப்பின் பின்னணி என்ன ? என்ற தலைப்பில் விரிவுரை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இச்சந்தர்ப்பத்தைத் தந்த இறைவனுக்கும் மற்றும் இப்படியான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த  Institute of  creatvity and  thinking இன் உறுப்பினர்கள்ளான
( மனூஸ் sir and சகோதரர் அஷ்றக் )  இவர்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
varipathanchenai

மூன்றாம் உலகப்போரிற்கு தயாராகும் வளர்ந்துவரும் நாடுகள் ( Chemical war )

பொதுவாக யுத்தம் என்கின்ற போது எங்களுடைய சிந்தனையில் உதிப்பது ஆயுத முனையில் போராடுவதுதான் ஆனால் பயோ யுத்தம் ( chemical war) என்பது ஒரு நாட்டுடன் எந்தவித இரத்தமும் சிந்தாமல் எந்தவித படைகளையும் திரட்டாமலும் கெமிகல்ஸ் மருந்துக்களைப் பயன்படுத்தி அந்த நாடுகளை அழித்தல் என்பதுவே பயோ யுத்தம் ( Biological attack)

அதாவது இரண்டாம் உலகமாக யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்கா எப்படி நாடுகளுக்கிடையில் சண்டைகளை மூட்டிவிட்டு எப்படி ஆயுதங்களை விற்பனை செய்ததுவோ அதேபோல் மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை அழித்து தான் வல்லரசாக இருக்க வேண்டும் என்பதற்காக புதிய கெமிகல் மாத்திரைகளை வளர்முக நாடுகளுக்கு கொடுத்துவிட்டு அந்த கெமிகல் மாத்திரைகளால் வருகின்றன நோய்களுக்கான மருந்துகள் எங்களிடம்தான் உள்ளது அதை நாங்களே தருகின்றோம் என்று சொல்லி இவர்களின் பொருளாதாரத்தா வலுப்படுத்துவது . இப்படி கொடூரமான யுத்தத்தை உலகில் பல நாடுகள் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது அதேபோல் ஒரு சில வர்த்தக நிறுவனங்களும் இதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது . எனவே இது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் செல்பவர்களுக்கு இப்படியான chemical மாத்திரைகளையும் கெமிகல் ஊசிகளையும் பயன்படுத்தப்படுவதாக சில செய்திகள் கசிந்தன எனவே இது குறித்து முஸ்லிம்களாகிய நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .

Ash Sheikh Hafeesul haq ( Fathihi) 
Varipathanchenai

பலஸ்தீன்மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கட்டம்.

இதில் கறுப்பு நிறத்தில் உள்ளது பலஸ்தீன் வெள்ளை நிறத்தில் இருப்பது  இஸ்ரேல்

பாருங்கள் 1947 இன் பிறகும் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எப்படி உள்ளதென்று .

Wednesday, June 22, 2016

ஈரானில் ஷிஆக்களால் அடக்கி ஒடுக்கப்படும் சுன்னா முஸ்லிம்கள்

ஈரானில் 70 மில்லியன் சனத்தொகையில் சுமார் 10 வீதமானவர்கள் சுன்னா முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஷீஆ அரசாங்கத்தினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி காத்தமியின் ஆட்சியின் கீழ் சுன்னா முஸ்லிம்களுக்கு எதிரான மதப் பாகுபாடுகளும் தணிந்திருந்தபோதும் அஹ்மத் நஜாதின் ஆட்சியில் சுன்னி- ஷீஆ பகைமை மீளவும் அரங்கேற ஆரம்பித்தது.

அன்றிலிருந்து இன்றுவரையும் சுன்னி முஸ்லிம்களின் மதஉரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது

1979 புரட்சியின் பின்னர் ஈரானில் கருத்துச் சுதந்திரம் முளுமையாகத் தடை செய்யப்செய்யப்பட்டது.

இன்று கூட சுன்னா முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு பள்ளிவாசல் இல்லை ஆனால் அங்கு கிறிஸ்தவர்களுக்கென்று தனியான மத ஆலையங்கள் அமைப்பதற்கு ஈரான் அரசு அனுமதி வளங்கியுள்ளது.
அவர்கள் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு ஷீஆ அரசாங்கத்தால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றார்கள் .

இதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் .

ஹபீஸுல் ஹக்  (பாதிஹ்) 

Wednesday, June 15, 2016

தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை


நபி (ஸல்) அவர்களின் றமழான் மாத இரவு தொழுகை பற்றி அப்துர் றஹ்மான் பின் அவ்ஃப் (றழி) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களிடம் வினவிய போது: நபி (ஸல்) அவர்கள் றமழானிலோ றமழான் அல்லாத காலங்களிலோ 11 றகஅத்களை விட அதிகமாக தொழவில்லை, முதலில் 4 றகஅத்கள் தொழுவார்கள், அதன் அழகு, நீளம் பற்றி வினவாதீர்கள் (அவ்வளவு அழகும் நீளமுமாகும்), பின்னர் 4 றகஅத்கள் தொழுவார்கள், அதன் அழகு, நீளம் பற்றி வினவாதீர்கள் (அவ்வளவு அழகும் நீளமுமாகும்). (புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் பின்வருமாறு கூறிகின்றார்கள்:
صَلَّيْتُ مع رسول اللَّهِ صلى الله عليه وسلم فَأَطَالَ حتى هَمَمْتُ بِأَمْرِ سَوْءٍ، قال: قِيلَ: وما هَمَمْتَ بِهِ؟ قال: هَمَمْتُ أَنْ أَجْلِسَ وَأَدَعَهُ
“நான்  இறைதூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன், நான் தப்பான ஒரு விடயத்துக்கு முயற்சிக்கும் அளவுக்கு நீட்டித்தொழுதார்கள், நீங்கள் எதற்கு முயற்சித்தீர்கள் என விவப்பட்டது, அதற்கவர்கள்: நான் அமர்வதற்கும் அதனை விட்டு விடுவதற்கும் முயற்சித்தேன் எனக் குறிப்பிட்டார்கள்.  (புஹாரி, முஸ்லிம்).
عن الْمُغِيرَةَ رضي الله عنه قال: إنْ كان النبيُ صلى اللهُ عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حتى تَرِمُ قَدَمَاهُ أو سَاقَاهُ، فَيُقَالُ له، فيقول: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا) رواه البخاري(1078) ومسلم(2819)
நபி (ஸல்) அவர்களின் இரவுத்தொழுகை பற்றி ஹுதைபா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
عن حُذَيْفَةَ رضي الله عنه قال:( صَلَّيْتُ مع النبي صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَافْتَتَحَ الْبَقَرَةَ فقلت يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ ثُمَّ مَضَى فقلت يُصَلِّي بها في رَكْعَةٍ فَمَضَى فقلت يَرْكَعُ بها ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ فَقَرَأَهَا يَقْرَأُ مُتَرَسِّلًا إذا مَرَّ بِآيَةٍ فيها تَسْبِيحٌ سَبَّحَ وإذا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ وإذا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ ثُمَّ رَكَعَ فَجَعَلَ يقول سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ فَكَانَ رُكُوعُهُ نَحْوًا من قِيَامِهِ ثُمَّ قال سمع الله لِمَنْ حَمِدَهُ ثُمَّ قام طَوِيلًا قَرِيبًا مِمَّا رَكَعَ ثُمَّ سَجَدَ فقال سُبْحَانَ رَبِّيَ الأعلى فَكَانَ سُجُودُهُ قَرِيبًا من قِيَامِهِ ...)   رواه مسلم.).
“நான் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன்ன் தொழுதேன், அவர்கள் சூரா அல் பகராவை ஆரம்பித்தார்கள், அவர்கள் 100 ஆயத்துகளுடன் ருகூஃ செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் தொடர்ந்து சென்றார்கள், சூராவை பூரணப்படுத்துவார்கள் என்றேன், பின்னர் ஆல இம்ரானை ஆரம்பித்தார்கள், அவர்கள் ஆருதலாகவே ஓதுவார்கள், தஸ்பீஹுடைய இடம் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள், பிரார்த்தனைக்குரிய இடம் வந்தால் பிரார்த்திப்பார்கள், பாதுகாப்பு தேடுமிடத்தில் பாதுகாப்புத் தேடுவார்கள், பின்னர் ருகூஃ செய்து அதில் “ஸுப்ஹான றப்பியல் அழீம்” எனக் கூறலானார்கள், அவர்களது ருகூஃவும் கிட்டத்தட்ட நின்ற அதே அளவு இருந்தது, பின்னர் (ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறினார்கள், பின்னர் கிட்டத்தட்ட ருகூஃவின் அளவுக்கு நின்றார்கள், பின்னர் ஸுஜூது செய்தார்கள், அதில் “சுப்ஹான றப்பியல் அஃலா” எனக் கூறினார்கள், அவர்களது ஸுஜூதும் நின்று தொழுத அதே அளவு இர்ருந்தது…” (முஸ்லிம்).
அபூ தாவுதில் வரும் அறிவிப்பில் ஹுதைபா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
عند أبي داود عن حذيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قرأ الأربع الطوال في أربع ركعات: البقرة وآل عمران والنساء والمائدة أو الأنعام
“நபி (ஸல்) அவர்கள் நான்கு றகஅத்களில் நான்கு பெரும் சூராக்களான பகரா, ஆல இம்ரான், அன்னிஸா, அல்மாயிதா அல்லது அல் அன்ஆம் ஆகியவற்றை ஓதினார்கள். (அபூ தாவுத்).
முகீரா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தனதிரு பாதங்களும் அல்லது கால்களும் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள், இது அவர்களுக்கு சொல்லப்பட்ட போது: நான் நன்றியுள்ளதொரு அடியானாக இருக்கக் கூடாதா?” எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
மேற்குறித்த அறிவிப்புக்களில் இருந்து நபி (ஸல்) அவர்களின் இரவுத்த்ஒழுகையில் இரு பன்புகளை அவதானிக்கலாம், அவையிரண்டும் அவர்களது சுன்னாவாகும்:
1. எட்டு றகஅத்கள் இரவுத்தொழுகையும் மூன்று றகஅத்கள் வித்ரு தொழுகஇயும் தொழுதார்கள், இன்னும் முஸ்லிமில் வரும் அறிவிப்பில் 10 றகஅத்கள் இரவுத்தொழுகையும் மூன்று வித்ரும் தொழுதார்கள் என வந்துள்ளது.
2. தொழுகையின் உள்ளடக்கமான நீண்ட ஓதல், நீண்ட ருகூஃ, ருகூஃக்குப் பின்னர் நீண்ட நிற்றல், நீண்ட ஸுஜூது.

இவையிரண்டும் சேர்ந்துதான் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவாகும், உள்ளடக்கத்தில் கவனமற்று அதன் தோற்றமான எட்டு றகஅத்களா அல்லது உள்ளடக்கத்தை பேணும் வகையில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் நிலையை கருத்திற் கொண்டு றகஅத்களை அதிகரிப்பதா?

இங்குதான் உமர் (றழி) அவர்களின் இஜ்திஹாத் வருகின்றது, அவர்கள் நபி (ஸல்) அவர்ளின் சுன்னாவுக்கு மாறு செய்பவர் அல்ல, இந்த இடத்தில் றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சுன்னாவுக்கு மாற்றமானது என்றிருந்தால் அதில் மாற்றம் செய்திருக்க மாட்டார்கள், அனைத்து ஸஹாபாக்களும் அந்த இஜ்திஹாதை ஏற்றுக் கொண்டனர்.
றஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் போல நீளமாக மக்கள் தொழ முடியாதபோது உமர் (றழி) அவர்கள் ஓதுவதை குறைத்து றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்,
ஸாயிப் பின் யஸீத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் காலத்தில் 20 றகஅத்கள் தொழுது கொண், டிருந்தோம். (பைஹகி).
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்ட அதே அளவு ஓதவேண்டும், ஆனால் மக்களின் பலவீன நிலையையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே உமர் (றழி) விருப்பமாகும், அதற்காகவே ஓதுவதை குறைத்து றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள், அதனை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த பின்னணியில் இஸ்லாமிய சட்டத்தின் இமாம்களும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் தமது சமூக சூழலுக்கமைய பல எண்ணிக்கையை குறிப்பிடுகின்றனர்.
தவ்ரி (தாபிஈ), அபூ ஹனீபா, ஷாபிஈ ஆகியோர் உள்ளிட்ட பெரும்பாலான சட்ட அறிஞர்கள் 20 றகஅத்கள் எனவும், இமாம் மாலிக் 36 றகஅத்கள் எனவும், இமாம் திர்மிதி ஒரு றகஅத் வித்ரு உட்பட 41 றகஅத்கள் எனவும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் 8 றகஅத்கள் தொழுவது சுன்னத்தானது, அதற்கு மேலதிகமாக தொழுவது  சிறந்தது என கருதினர்,
பெரும்பாலான சட்ட அறிஞர்கள் 8 க்கு மேற்பட்ட பல எண்ணிக்கைகளைக் குறிப்பிடுகின்றனர், இவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றன்ர்
حديث ابن عمر في الصحيحين أن النبي صلى الله عليه وسلم قال: صلاة الليل مثنى مثنى فإذا خفت الصبح فأوتر بواحدة. رواه الجماعة،
1. “நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரவுத்தொழுகை இரண்டு இரண்டாக தொழப்படும், ஸுபஹ் நெருங்கி விட்டால் வித்ரு ஒன்று தொழப்படும்” (புஹாரி, முஸ்லிம்)
இவ்விரண்டாக தொழ வேண்டும், எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை..

حديث السائب بن يزيد قال: كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة وكانوا يقرأون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام. وإسناده صحيح كما قال النووي في المجموع ورواه مالك في الموطأ.
2. ஸாயிப் பின் யஸீத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் காலத்தில் 20 றகஅத்கள் தொழுது கொண், டிருந்தோம், அதில் நூறு ஆயத்கள் அடங்கிய சூராக்களை ஓதுவார்கள், நீண்ட நிற்றலின் காரணமாக உஸ்மான் (றழி) அவர்களின் காலத்தில் தமது தடிகளின் மீது சாய்வார்கள். (முஅத்தா மாலிக், இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானது. (நவவி)).
حديث ربيعة بن كعب أنه سأل النبي صلى الله عليه وسلم مرافقته في الجنة فقال صلى الله عليه وسلم: فأعني على نفسك بكثرة السجود فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة. رواه مسلم.
3. றபீஆ பின் கஅப் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சுவர்க்கத்தில் ஒன்றாக இருக்க வேண்டும் என கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள்: “அதிகமாக சுஜூது செய்வதன் மூலம் அதற்கு நீ எனக்கு உதவி செய்வாயாக, நீங்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தடவை சுஜூது செய்தால் அல்லாஹ் அதன் மூலம் உங்களின் ஒரு அந்தஸ்த்தை உயர்த்தி, ஒரு பாவத்தையும் இறக்கி வைக்கின்றான்” (முஸ்லிம்).
இதில் எண்ணிக்கை வரையறுக்கப்படாத வகையில் அதிக சுஜூது செய்ய வேண்டுமென கேட்டார்கள்.
நவீன காலத்தில் அஷைக் அல்பானி (றஹ்) அவர்கள் தராவீஹ் 8 றகஅத்கள் மாத்திரமே தொழ வேண்டும், அதற்கு மேலதிகமாக தொழுவது பித்அத்தானது எனக் கருதினார்கள், இதற்கவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைத்தார்கள்:

حديث عائشة: أن النبي صلى الله عليه وسلم ما كان يزيد في رمضان ولا غيره على إحدى عشرة ركعة. متفق عليه.
ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் றமழானிலோ றமழான் அல்லாத காலங்களிலோ 11 றகஅத்களஇ விட அதிகமாக தொழ்ழ்வில்லை” (புஹாரி, முஸ்லிம்).
حديث جابر: أن النبي صلى الله عليه وسلم صلى في شهر رمضان ثمان ركعات وأوتر. رواه الطبراني وحسنه الألباني.
ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் றமழான் மாதத்தில் 8 றகஅத்கள் தொழுது பின்னர் வித்ரு த்ஒழுதார்கள்”  (தபரானி).
பெரும்பான்மை அறிஞர்கள் அல்பானி (றஹ்) அவர்களின் ஆதாரங்களுக்கு பின்வருமாறு மறுப்புத்தெரிவித்தனர்:
1. தராவீஹ் 8 றகஅத்கள் மாத்திரமே தொழுவது வாஜிபானது, அதனை விட அதிகரிப்ப்பது மார்க்கத்தில் புதுமையை (பித்அத்) ஏற்படுத்தியதாக அமையும் என்ற கருத்தை ஸஹாபாக்களோ தாபியீன்களோ பின்னர் வந்த இமாம்களோ குறிப்பிடவில்லை.
2. ஆயிஷா (றழி) அவர்களின் அறிவிப்பு நபியவர்களின் ஒரு செயலை குறிப்பிட்டமையாகும், அது ஆகக் கூடியது அது விரும்பத்தக்கது என்பதையே காட்டும், வித்ரு உட்பட 11 றகஅத்கள் கடமை என்பதைக்காட்டாது. அத்துடன் நபி (ஸல்) அவர்கள் 11 ஐ விட அதிகம் தொழுததாக இன்னும் சில அறிவிப்புகள் வந்துள்ளன, இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் 13 றகஅத்கள் இரவுத்தொழுகையில் தொழுதார்கள். (புஹாரி).
3. 13 றகஅத்கள் என வந்துள்ள ஹதீஸ்களுக்கு அல்பானி (றஹ்) அவர்கள் அவற்றில் 2 றகஅத்கள் இஷாவின் பிந்த்இய சுன்னத் என அளித்த விளக்கம் வலிந்து கொடுக்கப்பட்டதாகும், அதனைக் காட்டும் ஆதாரம் வரவில்லை.
4. ஏனைய சுன்னத்தான தொழுகை போன்று இதுவும் மாற்ற முடியாத குறித்த எண்ணிக்கை கொண்டது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல, இரண்டிரண்டாக தொழப்படும் இரவுத்தொழுகை என பொதுவாக வந்துள்ளது.
இந்த பின்னணியில் இமாம் இப்னு தைமியா (றஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் றமழான் இரவுத்தொழுகையின் எண்ணிக்கையை வரையறுக்க வில்லை, ஆனால் அவர்கள் 11 ஐ விட அதிகரிக்கவுமில்லை, அவர்கள் நீண்ட றகஅத்களாக தொழுதார்கள், உமர் (றழி) அவர்கள் உபை (றழி) அவர்களை இமாமாக்கியபோது 20 தொழுதார்கள், பின்னர் 3 வித்ரு தொழுதார்கள், றகஅத்களின் எண்ணிக்க்கையை ஓதுதலின் அளவுக்கு அதிகரித்தார்கள், ஒரு றகஅத்தை மிக அதிகமாக நீட்டுவதனை விட அது மஃமூன்களுக்கு இலகுவாக இர்ருந்தது, பின்னர் இன்னும் சிலர் 40 றகஅத்கள் தராவீஹும் 3 வித்ரும் தொழுதார்கள், இவை அனைத்துமே ஆகுமானதாகும், றமழானில் இந்த எந்த வகையில் தொழுதாலும் அது சரியானதாகும், இது தொழுகையாளிகளின் நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படும், யார் றமழான் இரவு தொழுகை கூட்டவோ குறைக்கவோ முடியாத எண்ணிக்கை நபியவர்களிடமிருந்து வந்துள்ளது என நினைக்கின்றாறோ அவர் தவறிழைத்து விட்டார்.” (மஜ்மூ பதாவா இப்னு தைமியா).
ஆக, மேற்குறித்த ஆதாரங்களினடிப்படையில் ஆயிஷா (றழி) அறிவிப்பது போல தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை நபி (ஸல்) அவர்களின் தொழுகை போன்று தொழுதால் 8 றகஅத்களாகும், ஓதுவதை குறைக்கும் அளவுக்கு றகஅத்களை அதிகரிப்பதும் சுன்னாவை பாதுகாப்பதாகும். அல்லாஹு அஃலம்.

Dr. Nayeem

Tuesday, June 14, 2016

ستكون  نبوة ماشاءالله أن تكون ثم يرفعه الله إذا شاء.

ﻓﻘﺪ ﺭﻭﻯ ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﻋﻦ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺍﻟﻠﻪ، ﻗﺎﻝ :

ﻛﻨﺎ ﺟﻠﻮﺳﺎً ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪ ﻓﺠﺎﺀ ﺃﺑﻮ ﺛﻌﻠﺒﺔ ﺍﻟﺨﺸﻨﻲ ﻓﻘﺎﻝ : ﻳﺎ ﺑﺸﻴﺮ ﺑﻦ ﺳﻌﺪ ﺃﺗﺤﻔﻆ ﺣﺪﻳﺚ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﺍﻷﻣﺮﺍﺀ، ﻓﻘﺎﻝ ﺣﺬﻳﻔﺔ : ﺃﻧﺎ ﺃﺣﻔﻆ ﺧﻄﺒﺘﻪ . ﻓﺠﻠﺲ ﺃﺑﻮ ﺛﻌﻠﺒﺔ .
ﻓﻘﺎﻝ ﺣﺬﻳﻔﺔ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺗﻜﻮﻥ ﺍﻟﻨﺒﻮﺓ ﻓﻴﻜﻢ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺗﻜﻮﻥ، ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺍﻟﻠﻪ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ، ﺛﻢ ﺗﻜﻮﻥ ﺧﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ ﻓﺘﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺗﻜﻮﻥ، ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺍﻟﻠﻪ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ، ﺛﻢ ﺗﻜﻮﻥ ﻣﻠﻜًﺎ ﻋﺎﺿًﺎ ﻓﻴﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﻜﻮﻥ، ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ، ﺛﻢ ﺗﻜﻮﻥ ﻣﻠﻜًﺎ ﺟﺒﺮﻳﺔ ﻓﺘﻜﻮﻥ ﻣﺎ ﺷﺎﺀ ﺍﻟﻠﻪ ﺃﻥ ﺗﻜﻮﻥ، ﺛﻢ ﻳﺮﻓﻌﻬﺎ ﺍﻟﻠﻪ ﺇﺫﺍ ﺷﺎﺀ ﺃﻥ ﻳﺮﻓﻌﻬﺎ، ﺛﻢ ﺗﻜﻮﻥ ﺧﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ، ﺛﻢ ﺳﻜﺖ . ﻗﺎﻝ ﺣﺒﻴﺐ : ﻓﻠﻤﺎ ﻗﺎﻡ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ، ﻭﻛﺎﻥ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺍﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ ﻓﻲ ﺻﺤﺎﺑﺘﻪ، ﻓﻜﺘﺒﺖ ﺇﻟﻴﻪ ﺑﻬﺬﺍ ﺍﻟﺤﺪﻳﺚ ﺃﺫﻛﺮﻩ ﺇﻳﺎﻩ . ﻓﻘﻠﺖ ﻟﻪ : ﺇﻧﻲ ﺃﺭﺟﻮ ﺃﻥ ﻳﻜﻮﻥ ﺃﻣﻴﺮ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ - ﻳﻌﻨﻲ ﻋﻤﺮ - ﺑﻌﺪ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﻌﺎﺽ ﻭﺍﻟﺠﺒﺮﻳﺔ، ﻓﺄﺩﺧﻞ ﻛﺘﺎﺑﻲ ﻋﻠﻰ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ ﻓَﺴُﺮَّ ﺑﻪ ﻭﺃﻋﺠﺒﻪ .
ﻭﺭﻭﻯ ﺍﻟﺤﺪﻳﺚ ﺃﻳﻀًﺎ ﺍﻟﻄﻴﺎﻟﺴﻲ ﻭﺍﻟﺒﻴﻬﻘﻲ ﻓﻲ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ، ﻭﺍﻟﻄﺒﺮﻱ
، ﻭﺍﻟﺤﺪﻳﺚ ﺻﺤﺤﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ، ﻭﺣﺴﻨﻪ ﺍﻷﺭﻧﺎﺅﻭﻁ .
ﻭﻟﻠﺤﺪﻳﺚ ﺷﺎﻫﺪ ﻋﻦ ﺳَﻔِﻴﻨَﺔُ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺍﻟْﺨِﻼَﻓَﺔُ ﻓِﻲ ﺃُﻣّﺘِﻲ ﺛَﻼَﺛُﻮﻥَ ﺳَﻨَﺔً، ﺛُﻢّ ﻣُﻠْﻚٌ ﺑَﻌْﺪَ ﺫَﻟِﻚَ . ﺛُﻢّ ﻗَﺎﻝَ ﺳَﻔِﻴﻨَﺔُ : ﺍﻣْﺴِﻚْ ﻋَﻠَﻴْﻚَ ﺧِﻼَﻓَﺔَ ﺃَﺑﻲ ﺑَﻜْﺮٍ، ﺛُﻢّ ﻗَﺎﻝَ : ﻭَﺧِﻼَﻓﺔَ ﻋُﻤَﺮَ ﻭَﺧِﻼَﻓَﺔَ ﻋُﺜْﻤﺎﻥَ، ﺛُﻢّ ﻗَﺎﻝَ ﻟﻲ : ﺍﻣﺴِﻚْ ﺧِﻼَﻓَﺔَ ﻋَﻠِﻲّ ﻗﺎﻝ : ﻓَﻮَﺟَﺪْﻧَﺎﻫَﺎ ﺛَﻼَﺛِﻴﻦَ ﺳَﻨَﺔً . ﺭﻭﺍﻩ ﺃﺣﻤﺪ ﻭﺣﺴﻨﻪ ﺍﻷﺭﻧﺎﺅﻭﻁ .
ﻭﺭﻭﻯ ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﻋﻦ ﺣﺬﻳﻔﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺃﻧﻪ ﻗﺎﻝ : ﺫﻫﺒﺖ ﺍﻟﻨﺒﻮﺓ ﻓﻜﺎﻧﺖ ﺍﻟﺨﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ . ﻭﺻﺤﺤﻪ ﺍﻷﺭﻧﺎﺅﻭﻁ .
ﺃﻣﺎ ﻋﻦ ﻣﻌﻨﻰ ﺍﻟﺤﺪﻳﺚ : ﻓﺎﻟﺨﻼﻓﺔ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ ﻫﻲ ﺧﻼﻓﺔ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﻭﻋﻤﺮ ﻭﻋﺜﻤﺎﻥ ﻭﻋﻠﻲ ، ﻛﻤﺎ ﻫﻮ ﻇﺎﻫﺮ ﺍﻟﺮﻭﺍﻳﺎﺕ . ﺃﻣﺎ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﻌﻀﻮﺽ، ﻓﺎﻟﻤﺮﺍﺩ ﺑﻪ ﺍﻟﺘﻌﺴﻒ ﻭﺍﻟﻈﻠﻢ . ﻗﺎﻝ ﺍﺑﻦ ﺍﻷﺛﻴﺮ ﻓﻲ ﺍﻟﻨﻬﺎﻳﺔ :
‏( ﺛﻢ ﻳﻜﻮﻥ ﻣﻠﻚ ﻋﻀﻮﺽ ‏) ﺃﻱ ﻳﺼﻴﺐ ﺍﻟﺮﻋﻴﺔ ﻓﻴﻪ ﻋﺴْﻒٌ ﻭﻇُﻠْﻢ، ﻛﺄﻧَّﻬﻢ ﻳُﻌَﻀُّﻮﻥ ﻓﻴﻪ ﻋَﻀًّﺎ . ﻭﺍﻟﻌَﻀُﻮﺽُ : ﻣﻦ ﺃﺑْﻨﻴﺔ ﺍﻟﻤُﺒﺎﻟﻐﺔ . ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ ‏( ﺛﻢ ﻳﻜﻮﻥ ﻣُﻠﻚ ﻋُﻀُﻮﺽ ‏) ﻭﻫﻮ ﺟﻤﻊ ﻋِﺾٍّ ﺑﺎﻟﻜﺴﺮ، ﻭﻫﻮ ﺍﻟﺨَﺒﻴﺚُ ﺍﻟﺸَّﺮِﺱُ . ﻭﻣﻦ ﺍﻷﻭﻝ ﺣﺪﻳﺚ ﺃﺑﻲ ﺑﻜﺮ ‏( ﻭﺳَﺘَﺮَﻭﻥ ﺑَﻌْﺪﻱ ﻣُﻠْﻜﺎ ﻋَﻀُﻮﺿﺎً ‏) . ﺍﻫـ
ﻭﺃﻣﺎ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﺠﺒﺮﻱ، ﻓﺎﻟﻤﺮﺍﺩ ﺑﻪ ﺍﻟﻤﻠﻚ ﺑﺎﻟﻘﻬﺮ ﻭﺍﻟﺠﺒﺮ . ﻗﺎﻝ ﺍﺑﻦ ﺍﻷﺛﻴﺮ
ﻓﻲ ﺍﻟﻨﻬﺎﻳﺔ : ﺛﻢ ﻳﻜﻮﻥ ﻣُﻠﻚ ﻭﺟَﺒَﺮُﻭﺕ < ﺃﻱ ﻋُﺘُﻮّ ﻭﻗَﻬْﺮ . ﻳﻘﺎﻝ : ﺟَﺒَّﺎﺭ ﺑَﻴّﻦ ﺍﻟﺠَﺒَﺮُﻭّﺓ، ﻭﺍﻟﺠَﺒﺮﻳَّﺔ، ﻭﺍﻟْﺠَﺒَﺮُﻭﺕ . ﺍﻫـ
ﺃﻣﺎ ﻋﻦ ﺗﺤﻘﻖ ﻣﺎ ﻓﻲ ﺍﻟﺤﺪﻳﺚ، ﻓﻘﺪ ﺗﻘﺪﻡ ﺃﻥ ﻣﻦ ﺍﻟﺴﻠﻒ ﻣﻦ ﺟﻌﻠﻪ ﻗﺪ ﺗﺤﻘﻖ ﻓﻲ ﺟﻤﻴﻊ ﻣﺮﺍﺣﻠﻪ، ﻭﺃﻥ ﺍﻟﺨﻼﻓﺔ ﺍﻷﺧﺮﻯ ﺍﻟﺘﻲ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ، ﻫﻲ ﺧﻼﻓﺔ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ . ﻟﻜﻦ ﻗﺎﻝ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ﻓﻲ ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ : ﻭﻣﻦ ﺍﻟﺒﻌﻴﺪ ﻋﻨﺪﻱ ﺟﻌﻞ ﺍﻟﺤﺪﻳﺚ ﻋﻠﻰ ﻋﻤﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻌﺰﻳﺰ؛ ﻷﻥ ﺧﻼﻓﺘﻪ ﻛﺎﻧﺖ ﻗﺮﻳﺒﺔ ﺍﻟﻌﻬﺪ ﺑﺎﻟﺨﻼﻓﺔ ﺍﻟﺮﺍﺷﺪﺓ، ﻭﻟﻢ ﻳﻜﻦ ﺑﻌﺪ ﻣﻠﻜﺎﻥ ﻣﻠﻚ ﻋﺎﺽ ﻭﻣﻠﻚ ﺟﺒﺮﻱ . ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ . ﺍﻫـ

ﻓﺎﻟﻈﺎﻫﺮ - ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ - ﺃﻧﻨﺎ ﺍﻵﻥ ﻓﻲ ﺍﻟﻤﻠﻚ ﺍﻟﺠﺒﺮﻱ، ﻭﻳﺪﻝ ﻋﻠﻰ ﺫﻟﻚ ﻣﺎ ﺭﻭﺍﻩ ﺍﻟﻄﺒﺮﺍﻧﻲ ﻋﻦ ﺣﺎﺻﻞ ﺍﻟﺼﺪﻓﻲ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ﺳﻴﻜﻮﻥ ﺑﻌﺪﻱ ﺧﻠﻔﺎﺀ، ﻭﻣﻦ ﺑﻌﺪ ﺍﻟﺨﻠﻔﺎﺀ ﺃﻣﺮﺍﺀ، ﻭﻣﻦ ﺑﻌﺪ ﺍﻷﻣﺮﺍﺀ ﻣﻠﻮﻙ، ﻭﻣﻦ ﺑﻌﺪ ﺍﻟﻤﻠﻮﻙ ﺟﺒﺎﺑﺮﺓ، ﺛﻢ ﻳﺨﺮﺝ ﺭﺟﻞ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻲ، ﻳﻤﻸ ﺍﻷﺭﺽ ﻋﺪﻻً ﻛﻤﺎ ﻣﻠﺌﺖ ﺟﻮﺭًﺍ، ﺛﻢ ﻳﺆﻣﺮ ﺑﻌﺪﻩ ﺍﻟﻘﺤﻄﺎﻧﻲ . ﻓﻮﺍﻟﺬﻱ ﺑﻌﺜﻨﻲ ﺑﺎﻟﺤﻖ ﻣﺎ ﻫﻮ ﺑﺪﻭﻧﻪ .
ﻓﻔﻴﻪ ﺃﻥ ﺍﻟﻤﻬﺪﻱ ﻳﺨﺮﺝ ﺑﻌﺪ ﺍﻟﺠﺒﺎﺑﺮﺓ، ﻓﺨﻼﻓﺘﻪ ﻫﻲ ﺍﻟﺨﻼﻓﺔ ﺍﻷﺧﺮﻯ ﺍﻟﺘﻲ ﻫﻲ ﻋﻠﻰ ﻣﻨﻬﺎﺝ ﺍﻟﻨﺒﻮﺓ، ﻟﻜﻦ ﺍﻟﺤﺪﻳﺚ ﺿﻌﻔﻪ ﺍﻷﻟﺒﺎﻧﻲ ، ﻓﻲ ﺍﻟﺴﻠﺴﻠﺔ .
ﺃﻣﺎ ﻗﻮﻝ ﺍﻟﺴﺎﺋﻞ : ﻋﻠﻰ ﺃﻱ ﺷﻲﺀ ﻳﺪﻝ ﻗﻮﻟﻪ : ﺛﻢ ﺳﻜﺖ ؟ ﻓﺎﻟﻈﺎﻫﺮ ﺃﻧﻪ ﻳﺪﻝ ﻋﻠﻰ ﺗﻤﺎﻡ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﺍﻧﺘﻬﺎﺋﻪ .
ﻭﺍﻟﻠﻪ ﺃﻋﻠﻢ .

Tuesday, June 7, 2016

வறுமையின் விளிம்பில் காஸா பிரதேசம்


பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிரன்டித்தனமான தாக்கதல்கள் இன்றோ அல்லது நேற்றோ ஆரம்பித்தல்ல மாறாக 7 தசாப்தங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்டது. ஆன்றிலிருந்து இன்றுவரைக்கம் பலஸ்தீன் பிரதேசம் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் மனித அழிவுகளையும் எதிர்நோக்கி வருகின்றது.

அந்தவகையில் இன்று இஸ்ரேலிய இராணுவம் விசாரனை என்ற பெயரில்  பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் கைதுசெய்தும் சித்தரவதை செய்தும் வருகின்றது. கடந்த 2008ஃ டிசம்பர்  தொடக்கம் 2009 ஜனவரி வரை சுமாராக 22 நாட்கள் இஸ்ரேலிய இராணுவம் வான்வளியாகவும் கடல்வளியாகவும் காஸா பிரதேசத்தை முற்றுமுழுதாகத் தாக்கியது. இதில் 1500 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள் . சுமாரக 6500 பலஸ்தீனர்கள் காயப்பட்டார்கள். அதேபோல் 75மூ வீதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது. இன்று பலஸ்தீன மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை உடுப்பதற்கு உடை இல்லை உறங்குவதற்கு போதிய உறையுள் இல்லை. வெய்லிலும் மழையிலும் கடுமையாகக் கஷ்டப்பட்டு வருகின்றார்கள்.

இதைப்பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன்ப் பணிப்பாளர் “ ஜோன் கிங்கின் “ கூறுகின்ற போது பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் மக்களுக்க சிகிச்சை செய்வதற்கு பேதிய மருத்துவ வசதிகள் இல்லை இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு போதிய துணிகள் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு உண்பதற்கு போதிய உணவுகள் இல்லை. இப்படி ; காஸாவின் நிலையை என்னால் விபரிக்க முடியாது என்கிறார். அதுமாத்திரமல்ல இன்று 80மூ வீதமான பலஸ்தீனர்கள் வெளிநாட்டு உதவி நிறுவணங்களில் தங்கி வாழ்கின்றார்கள் சமைப்பதற்கு எரிவாயு இல்லை இஸ்ரேலிய அரசு தடை செய்துவிட்டார்கள் தங்களுடைய கடல்பரப்பில்கூட மீன் பிடிப்பதற்கு வரையறை விதித்துள்ளார்கள் இது போதாமைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற உதவிகளைக்கூட தடுத்து நிறுத்துகின்றார்கள் இதற்கு வக்காளத்து வகங்குகின்றது எகிப்தின் சீஸியின் அரசு . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது எமது முஸ்லிம் நாடுகள் . இதுதான் எமது முஸ்லிம் நாடுகளின் நிலை .

இது ஒரு புறம்மிருக்க பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள பாரிய வறுமையின் காரணமாக பலஸ்தீ சிறார்கள் இன்று பாடாசாலைக் கல்வியை விட்டுவிட்டு தொழிற் சந்தையை நோக்கி நகர்கின்றார்கள்.  அன்மையில் பலஸ்தீனில் வெளியான மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி பலஸ்தீனில் இஸ்ரேலடனான எழுச்சிப் போரட்டத்தில் இதுவரைக்கும் 2070 சிறுவர்கள் கெல்லப்பட்டுள்ளார்கள். 14.000 சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக கடந்த 2000 மாம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் 13.000 சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் அவை கூறுகின்றது கடந்த 2011 ஆண்டு பலஸ்தீனில் 18 வயதுக்கு கறைந்த சிறுவர்கள் 65.000 பேர் தொழிற் சந்தையில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது 10.2000 பேராக அதிகரித்துள்ளது. காரணம் வறுமை . கவலை உஎன்னவென்றல்  இதுகுறித்து எமது முஸ்லிம் நாடுகள்கூட கண்டு கொள்வதாக இல்லை  இதுதான் பலஸ்தீன் காஸா பிரதேசத்தின் தற்போதைய நிலை. 

ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை