பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிரன்டித்தனமான தாக்கதல்கள் இன்றோ அல்லது நேற்றோ ஆரம்பித்தல்ல மாறாக 7 தசாப்தங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்டது. ஆன்றிலிருந்து இன்றுவரைக்கம் பலஸ்தீன் பிரதேசம் பாரிய பொருளாதார நெருக்கடிகளையும் மனித அழிவுகளையும் எதிர்நோக்கி வருகின்றது.
அந்தவகையில் இன்று இஸ்ரேலிய இராணுவம் விசாரனை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் கைதுசெய்தும் சித்தரவதை செய்தும் வருகின்றது. கடந்த 2008ஃ டிசம்பர் தொடக்கம் 2009 ஜனவரி வரை சுமாராக 22 நாட்கள் இஸ்ரேலிய இராணுவம் வான்வளியாகவும் கடல்வளியாகவும் காஸா பிரதேசத்தை முற்றுமுழுதாகத் தாக்கியது. இதில் 1500 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள் . சுமாரக 6500 பலஸ்தீனர்கள் காயப்பட்டார்கள். அதேபோல் 75மூ வீதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது. இன்று பலஸ்தீன மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை உடுப்பதற்கு உடை இல்லை உறங்குவதற்கு போதிய உறையுள் இல்லை. வெய்லிலும் மழையிலும் கடுமையாகக் கஷ்டப்பட்டு வருகின்றார்கள்.
இதைப்பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன்ப் பணிப்பாளர் “ ஜோன் கிங்கின் “ கூறுகின்ற போது பலஸ்தீன் காஸா பிரதேசத்தில் மக்களுக்க சிகிச்சை செய்வதற்கு பேதிய மருத்துவ வசதிகள் இல்லை இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்கு போதிய துணிகள் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு உண்பதற்கு போதிய உணவுகள் இல்லை. இப்படி ; காஸாவின் நிலையை என்னால் விபரிக்க முடியாது என்கிறார். அதுமாத்திரமல்ல இன்று 80மூ வீதமான பலஸ்தீனர்கள் வெளிநாட்டு உதவி நிறுவணங்களில் தங்கி வாழ்கின்றார்கள் சமைப்பதற்கு எரிவாயு இல்லை இஸ்ரேலிய அரசு தடை செய்துவிட்டார்கள் தங்களுடைய கடல்பரப்பில்கூட மீன் பிடிப்பதற்கு வரையறை விதித்துள்ளார்கள் இது போதாமைக்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற உதவிகளைக்கூட தடுத்து நிறுத்துகின்றார்கள் இதற்கு வக்காளத்து வகங்குகின்றது எகிப்தின் சீஸியின் அரசு . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது எமது முஸ்லிம் நாடுகள் . இதுதான் எமது முஸ்லிம் நாடுகளின் நிலை .
இது ஒரு புறம்மிருக்க பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள பாரிய வறுமையின் காரணமாக பலஸ்தீ சிறார்கள் இன்று பாடாசாலைக் கல்வியை விட்டுவிட்டு தொழிற் சந்தையை நோக்கி நகர்கின்றார்கள். அன்மையில் பலஸ்தீனில் வெளியான மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி பலஸ்தீனில் இஸ்ரேலடனான எழுச்சிப் போரட்டத்தில் இதுவரைக்கும் 2070 சிறுவர்கள் கெல்லப்பட்டுள்ளார்கள். 14.000 சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக கடந்த 2000 மாம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் 13.000 சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் அவை கூறுகின்றது கடந்த 2011 ஆண்டு பலஸ்தீனில் 18 வயதுக்கு கறைந்த சிறுவர்கள் 65.000 பேர் தொழிற் சந்தையில் வேலை செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது 10.2000 பேராக அதிகரித்துள்ளது. காரணம் வறுமை . கவலை உஎன்னவென்றல் இதுகுறித்து எமது முஸ்லிம் நாடுகள்கூட கண்டு கொள்வதாக இல்லை இதுதான் பலஸ்தீன் காஸா பிரதேசத்தின் தற்போதைய நிலை.
ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment