Wednesday, June 15, 2016

தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை


நபி (ஸல்) அவர்களின் றமழான் மாத இரவு தொழுகை பற்றி அப்துர் றஹ்மான் பின் அவ்ஃப் (றழி) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களிடம் வினவிய போது: நபி (ஸல்) அவர்கள் றமழானிலோ றமழான் அல்லாத காலங்களிலோ 11 றகஅத்களை விட அதிகமாக தொழவில்லை, முதலில் 4 றகஅத்கள் தொழுவார்கள், அதன் அழகு, நீளம் பற்றி வினவாதீர்கள் (அவ்வளவு அழகும் நீளமுமாகும்), பின்னர் 4 றகஅத்கள் தொழுவார்கள், அதன் அழகு, நீளம் பற்றி வினவாதீர்கள் (அவ்வளவு அழகும் நீளமுமாகும்). (புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் பின்வருமாறு கூறிகின்றார்கள்:
صَلَّيْتُ مع رسول اللَّهِ صلى الله عليه وسلم فَأَطَالَ حتى هَمَمْتُ بِأَمْرِ سَوْءٍ، قال: قِيلَ: وما هَمَمْتَ بِهِ؟ قال: هَمَمْتُ أَنْ أَجْلِسَ وَأَدَعَهُ
“நான்  இறைதூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன், நான் தப்பான ஒரு விடயத்துக்கு முயற்சிக்கும் அளவுக்கு நீட்டித்தொழுதார்கள், நீங்கள் எதற்கு முயற்சித்தீர்கள் என விவப்பட்டது, அதற்கவர்கள்: நான் அமர்வதற்கும் அதனை விட்டு விடுவதற்கும் முயற்சித்தேன் எனக் குறிப்பிட்டார்கள்.  (புஹாரி, முஸ்லிம்).
عن الْمُغِيرَةَ رضي الله عنه قال: إنْ كان النبيُ صلى اللهُ عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حتى تَرِمُ قَدَمَاهُ أو سَاقَاهُ، فَيُقَالُ له، فيقول: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا) رواه البخاري(1078) ومسلم(2819)
நபி (ஸல்) அவர்களின் இரவுத்தொழுகை பற்றி ஹுதைபா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
عن حُذَيْفَةَ رضي الله عنه قال:( صَلَّيْتُ مع النبي صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَافْتَتَحَ الْبَقَرَةَ فقلت يَرْكَعُ عِنْدَ الْمِائَةِ ثُمَّ مَضَى فقلت يُصَلِّي بها في رَكْعَةٍ فَمَضَى فقلت يَرْكَعُ بها ثُمَّ افْتَتَحَ النِّسَاءَ فَقَرَأَهَا ثُمَّ افْتَتَحَ آلَ عِمْرَانَ فَقَرَأَهَا يَقْرَأُ مُتَرَسِّلًا إذا مَرَّ بِآيَةٍ فيها تَسْبِيحٌ سَبَّحَ وإذا مَرَّ بِسُؤَالٍ سَأَلَ وإذا مَرَّ بِتَعَوُّذٍ تَعَوَّذَ ثُمَّ رَكَعَ فَجَعَلَ يقول سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ فَكَانَ رُكُوعُهُ نَحْوًا من قِيَامِهِ ثُمَّ قال سمع الله لِمَنْ حَمِدَهُ ثُمَّ قام طَوِيلًا قَرِيبًا مِمَّا رَكَعَ ثُمَّ سَجَدَ فقال سُبْحَانَ رَبِّيَ الأعلى فَكَانَ سُجُودُهُ قَرِيبًا من قِيَامِهِ ...)   رواه مسلم.).
“நான் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன்ன் தொழுதேன், அவர்கள் சூரா அல் பகராவை ஆரம்பித்தார்கள், அவர்கள் 100 ஆயத்துகளுடன் ருகூஃ செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் தொடர்ந்து சென்றார்கள், சூராவை பூரணப்படுத்துவார்கள் என்றேன், பின்னர் ஆல இம்ரானை ஆரம்பித்தார்கள், அவர்கள் ஆருதலாகவே ஓதுவார்கள், தஸ்பீஹுடைய இடம் வந்தால் தஸ்பீஹ் செய்வார்கள், பிரார்த்தனைக்குரிய இடம் வந்தால் பிரார்த்திப்பார்கள், பாதுகாப்பு தேடுமிடத்தில் பாதுகாப்புத் தேடுவார்கள், பின்னர் ருகூஃ செய்து அதில் “ஸுப்ஹான றப்பியல் அழீம்” எனக் கூறலானார்கள், அவர்களது ருகூஃவும் கிட்டத்தட்ட நின்ற அதே அளவு இருந்தது, பின்னர் (ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறினார்கள், பின்னர் கிட்டத்தட்ட ருகூஃவின் அளவுக்கு நின்றார்கள், பின்னர் ஸுஜூது செய்தார்கள், அதில் “சுப்ஹான றப்பியல் அஃலா” எனக் கூறினார்கள், அவர்களது ஸுஜூதும் நின்று தொழுத அதே அளவு இர்ருந்தது…” (முஸ்லிம்).
அபூ தாவுதில் வரும் அறிவிப்பில் ஹுதைபா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
عند أبي داود عن حذيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قرأ الأربع الطوال في أربع ركعات: البقرة وآل عمران والنساء والمائدة أو الأنعام
“நபி (ஸல்) அவர்கள் நான்கு றகஅத்களில் நான்கு பெரும் சூராக்களான பகரா, ஆல இம்ரான், அன்னிஸா, அல்மாயிதா அல்லது அல் அன்ஆம் ஆகியவற்றை ஓதினார்கள். (அபூ தாவுத்).
முகீரா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தனதிரு பாதங்களும் அல்லது கால்களும் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள், இது அவர்களுக்கு சொல்லப்பட்ட போது: நான் நன்றியுள்ளதொரு அடியானாக இருக்கக் கூடாதா?” எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
மேற்குறித்த அறிவிப்புக்களில் இருந்து நபி (ஸல்) அவர்களின் இரவுத்த்ஒழுகையில் இரு பன்புகளை அவதானிக்கலாம், அவையிரண்டும் அவர்களது சுன்னாவாகும்:
1. எட்டு றகஅத்கள் இரவுத்தொழுகையும் மூன்று றகஅத்கள் வித்ரு தொழுகஇயும் தொழுதார்கள், இன்னும் முஸ்லிமில் வரும் அறிவிப்பில் 10 றகஅத்கள் இரவுத்தொழுகையும் மூன்று வித்ரும் தொழுதார்கள் என வந்துள்ளது.
2. தொழுகையின் உள்ளடக்கமான நீண்ட ஓதல், நீண்ட ருகூஃ, ருகூஃக்குப் பின்னர் நீண்ட நிற்றல், நீண்ட ஸுஜூது.

இவையிரண்டும் சேர்ந்துதான் நபி (ஸல்) அவர்களின் ஸுன்னாவாகும், உள்ளடக்கத்தில் கவனமற்று அதன் தோற்றமான எட்டு றகஅத்களா அல்லது உள்ளடக்கத்தை பேணும் வகையில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் நிலையை கருத்திற் கொண்டு றகஅத்களை அதிகரிப்பதா?

இங்குதான் உமர் (றழி) அவர்களின் இஜ்திஹாத் வருகின்றது, அவர்கள் நபி (ஸல்) அவர்ளின் சுன்னாவுக்கு மாறு செய்பவர் அல்ல, இந்த இடத்தில் றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சுன்னாவுக்கு மாற்றமானது என்றிருந்தால் அதில் மாற்றம் செய்திருக்க மாட்டார்கள், அனைத்து ஸஹாபாக்களும் அந்த இஜ்திஹாதை ஏற்றுக் கொண்டனர்.
றஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் போல நீளமாக மக்கள் தொழ முடியாதபோது உமர் (றழி) அவர்கள் ஓதுவதை குறைத்து றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள்,
ஸாயிப் பின் யஸீத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் காலத்தில் 20 றகஅத்கள் தொழுது கொண், டிருந்தோம். (பைஹகி).
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்ட அதே அளவு ஓதவேண்டும், ஆனால் மக்களின் பலவீன நிலையையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே உமர் (றழி) விருப்பமாகும், அதற்காகவே ஓதுவதை குறைத்து றகஅத்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள், அதனை அனைத்து ஸஹாபாக்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த பின்னணியில் இஸ்லாமிய சட்டத்தின் இமாம்களும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் தமது சமூக சூழலுக்கமைய பல எண்ணிக்கையை குறிப்பிடுகின்றனர்.
தவ்ரி (தாபிஈ), அபூ ஹனீபா, ஷாபிஈ ஆகியோர் உள்ளிட்ட பெரும்பாலான சட்ட அறிஞர்கள் 20 றகஅத்கள் எனவும், இமாம் மாலிக் 36 றகஅத்கள் எனவும், இமாம் திர்மிதி ஒரு றகஅத் வித்ரு உட்பட 41 றகஅத்கள் எனவும் குறிப்பிடுகின்றனர். மற்றும் சிலர் 8 றகஅத்கள் தொழுவது சுன்னத்தானது, அதற்கு மேலதிகமாக தொழுவது  சிறந்தது என கருதினர்,
பெரும்பாலான சட்ட அறிஞர்கள் 8 க்கு மேற்பட்ட பல எண்ணிக்கைகளைக் குறிப்பிடுகின்றனர், இவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றன்ர்
حديث ابن عمر في الصحيحين أن النبي صلى الله عليه وسلم قال: صلاة الليل مثنى مثنى فإذا خفت الصبح فأوتر بواحدة. رواه الجماعة،
1. “நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “இரவுத்தொழுகை இரண்டு இரண்டாக தொழப்படும், ஸுபஹ் நெருங்கி விட்டால் வித்ரு ஒன்று தொழப்படும்” (புஹாரி, முஸ்லிம்)
இவ்விரண்டாக தொழ வேண்டும், எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை..

حديث السائب بن يزيد قال: كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان بعشرين ركعة وكانوا يقرأون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام. وإسناده صحيح كما قال النووي في المجموع ورواه مالك في الموطأ.
2. ஸாயிப் பின் யஸீத் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் உமர் பின் கத்தாப் (றழி) அவர்கள் காலத்தில் 20 றகஅத்கள் தொழுது கொண், டிருந்தோம், அதில் நூறு ஆயத்கள் அடங்கிய சூராக்களை ஓதுவார்கள், நீண்ட நிற்றலின் காரணமாக உஸ்மான் (றழி) அவர்களின் காலத்தில் தமது தடிகளின் மீது சாய்வார்கள். (முஅத்தா மாலிக், இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானது. (நவவி)).
حديث ربيعة بن كعب أنه سأل النبي صلى الله عليه وسلم مرافقته في الجنة فقال صلى الله عليه وسلم: فأعني على نفسك بكثرة السجود فإنك لا تسجد لله سجدة إلا رفعك الله بها درجة وحط عنك بها خطيئة. رواه مسلم.
3. றபீஆ பின் கஅப் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சுவர்க்கத்தில் ஒன்றாக இருக்க வேண்டும் என கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள்: “அதிகமாக சுஜூது செய்வதன் மூலம் அதற்கு நீ எனக்கு உதவி செய்வாயாக, நீங்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தடவை சுஜூது செய்தால் அல்லாஹ் அதன் மூலம் உங்களின் ஒரு அந்தஸ்த்தை உயர்த்தி, ஒரு பாவத்தையும் இறக்கி வைக்கின்றான்” (முஸ்லிம்).
இதில் எண்ணிக்கை வரையறுக்கப்படாத வகையில் அதிக சுஜூது செய்ய வேண்டுமென கேட்டார்கள்.
நவீன காலத்தில் அஷைக் அல்பானி (றஹ்) அவர்கள் தராவீஹ் 8 றகஅத்கள் மாத்திரமே தொழ வேண்டும், அதற்கு மேலதிகமாக தொழுவது பித்அத்தானது எனக் கருதினார்கள், இதற்கவர்கள் பின்வரும் ஆதாரங்களை முன்வைத்தார்கள்:

حديث عائشة: أن النبي صلى الله عليه وسلم ما كان يزيد في رمضان ولا غيره على إحدى عشرة ركعة. متفق عليه.
ஆயிஷா (றழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் றமழானிலோ றமழான் அல்லாத காலங்களிலோ 11 றகஅத்களஇ விட அதிகமாக தொழ்ழ்வில்லை” (புஹாரி, முஸ்லிம்).
حديث جابر: أن النبي صلى الله عليه وسلم صلى في شهر رمضان ثمان ركعات وأوتر. رواه الطبراني وحسنه الألباني.
ஜாபிர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் றமழான் மாதத்தில் 8 றகஅத்கள் தொழுது பின்னர் வித்ரு த்ஒழுதார்கள்”  (தபரானி).
பெரும்பான்மை அறிஞர்கள் அல்பானி (றஹ்) அவர்களின் ஆதாரங்களுக்கு பின்வருமாறு மறுப்புத்தெரிவித்தனர்:
1. தராவீஹ் 8 றகஅத்கள் மாத்திரமே தொழுவது வாஜிபானது, அதனை விட அதிகரிப்ப்பது மார்க்கத்தில் புதுமையை (பித்அத்) ஏற்படுத்தியதாக அமையும் என்ற கருத்தை ஸஹாபாக்களோ தாபியீன்களோ பின்னர் வந்த இமாம்களோ குறிப்பிடவில்லை.
2. ஆயிஷா (றழி) அவர்களின் அறிவிப்பு நபியவர்களின் ஒரு செயலை குறிப்பிட்டமையாகும், அது ஆகக் கூடியது அது விரும்பத்தக்கது என்பதையே காட்டும், வித்ரு உட்பட 11 றகஅத்கள் கடமை என்பதைக்காட்டாது. அத்துடன் நபி (ஸல்) அவர்கள் 11 ஐ விட அதிகம் தொழுததாக இன்னும் சில அறிவிப்புகள் வந்துள்ளன, இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் 13 றகஅத்கள் இரவுத்தொழுகையில் தொழுதார்கள். (புஹாரி).
3. 13 றகஅத்கள் என வந்துள்ள ஹதீஸ்களுக்கு அல்பானி (றஹ்) அவர்கள் அவற்றில் 2 றகஅத்கள் இஷாவின் பிந்த்இய சுன்னத் என அளித்த விளக்கம் வலிந்து கொடுக்கப்பட்டதாகும், அதனைக் காட்டும் ஆதாரம் வரவில்லை.
4. ஏனைய சுன்னத்தான தொழுகை போன்று இதுவும் மாற்ற முடியாத குறித்த எண்ணிக்கை கொண்டது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல, இரண்டிரண்டாக தொழப்படும் இரவுத்தொழுகை என பொதுவாக வந்துள்ளது.
இந்த பின்னணியில் இமாம் இப்னு தைமியா (றஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் றமழான் இரவுத்தொழுகையின் எண்ணிக்கையை வரையறுக்க வில்லை, ஆனால் அவர்கள் 11 ஐ விட அதிகரிக்கவுமில்லை, அவர்கள் நீண்ட றகஅத்களாக தொழுதார்கள், உமர் (றழி) அவர்கள் உபை (றழி) அவர்களை இமாமாக்கியபோது 20 தொழுதார்கள், பின்னர் 3 வித்ரு தொழுதார்கள், றகஅத்களின் எண்ணிக்க்கையை ஓதுதலின் அளவுக்கு அதிகரித்தார்கள், ஒரு றகஅத்தை மிக அதிகமாக நீட்டுவதனை விட அது மஃமூன்களுக்கு இலகுவாக இர்ருந்தது, பின்னர் இன்னும் சிலர் 40 றகஅத்கள் தராவீஹும் 3 வித்ரும் தொழுதார்கள், இவை அனைத்துமே ஆகுமானதாகும், றமழானில் இந்த எந்த வகையில் தொழுதாலும் அது சரியானதாகும், இது தொழுகையாளிகளின் நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படும், யார் றமழான் இரவு தொழுகை கூட்டவோ குறைக்கவோ முடியாத எண்ணிக்கை நபியவர்களிடமிருந்து வந்துள்ளது என நினைக்கின்றாறோ அவர் தவறிழைத்து விட்டார்.” (மஜ்மூ பதாவா இப்னு தைமியா).
ஆக, மேற்குறித்த ஆதாரங்களினடிப்படையில் ஆயிஷா (றழி) அறிவிப்பது போல தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை நபி (ஸல்) அவர்களின் தொழுகை போன்று தொழுதால் 8 றகஅத்களாகும், ஓதுவதை குறைக்கும் அளவுக்கு றகஅத்களை அதிகரிப்பதும் சுன்னாவை பாதுகாப்பதாகும். அல்லாஹு அஃலம்.

Dr. Nayeem

No comments:

Post a Comment