Thursday, June 2, 2016

செயற்கை முறைக் கருக்கட்டல் சம்பந்தமாக இஸ்லாமிய ஷரிஆவின் நிலைப்பாடு . ( Test tube baby / أطفال الأنابيب )

இது சம்பந்தமாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சவூதியை மைய்யமா வைத்து இயங்குகின்ற (மஜ்மஉல் பிக்ஹுல் இஸ்லாமி) சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியத்தின் கருத்திற்கு இனங்க இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன் . 

இந்த செயற்கை  முறைக் கருக்கட்டல் 7 முறைகளில்  மேற் கொள்வார்கள்  இதில் இரண்டு முறையைத் தவிர மற்ற 5 முறைகளும் இஸ்லாமிய ஷரிஆவுக்கு முறனானது என்று சவூதி அறிஞர்களின் ஆய்வுக்கும் பத்வாக்களுக்குமான பிக்ஹு ஒன்றியம் #பத்வா வெளியிட்டது . 

உண்மையில் ஒரு குழந்தை ஆணுடைய  விந்தணுவும் ஒரு பெண்ணுடை முட்டையும் சேர்வதன் காரணமாகவே உருவாக்கம் இடம்பெறுகின்றது . இந்த செயற்பாடு தாயின் கருப்பையில் இடம்பெறுகின்றது .

ஆனால் செயற்கை முறைக் கருக்கட்டல் 
 ( Test tube baby )  மூலம் ஒரு குழந்தை உருவாக்கின்ற போது அது ஆணுடை விந்தணுவையும் ,பெண்ணுடைய முட்டையையும் தாயின் கருப்பை அல்லாமல் வேறு இடத்தில் வைத்து ஒரு குழந்தையை உருவாக்குகின்ற முறையே இதுவாகும் . இது  7 முறையில் மேற் கொள்ளப் படுகின்றது . 

01) கணவனின் விந்தணுவையும் , வேறு ஒரு பெண்ணின் முட்டையையும் எடுத்து  மனைவியின் கருவறையிலே  வளர விடுதல் . ( இந்த முறை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது )  காரணம் பரம்பரையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது . 

02) மனைவியின் முட்டையை  கணவன் அல்லாத வேறொரு ஆணின் விந்தணுவை எடுத்து  மனைவியின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில்  தடுக்கப்பட்டுள்ளது ) 

03) கணவனுடைய விந்தணுவையும் மனைவியின் முட்டையையும் எடுத்து வேறொரு பெண்ணின் கருவறையில் வளர விடுதல் . ( இதுவும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது ) 

இந்த முறையை 1990 களில்  மேற்குலகில் அதிகமான பெண்கள் தொழிலாக செயது வந்தார்கள் . 

04) வேறொரு ஆணின் விந்தணுவையும் , வேறொரு பெண்ணின் முட்டையையும் எடுத்து தன்னுடைய  மனைவியின் கருவறையில் வளர விடுதல் . 
( இதுவும் இஸ்லாம் தடுத்துள்ளது ) 

05) கணவனுடைய  விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து கணவனின் வேறு மனைவியின் கருவறையில் வளர விடுதல் . 
( இதையும் இஸ்லாம் தடுத்துள்ளது ) 

06) கணவனுடைய விந்தணுவையும் மனைவியுடைய முட்டையையும் எடுத்து வெளியில் வளர வைத்து மீண்டும் மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதை இஸ்லாம் அங்கிகரிக்கின்றது ) 

07) கணவனுடை விந்தணுவை எடுத்து வெளியில் கருகட்ட வைத்து ( வளரவைத்து ) 
மனைவியின் கருவறையில் வளரவிடுதல் .
( இதையும் இஸ்லாம் அங்கிகரிக்கின்றது ) 

இப்படியான செயற்கை முறைக் கருக்கட்டல் 
இன்று அரிதாகத்தான் இருக்கின்றது . இதை மேற்கொள்வதற்கு அதிக பணம் தேவை . இதை அதிகமாக செல்வந்தர்கள்தான் மேற்கொள்வார்கள் . 

இதில் நான் செயற்கை முறைக் கருக்கட்டல் இடம்பெறுவதற்கான காரணத்தை எழுதவில்லை மாறாக செயற்கை முறைக் கருக்கட்டலுக்கு  ( Test tube baby ) நவீன கால அறிஞர்கள் கூறும் சட்டத்தைத்தான் எழுதியுள்ளேன். 

Hafeesul haq ( Fathihi ) 
Varipathanchenai

No comments:

Post a Comment