Sunday, December 27, 2015

அருகிப் போகும் இலங்கை முஸ்லிம்களின் வணிகம் .

.

கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தின் இயங்கு சக்தியாக
( Driving Forces ) முஸ்லிம்களின் வர்த்தகக் கம்பனிகள் காணப்பட்டது . முஸ்லிம்கள்தான் இலங்கையின் பொருளாதாரத்தை இயக்கி வந்தார்கள் . அதேபோல் எமது மூதாதையர்கள் இலங்கைக்கு வந்த நோக்கமும் வியாபாரமாகத்தான் இருந்தது .

இன்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க முடியும் இலங்கையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் யார் ? என்றால் அது அரபியர்கள் என்பார்கள் . அந்த அளவு வணிகத்தில் பேர்  பெற்றவர்களாக எமது மூதாதையர்கள் இருந்துள்ளார்கள் .

கீழத்தேயத்தில் உள்ள வாசனைத்திரவியங்கள் ( கராம்பு , ஏலம் , கடுகு கருவா )  மற்றும் யானைத்தந்தம் முத்து  போன்ற வர்த்தகப் பொருட்களை ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்தார்கள் . இந்த வாசனைத் திரவியங்களைக் கைப்பற்றுவதற்கு இலங்கையில்   போத்துக்கேயர் ( கி .பி .1505 ) லும் ஒல்லாந்தர் ( கி. பி. 1602 லும் ) பிரித்தானியர் ( கி. பி. 1796 ) லும் இலங்கைக்கு வந்தார்கள் .

இப்படிக் கொடிகட்டிப் பறந்த இலங்கை முஸ்லிம்கள் இப்போது எங்கோ இருக்கின்றார்கள் . தற்போது இலங்கையின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக வேற்று மதத்தவர்கள் மாறி வருகின்றார்கள் . 1990  களில் அரசாங்க மாணிக்கக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் முஸ்லிம்களே மாணிக்க வணிகத்தின் முன்னிலையில் இருந்தார்கள் .

19 ஆம் நூற்றாண்டில் நகரப் புறங்களில் மாணிக்கம் மற்றும் நகை வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் பெரும் செல்வாக்கினைப் பெற்றிருந்தார்கள் . ஆனால் இன்று அதில் வீழ்ச்சி கண்டுள்ளார்கள் . நகை வியாபாரமும் தற்போது தமிழர்களின் கையில் மாறியுள்ளது . அதேபோல் இலங்கையின் வேறு சில ஏற்றுமதிப் பொருளும் இன்று முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் மாறி வருகின்றது .

இலங்கையில் ஆடைக் கைத்  தொழிலை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் இன்று ஆடைக் கைத்தொழிலும் எங்களை விட்டு கைநழுவி விட்டது . இன்று நகரப்புறங்களில் எமக்குப் பார்க்க முடியும் நகரப்புறங்களில் இருக்கின்ற பாரிய பிரமாண்டமான சாலைகள்கூட பிற மதத்தவரகளின் பெயர்களுடன் கம்பீரமாகக் காட்டியளிப்பதை எம்மால் பார்க்க முடியும் . இது தலைநகர் தவிர்ந்த பிற நகரங்களிலும்தான் .

நான் ஒரு கட்டுரை வாசித்தேன் அதில் இலங்கையில் 280 மக்கள் வரையறுக்கப்பட்ட மக்கள் கம்பனிகள் உள்ளன என்றும் அதில் 10 கம்பனிகள் கூட முஸ்லிம்களுக்கு உரித்தானதல்ல . இதைப் பார்கின்ற போது  எமக்கு மிகவும் கவலைக்குரியது .
இன்று  இலங்கை முஸ்லிம்கள்  வனிகத்தில்  திகைத்து இருக்கின்றார்கள் எம்மால் பார்க்க முடியும் பெட்டாவில் திரும்பும் இடமெல்லாம் எமது முஸ்லிம்கள்தான் என்று கம்பீரமாகப் பேசுகின்றோம் .

உண்மை அதுவல்ல பெட்டாவில் முஸ்லிம் வியாபாரிகள் திரும்பும் திசையில் இருக்கின்றார்கள்தான் நான் இல்லை என்று சொல் விலை ! அவர்கள் அனைவரும் செய்கின்ற வியாபாரம் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் .
நாங்கள் சில்லறை வியாபாரத்தில் இலாபம் எடுக்கின்றோம் ஆனால் பெரு வியாபாரத்தில் இருப்பவர்கள் வேற்று மதத்தவர்கள் .

இதுதான் எமது வனிகத்தின் கெதி !
எனவே சிந்திப்போம் !

Hafeesul Haq
varipathanchenai

Tuesday, December 22, 2015

சிதறுண்டு போகும் சிரியா தேசம்


சிரியா மனித வரலாற்றில் மிகவும் பழமை வாய்ந்த பிரதேசம் .  ஷாம் பிரதேசத்தின் ஒரு பகுதி . பல்வேறு ஆட்சியில் இருந்த ஒரு நாடு .

சிரியா மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும் . இது வடக்கில் துர்கியும் , கிழக்கில் ஈராக்கும் , மேற்கில் லெபனானும் , மத்திய தரைக் கடலும் , தெற்கில் பலஸ்தீன்  மற்றும் ஜோர்தானும் எல்லை நாடுகளாக விளங்குகின்றது .

185 ,180   சதுர கி. மீ . பரப்பைக் கொண்ட சிரியா மத்திய தரைக் கடலோரதின் சிறிய பகுதியையும் , மத்திய தரைக் கடலிலுள்ள எர்வத் என்ற தீவையும் , கோலான் குன்றுகளையும் கொண்டுள்ளது . மேலும் இது 0.06 % நீர் வளத்தையும் கொண்டுள்ளது .

சிரியாவின் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை
ஏறத்தாள   கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே உலகின் முதல் கால்நடை வளர்ப்பு  விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.நியோலிதிக் காலப்பகுதியில்   அங்கு  முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது .

சிரியாவின் உத்தியோக பூர்வ மொழியாக  அரபு , ஆங்கிலம் , பிரெஞ்சு , குர்தி . போன்ற மொழிகளில் உள்ளது . இதன் தலைநகர்  டமஸ்கஸ் இது   உலகின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும் .

2005 ஜூலை மாதத்தில் சனத்தொகை கணக்கீட்டின் படி 19.043.00  மக்கள் தொகையைக் கொண்டுள்ளது . அதன் மொத்த தேசிய உற்பத்தி $71.74 பி வும் அதன் தலா வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 5.348 ( 10 ) வீதம் கொண்டுள்ளது .

சிரியாவின் மக்கள் தொகையில் 74%  பெரும்பாண்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் களையும் , 16 % ஷீஆ முஸ்லிம்களையும் , 10 % கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது .

பிரான்சின்  கட்டுப்பாட்டின் கீழ் இருந்த  சிரியா 1941   இல்  மக்கள் ஆணையின் பிரகாரம் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றது .  1963   இல் இருந்து 1970 வரைக்கும்
சிரியாவின் பாசட் கட்சி நாட்டை ஆண்டு வந்தது . பின்னர் 1970 இருந்து தற்போதைய சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் குடும்ப ஆட்சி ஆரம்பமாகியது . அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சுமார் 45 வருடங்கள்  16 % வீதம் கொண்ட ஷீஆக்கள் 76 %  வீதம் கொண்ட சுன்னி முஸ்லிம்களை அடக்கி ஆண்டு வருகின்றார்கள்  .

அடக்கி ஆழப்பட்ட மக்கள் கொந்தழித்தெழுந்தபோது அது  2011ஆம் ஆண்டு
உள்நாட்டு போராக மாறியது .
இந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை உக்கிரமடைந்து வருகின்றது

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு  முதல்  இன்று வரை  சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். 

பஷார் அல் அஸாத்தின் அடக்குமுறைக்கு ஈராக்கின் நூரி   மாலிக்கியின்  அரசங்கமும் , ரஷ்யாவின் அதிபர் புட்டினும் , லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும்  தீவிரமாக ஆதரவளித்து வருகின்றது   . வேடிக்கை என்ன வென்றால் ஈரான் 150 கோடி சுன்னி  முஸ்லிம்களை  ஷீஆக்களாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது .

இன்று சிரியாவின் உள்நாட்டுப் போரினால் சுமார் 15 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும்  துர்க்கி , கனடா , ஜேர்மன் , பிரான்ஸ்  போன்ற  நாடுகளில் அகதிகளாக அடிப்படை வசதி இன்றி சொந்தங்களை இழந்தும்  வாழ்கிறார்கள் .

இன்று சிரியா isis  அமைப்பினர்களிடம் ஒரு பகுதியும் . சிரியா சுன்னி முஸ்லிம்களிடம் ஒரு பகுதியும் , சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஷார் அல் அஸாத்திடம் ஒரு பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து  அழிக்கப்பட்டு வருகின்றது

இன்று  நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97.%  சதவீதம் அழிந்து போய்விட்டன.
இதுதான் இன்றை சிரியாவின் நிலை !

இதை உலகிற்கு தெரியப்படுத்துங்கள் .

அஷ் ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் ) வரிப்பத்தான்சேனை

பணிப்பாளர் 

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம் இறக்காமம். 

Saturday, December 12, 2015

யூததேசம் உருவான வரலாறு

இன்று யூதர்கள் பலஸ்தீனின் பூர்வீக குடிகள் நாங்கள்தான்  எங்களுடைய வரலாறு 400 வருடங்கள் பழமை வாய்ந்து என்று சொல்லி பலஸ்தீன் பூர்வீக குடி மக்களை மனித நேயமின்றி கொன்று குவிக்கின்றார்கள் .

ஆனால் உண்மை அதுவல்ல ! பலஸ்தீனின் பூர்வீக குடிகள் கன்னானியர்கள்தான் இவர்கள் சுமார் 4000  வருடங்கள் பழமை வாய்ந்தவர்கள் .  இவர்களை யூதர்கள்  கி.மு. 13 ஆம் நூற்றாண்டில் தாக்கி விரட்டிவிட்டு பலவந்தமாக பலஸ்தீனை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் . எவ்வாறென்றால்  அமெரிக்காவில் செவ்விந்தியர்களை ( Red Indians ) அடியோடு அழித்துவிட்டு ஆங்கிலேயர்கள் எப்படி  குடியேறினார்களோ அதேபோல் பலஸ்தீனில் இஸ்ரேலியர்கள் குடியமர்ந்தார்கள் .

அதன் பின்னர் கி.மு. 8 நூற்றாண்டில் பலஸ்தீன் மீது அசீரியர்கள் படையெடுத்தார்கள் . அங்கு இருந்த இஸ்ரவேலர்களை முற்றிலுமாக அழித்து அந்நாட்டைவிட்டு அடித்து துரத்திவிட்டு வேறு இனங்களை குடியமர்த்தினார்கள் அப்படி குடியமர்த்தப்பட்டவர்கள்தான் அரபு இனத்தவர்கள் . பின்னர் யூதர்களால் அடித்து விரட்டப்பட்ட கன்னானியர்களும் அரபு இனத்துடன் சேர்ந்து குடியமர்ந்தார்கள் .

அதன் பிறகு கி.பி. 6 ஆம்  நூற்றாண்டில் பாபிலோனியா சக்கரவத்தியான பஃக்து நஸர் ( Nebukath Neser ) தென் பலஸ்தீனை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அங்கு வசித்த யூதர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டு இறைத்தூதர்  ஸுலைமான் (அலை) கட்டிய பைதுல் முகத்தஸை அழிந்து சின்னாபின்னமாக்கினார் . அதேபோல்  ( Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமான் என்ற வழிபாடுத் தளத்தையும் அழித்தார் .

விரட்டப்பட்ட சில   யூதர்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்து ஈரானியர்களின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீனில்  குடியேறினார்கள் . பின்னர் மறுபடியும் Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமானை நிறுவினார்கள் .

ஆனால் இந்த மறு குடியேற்றம் 3/4 நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்க விலை . கி.பி. 70 இல் யூதர்கள் ரோமப் பேரசை எதிர்த்து யுத்தம் செய்தார்கள் . அதில் ரோமர்களால் பைத்துல் முகத்தஸ் நகரம் மற்றும் (Temple of Solomon ) ஹைகலுஸ் ஸுலைமான் முற்றிலும் சின்னாபின்னாமாக்கப்பட்டது .

பின்னர் கி.பி. 135 இல் யூதர்கள் மேற்கொண்ட கிளர்ச்சியை அடக்க வந்த ரோமப்படை பலஸ்தீன் நாட்டில் இருந்து யூதர்களை விரட்டி அடித்தது .இதன் பிறகு தென் பலஸ்தீனிலும் குடியேறினார்கள் . ஏற்கெனவே வடக்கு பலஸ்தீனில் 8 நூற்றாண்டுகள் குடியமந்துவிட்டு தென் பலஸ்தீனுக் மாறினார்கள் .
இஸ்லாத்தின் வருகைக்கு முன் பைதுல் முகத்தஸில் ( பலஸ்தீனில் ) அராபியர்களே காணப்பட்டார்கள் .

பின்னர் யூதர்கள் ஐரோப்பாவில் சபிக்கப்பட்ட இனமாகக் கருதப்பட்டார்கள் . இங்கிலாந்தில் 1290  ஆண்டு முதலாம் எட்வர்ட் யூதர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற  ஒர் அரசாணையை வெளிட்டான் . அதன் பின்னர்  1302  இல்  பிரான்ஸ் நாட்டை விட்டு யூதர்கள் யாவரும் வெளியேற வேண்டுமென நாட்டு மன்னர் பிலிப் கூறினார் . இப்படி 1498 இல் 12 ஆம் லூயிஸ் மன்னன் போன்று பல ஆட்சியாளர்கள் விரட்டியடித்தார்கள்

பின்னர் எங்களுடைய தேசம் எமக்கு வேண்டும் நாங்கள் அதை பலஸ்தீனர்களிடமிருந்து ஆக்கிரமிக்க வேண்டும் என்று சொல்லி 1880  ஆண்டு மேற்கு ஐரோப்பாவில் வசித்துவந்த யூத குடும்பங்களை ஒன்றன்பின் ஒன்றாக பலஸ்தீனில் குடியேற்றினார்கள் . அதன் பிறகு புகழ் பெற்ற யூதர்களின் தலைவனான (( தியோடர் ஹெர்ஸல் )) என்பவன் 1897  இல் (Zionist  3) Organization அல்லது ZO ) ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் இதற்கு கேடிக்கணக்கான பணத்தை தானமாக யூதர்கள் அளித்தார்கள் . இதன் நோக்கம் பலஸ்தீனை மறுபடியும் கைப்பற்ற வேண்டும் மீண்டும் அங்கு ஹைகலுஸ் ஸுலைமானை நிறுவ வேண்டும்

1880 ஆண்டிலிருந்து 1917 வரைக்கும் சுமார் 37 ஆண்டுகள்  பலஸ்தீன் பிரிட்டினின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது . பிரிட்டினின் நட்பைப் பெற்றுக் கொண்ட யூதர்கள் உலகத்தில் பரந்து வாழ்ந்த யூதர்களை 37 ஆண்டுகளுக்குள் ஒன்று திரட்டினார்கள்  . அதேபோல் பிரிட்டினின் உதவியோடு  8.000   அரபியர்களின் விவசாய பூமிகள் பறிக்கப்பட்டது . 5.000 ஹெக்டேர் அரசாங்க உத்தரவின் பிரகாரம் பறிக்கப்பட்டது . இப்படியாக பலஸ்தீனர்கள் உடமைகளை இழ்தார்கள் .

1922  இல் 82.000 அளவு இருந்த யூதர்கள் 1939  இல் 4 அரை இலட்சமாக பெருகி இருந்தார்கள் . பின்னர் அவர்களின் திட்டத்திற்கேற்பவும் பிரிட்டன் அரசாங்கத்தின் தாராளத்திற்கேற்பவும் எமது அரபு நாட்டு தலைவர்களின் அணுசர்னையுடன் 1917 ஆண்டு முதல் 1947 வரை சுமார் 30 ஆண்டு கலத்தில் யூதர்களின் இரண்டாவது திட்டமான யூத நாட்டை உருவாக்கும் திட்டம் நிறைவேறியது .

அன்றிலிருந்து இன்றுவரையும் இஸ்ரேலின் காஸாமீதான நில ஆக்கிமிப்பாலும்  பொருளாதார முற்றுகையாலும் பலஸ்தீனில் இருந்து  3.503.323  வெளிநாட்டுகளில் தங்கி வாழ்கிறார்கள் . 1.6 மில்லியன் மக்களைக் கொண்ட காஸாவில் இஸ்ரேலின் வான் தாக்குதல்களாலும் பொருளாதார முற்றுகையைலும் 1000 த்திற்கு அதிகமான சிறுவர்கள் , இளைஞர்கள் பெண்கள் , வயோதிபர்கள் கொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் .

எனவே பலஸ்தீன் பூமி என்பது யூதர்களின் பூமியல்ல அது  முஸ்லிம்களாகிய எங்களின்  பூர்வீக பூமி இதை யாருக்கும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம் .

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

பிரதம ஆசிரியர் 

தலைவாசல் சஞ்சிகை

Thursday, December 10, 2015

இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் இறைமைக்கு ஒரு போதும் சவாலாக இருந்ததில்லை

ஹபீஸுல் ஹக்

கடந்த காலங்களில் பெளத்த இனவாதிகளால் முஸ்லிம்கள் இலங்கையின் இறைமைக்கு சவாலாக இருக்கின்றார்கள் அவர்கள் வெளிநாட்டுகளுக்கு எமது இரகசியங்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள் எனறு பிழையான புரிதல்களை பெளத்த மக்களுக்கு பிரச்சாரம் செய்தார்கள் இன்னும் பிரச்சாரம் செய்துகொண்டும் வருகின்றார்கள் .

இலங்கை முஸ்லிம் என்ற வகையில் அவர்கள் ஒருபோதும் இலங்கையின் இறைமைக்கு ஒரு போதும் அச்சுறுத்தலாக அமைய மாட்டார்கள் . இலங்கையின் வளர்ச்சிக்கு இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பெரியது .  கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இலங்கையைத்  காலணித்துவப்படுத்திய  ஒல்லாந்தர்கள் போத்துகேயர்கள் ஆங்கிலேயர்கள்  போன்ற கொடிய மிருகங்களிடமிருந்து    இலங்கையைப்பாதுகாக்க தனது உய்ரை உடமைகளை உறவுகளை அர்பனித்தார்கள் .

அதுமாத்திரமல்ல இலங்கையின் பாதுகாப்புப் படையில் நாட்டுக்காக   முதலாவதாக உயிர்த்தியாகம் செய்தவரும் ஒரு முஸ்லிம்தான் .கி.பி. 1518  இல் போத்துகேயரின் குடியேற்றமாக இலங்கை காணப்பட்டபோது பராக்கிரமபாகு முஸ்லிம்களுடைய உதவியில்தான் எதிர்த்துப் போராடினான் . இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பை

இதையும் நாங்கள் மறக்கக்கூடாது இலங்கைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் யார் என்று பார்த்தாலும் அதுவும் எமது முஸ்லிம்கள்தான் இப்படித்தான் இலங்கை முஸ்லிம்கள் இருந்தார்கள் இருந்துகொண்டு இருக்கின்றார்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் .

எனவே இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும்  இலங்கையின் இறைமைக்கு  அச்சுறுத்தலாக இருக்கவும்மில்லை அச்சுறுத்தலாகவும் இருக்க மாட்டார்கள் .

Hafeesul Haq ( Fathih )
Varipathanchenai

Tuesday, December 1, 2015

Arabic calligraphy

This is my Arabic calligraphy . When I was in 2d year I wrote to majallathul fathih  in fathih institute of srilanka. 

خط العربية  الذي كتبت في مجلةالفاتح في الصف الثاني .

Friday, November 27, 2015

அமெரிக்க இராணுவம் ஈராக்கில் செய்த கொடுமைகள்


கடந்த காலங்களில் ஈராக்கின் சர்வதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தது .
ஆக்கிரமித்ததுமாத்திரமல்லாமல் அங்கு இருந்த கணிய வளங்களை சுறண்டி அமெரிக்கா சந்தை உற்பத்தியில் மேல்லெழுந்து .

அதேபோல் முஸ்லிம்களின் பலவினத்தைப் பயண்படுத்தி ஷீஆ . சுன்னி பிரச்சினையை ஏற்படுத்தி ஈராக்கின் உற்பத்திகளை சுவிகரித்தது !

இன்றும்  எமது முஸ்லிம் நாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தி சர்வதிகாரத்தை ஒழித்தல் என்ற பெயரில் நுழைய காத்துக்கொண்டு இருக்கின்றது .  இது அறியத எமது முட்டாள் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு வால் பிடித்து இருக்கின்றார்கள் !

கடந்த காலத்தில்  ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்த சில சித்தரவதைகள்

இறைவா முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவாயாக !

ஏன் முஸ்லிம் நாடுகளில் இந்தக் கொடுமைகள்  ஏற்பட்டால் எந்த ஒரு  நாடும்  கணக்கெடுப்பதில்லை ?

கண்கெட்ட ஜனநாயகம்

தொகுப்பு :- ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
varipathanchenai

Tuesday, November 24, 2015

பலஸ்தீன் தேசம்

இஸ்ரேலின் 60 ஆண்டு கால ஆக்கிரமிப்பால்  காஸா எரித்துகொண்டிருக்கின்றது .

==============================
A.M. Hafeesul Haq

450 மில்லியன் அறபுகளின் வாசப்படியை  4 மில்லியன் யூதர்களைக் கொண்ட இஸ்ரேல் 60 ஆண்டுகளாக நடத்தி வரும் ஆக்கிரமிப்பும் செய்யும் கொடுமைகளையும் பார்க்கின்ற போது இரத்தம் கொதித்தெழுகின்றது .

கடந்த 2008 டிசம்பர் முதல் - 2009  ஜனவரி வரை சுமார் 22  நாட்கள் இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான விமானத் தாக்குதலால் 1300   பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள் . இன்னும் 6500 பேர் காயப்பட்டார்கள் . அவர்களில் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களுமே

இன்று காஸாவிலுள்ள 1.6 மில்லியன் மக்களில் 80% மானோர் எவ்வித உதவியுமின்றி சர்வதேச உதவி நிறுவனங்களில் தங்கியுள்ளார்கள் .
   ஐ.நா. வின் பணிப்பாளர் ஜோன் கிங்கின் கருத்துப்படி

அங்கு மருத்துவப் பொருள் இல்லை . பத்திரிகைகள் இல்லை . இறந்தவர்களின் உடலைப் போரத்துவதற்காக துணிகளும் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு உண்பதற்கு உணவும் இல்லை . இந்த நிலையை என்னால் வர்ணிக்க முடியாது என்கிறார் .

இன்றும் அதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது  இந்த நிலையை நாங்கள் ஊடகங்களினூடாக உலகுக்கு வெளிக்காட்ட வேண்டும் .  இது காஸா மக்களின் பிரச்சனை மாத்திரமல்ல முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை இதை நாங்கள் எத்திவைக்காமல் வேறு யார் எத்திவைப்பது ?

எனவே எமது சமூகத்திற்கு இஸ்ரேல் செய்கின்ற கொடுமைகளை ஊடகங்களினூடாக காட்டுவோம் அதற்கு சிறந்த கூலியை எமக்கு இறைவன் தருவான் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

Friday, November 20, 2015

10ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மருத்துவர் அலி இப்னு அப்பாஸ்

10ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மருத்துவர் அலி இப்னு அப்பாஸ்

மயிர்த்துளைக் குழாயின் அமைப்பு , தொழிற்பாடு , குழந்தை பிரசவமாகும் விதம் என்பவற்றை ஆராய்ந்து விளக்கமளித்த முதல் மருத்துவர் அலி இப்னு அப்பாஸ் .

10 நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த மருத்துவ மேதைகளுல் இவரும் ஒருத்தர் . இவர் பாரசீக தென்மேற்கில் அஹ்வாஸ் என்ற கிராமத்தில் பிறந்தார் .

இவரின் முழுப் பெயர் அலி இப்னு அப்பாஸ் அல் மஜூஸி என்பதாகும் . அல் மஜூஸி என்பதற்கான காரணம் இவருடைய தந்தை மஜூஸியப் பரம்பரையாக இருந்தார் அதனால்தான் அலி இப்னு அப்பாஸ் அல் மஜூஸி என்று அழைக்கிறார்கள் .

இவரைப் பற்றி Dr. Lecleric  (லெக்லெரிக் ) என்பவர் எழுதுகையில் அலி இப்னு அப்பாஸ் 10 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் .

இவர் புவையித் சுல்தான்களுள் ஒருவரான ((( ஆதுத் தெளலான - (975-982)  )))  ஆதரவில் வாழ்ந்த இவர் மயிர்த்துளைக் குழாயின் அமைப்பு , தொழிற்பாடு , குழந்தை பிரசவமாகும் விதம் என்பவற்றை ஆராய்ந்து விளக்கமளித்த முதல் மருத்துவர் .

இவர் எழுதிய நூல் '' காமில் ஸனாஆ ( பூரணத்துவம் வாய்ந்த மருத்துவ நூல் )   கிதாபுல் மலிக் என்ற பெயராலும் அழைக்ப்பட்ட இன்நூல் சுல்தான் ஆதுத் தெளலாவுக்காக எழுதப்பட்டது .  இந்த நூல் இமாம் ராஸியின் நூலான , அல் ஹாவியை விடவும் அமைப்பில்  சிறந்த இன்நூல்  20 சொற்பொழிவுகளைக் கொண்டது . இதில் முதல்10  சொற்பொழிவுகள்  மருத்துவக் கோட்பாடுகள் பற்றியும் , அடுத்த 10 சொற்பொழிவுகள் மருத்துவச் செயல் முறைகளைப்பற்றியும் கூறுகின்றது .

இந்த நூல்கள் இன்றும் போற்றப்படுகின்றது இன்நூல் 11 நூற்றாண்டின் கடைசி பகுதியில் கொன்ஸ்தந்தைன் எனபவரால் லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டது .

பின்னர் பாட நூலாக இருந்து அலி இப்னு ஸீனாவின் நூலான கானுன் என்ற நூல் வந்ததும் செல்வாக்கை இழந்தது . தற்போது இந்த நூல் தனி தனி பகுதிகளாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது .

இன்னொரு விடையம் அக்காலத்தில் மருத்துவர்கள் குழந்தை தானாக உண்டாகும் இச்சை வழி முயற்சி ( voluntary effect ) யால்தான் பிரசவம் நிகழ்கிறது என்று என்று பல நூற்றாண்டு நம்பி வந்தார்கள் ஆனால் அலி இப்னு அப்பாஸ் இக்கருத்தை பிழை என்று கூறி ''' பிரசவ நேரத்தின்போது கருப்பைத் தசைகளில் ஏற்படும் எதிர் தாக்கம் ( reaction ) காரணாகவே குழந்தை பிறக்கின்றது என்று நிரூபித்துக் காட்டினார் .

கருப்பை மீது பிரசவ நேரத்தில் ஏனைய உறுப்புக்களால் செலுத்தப்படும் தாக்கத்தால் கருப்பைத் தசைகள் சக்தியை இழந்து சுருங்கி விரிந்து கொண்டே இருக்கும் . இந்த சமையத்தில் தாய் முக்குவதனாலும் சுவாசப்பைகள் கருப்பையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதனால் குழந்தை வெளியே தள்ளப்படுகின்றது என்று நவீன கால மருத்துவர்கள் கூறுகின்றார்கள் .

கருப்பையின்  இயக்கமே குழந்தை பிறப்பதற்குக் காரணம் என்பதை 10 நூற்றாண்டிற்கு முன்பே எமது முஸ்லிம் மருத்துவரான அலி இப்னு அப்பாஸ் நிரூபித்துக் காட்டிவிட்டார் .
இவர் 994  இல் மரணமடைந்தார்.

இதை எமது மேற்குலகிற்கும் எமது முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .

இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் !!!

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

Thursday, November 5, 2015

அழிக்கப்படும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

இலங்கையில் முஸ்லிம்களின்  பள்ளிவாசல்கள் மற்றும் நகரப்  பொது இடங்கள் புனர்நிர்மானம் செய்வதால் ஏற்படும் விளைவு என்ன ?

கடந்த ஆண்டுகளாக இலங்கை பெளத்த இனவாதிகள் சொன்ன ஒரு கருத்து என்னவென்றால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு என்பது கிடையாது அவர்கள் வரத்தகத்திற்காக வந்த ஒரு குழுவினர் என்று ஊடகங்களில் காரசாரமாகப் பேசினார்கள் .

ஆனால் இதை அனைத்து ஊடகங்கள் அரசாங்கத்தின்  சில மதச்சார்புள்ள அரசியல்வாதிகள் ஏன் பெளத்தர்கள்கூட இந்தக் கருத்துக்கு ஆதரித்தார்கள் . ((
இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சில அரசியல்வாதிகள் அவர்களின் வார்த்தைக்கு பல்ழித்தார்கள் )) 

இந்த இனவாதிகளின் கருத்துக்கு பாதில் கொடுப்பதில் எமது முஸ்லிம் புத்திஜீவிகள் பதில் கொடுப்பதில் மிகவும் தாமதமானார்கள் ஆதாரம் தெரியாமல் தள்ளாடினார்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன ?

நாங்கள் இலங்கையில் வாழ்ந்துள்ளோம் என்பதற்கான அடையாளத்தை நகர அபிவிருத்தி என்ற பெயரிலும் பள்ளிவாசல் புனர்நிர்மானம் என்ற பெயரிலும் எமது வரலாற்றுத் தடையத்தை அழித்துவிட்டேம் .

எனவே இனியாவது எமது வரலாற்றுத் தடையங்களைப் பாதுகாக்க முயற்சிப்போம் . அப்போதுதான் நாங்கள் இலங்கை முஸ்லிம் பூர்வீகக் குடிகள் என்று தலை நிமிந்து சொல்லலாம் .

இதை முடியுமானால் எமது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவையுங்கள் இறைவன் அருள்புரிவான்

ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் )
Varipathanchenai

இஸ்ரேலின் முன்னால் பெண் பிரதமர் Golda meir இன்சி யோனிஸக் கருத்து

இஸ்ரேலின் முன்னால் பெண் பிரதமர் Golda meir இன்சி யோனிஸக் கருத்தை மறந்தவிடக்கூடாது .
=============================
இதை அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு எத்திவையுங்கள் இறைவன் அருள் புரிவான் .

1969 ஜூன் 15 இல் பிட்டினில் வெளியாகிய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் Golda Meir சென்ன கருத்து  .

There was no such thing as palastinians . It was not as though there was a palastinie people and we came and threw them out and took their country from them. they did not exist .

பலஸ்தீன் எனச் சொல்லப்படும் ஒன்று அங்கு எதுவும் இல்லை . நாம் வந்தவுடன் அவர்களை அங்கிருந்து வீசிவிட்டோம் . பலஸ்தீனர்கள் என்போர் அங்கு இப்போது அங்கு இல்லை  ,,  என்று சொன்தை நாங்கள் மறந்து விடக்கூடாது .

இஸ்ரேவேலர்களைப் பொறுத்தவரை பலஸ்தீனர்கள் மனிதர்களாகக் கருதவில்லை . இஸ்ரேவேலர்களைப் பொறுத்தவரை  அவர்களுக்கு  60  வருடங்களுக்கும் வரலாறு  இல்லை  இது முஸ்லிம்கள் வரலாற்றுப் பூமி இதை சியோனிஸ எதிரிகளிடமிருந்து மீட்டெடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை .

Friday, October 30, 2015

துருக்கியின் அர்துகான் என்னும் அரசியல் ஆளுமையும் மேற்குக சதியும்

A.M. HAFEESUL HAQ (FATHIH )

தயவுசெய்து இதை அனைவருக்கும் எத்தி வையுங்கள் இறைவன் அருள் புரிவான்

இன்று சமகால இஸ்லாமிய உலகில் மக்கள் மனதை வென்ற அரசியல்வாதிகளில் துர்கிய ஜனாதிபதி  அர்துகானும் ஒருவர் . இவர் துருக்கியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தன் உயிரை அற்பனித்த சிறந்த தலைவர் .

இவர் 1954 இல் துருக்கியின் என்ற கிராமத்தில் பிறந்தார் . பின்னர் தனது 5 ந்து பிள்ளைகளையும் சிறப்பாக கல்வி அறிவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அர்துகானின் தந்தை இஸ்தான்புல் நகருக்கு  குடிபூர்ந்தார் . 13 வயதில் தனது ஆரம்பக் கல்வியை இஸ்தான்புலின் இஸ்லாமியப் பாடசாலையொன்றிலும் பின்னர் தனது உயிர் கல்வியை இஸ்தான்புல் (( மர்மரா பல்கலைக்கழகத்தில் இணைந்து முகாமைத்துவத் துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தார் .

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது தந்தையின் வறுமை காரணமாக பணம் பெற்றுக் கொள்வதில் மிகவும் கஷ்டப்பட்டார் அப்போது அவர் பாதை யோரங்களில் பாண் விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டார் .

துருக்கியின் அரசியல் முன்னோடி பேராசிரியர் நஜ்முத்தீன் உடனான தொடர்பு .
======================

இவர் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற போது பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானை சந்தித்தார் . பின்னர் 1972 இல் நிறுவிய தேசிய ஸலாமா கட்சியில் இணைந்தார் . இருந்தும் நஜ்முத்தீன் அர்பகான் நிறுவிய அனைதுக் கட்சிகளும் துருக்கி மதச்சார்பற்ற அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது . பின்னர் அர்பகான் நிறுவிய  ( ரபாஹ் ,பழீலா ) ஆகிய கட்சிகளில் இணைந்து  செயற்பட்டார் .

1985 இல் ரபாஹ் கட்சியின் இஸ்தான்புல் நகர கிளையின் தலைவராக தெரிவு சய்யப்பட்டு 1994 இல் இஸ்தான்புல் நகர மேயராகவும் தெரிவு செய்யப்பட்டார் . பின்னர் 1998 இல் ஒரு கூட்டத்தின் போது இஸ்லாமியக் கவிதையொன்றை வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் .

தனது ஆசான் அர்பகானின் நேரடி இஸ்லாமிய அரசியலில்  ஈடுபாடும் முறை தற்போதைய துருக்கிக்குப் பொருந்தாது என்று கருதி 2001  பழீலா கட்சியில் இருந்து  நீங்கி  '' நீதிக்கும் அபிவிருத்திற்குமான கட்சியை நிறுவினார் .

பின்னர் ஐரோப்பாவின் நோய் நாடாக இருந்த துருக்கியை துரித பொருளாதார வளர்ச்சி அடையவைத்தார் . அன்று துருக்கியை ஐரோப்பிய யூனியனில் விலக்குவதற்கு இருந்த நாடுகள் இன்று அதை ஐரோப்பிய யூனியனில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்கள் .

இன்று மேற்குலகு அர்துகானின் ஆட்சியை வீழ்த்துவதற்கு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் . காரணம் அர்துகானின் ஆட்சி துருக்கில் மேலோங்கினால் மீண்டும் உலகை இஸ்லாமிய ஆட்சி நிலை பெற்றுவிடும் , எங்கள் பொருளாதாரம் முடக்கப்பட்டுவிடும் , இஸ்ரேல் என்ற எங்களுடைய நாடு அழிந்துவிடும் என்பதற்காக துருக்கியின் எதிர்வருகின்ற தேர்தலில் அர்துகானை வீழ்த்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் .

ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை

நிகாஹ்

எந்தத் தரப்பு  திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கின்றதோ அந்தத் தரப்பு வாங்கிய பரிசுகளை கொடுக்க வேண்டுமா ?

இதை ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார் .

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண ஒப்பந்தம் மேற் கொள்ளப்படுகின்றது அந்த ஆணின் குடும்பம்  பெண்குடும்பத்தவர்களுக்கு  சில பெறுமதியான  பரிசில்களும் ( الهديا ) பரிமாறப்படுகின்றது  சிறிது காலத்தின் பின்பு பெண் வீட்டார்கள்  திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கின்றார்கள் இதற்கு  இஸ்லாம் கொடுக்கும் தீர்வு  என்ன ?

இன்று திருமண ஒப்பஒப்பந்தத்தை தான்  விரும்பிய விரகாரம் மேற்கொள்கின்றார்கள்  தான் விரும்பிய பிரகாரம் சேர்ந்து கொள்கின்றார்கள் .

உண்மையில் ஒரு மனிதர் திருமண ஒப்பந்தம் மேற்கொள்வதற்கும் அதை முறித்துக் கொள்வதற்குமான முழு சுதந்திரத்தை இஸ்லாம் கொடுத்துள்ளது . அதேபோல்  சில நிபந்தனைகையும் முன்வைத்துள்ளது .

10) பெண்வீட்டார்களுக்கு ஆண்வீட்டார்கள் பெறுமதியான பரிசில்கள் கொடுத்தால் திருமண ஒப்பந்ததை  பெண்வீட்டார்கள் முறித்துக் கொண்டார்களேயானால் பெண் வீட்டார்கள் கட்டாயம் தாங்கள் பெற்றுக்கொண்ட الهداي வை கொடுக்க வேண்டும் .(( இது மாலிக் மத்ஹபின் கருத்து )) இதை அதிகமான நாடுகள் பின்பற்றுகின்றது . இதைத்தான் ஏகோபித்த கருத்தாக எடுத்துக் கொள்வார்கள் .

குறிப்பு :- திருமணத்தை எந்தத் தரப்பு முறித்துக் கொள்கிறார்களோ அவர்கள் வாங்கிய பரிசுகளையும் கொடுக்க வேண்டும் .இதுதான் இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடும்கூட .

ஹபீஸுல் ஹக்
வரிப்பத்தான்சேனை

Thursday, October 29, 2015

இமாம்  முஹம்மத் அத் தாஹிர் இப்னு ஆஷூர்

20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக இருந்த இவர் தூனிசியாவில் சமூக அந்தஸ்துள்ள  ஒரு வசதியான குடும்பத்தில்  1879 ல்  பிறந்தார் இவர்    மிக புகழ்பெற்ற Zaytuna  உலமாவாக மக்களால் மதிக்கப்பட்டார் .

இவர்   1932 ஆம் ஆண்டு   இஸ்லாமிய கல்வி மற்றும் நீதி பரிபாலனம் சீர்திருத்த பகுதியில் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளராகவும்   திகழ்ந்தார் .

இவரின் சிறப்பு என்னவென்றால் மகாஸித் கலை பற்றி இரண்டு இமாம்கள் இரண்டு விதமான கருத்துக்களைச் சொன்னார்கள் ( இமாம் கஸ்ஸாலி , இமாம் ஷாதிபி ) இவர்களின் இரண்டு கருத்துக்களையும் உடைத்து  மகாஸிதுஷ் ஷரிஆ என்பது ஒரு தனியான கலை என்று  ஒரு தெளிவைக்  கொடுத்தார் . அந்தவகையில் இவர் மகாஸித் என்பது ( சட்டம் , நம்பிக்கைக்  கோட்பாடு , பண்பாடு ) என்று குறித்துக் காட்டினார் . பின்னர்  தனது 94 வயதில் 1973 ல் அந்தலூசில்   இறந்தார் .

இவர் எங்களை விட்டுச் சென்றாலும் இவருடைய சிந்தனைகள் எங்களைவிட்டு மரணிக்கக் கூடாது .

ஹபீஸ் ஹக் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனைத .