நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அன்னை பாத்திமா (ரலி) மிகவும் அவலோடு சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் என்று கேட்கிறார் பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டவுடன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூரினார். சொர்க்கத்தின் உள்ளே நுழைவது விறகு வெட்டியின் மனைவியா..? யார் அவர் என்று மிகுந்த ஆவலோடு கேட்கிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.. உனது வீட்டுக்கு அருகாமையில் தான் அவருடைய வீடு இருக்கிறது என்று கூறினார்.அன்னை பாத்திமா நாயகிக்கு ஆவல் அதிகரித்து அப்படி என்ன கூடுதல் தகுதி இருக்கிறது என்பதை அறிய அவரை சந்திப்பதற்காக தன்னுடைய கணவர் அலி (ரலி) அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விறகு வெட்டியின் வீட்டுக்கு சொன்று கதவை தட்டுகிறார்.
யார் அது என்று ஒரு பெண்மணின் குரல் கேட்கிறது.நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் தங்களிடம் பேசுவதற்காக வந்துள்ளேன் என்று பாத்திமா (ரலி) கூறுகிரார். உலகமே திரும்பி பார்க்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான நபிகள் நாயகத்தின் மகள் ஒரு ஏழையின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நான் தான் பாத்திமா என்று கூரிய அந்த நேரத்திலும் அந்த வீட்டின் கதவு திறக்கவில்லை என்னுடைய கணவர் இல்லாத நேரத்தில் கதவு திறக்க அனுமதி இல்லை என்று விறகு வெட்டியின்
மனைவி கூறுகின்ரார்..
மேலும் அல்லாஹ்வின் தூதரின் மகளை காண்பதற்கு எனக்கும் ஆசைதான். ஆனால் என்னுடைய கணவரின் அனுமதி இல்லாமல் கதவு திறப்பதற்கு எனக்கு அனுமதி இல்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த பெண்மணி கூறுகையில். நாளை நீங்கள் வருவதாக இருந்தால் என்னுடைய கணவரிடம் அனுமதி பெற்று வைக்கிறேன் என்று அந்த பெண்மணி கூறினார். அதன் அடிப்படையில் அன்னை பாத்திமா (ரலி) இரண்டவது நாளாக தன்னுடைய புதல்வர்கள் ஹசன்(ரலி) ,ஹுசைன்(ரலி) ஆகியோரை அழைத்து சொல்கிறார்.
முதல்நாளை போன்று கதவை தட்டுகிறார் முதல்நாளை போல யாரது என்று பெண்ணின் குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளேன் என்னுடன் என்னுடைய புதல்வர்கள் இருவரும் வந்துள்ளனர் என்று பாதிமா (ரலி) கூருகிறார். இரண்டாவது நாளும் கதவு திறக்கப்படவில்லை நாயகி என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் வருவதற்கு மட்டும்தான் அனுமதி பெற்றேன். தங்களுடைய புதல்வர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. நாயகியை மறுத்தமைக்கு என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நான் சொல்லும் வார்த்தைகளை தாங்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கூறுகிரார்.
முன்றாவது நாளாக புதல்வர்களை விட்டு மீண்டும் அதே வீட்டுக்கு அன்னை பாத்திமா (ரலி) செல்கிறார் மூன்றாவது நாலும் தட்டுகிறார், யார் என்று அதேபோல குரல் கேட்கிறது. நான் தான் நபியின் மகள் பாத்திமா வந்துள்ளன் என்று அன்னை கூரியவுடன் கதவு திறக்கபடுகிறது என்னுடைய கணவரிடம் உங்களுடைய வருகை குறித்து அனுமதி கேட்டேன். பெருமானாரின் குடும்பத்தினர் யார் வந்தாலும் எவ்வித தடையும் இல்லை என்று கணவர் கூரியதாக அந்த பெண்மணி கூரினார். அதன் பிறகு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அஸர் தொழுகை வருகிறது.
இருவரும் தொழுகிறார்கள் தொழுகை முடித்து அன்னை பாத்திமா (ரலி) ஓரமாக அமர்ந்து கொள்கிறார் ஆனால் அந்த பெண்மணியோ யா அல்லாஹ் தன்னுடைய சேவை தன்னுடைய கணவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் பலம், தேக நலம் அளித்திட வேண்டும் என்று கணவருக்காக கண்ணீர் மல்க தூஆ செய்கிறார். அங்கிருந்து ஸலாம் சொல்லிவிட்டு அன்னை பாத்திமா அங்கிருந்து விடைபெற்று மறுநாள் தன்னுடைய தந்தையிடம் நடந்தவைகளை சொல்லிவிட்டு அல்லாஹ்வை வணங்காமல் வேறு எதுவும் வணங்க கட்டளை இருந்தால் இனிதான கணவரை வணங்குவதற்கு அனுமதி பெறுவேன் என்று கூருகிறார்.
கணவனின் உடமைகளை கவனமாக காத்து கொள்பவள், கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடந்து கொள்பவள், கணவனின் குணமறிந்து கனிவு கொண்டு கடமை செய்பவள், கணவனின் கால் அடியில் காலமெல்லாம் சேவை செய்பவள், கணவனின் ஆணையின்றி வீட்டில் பிறரை சேர்த்திடாதவள், கணவனின் எதிரில் கையை தரக்குறைவாய் நீட்டிடாதவள். நாளை சொர்க்கத்தில் நல்ல இடத்தை பெற்றுக் கொள்வாள் என்றும் நரகத்தில்லிருந்தும் தப்பி கொள்வாள்.
எனது அருமை மகள் பாத்திமாவே..ஒட்டகத்தில் நீ வரும்போது விறகு வெட்டியின் மனைவி ஒட்டகத்தின் கயிறை கையிலே பிடித்தவாறு முதல் ஆளாய் சொர்க்கத்தின் உள்ளே நுழைவார், கண்ணான என் மகளே அடுத்தபடி நீ நுழைவாய். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
Thursday, July 30, 2015
சொர்க்கத்தின் உள்ளே நுழையும் முதல் பெண் யார் ?
இலங்கையில் பதியப்பட்ட அரசியல் கட்சிகள் .
47) தேசிய காங்கிரஸ்
48) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்01) இலங்கை தமிழ் அரசு கட்சி
02) ஈழவர் ஜனநாயக முன்னணி .
03) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி .
04) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி .
05) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி.
06) ஐக்கிய தேசிய கட்சி .
07) ஐக்கிய வலித் முன்னணி .
08) ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி .
09) ஐக்கிய சோசலிச முன்னணி .
10) ஐக்கிய சிங்கள மஹா சபை .
11) மலையக மக்கள் முன்னணி .
12) தொழிலாளர் தேசிய சங்கம் .
13) மக்கள் விடுதலை முன்னணி
14) மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி.
15) தேசிய மக்கள் கட்சி .
16) தேசிய ஐக்கிய முன்னணி .
17) ஜாதிக சங்க வர்த்தன பெரமுன .
18) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் .
19) தமிழ் விடுதலைக் கூட்டணி
20) தேச விடுதலை மக்கள் கட்சி .
21) தேசிய இடதுசாரி முன்னணி
22) .நவசமசமாஜக் கட்சி .
23) பிரஜைகள் முன்னணி
24) பொதுஜன முன்னணி .
25) ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி .
26) ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் .
27) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி .
28) ஜனநாயக இடதுசாரி முன்னணி.
29) மக்கள் சுதந்திர முன்னணி.
30) மக்கள் ஐக்கிய முன்னணி
31) ருகுணு மக்கள் முன்னணி.
32) முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி.
33) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் .
34) லங்கா சமசமாஜக் கட்சி .
35) லிபரல் கட்சி .
36) விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி .
37) ஷிலங்கா சுதந்திரக் கட்சி .
38) ஷிறிலங்கா முற்போக்கு முன்னணி .
39) ஷிறிலங்கா மக்கள் கட்சி .
40) ஷிறிலங்கா முஸ்லிம் கட்சி .
41) ஷிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் .
42) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி .
43) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் .
44) சோசலிஸ சமத்துவக் கட்சி
45) சிகள உறுமய
46) சிங்கள மகா சம்மந்த பூமி புத்ர கட்சி
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் )
இசைபற்றி இமாம்களினதும் நவீன கால அறிஞ்சர்களினதும் கருத்துக்கள் .
.
இன்று இஸ்லாமிய சட்ட அறிஞர்களளிடத்தில் இசை ஹராமா? ஹலாலா? என்பதில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. இது சம்பந்தமாக 19 ஹதீஸ்கள் வந்துள்ளது இதை சொன்ன அறிவிப்பாளர் பற்றி ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில் அதிகமான விமர்சனங்கள் உள்ளது . ஆனால் பாடல் இஸ்லாத்தில் ஹராமா ? என்றால் ஹராம் இல்லை . ஆனால் இசை ஹராமா என்கின்ற போது பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது . ஒரு சில அறிஞர்கள் கூடாது என்கிறார்கள் . இன்னும் சிலர் கூடும் என்கின்றார்கள் .
நபிஸல் அவர்களின் வரலாற்றைப் பார்கின்றபேது அதிகமான ஆதாரங்கள் உள்ளது .
ஆயிஷா (றழி ) அவர்கள் கூறும் ஹதீஸ் ஒருமுறை அன்ஸாரித் தோழர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களிடம் ஆயிஷாவே ! உங்களிடம் கேளிக்கைகள் ஏதுமில்லையா ? ஏனெனில் , அன்ஸாரிகள் கேளிக்கைகளை பெரிதும் விரும்புவர்கள் . (புஹாரி)
இது இமாம் நஸாஈ (றஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸ் . அஸ்ஸா பின் யஸீத் (றழி ) அவர்கள் கூறுகின்றார்கள் ஒருமுறை
நபிஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்தாள் . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷாவே இது யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதரே எனக்குத்தெரியாது என்றார்கள் . இவர் ஒரு பாடகி . நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்குப்பாடிக்காட்டுவார் என்றார்கள் . பின்னர் அப்பெண் ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் .
மேலும் நபிஸல் அவர்களின் காலத்தில் ஹஸ்ஸான் இப்னு தாபித் என்ற கவிஞர் இருந்தார் . இவர் யுத்தங்களின் போது எதிரிப்படைகளை வீழ்த்துவதற்காக தனது கவிதையைக் கொண்டு வசை பாடுவார் . இப்படியெல்லாம் பாடல்கள் நபிஸல் அவர்களின் காலத்தில் பாடப்பட்டது .
இன்று இசை கூடாது என்பவர்கள் ஒரு ஹதீஸை வைத்து ஆதாரம் காட்டுவார்கள் '' ஒரு காலம் வரும் அது இசையையும் , ஆண்கள் பெண்கள் கலந்திருப்பதையும் , மது அருந்துவதையும் ஆர்வமாகிக் கொள்வார்கள் .( ஹதீஸ் ) இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை உறுதியற்றது . எனவே இதை வைத்து இமாம் இப்னு ஹஸ்ம் , இமாம் தஹபி போன்ற சில அறிஞர்கள் இது கூடாது என்கிறார்கள் .
சில இமாம்களின் கருத்து
==++==++==++==++==+==
01 ) இமாம் அபூஹனீபா ( ஹராமல்ல வெறுக்கத்தக்கது )
02 ) நீதிபதி , சட்ட அறிஞர் , ஹதீஸ் வல்லுனர் . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரீ (றஹ்) இசை ஆகும் என்கிறார் .
03) இமாம் ஷாபிஈ வெறுக்கத்தக்கது . இப்படியெல்லாம் கருத்துக்களை இமாம்கள் கொண்டுள்ளனர் .
ஆனால் நவீன கால அறிஞர்கள் ஆகும் என்கிறார்கள் . காரணம் நான் மேற்கூறிய ஹதீஸைப் பொறுத்தவரையில் அதுபற்றி அதிகமான கருத்து வேறுபாடுகள் உள்ளது . இதன் காரணமாக இமாம் கஸ்ஸாலி . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரி . அதேபோல் தற்கால அறிஞர்களான கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி , கலாநிதி முஹம்மத் இமாரா , போன்ற பல அறிஞர்கள் கூடும் என்கிறார்கள் . விதிவிலக்கிற்கு அமைய இசை கூடும் என்கிறார்கள் .
குறிப்பு :- நாம் கேற்கின்ற இசைக்கு சில வரையறை உள்ளது .
உ+ம் 01) இஸ்லாமிய ஷரியாவின் வரையறையுடன் இருத்தல் வேண்டும் . ( காம உணர்வை தூண்டாமல் இருத்தல் வேண்டும் . )
எனவே இசைபற்றி தற்கால அறிஞர்களின் கருத்துக்கேற்ப இசை ஹராமல்ல ஆனால் சில வரையறைகள் உள்ளது . எனறு சொல்கின்றார்கள் .
:::---- இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன ?
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
Thursday, July 23, 2015
தென் கிழக்காசியா நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations )
தற்போது இந்தக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றியம் போன்று சக்திமிக்க கூட்டமைப்பாக மாறி வருகின்றது .
இதில் 10 நாடுகள் அங்கத்துவம்மளிக்கின்றது .
அதில் 03 முஸ்லிம் நாடுகள் உள்ளது .
01) இந்தோனேசியா
சனத்தொகை ( மில்லியன்) :- 237.5 (2010)
முஸ்லிம் :- 204.8
வீதம் :- 88
உள்நாட்டு உற்பத்தி :-3.290
01) மலேசியா
சனத்தொகை ( மில்லியன்) :-
27.5 (2010)
முஸ்லிம் :- 17.1
வீதம் :- 61
உள்நாட்டு உற்பத்தி :- 10.304
03) புரூனை
சனத்தொகை ( மில்லியன்) :-
0.4 (2011)
முஸ்லிம் :- 0.21
வீதம் :- 52
உள்நாட்டு உற்பத்தி :- 41.703
04) பிலிபைன்ஸ்
சனத்தொகை ( மில்லியன்) :-
101.8 (2011)
முஸ்லிம் :- 4.7
வீதம் :- 5
உள்நாட்டு உற்பத்தி :- 2.614
05) சிங்கப்பூர்
சனத்தொகை ( மில்லியன்) :-
5.1 (2010)
முஸ்லிம் :- 0.7
வீதம் :- 15
உள்நாட்டு உற்பத்தி :- 51.162
06) தாய்லாந்து
சனத்தொகை ( மில்லியன்) :-
66.7 (2011)
முஸ்லிம் :- 3.9
வீதம் :- 6
உள்நாட்டு உற்பத்தி :- 5.678
07) கம்போடியா
சனத்தொகை ( மில்லியன்) :-
13.3 (2008)
முஸ்லிம் :- 0.2
வீதம் :- 1.6
உள்நாட்டு உற்பத்தி :-934
08) லானோஸ்
சனத்தொகை ( மில்லியன்) :-
6.4 (2011)
முஸ்லிம் :- ?
வீதம் :- 0.11
உள்நாட்டு உற்பத்தி :-1.446
09) மியன்மார்
சனத்தொகை ( மில்லியன்) :-
58.8 (2010)
முஸ்லிம் :- 02
வீதம் :- 3.8
உள்நாட்டு உற்பத்தி :- 835
10) வியட்நாம்
சனத்தொகை ( மில்லியன்) :-
90.5 (2011)
முஸ்லிம் :- 0.2
வீதம் :- 0.2
உள்நாட்டு உற்பத்தி :- 1.528
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.
Tuesday, July 21, 2015
காஸா மக்களின் விடிவுக்காக ஒன்றுபடுவோம் .
கடந்த காலங்களில் காஸாமீது இஸ்ரேல் நடத்திய பொருளாதார முற்றுகையால் அங்கு வாழும் மக்கள் பட்ட கஷ்டம் ஒன்றல்ல இரண்டல்ல . இதை வாசிக்கின்ற போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .
01 ) 1929 - முதல் காஸாவி யூதர்களின் குடியேறம் ஆரம்பிக்கப்பட்டது .
02 ) காஸா முதலாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது . ( Leaque of Nation)
03) 1948- 1967 எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது .
04) 1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டது .
05) 2005 -2007 பலஸ்தீன் அதிகார சபையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது . இது ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் இடம்பெற்றது .
06) 2007 ஜூனில் அல் பதாஹ் இயக்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டன .
07) 2007 ஜூன் 14 - அல் பதாஹ் இயக்கம் காஸாவிலிருந்து வரட்டியடிக்கப்பட்டு காஸா முழுவதும் ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது .
08) 2008 ஜனவரி காஸாவின் எல்லைப்புறங்கள் முற்றாக மூடப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது .
09) 2008 ஜனவரி 19 காஸாவுக்கான மின்சார விநியோகத்தில் 80% மான வற்றை இஸ்ரேல் துண்டித்து காஸாமீது விமானத் தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்தது .
10) 2008 மார்ச் காஸாவிற்கான எரிபொருளை முற்றாகத் துண்டித்து , தரைவழியாகவும் ஆகாயவழியாகவும் தாக்குதல் நடத்தியது .
11) 2008 டிசம்பர் 27 காஸாமீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி , நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தது .
12) 2009 ஜனவரி 3ல் இஸ்ரேல் யுத்த தாங்கிகளுடன் காஸாவிற்குல் ஊடுருவி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது .
13) 2009 ஜனவரி 7ல் அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியது .
14) 2012 இல் இஸ்ரேல் இரண்டாவது முறை முற்றுகையிட்டு காஸாமீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது .
15) 2014 ஜூலை 08 ல் இஸ்ரேல் மூன்றாவது முறையாக கடும் தாக்குதல்களை நடத்தியது . இதனால் 2200 பேர் கொல்லப்பட்டார்கள் .
எனவே இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை உலகிற்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டும் . காஸா மக்களுக்கு விடிவுக்கா கைகோர்ப்போம் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.
Sunday, July 19, 2015
ISIS இலங்கையில் ஊடுருவியுள்ளதால் இலங்கை முஸ்லீம்களையும் ISIS ஆகப் பார்க்கும் அபாயம் ஏற்படலாம் !
இதை முடியுமானவரை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவைக்கவும் .
அன்மையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் ISIS உடன் சேர்ந்து போராடி மரணித்தார் இது நாங்கள் அறிந்தவையே . இவர் ISIS உடன் சேர்ந்து போராடி மரணித்ததால் முழு இலங்கை முஸ்லீம்களையும் ISIS ஆகப் பார்க்கும் நிலை இன்று ஆரம்பித்துள்ளது .
அந்தவகையில் இன்று இலங்கைப் புலனாய்வுத்துறை இதை மிகக் கவனமாக ஆராய்ந்து வருகின்றது . இதனால் எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தனது மார்க்கத்தைப் பின்பற்றுவதிலும் , இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதிலும் இலங்கை அரசு சில நடைமுறைப் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம் .
இலங்கையில் ISIS இன் ஊடுருவல் இருந்தமையால் என்ன வகையான பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளக் காத்திருக்கின்றார்கள் ?
==============================
01) இலங்கையில் இருக்கும் தஃவா நிறுவனங்களில் ஜிஹாத் பயிற்சிகள் இடம்பெறுகின்றதா ? என புலனாய்வுத்துறையின் கண்கானிப்பு அதிகரிக்கும் .
01) வெளிநாடு சென்று வந்ததவர்கள் ஜிஹாத் போர் பயிற்சி பெற்றுள்ளார்களா ? என அவர்களை துருவி ஆராய அரசு ஆரம்பிக்கும் .
03) பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரசாக்களில் ஜிஹாத் பயிற்சி கொடுக்கப் படுகின்றனவா என்று விஷேட அதிரடிப்படையினரை நியமித்து அவர்களை உற்று நோக்கும் .
04) செல்வந்தர்களின் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் சொத்துக்கள் ஜிஹாத் அமைப்புக்களுக்கு கொடுக்கப்படுகின்றனவா என்று அவருடைய சொத்துக்கள் பகுப்பாய்வு செய்யப்படும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
Sunday, July 5, 2015
எமது முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய மைய்யப்படுத்துவதில் அந்தக்கிரமத்தில் உள்ள பள்ளிவாசல்களிலேயே தங்கியுள்ளது.
ஏன் இப்படி ஒரு கட்டுரை நான் எழுதினேன் என்றால் . ஒரு சில கிராமத்தில் ரமழானை சிறப்பிப்பதற்குக் கூட எந்த ஒரு பயான் நிகழ்ச்சியும் இடம்பெறுவதில்லை . இவர்களினால் மக்களும் இஸ்லாம் சென்றடைவதும்மில்லை . இது வெறும் கதையல்ல நிஜம் .
இது ஒரு கிராமத்தில் மட்டும் இடம்பெறவில்லை பல கிரமங்களில் இடம்பெறுகின்றது (((( இதை நாங்கள் கட்டாயம் திருத்தியமைக்க வேண்டும் . இல்லை என்றால் இறைவனின் தண்டனையும் சோதனையும் எமக்கும் , எமது பிள்ளைகளுக்கும் , எமது கிரமத்திற்கும் வந்து சேரும் . ....
. இறைவா ! இந்த சோதனையில் எங்களைப் பாதுகாப்பாயாக ..
ஒரு சமூகத்தைச் சீர்திருத்தம் செய்வதில் அந்த சமூகத்தில் காணப்படுகிற மத வழிபாட்டு நிலையங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது . அவ்வாறு மத வழிபாட்டு நிலையங்களின் பங்களிப்பு வில்லாவிட்டால் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது . அந்தவையில் எமது முஸ்லிம் சமூகத்திற்கு இஸ்லாத்தை தெளிவுபடுத்துவதிலும் , அவர்களை நல்ல பண்பாடுள்ளவராகவும் மாற்றுவதில் எமது பள்ளிவாசல்களுக்கு பெரும் பொறுப்புக்கள் உள்ளது .
அந்த வகையில் இலங்கையில் பல பள்ளிவாசல்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது . இது றமழான் தவிர்ந்த மாதங்களில் . ஆனால் இன்னும் ஒரு சில கிராமங்களில் பள்ளிகள் மக்களைப் பைற்று விப்பதிலும் , மக்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லிக் கொடுப்பதிலும் அக்கிராமத்தில் உள்ள ஆலீம்களைப் பயன்படுத்துவதிலும் எமது ஒரு சில கிராமங்கள் மிகவும் பின்னடைவில் உள்ளது .
இதற்கான காரணம்
=====================
01) மக்களின் ஒத்துழைப்பும் , கவனயீனமும் குறைவு .
( பள்ளிவாசலில் மக்களுக்கான வழிகாட்டல் வழங்கப்படாவிட்டால் அந்த சமூகத்தின் இளைஞர்களும் அறிஞர்கள் அனைவரும் தட்டிக்கேட்க வேண்டும் . இல்லாவிட்டால் பள்ளிவாசலின் நிர்வாகம் தான் விரும்பிய பிரகாரம் ஆடுவார்கள் .
02) ஆலிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சி .
( இன்று கிராமத்தில் நன்றாக இஸ்லாத்தைப் படித்த ஆலீம்கள் இருந்தால் அவர்களை அந்தப் பள்ளிவாசல்கள் அவை இந்த இயக்கத்தைச் சேர்நதவர் என்று சொல்லி அவரை பள்ளிவாசல்கள் பயன்படுத்தப் புறக்கணிக்கின்று .
03) குடும்பரீதியான காழ்ப்புணர்ச்சி .
( கிராமத்தில் இருக்கின்ற ஆலிம்களில் சிலர் எனது குடும்பத்தின் எதிரி அல்லது அந்த எதிரிக்கு உதவியாக இருக்கின்றார் என்று சொல்லி மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்களளை பள்ளி நிர்வாகம் புறக்கணிக்கின்று .
எனவே இது குறித்து நிச்சயமாக பள்ளிவாசல் நிர்வாகிகள் இறைவனிடத்தி தகுந்த கூலிகள் இருக்கின்றது . பலவகையான கேள்விகளும் இருக்கின்றது .((((( குறிப்பு :- பள்ளிவாசல் நிர்வாகிகளை விட இவர்களைத் தெரிவு செய்தவர்களுக்கு பாரிய கேள்வி கணக்கு இருக்கின்றது . )))))) இவர்கள்தான் கூடுதலாக இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.
Saturday, July 4, 2015
இலங்கையில் அமைக்கப்பட்ட ஈரானுடை முஸ்தபா பல்கலைக்கழகத்தால் ஷீஆ சிந்தனை முஸ்லிம்களிடத்தில் ஊடுருவ ஆரம்பித்துள்ளது .
இஸ்லாமிய வரலாற்றில் அகீதா ரீதியாக பிளவுபட்ட மிக மோசமான பிரிவினர்களே இவர்கள் . அன்று அரசியல் இயக்கமாகப் பிரிந்து இன்று வழிகெட்ட ஒரு சிந்தனை இயக்கமாக மாறியுள்ளார்கள் .
இவர்களின் சிந்தனைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முறணானது . அதாவது இறுதி நபித்துவம் முஹம்மத் நபிஸல் அவர்களின் பின் அலி ரழி அவர்களுக்கு இறுதி நபித்துவம் கிடைத்தது என்று வாதிடுகின்றார்கள் . அதேபோல் அலி ரழி அவர்களின் பின் இமாம்கள்தான் ஆட்சிசெய்பவர்கள் இமாம்கள் பாவம் செய்தாதவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய அகீதா ரீதியாக பிளவுபட்டுவிட்டார்கள் .
இப்படிப் பிளவுபட்டவர்கள் இன்று ஈரான் , ஈராக் , பஹ்ரேன் ,லபனான் ,அஸர்பைஜான் போன்ற ஐந்து நாடுகளில் பெருமபான்மையாக வாழ்கிறார்கள் .
இவர்களுடைய எதிர்காலத் திட்டம் என்னவென்றால் 20 20 இல் ஈரானை மையமாகக் கொண்ட ஷீஆ அரசொன்றை உருவாக்குதல் . இதுதான் அவர்களின் எதிர்காலத்திட்டம் . இதற்கு அமைவாகத்தான் இன்று இலங்கையில் ''முஸ்தபா என்ற ஈரானுடைய பல்கலைக்கழகம் இலங்கை யில் ஆரம்பிக்கப்பட்டது . இதில் சுமாராக 360 க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் கல்விகற்கின்றார்கள் . இன்று இந்தப் பல்கலைக்கழகத்தினூடாக 350 க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் ஈரானில் கல்விகற்கின்றார்கள் . அதேபோல் அவர்களின் சிந்தனைத் தாக்கங்கள் அவர்களின் கிராமங்களிலும் , வீடுகளிலும் அதிகரித்து வருகின்றது
எனவே இதுகுறித்து இலங்கை முஸ்லிம் என்ற வகையில் நாங்கள் கரிசினை கொள்ள வேண்டும் . அப்படி கரிசினை கொள்ளாவிட்டா இலங்கையில் அப்பாவி முஸ்லீம்களுக்கு மத்தியில் ஷீஆ சிந்தனை ஊடுருவி பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை .
யார் இந்த ISIS ?
ISIS பற்றி திடுக்கிடும் சில உண்மைகள்.
================================
@) ஆரம்பம் :- 2014
@) நாடு :- சிரியா, ஈராக் .
@) தலைவர் :- அபூபக்கர் அல் பக்தாதி
@) படைப்பலம் :- 50.000- 200.000 படையினர் .
01 ) யார் இந்த ISIS ?
சிரியாவின் விடிவுக்காகப் போராடிய பலம் குறைந்த குழுக்கில் ஒன்று . இவர்களை சிலர் காபிர்ரென்று கூறுகின்றார்கள் அப்படியல்ல இவர்கள் முஸ்லிம்கள் ஆனால் கடும் போக்குச் சிந்தனை கொண்டவர்கள் . இன்று ஊடகங்களில் ISIS என்பது ஒரு சுன்னி இராணுவ இயக்கம் எனவும் , மத்திய கிழக்கில் கிலாபத்தை நிறுவுவதற்குப் போராடுகின்ற அமைப்பு எனவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது .
. இவர்கள் சிரியாவின் போர்க் களத்திலிருந்து திடீரென ஈராக்கிய நகரங்களைக் கைப்பற்றியது உலகக் கவனத்தையே ஈர்த்துள்ளது . இவர்களின் திடீர் தோற்றமும் வேகமான வளர்ச்சியையும் பார்க்கும்போது இவர்களுக்குப் பக்கபலமாக மிகப்பெரும் சக்தியொன்று இயங்குகின்றன என்பது மாத்திரம் உறுதியாகுகின்றது .
இவர்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றால்
இவர்களின் செயற்பாட்டினால் பக்தாதிலும் , அன்பர் மாகாணத்திலும் வாழும் சுன்னி முஸ்லிம்கள் பெரும் பதட்டமடைந்து அதிகமானோர் ஈராக்கை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் . இவ்வாறு ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களின் வாழ்கையைப் பாதிக்கும் வகையில் ISIS இன் செயற்பாடு அமைந்துள்ளது . எனவே இவர்கின் செயற்பாடு சுன்னி முஸ்லிம்களுக்கும் அச்சுர்த்தலாக உள்ளது .
இது குறித்து பின்வரும் கருத்து முன்வைக்கப்படுகின்றன .
01) இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர் . ஆயுத பலமுள்ள ஒரு அரசாங்கமே இத்தகைய இயக்கமொன்றை வழிநடத்தலாம் என்கின்றனர் ஆனால் இது சாத்தியமற்றது . ஏனெனில் ISIS அமைப்பு ஈராக்கில் ஒரு ஷிஆ அரசுடன் போராடிவருவது நாம் கண்ட உண்மை . ஈராக்கின் அரசு தாக்கப்பட்டால் ஈரானுக்குத்தான் நஷ்டம் காரணம் அவர்களின் ஷீஆ அரசு வீழ்த்தப்படுகின்றது . எனவே ISIS இன் பின்னணியில் இருப்பவர்கள் ஈரான் என்று சொல்ல முடியாது .
2) ISIS இன் வேகமான நகர்வை வல்லரசு நாடான அமெரிக்கவிற்கே கட்டுப்படுத்தக் கடினம் என்பது சாத்தியமற்ற ஒன்று . அதேபோல் சிரியாவின் விடிவுக்காக போராடிய ISIS இயக்கம் ஏன் ஈராக்கைக் கைப்பற்றி தனியான கிலாபத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் ? சிரியாவில் பஷார் அல் அஸாத்துடன் போராடாமல் ஏன் ஈராக் குர்தீஷ் படையுடன் போராட வேண்டும் ? எனவே இவை அனைத்தையும் பார்க்கின்ற போது சிரியாவின் மக்கள் எழுச்சியை திசை திருப்பி மீண்டும் முஸ்லிம்களைப்பற்றியும் , அவர்களின் புனிதப் போரைப்பற்றியும் பிழையான புரிதல்களைக் கொடுப்பதற்காக அமெரிக்காவின் சதித்திட்டம் .
எனவே இது பற்றி எமக்குத் தெளிவிருக்க வேண்டும் . இதை அறியாத எம்மில் சிலர் ISIS உடன் சேர்ந்து புனிதப் போர் செய்வதற்கு விண்ணப்பமிட்டுள்ளார்கள் . எனவே இதுபற்றி எமது தென்னிந்திய மற்றும் இலங்கை முஸ்லிம்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் .
அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக் ( பாதிஹ்)
வரிப்பத்தான்சேனை