Sunday, July 5, 2015

எமது முஸ்லிம் சமூகத்தை இஸ்லாமிய மைய்யப்படுத்துவதில் அந்தக்கிரமத்தில் உள்ள பள்ளிவாசல்களிலேயே தங்கியுள்ளது.


ஏன் இப்படி ஒரு கட்டுரை நான்  எழுதினேன் என்றால் . ஒரு சில கிராமத்தில் ரமழானை சிறப்பிப்பதற்குக்  கூட எந்த ஒரு பயான் நிகழ்ச்சியும் இடம்பெறுவதில்லை . இவர்களினால் மக்களும் இஸ்லாம் சென்றடைவதும்மில்லை . இது வெறும் கதையல்ல நிஜம் .

இது ஒரு கிராமத்தில் மட்டும் இடம்பெறவில்லை பல கிரமங்களில் இடம்பெறுகின்றது (((( இதை நாங்கள் கட்டாயம் திருத்தியமைக்க வேண்டும் . இல்லை என்றால் இறைவனின் தண்டனையும் சோதனையும் எமக்கும் , எமது  பிள்ளைகளுக்கும் , எமது கிரமத்திற்கும் வந்து சேரும் .   ....

. இறைவா ! இந்த சோதனையில் எங்களைப் பாதுகாப்பாயாக ..

ஒரு சமூகத்தைச் சீர்திருத்தம் செய்வதில் அந்த சமூகத்தில் காணப்படுகிற மத வழிபாட்டு நிலையங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது . அவ்வாறு மத வழிபாட்டு நிலையங்களின் பங்களிப்பு வில்லாவிட்டால் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது . அந்தவையில் எமது முஸ்லிம் சமூகத்திற்கு இஸ்லாத்தை தெளிவுபடுத்துவதிலும் , அவர்களை நல்ல பண்பாடுள்ளவராகவும் மாற்றுவதில் எமது பள்ளிவாசல்களுக்கு பெரும் பொறுப்புக்கள் உள்ளது .

அந்த வகையில் இலங்கையில் பல பள்ளிவாசல்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டுவருகின்றது . இது றமழான் தவிர்ந்த மாதங்களில் . ஆனால் இன்னும் ஒரு சில கிராமங்களில் பள்ளிகள் மக்களைப் பைற்று விப்பதிலும் , மக்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லிக் கொடுப்பதிலும் அக்கிராமத்தில் உள்ள ஆலீம்களைப் பயன்படுத்துவதிலும் எமது ஒரு சில கிராமங்கள்  மிகவும் பின்னடைவில் உள்ளது .

இதற்கான காரணம்
=====================
01) மக்களின் ஒத்துழைப்பும் , கவனயீனமும்  குறைவு .
( பள்ளிவாசலில் மக்களுக்கான வழிகாட்டல் வழங்கப்படாவிட்டால் அந்த சமூகத்தின் இளைஞர்களும் அறிஞர்கள் அனைவரும் தட்டிக்கேட்க வேண்டும் . இல்லாவிட்டால் பள்ளிவாசலின் நிர்வாகம் தான் விரும்பிய பிரகாரம் ஆடுவார்கள் . 

02) ஆலிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சி .
( இன்று  கிராமத்தில் நன்றாக இஸ்லாத்தைப் படித்த ஆலீம்கள் இருந்தால் அவர்களை அந்தப் பள்ளிவாசல்கள் அவை இந்த இயக்கத்தைச் சேர்நதவர் என்று சொல்லி அவரை பள்ளிவாசல்கள் பயன்படுத்தப் புறக்கணிக்கின்று .

03) குடும்பரீதியான காழ்ப்புணர்ச்சி .
( கிராமத்தில் இருக்கின்ற ஆலிம்களில் சிலர் எனது குடும்பத்தின் எதிரி அல்லது அந்த எதிரிக்கு உதவியாக இருக்கின்றார் என்று சொல்லி மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்களளை பள்ளி நிர்வாகம் புறக்கணிக்கின்று .

எனவே இது குறித்து நிச்சயமாக பள்ளிவாசல் நிர்வாகிகள் இறைவனிடத்தி தகுந்த கூலிகள் இருக்கின்றது . பலவகையான கேள்விகளும் இருக்கின்றது .((((( குறிப்பு  :- பள்ளிவாசல் நிர்வாகிகளை விட இவர்களைத் தெரிவு செய்தவர்களுக்கு பாரிய கேள்வி கணக்கு இருக்கின்றது . )))))) இவர்கள்தான் கூடுதலாக இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.

No comments:

Post a Comment