ISIS பற்றி திடுக்கிடும் சில உண்மைகள்.
================================
@) ஆரம்பம் :- 2014
@) நாடு :- சிரியா, ஈராக் .
@) தலைவர் :- அபூபக்கர் அல் பக்தாதி
@) படைப்பலம் :- 50.000- 200.000 படையினர் .
01 ) யார் இந்த ISIS ?
சிரியாவின் விடிவுக்காகப் போராடிய பலம் குறைந்த குழுக்கில் ஒன்று . இவர்களை சிலர் காபிர்ரென்று கூறுகின்றார்கள் அப்படியல்ல இவர்கள் முஸ்லிம்கள் ஆனால் கடும் போக்குச் சிந்தனை கொண்டவர்கள் . இன்று ஊடகங்களில் ISIS என்பது ஒரு சுன்னி இராணுவ இயக்கம் எனவும் , மத்திய கிழக்கில் கிலாபத்தை நிறுவுவதற்குப் போராடுகின்ற அமைப்பு எனவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது .
. இவர்கள் சிரியாவின் போர்க் களத்திலிருந்து திடீரென ஈராக்கிய நகரங்களைக் கைப்பற்றியது உலகக் கவனத்தையே ஈர்த்துள்ளது . இவர்களின் திடீர் தோற்றமும் வேகமான வளர்ச்சியையும் பார்க்கும்போது இவர்களுக்குப் பக்கபலமாக மிகப்பெரும் சக்தியொன்று இயங்குகின்றன என்பது மாத்திரம் உறுதியாகுகின்றது .
இவர்கள் சுன்னி முஸ்லிம்கள் என்றால்
இவர்களின் செயற்பாட்டினால் பக்தாதிலும் , அன்பர் மாகாணத்திலும் வாழும் சுன்னி முஸ்லிம்கள் பெரும் பதட்டமடைந்து அதிகமானோர் ஈராக்கை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் . இவ்வாறு ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களின் வாழ்கையைப் பாதிக்கும் வகையில் ISIS இன் செயற்பாடு அமைந்துள்ளது . எனவே இவர்கின் செயற்பாடு சுன்னி முஸ்லிம்களுக்கும் அச்சுர்த்தலாக உள்ளது .
இது குறித்து பின்வரும் கருத்து முன்வைக்கப்படுகின்றன .
01) இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர் . ஆயுத பலமுள்ள ஒரு அரசாங்கமே இத்தகைய இயக்கமொன்றை வழிநடத்தலாம் என்கின்றனர் ஆனால் இது சாத்தியமற்றது . ஏனெனில் ISIS அமைப்பு ஈராக்கில் ஒரு ஷிஆ அரசுடன் போராடிவருவது நாம் கண்ட உண்மை . ஈராக்கின் அரசு தாக்கப்பட்டால் ஈரானுக்குத்தான் நஷ்டம் காரணம் அவர்களின் ஷீஆ அரசு வீழ்த்தப்படுகின்றது . எனவே ISIS இன் பின்னணியில் இருப்பவர்கள் ஈரான் என்று சொல்ல முடியாது .
2) ISIS இன் வேகமான நகர்வை வல்லரசு நாடான அமெரிக்கவிற்கே கட்டுப்படுத்தக் கடினம் என்பது சாத்தியமற்ற ஒன்று . அதேபோல் சிரியாவின் விடிவுக்காக போராடிய ISIS இயக்கம் ஏன் ஈராக்கைக் கைப்பற்றி தனியான கிலாபத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் ? சிரியாவில் பஷார் அல் அஸாத்துடன் போராடாமல் ஏன் ஈராக் குர்தீஷ் படையுடன் போராட வேண்டும் ? எனவே இவை அனைத்தையும் பார்க்கின்ற போது சிரியாவின் மக்கள் எழுச்சியை திசை திருப்பி மீண்டும் முஸ்லிம்களைப்பற்றியும் , அவர்களின் புனிதப் போரைப்பற்றியும் பிழையான புரிதல்களைக் கொடுப்பதற்காக அமெரிக்காவின் சதித்திட்டம் .
எனவே இது பற்றி எமக்குத் தெளிவிருக்க வேண்டும் . இதை அறியாத எம்மில் சிலர் ISIS உடன் சேர்ந்து புனிதப் போர் செய்வதற்கு விண்ணப்பமிட்டுள்ளார்கள் . எனவே இதுபற்றி எமது தென்னிந்திய மற்றும் இலங்கை முஸ்லிம்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் .
அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக் ( பாதிஹ்)
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment