Saturday, July 4, 2015

பத்ர் யுத்தம்


புனித நோன்பு 17 பத்ர் யுத்தம் இடம்பெற்ற தினம் . மறந்து விடாதீர்கள் !

================================

இது  இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் . இந்த யுத்தத்தில் இறைவன் மலக்குமார்களைக் கொண்டு  முஸ்லிம்களுக்கு வெற்றியைக்  கொடுத்தான் .

இது  ஹிஜ்ரி : 2 ரமழான் மாதம் 17 ஆம் நாள் நிகழ்ந்தது .   இதற்கான பின்னணி என்னவென்றால் ஷாம் தேசத்திலிருந்து மக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறைஷியரின் வியாபாரக் கோஷ்டியை வழிமறிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் ஸஹாபக்களைப் பணித்தார்கள் . குறைஷியரைப் பயமுறுத்தவேயன்றி அவர்களோடு யுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இதைச் செய்ய விலை . இதனை அறிந்த வியாபாரக் கோஷ்டி தப்பிச்சென்றுவிட்டார்கள் .

இந்த வியாபாரக் கோஷ்டிக்கு தலைமை தாங்கியவர் ''அபூஸுப்யான் '' இவர் பாதுகாப்பு உதவிகோரி ஏற்கெனவே குறைஷியரிடம் தூது அனுப்பியமையால் குறைஷிகள் 1000 பேர்ருடன் போர் புரிவதற்கு மக்காவிருந்து மதினாவை நோக்கி வந்தனர் . அவர்களில் 600 பேர் போர் கவசம் அணிந்திருந்தனர் . மேலும் கவசமிடப்பட்ட 100 குதிரைகள் ,700 கோவேறு கழுதைகளும் அவர்களிடம் காணப்பட்டன . இது போதாமைக்காக முஸ்லிம்களுக்கெதிராக மேளம் கொட்டி வசைபாடுவதற்கென பெண்களும் அழைத்து வந்தார்கள்  .

முஸ்லிம்களில் 313 அல்லது 314  பேர் இருந்தனர் . இவர்களில்  அதிகமானவர்கள் மதீனத்து ஸஹாபாக்கள் ஆவர் . அவர்களிடம் 70 ஒட்டகைகளும் இரண்டு அல்லது மூன்று குதிரைகளுமே காணப்பட்டது . இதனால் ஸஹாபாக்கள் ஒட்டகைகளில் மாறி மாறி அமர்ந்து யுத்த களத்தை நோக்கிப் பயணித்தார்கள் . இப்படிப் கஷ்டப்பட்ட ஸஹாபாக்களுக்கு இறைவன் போராட்டத்தில் வெற்றியைக்  கொடுத்தான். இதுதான் இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது யுத்தம் இந்த யுத்தத்தின் விளைவால் முழு உலகிற்கும் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.

No comments:

Post a Comment