கடந்த காலங்களில் காஸாமீது இஸ்ரேல் நடத்திய பொருளாதார முற்றுகையால் அங்கு வாழும் மக்கள் பட்ட கஷ்டம் ஒன்றல்ல இரண்டல்ல . இதை வாசிக்கின்ற போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் .
01 ) 1929 - முதல் காஸாவி யூதர்களின் குடியேறம் ஆரம்பிக்கப்பட்டது .
02 ) காஸா முதலாம் உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானியரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது . ( Leaque of Nation)
03) 1948- 1967 எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது .
04) 1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டது .
05) 2005 -2007 பலஸ்தீன் அதிகார சபையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது . இது ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் இடம்பெற்றது .
06) 2007 ஜூனில் அல் பதாஹ் இயக்கத்திற்கும் ஹமாஸுக்கும் இடையில் மோதல்கள் தூண்டிவிடப்பட்டன .
07) 2007 ஜூன் 14 - அல் பதாஹ் இயக்கம் காஸாவிலிருந்து வரட்டியடிக்கப்பட்டு காஸா முழுவதும் ஹமாஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது .
08) 2008 ஜனவரி காஸாவின் எல்லைப்புறங்கள் முற்றாக மூடப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது .
09) 2008 ஜனவரி 19 காஸாவுக்கான மின்சார விநியோகத்தில் 80% மான வற்றை இஸ்ரேல் துண்டித்து காஸாமீது விமானத் தாக்குதல்களை நடாத்த ஆரம்பித்தது .
10) 2008 மார்ச் காஸாவிற்கான எரிபொருளை முற்றாகத் துண்டித்து , தரைவழியாகவும் ஆகாயவழியாகவும் தாக்குதல் நடத்தியது .
11) 2008 டிசம்பர் 27 காஸாமீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி , நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தது .
12) 2009 ஜனவரி 3ல் இஸ்ரேல் யுத்த தாங்கிகளுடன் காஸாவிற்குல் ஊடுருவி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது .
13) 2009 ஜனவரி 7ல் அமெரிக்க காங்கிரஸ் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியது .
14) 2012 இல் இஸ்ரேல் இரண்டாவது முறை முற்றுகையிட்டு காஸாமீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியது .
15) 2014 ஜூலை 08 ல் இஸ்ரேல் மூன்றாவது முறையாக கடும் தாக்குதல்களை நடத்தியது . இதனால் 2200 பேர் கொல்லப்பட்டார்கள் .
எனவே இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை உலகிற்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டும் . காஸா மக்களுக்கு விடிவுக்கா கைகோர்ப்போம் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை.
No comments:
Post a Comment