Thursday, July 30, 2015

இசைபற்றி இமாம்களினதும் நவீன கால அறிஞ்சர்களினதும் கருத்துக்கள் .

.

இன்று இஸ்லாமிய சட்ட அறிஞர்களளிடத்தில் இசை ஹராமா?  ஹலாலா? என்பதில் பல கருத்து வேறுபாடுகள்  உள்ளது. இது சம்பந்தமாக 19 ஹதீஸ்கள் வந்துள்ளது இதை சொன்ன அறிவிப்பாளர் பற்றி ஹதீஸ் துறை அறிஞர்களிடத்தில்  அதிகமான  விமர்சனங்கள் உள்ளது .   ஆனால் பாடல் இஸ்லாத்தில் ஹராமா ? என்றால் ஹராம் இல்லை . ஆனால் இசை ஹராமா என்கின்ற போது பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது . ஒரு சில அறிஞர்கள் கூடாது என்கிறார்கள் .  இன்னும் சிலர் கூடும் என்கின்றார்கள் .
நபிஸல் அவர்களின் வரலாற்றைப் பார்கின்றபேது அதிகமான ஆதாரங்கள் உள்ளது .

    ஆயிஷா (றழி ) அவர்கள் கூறும் ஹதீஸ்  ஒருமுறை  அன்ஸாரித் தோழர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களிடம்  ஆயிஷாவே ! உங்களிடம் கேளிக்கைகள் ஏதுமில்லையா ? ஏனெனில் , அன்ஸாரிகள் கேளிக்கைகளை பெரிதும் விரும்புவர்கள் . (புஹாரி)

இது இமாம் நஸாஈ (றஹ்) அவர்கள் பதிவு செய்துள்ள ஹதீஸ் .  அஸ்ஸா பின் யஸீத் (றழி ) அவர்கள் கூறுகின்றார்கள்  ஒருமுறை
நபிஸல் அவர்களிடம் ஒரு பெண் வந்தாள் . அப்போது நபிஸல் அவர்கள் ஆயிஷாவே இது யார் என்று உங்களுக்குத் தெரியுமா ? எனக் கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதரே எனக்குத்தெரியாது என்றார்கள் . இவர் ஒரு பாடகி . நீங்கள் விரும்பினால் அவர் உங்களுக்குப்பாடிக்காட்டுவார் என்றார்கள் . பின்னர் அப்பெண் ஒரு பாடலைப் பாடிக் காட்டினார் .
மேலும் நபிஸல் அவர்களின் காலத்தில் ஹஸ்ஸான் இப்னு தாபித் என்ற கவிஞர் இருந்தார் . இவர் யுத்தங்களின் போது எதிரிப்படைகளை வீழ்த்துவதற்காக தனது கவிதையைக் கொண்டு வசை பாடுவார் . இப்படியெல்லாம் பாடல்கள் நபிஸல் அவர்களின் காலத்தில் பாடப்பட்டது .

இன்று இசை கூடாது     என்பவர்கள் ஒரு ஹதீஸை வைத்து  ஆதாரம் காட்டுவார்கள்  '' ஒரு காலம் வரும் அது இசையையும் , ஆண்கள் பெண்கள் கலந்திருப்பதையும் , மது அருந்துவதையும் ஆர்வமாகிக் கொள்வார்கள் .( ஹதீஸ் )  இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை உறுதியற்றது . எனவே இதை வைத்து  இமாம் இப்னு ஹஸ்ம் , இமாம் தஹபி போன்ற சில  அறிஞர்கள் இது கூடாது என்கிறார்கள் .

சில இமாம்களின் கருத்து
==++==++==++==++==+==
01 )  இமாம் அபூஹனீபா ( ஹராமல்ல வெறுக்கத்தக்கது )
02 ) நீதிபதி , சட்ட அறிஞர் , ஹதீஸ் வல்லுனர் . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரீ (றஹ்) இசை ஆகும் என்கிறார் .
03) இமாம் ஷாபிஈ வெறுக்கத்தக்கது . இப்படியெல்லாம் கருத்துக்களை இமாம்கள் கொண்டுள்ளனர் .

ஆனால் நவீன கால அறிஞர்கள் ஆகும் என்கிறார்கள் . காரணம் நான் மேற்கூறிய ஹதீஸைப் பொறுத்தவரையில் அதுபற்றி அதிகமான கருத்து வேறுபாடுகள் உள்ளது . இதன் காரணமாக இமாம் கஸ்ஸாலி . இமாம் உபைதுல்லாஹ் பின் அல் ஹஸன் அல் அன்பரி . அதேபோல் தற்கால அறிஞர்களான கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி , கலாநிதி முஹம்மத் இமாரா , போன்ற பல அறிஞர்கள் கூடும் என்கிறார்கள் . விதிவிலக்கிற்கு அமைய இசை கூடும் என்கிறார்கள் .

குறிப்பு :- நாம் கேற்கின்ற இசைக்கு சில வரையறை உள்ளது .
உ+ம்   01) இஸ்லாமிய ஷரியாவின் வரையறையுடன் இருத்தல் வேண்டும் . ( காம உணர்வை தூண்டாமல் இருத்தல் வேண்டும் . )
எனவே இசைபற்றி தற்கால அறிஞர்களின் கருத்துக்கேற்ப இசை ஹராமல்ல ஆனால் சில வரையறைகள் உள்ளது . எனறு சொல்கின்றார்கள் .

:::---- இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன ?

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )

No comments:

Post a Comment