இதை முடியுமானவரை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்திவைக்கவும் .
அன்மையில் இலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் ISIS உடன் சேர்ந்து போராடி மரணித்தார் இது நாங்கள் அறிந்தவையே . இவர் ISIS உடன் சேர்ந்து போராடி மரணித்ததால் முழு இலங்கை முஸ்லீம்களையும் ISIS ஆகப் பார்க்கும் நிலை இன்று ஆரம்பித்துள்ளது .
அந்தவகையில் இன்று இலங்கைப் புலனாய்வுத்துறை இதை மிகக் கவனமாக ஆராய்ந்து வருகின்றது . இதனால் எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு தனது மார்க்கத்தைப் பின்பற்றுவதிலும் , இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதிலும் இலங்கை அரசு சில நடைமுறைப் பிரச்சினைகளைக் கொண்டுவரலாம் .
இலங்கையில் ISIS இன் ஊடுருவல் இருந்தமையால் என்ன வகையான பிரச்சினைகள் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளக் காத்திருக்கின்றார்கள் ?
==============================
01) இலங்கையில் இருக்கும் தஃவா நிறுவனங்களில் ஜிஹாத் பயிற்சிகள் இடம்பெறுகின்றதா ? என புலனாய்வுத்துறையின் கண்கானிப்பு அதிகரிக்கும் .
01) வெளிநாடு சென்று வந்ததவர்கள் ஜிஹாத் போர் பயிற்சி பெற்றுள்ளார்களா ? என அவர்களை துருவி ஆராய அரசு ஆரம்பிக்கும் .
03) பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரசாக்களில் ஜிஹாத் பயிற்சி கொடுக்கப் படுகின்றனவா என்று விஷேட அதிரடிப்படையினரை நியமித்து அவர்களை உற்று நோக்கும் .
04) செல்வந்தர்களின் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் சொத்துக்கள் ஜிஹாத் அமைப்புக்களுக்கு கொடுக்கப்படுகின்றனவா என்று அவருடைய சொத்துக்கள் பகுப்பாய்வு செய்யப்படும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment