Saturday, May 23, 2015

உலகில் இரண்டு முகமுடையவராக நடந்து கொள்கின்றவர் நிலை




யார் உலகில் இரண்டு முகமுடையவராக நடந்து கொள்கின்றாரோ அவர் நாளை மறுமையில் நெருப்பினாலான  இரண்டு நாக்குகளுடன் எழுப்பப்படுவார் . (ஹதீஸ் )

விளக்கம் :- உள்ளே ஒன்று . வெளியே ஒன்று வைத்து நடப்பவர்

பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் .




மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல்  நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய  பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது .

அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )
இதில் ரோஹிங்கியா முஸ்லிம்  இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்று  1956  அரசாங்கம் மறுத்தது . இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது . இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990  களில் முஸ்லிம்மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது .  அன்றிலிருந்து இன்றுகூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாக உள்ளது .

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள்  இன்று பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை , உடுப்பதற்கு உடையில்லை , வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள் , கற்பணிப் பொண்கள் வயோதிபர்கள்  ,கடலில் தத்தழித்துக் கொண்டு உய்ரைவிடுகின்றார்கள் . இதுதான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

குற்றத்தை மறைப்பதற்காக மீண்டும் இனப்பிரச்சினையைத் தூண்ட முயற்சிக்கும் இனவாதிகள் .



கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பல இனவாதச் செயல்கள் அரசியல்ரீதியாக தலைவிரித்தாடியது . இதற்கு சர்வதேச இனவாத சக்திகளும் பக்கபலமாக இருந்தது . அதேபோல்
அரசியல்வாதிகளில் சிலர் ஆதரவு வளங்கினார்கள் . இதை சாதகமாகப் பயன்படுத்தி இனவாதிகள் தெவனகல , தம்புள , அளுத்கம , போன்ற இடங்களில் தான் விரும்பியபிரகாரம் ஆடுவதற்கு ஆரம்பித்தார்கள் . இதை நீதிமன்றங்கள்கூட காது தாழ்த்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது . இது உலகம் அறிந்த உண்மை .

ஆனால் இன்று புதியதொரு ஆட்சி வந்ததன் காரணமாக இனவாதிகளுக்குத் தான்விரும்பியபிரகாரம் ஆடுவதற்கு முடியது . அதேபோல் அவர்களுக்கு இனப்பிரச்சினையைத் தூண்டிய காரணத்திற்காகவும் , சில இனக்கலவரங்களை வடிவமைத்ததற்காகவும் நீதிமன்றத்திலும் , குற்றப்புனாய்வுத்துறையாலும் விசாரணை சென்று கொண்டுள்ளது  இதை திசை திருப்புவதற்காக இன்று இனவாதிகள்  வில்பொத்துப்பிரச்சினை என்ற பெயரில் இனப்பிரச்சினையை  ஆரம்பித்துள்ளார்கள் இது குறித்து முஸ்லிம்களாகிய நாங்கள் கவனமாக இருத்தல் வேண்டும் . எமது முஸ்லிம் அரசியல்வாதிகளும்  இதுகுறித்து  கவனத்திற் கொள்ள வேண்டும் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை

ஸுரத்துத் தக்வீர் கூறும் விஞ்ஞனம் .


Friday, May 15, 2015

வில்பொத்து விவகாரத்தை வைத்து மின்னல் றங்காவின் திருவிழையாடல்கள் .


வில்பொத்து விவகாரத்தை வைத்து மின்னல் றங்காவின் திருவிழையாடல்கள்  . 
---+-------+----------+----------+-------+----------+--

சக்தி( TV) ஐ வைத்து  மின்னல் றங்கா காட்டும்  திரு விளையாடலினால் மீண்டும் ஒர்  இனப்பிரச்சினை தோன்றும் அபாயம் . 
இவர் தனிப்பட்ட அரசியல்  பழிவாங்கலை வைத்து முஸ்லிம்கள் பற்றி பிழையான கருத்தகருத்துக்களை  பொரும்பான்மையினருக்கு  கொடுக்கின்றார் . இதற்கு சில சிங்கள அமைப்புகளும் , பல ஊடகங்களும் வால் பிடிக்கின்றது . 

இந்த செய்தியை சிங்கள சமூகத்திற்கு நகர்த்துவது எமது கடமை .  இதை முடியுமானவர்கள் எத்திவைக்கவும் Please


ஹபீஸ் (பாதிஹ் )

Monday, May 11, 2015

இலங்கை முஸ்லிம் மாணவர்கள் பாடசாலை கல்வியில் எதிர்நோக்கும் மார்கத்திற்கு முறனான சில பிரச்சினைகள் .





குறிப்பாக இலங்கையுடைய கல்வித்திட்டத்தைப் பொறுத்தவரை இவை உலக வங்கியினால் திட்டமிடப்பட்டவை .இந்த உலக வங்கிக்கு   உறுதுனையாக இருப்பவர்கள் யூதர்கள் .எனவே இன்று யூதர்களின் வழிகாட்டலுக்கினங்க இலங்கையின் கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதில் காணப்படும்  சில  கொள்கைகள் இஸ்லாத்திற்கு முறனானதாகும்  .

உ+ம்......01)  டாவினுடைய கொள்கை . இந்தக் கொள்கை மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்று சொல்கின்றது . ஆனால் இஸ்லாம் ஆதம் அலை அவர்களைத்தான் முதலில்p இறைவன் படைத்தான் என்று சொல்கிறது . எனவே டாவினுடைய கொள்கை  இஸ்லாத்திற்கு முறனானது .

02).... உண்மையில் கண்டுபிப்பாளர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் . ஆனால் சர்வதேச சக்திகள் இதை திட்டமிட்டு மறைத்துள்ளது .
உ+ம் ..... விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்றால் நாம்  ரய்ட் சகோதரர்கள் என்போம்  . உண்மை அதுவல்ல விமானத்தை கண்டுபிடித்தவர் '' இப்னு பிர்னாஸ்''' . அதேபோல் குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் '' இப்னு நபீஸ்''  .  இப்படிப்பட்ட உணமைகளை சர்வதேச சக்திகள் திட்டமிட்டு முஸ்லிம்களை அழிக்க சதிசசெய்கின்றது  . இதை நாம் நன்றாக விளங்க வேண்டும் .

கவலை என்னவென்றால் இந்தக் கோற்பாடுகளை முஸ்லிம் ஆசிரியர்கள் தான் முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் .
எனவே முஸ்லிம் ஆசிரியர்கள் இஸ்லாத்துக்கு முறனான கோற்பாடுகளை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .
..........முஸ்லிம் ஆசிரியர்களே இது உங்களின் கவனத்திற்கு .

இதை முடியுமானவர்கள் எமது சகோதரர்களுக்கு எத்தி வைக்கவும் .

..........ஹபீஸ் (பாதிஹ்).....

இஸ்லாத்தின் சிறப்பம்சம்

இன்று உலகம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே செய்கின்றது . அதிலும் குறிப்பாக இஸ்லாம் அதைவிட  வேகமாக பரவிக்கொண்டே செல்கின்றது .  இதைப்பர்க்கும் போது சந்தோசம்தான் ஆனால்   ஒரு கவலை முஸ்லிம்களைவிட பிறமதத்தவர்கள் நன்றாக இஸ்லாத்தின் சிறப்பம்சங்களை  தெரிந்து வைத்துள்ளார்கள் .  இது ஒரு கவலைக்கூரிய விடையம் .

இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று
01) எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது .

உ+ம் :-- இந்து மதத்தைப் பொருத்தவரையில் இறைச்சி சாப்பிடுவது சைவ மதத்தினருக்கு தடுக்கப்பட்டது . அவர்கள் மரக்கறி வகைகளை மாத்திரம்தான் சாப்பிட வேண்டும் . இல்லாவிட்டால் அவர்களுக்கு அது பாவமான ஒன்றாகும் .  இவர்கள் தென்துருவப் பிரதேசங்களில் வாழ்ந்தால் அவர்கள் அங்கு உயிர் வாழ்வதென்பது சாத்தியமற்ற ஒன்று . காரணம் அங்கு இறைச்சியைத்தவிர மரக்கறி இருக்காது காரணம் பணியினால் அழிந்துவிடும் . எனவே அவர் அங்கு உயிர் வாழ வேண்டுமென்றால் அவர் இறைச்சியை கட்டாயம் சாப்பிட வேண்டும் . அவ்வாறு சாப்பிடா விட்டால் அவர் இறந்து விடுவார் . எனவே இந்து என்பது சில நேரம் எல்லா காலத்திற்கும் , எல்லா இடத்திற்கும் பொருந்தாது .

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை  அப்படியல்ல இஸ்லாத்தில் ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அவருக்கு உண்பதற்கு அதைத் தவிர வேறு உணவு இல்லை என்றால் அவர் அந்த உணவை உண்பது அவருக்கு கடமையாகும் இல்லாவிட்டால் அவருக்கு பாவம் கிடைக்கும் . இதுதான் இஸ்லாத்தின் தன்மை .
இதனால் தான் இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்திற்கும் பொருத்தமானது   என்ற முடிவுக்கு வரலாம் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

முஹம்மத் முர்சி



ஏன் முஹம்மத் முர்சியை ஆட்சி கவிழ்ப்பதற்கு மேற்குலகு எகிப்தின் இராணுவத்திற்கு உதவியது?
===+==+==+==+=+==+===+==+==+==+==+
 பாருங்கள் பகிருங்கள் இறைவன் அருள் புரிவான் .

 01) முஹம்மத் முர்சி.  இவர் யார் ?
இவர் எகிப்தின் தற்போதைய உத்யோக பூர்வமான ஜனாதிபதி .

02) இவருடைய சிறப்பு என்ன ?
இவர் குர்ஆனை மனனம் செய்த ஒரு  ஹாபிழ் . இஸ்லாமிய ஷரிஆ துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு தாயி  . அதேபோல் பொருளியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற சிறந்த பொருளியலாளர் .

03) எதற்காக சர்வதேச உலகம் இவரை  எதிர்த்தது ?

கரணம் இவர் எகிப்தின் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற போது இவர் இரண்டு வேலைத்திட்டங்களை மேற் கொண்டார் .
01) சுயஸ் கால்வாய் திட்டம் . இந்தத் திட்டமானது  எகிப்தின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒரு திட்டம் . இந்தத்திட்டம் வெற்றிபெற்றால் உலகத்தில் பல நாடுகளுடைய பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து விடும் .

 .02) எகிப்திற்கும் , பலஸ்தீனுக்கும் எல்லையில் உள்ள ரபா எல்லை , இதனை  பலஆண்டுகளாக  ஜமால் அப்துன் நாசர் என்ற எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியாளனின் உதவியுடன் இஸ்ரேல் மூடவைத்தது . காரணம் இதனூடாகத்தான் ஹமாஸுக்கு ஆயுதங்கள் போகின்றது என்று இந்த எல்லையை மூடவைத்தது . இதை முஹம்மத் முர்சி  திறந்து வைத்தார் .

03) இவர் பதவி கவிழ்க்கப்படுவதற்கும் இந்த திட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ? என்பீர்கள்.

காரணம் ரபா எல்லையைத் திறந்தால் ஹமாஸ் பலம்பெற்றுவிடும் .அதேபோல் அவர்கள் குதுஸை மீட்பதற்கு இலகுவாகிவிடும் . எனவே ஹமாஸ் பலம்பெ றக்கூடாது .  அப்படி பலம்பெற்றால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகி விடும் . இதனால் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு இஸ்ரேலை பாதுகாப்பது கடினமானதாக மாறிவிடும். என்ற காரணத்திற்காக அரபு நாட்டின் சில குள்ள நரிகளுக்கு பணம் கொடுத்து அந்த எல்லையை மேற்குலகு மூடவைத்தது  . இது வெளிப்படையான உண்மை .

அதேபோல் இன்று அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டல்   உலகத்தில் பல முஸ்லிம் நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சி அடைந்துவிடும் என்று  இதை விளங்கிய சில நாடுகள் முர்சியுடைய ஆட்சியை வீழ்த்துவதற்கு எகிப்து இராணுவத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது .

இன்னுமொரு மிகப்பெரிய காரணம் . முஹம்மத் முர்ஸி இஃவானுல் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர் . என்ற காரணத்தினால் அவருடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு சில நாடுகள் ,சில முஸ்லிம் இயக்கங்கள் இராணுவத்திற்கு உதவியது . ஏன் இஃவான்களை எதிர்க்க வேண்டும் ? காரணம் அவர்களுடைய சிந்தனை மன்னராட்ச்சி இடம்பெறும் நாடுகளில் பரவினால் மன்னர்களின் ஆட்சிக்கு ஆபத்தாக அமையலாம் . என்ற காரணத்திற்காக அவர்கள் முஹம்மத் முர்ஸிக்கு எதிராக எகிப்திய இராணுவத்திற்கு தனது ஆதரவுகளை வழங்கினார்கள் .

குறிப்பு :- இன்று முகநூலினூடாக  இஃவான்களைப் பற்றி பொய்யான பிரச்சாரங்களை  மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள் . இது குறித்து  நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்  .  . . அதேபோல்  இதை  எழுதும் காலமெல்லாம்  அவர்கள் எதிர்த்துக் கொணடே இருப்பார்கள் .  அந்த பொய்யான தகவல்கள் கொடுப்பவர்கள் commnet பன்னுவார்கள் அவர்கள் யார் என்று உங்களுக்குப் பார்க்க முடியும் .......

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

மகாசிதுஷ்ஷரிஆ பற்றி கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கனம்

மகாசிதுஷ்ஷரிஆ பற்றி கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கணம் .
மகாசிதுஷ்ஷரிஆ என்பது மனித நலனை நிறைவேற்றும் வகையில் இஸ்லாமிய ஷரிஆவில் காணப்படுகின்ற நோக்கங்கள் .  ஆரம்ப காலத்தில் மகாசிது ஷ்ஷரிஆ  மசாலிஹுல்  இபாதத்தாகதான் கணிப்பிடப்பட்டது . ( மனித நலன்)
ஆனால் இன்று இவை இரண்டும் வேறு வேறாக உற்று நோக்கப்படுகின்றது .
அந்தவையில் கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கனம் '' ஏன்(لماذا ) என்பற்கான பதில் தான் மகாசிது அஷ்ஷரிஆ எனப்படும் . இதில் ஐந்து படித்தரங்கள் உள்ளது . என்று கூறுகின்றார் . அது பின்வருமாறு .
01) அடையாளங்கள் .العﻻمات 02) சட்டங்கள் اﻷحكام  .
03) கூட்டு நலன்கள்
المصالح المشترك.
4) பெறுமான உயர்வு
القيم والمبادى الكبرى  கோட்பாடுக .
05) நம்பிக்கைகள் .  العقيدة
இவை ஐந்து விடையங்களும் சீராக அமைகின்ற போது  அதுதான் மகாஷிதுஷ்ஷரிஆ எனப்படும் .
உ+ம் :-- நோன்பு
01) பிறை தென்பட்டால் நோன்பு பிடிக்க வேண்டும் . ( அடையாளம்கள்) .العﻻمات
02)ஏன் நோன்பு பிடிக்க வேண்டும் ? காரணம் வாஜிப் . ( சட்டங்கள்) اﻷحكام
03) ஏன் நோன்பு பிடிப்பது வாஜிப் ? ஏழைகளின் கஷ்டத்தை உணர்வதற்கு . ( கூட்டு நலன்கள் )
المصالح المشترك
04) ஏன் கஷ்டத்தின் பெறுமானத்தை உணர வேண்டும் ? உள்ளத்தை பயிற்றுவிப்பதற்கு . ( பெறுமான உயர்வு கோட்பாடுகள்) القيم والمبادى الكبر
05) ஏன் உள்ளத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் ? இறைவனின் திருப்தியைப் பொற்றுக் கொள்வதற்காக . ( நம்பிக்கைகள்) العقيدة
இந்தப்படித்தரங்கள் பூர்த்தி செய்யப்படுகின்ற போது மகாசிது அஷ்ஷரிஆவுக்கான பதில் கிடைக்கின்றது . என்று
கலாநிதி ஜாசிர் அவ்தா கூறுகின்றார் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

Sunday, May 10, 2015

யெமன் பிரச்சினையும் ஷீஆக்களின் எதிர்காலத்திட்டமும்






யெமன் பிரச்சினையும் ஷீஆக்களின் எதிர்காலத்திட்டமும்
==================================

 01)  இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில்  ஏன் எமன் பிரச்சினை பற்றி  அறிய வேண்டும் ?

01) நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற வகையில்  எமன் பற்றி அறிவது  கட்டாயக்கடமையாகும் .

02)  இலங்கையின் வம்சாவளிக்கும் யெமனுடைய வம்சாவளிக்கும் அதிகமான தொடர்புகள் உள்ளது .   யெமனிலிருந்துதான்  இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்துள்ளார்கள் .  அவர்கள்  வேருவளை , காலி ,  களுத்துறை . போன்ற சில பிரதேசங்களில் குடியமர்ந்து தமது வணிகங்களை  மேற்கொண்டார்கள்  என்று இலங்கையின் வரலாறுகள் சொல்லித் தருகின்றது  . அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் சற்று அதிகமாக எமன் பற்றி அறிய வேண்டும் .

02) யெமனில் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் என்ன ? இந்தப் பிரச்சினை யார் யாருக்கு மத்தியில் இடம்பெறுகின்றது  ?

யெமனிலே 70% வீதமானவர்கள் அஹ்லுஸுன்னா வல் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் . 30 % வீதமானவர்கள் ஷீஆக்கள் .இவர்கள் ஸுன்னியர்களின் ஆட்சியினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் . இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சில உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றது என்று சொல்லி
''அலி பதுருத்தீன் அல்ஹூதி ''என்பவரின் தலைமையில் ஒரு போராட்டக் குழு ஒன்றை  உருவாக்கினார் . இவரினால் உருவாக்கப்பட்ட அந்தக்குழுதான்  ''ஹூதிகள் '' இவர்கள்தான் இன்று மன்ஸுர்  ஹாதியின்  தலைமையில் இருந்த  அரசுடன் போராடி எமனில் முக்கியமான பிரதேசங்களை இன்று  தனது கட்டுப்பாட்டின்கீழ்  கொண்டுவந்துள்ளார்கள் .

03) சிறுபான்மையினராக இருந்த ஷீஆ ஹுதிபோராழிகள் எப்படி  எமன் இராணுவத்துடன் போராடி ஆட்சியைக் கைப்பற்றினார்கள் ? அவர்கள் போராடுவதற்கான ஆயுதம் எங்கிருந்து வந்தது ?
ஈரானுக்கு ஒரு கனவு இருக்கின்றது 2030 இல்  சர்வதேச ஈரான் குடியரசு ஒன்றை உருவாக்குவதே இவர்களின்எதிர்காலத்திட்டம் . அதற்கமைய ஷீஆ நாடுகள் . அதன் அமைப்புகள் ஒன்றினைந்து உலகத்தில் பல வேலைகளை கொண்டு செல்கின்றார்கள் . அதில் ஒரு திட்டம்தான் யெ மனின் ஸுன்னி ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஈரான் , லபனான் . பஹ்றைன் , போன்ற நாடுகள் ஆயுத உதவிகளை ஹூதிகளுக்கு கொடுத்து உதவுகின்றது . அது போதாமல் இப்போது தலீபான் தீவிரவாதிகளும் யெமனில் காலடி வைத்துள்ளார்கள் . இவர்களை விரட்டுவத்கு  சவூதி அரேபியாவின் தலைமையில் சில நாடுகள் இணைந்து ஷீஆ ஹூதிகளுக்கெதிராக விமானத் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றார்கள் .

04) யெமன் பிரச்சினையால் ஏற்படும் விளைவுகள் என்ன ?

01) யெமன் வறுமைக் கோட்டின் கீழுள்ள நாடுகளில் ஒன்று . தொடர்ந்து அங்கு தாக்குதல் இடபெறும் போது அதன் பொருளாதாரம் சில இயற்கை வழங்கள்  . கூடுதலான மனித அழிவுகள் என்பன கூடுதலாக இடம்பெறும்  . எனவே இதற்கு சரியான தீர்வு எடுக்கப்பட வேண்டும் .

 ஹபீஸ் அப்துல் முத்தலிப்

இப்னு பதூதா



இப்னு பதூதா

இவர் மொரோக்கோவைச் சேர்ந்தவர் . இவர் 1304 ஆண்டு ஒரு நீதிபதியின் வீட்டில் பிறந்தார் . இவர் சிறுவயதில் இஸ்லாமியக் கல்வியும் , அறபு மொழியை சிறப்பாக பயின்றார் . தனது இருபதாவது வயதில் புனிதப் பயணம் செல்வதற்கு ஆரம்பித்தார் .

இவருடைய இத்தியா பயணத்தைப் பொருத்தவரையில் அது ஒரு விசித்திரமானது . இவர் இந்தியாவுக்கு போகும்போது அங்கு முஹம்மத் பின் துக்லக் என்ற மன்னன் அங்கு ஆட்சி சொய்தான் . அவன் இவரால் கவரப்பட்டதன் காரணமாக இவருக்கு அவருடைய அரசசபையில் பணியாற்றினார் . இவர் ஏழு ஆண்டுக்காலம் அரசியல் பணியில் ஈடுபட்டார் . இவருடைய பயணக்குறிப்புகள் மிகவும் சுவாரசியமானது .


ஹபீஸ் அப்துல் முத்தலிப்