Saturday, May 23, 2015

பரிதாவமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள் .




மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல்  நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய  பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது .

அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் .
01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
02) பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
03) ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் )
இதில் ரோஹிங்கியா முஸ்லிம்  இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்று  1956  அரசாங்கம் மறுத்தது . இதனால் 1978 இல் இராணுவ அரசாங்கம் அக்யாத் நகரில் பாரிய இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது . இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990  களில் முஸ்லிம்மீதான தாக்குதல்களை தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் மட்டும் 56 பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது .  அன்றிலிருந்து இன்றுகூட ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை படுமோசமாக உள்ளது .

இன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள்  இன்று பலவந்தமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதால் உண்ணுவதற்கு உணவில்லை , உடுப்பதற்கு உடையில்லை , வாழ்வதற்கு நாடில்லாமல் சிறு பிள்ளைகள் , கற்பணிப் பொண்கள் வயோதிபர்கள்  ,கடலில் தத்தழித்துக் கொண்டு உய்ரைவிடுகின்றார்கள் . இதுதான் ரோஹிங்கியா முஸ்லிம்களின் சோக நிலை .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)

No comments:

Post a Comment